Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

M.G.R.-in Success Formula
M.G.R.-in Success Formula
M.G.R.-in Success Formula
Ebook122 pages1 hour

M.G.R.-in Success Formula

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சின்ன வயதிலிருந்து எங்கள் வீட்டில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன், எனது அண்ணன் பாஷா சிவாஜி ரசிகர். இப்படி தமிழ்நாட்டில் எல்லா இல்லங்களிலும் இருவகை ரசனையாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் உடன்பிறப்புகளுக்கான எங்களுக்கிடையே எம்.ஜி.ஆர். சிவாஜி குறித்த வாக்குவாதம் தொடங்கி வார்த்தைகளின் தள்ளுமுள்ளுகளும், சிலநேரம் அது முற்றிப் போய் சிறிய கை கலப்பு வரை சென்றதும் உண்டு.

இன்றைக்கு அதை அசைப் போட்டு பார்த்தால், அதில் ஒளிரும் அறியாமை தெரியும்.

300கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று சினிமாவை ஒரு ரசிகனாகப் பார்த்து வந்த நான் அதே திரைப்படவுலகில் ஒரு பத்திரிகையாளனாக வருவேன் முன்னணி நட்சத்திரங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசுவேன் என்பது கற்பனைக் கூட செய்யாதது.

கிடைத்த வேலைகளை செய்து கொண்டே எழுத்து முயற்சிகளில் கவனம் செலுத்தினேன். அவ்வாறு உருவாகியதே இந்நூல்...

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580122808203
M.G.R.-in Success Formula

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to M.G.R.-in Success Formula

Related ebooks

Reviews for M.G.R.-in Success Formula

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    M.G.R.-in Success Formula - Kalaimamani Sabitha Joseph

    https://www.pustaka.co.in

    எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா

    M.G.R.-in Success Formula

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    திரைப்படத்தின் ஆற்றல்

    முதல்வர் நாற்காலி

    திரையுலக சாதனைகள்

    அவர் செல்வாக்கு குறையவில்லை

    எம்.ஜி.ஆரும், அவரது கதா பாத்திரங்களும்

    மக்கள் போற்றும் நல்லவர்

    இரு துறையிலும் சாதித்தவர்

    கண்டிப்பிலும் ஒரு நாகரிகம்

    அவரது ரசிகர்கள்

    அபூர்வ மனிதர்

    ஏழை மக்களுக்கான திட்டங்கள்

    சத்துணவு திட்டம்

    ஏழைகளை மறக்காதவர்

    அனைத்திலும் முதல்வர்

    எல்லாம் தெரிந்தவராக இருந்தார்

    எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

    அவரின் பாத்திரப் படைப்பு

    அவரது வெற்றி ரகசியம்

    வரலாற்று உண்மை

    மக்கள் மனோபாவம் தெரிந்தவர்

    மக்களுக்கான எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்கள்

    படங்களில் தந்த நம்பிக்கை

    எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம்

    தெரிந்த கலை

    எம்.ஜி.ஆர். படப் பெயர்கள்

    நல்ல பெயர் சொன்னால் 500 ரூபாய்

    மக்கள் வாழ்த்தாய் அமைந்த பெயர்கள்

    படத்தில் அறச்சொல் கூடாது

    உணவில் ரசனைமிக்கவர்

    சகலகலா வல்லவர்

    எதையும் புதிதாக செய்ய விரும்புவர்

    சம அந்தஸ்து கொடுப்பார்

    மக்களை நேசித்தவர்

    ஒரே எம்.ஜி.ஆர்தான்

    வெற்றியாளராக காண்பித்துக் கொண்டார்

    முன் எச்சரிக்கை உணர்வு

    எம்.ஜி.ஆர். கதாபாத்திரங்களின் பெயர்கள்

    சண்டையிலும் ஒரு நீதி

    மன்னிக்கும் மனம்

    உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள்

    டூப்புக்கும் மரியாதை

    நாற்காலி கனவு

    சக நடிகர்களுக்கு உதவுவார்

    நாடோடி மன்னனான கதை

    தொலைநோக்கு பார்வை

    கஷ்டப்பட்டதை மறக்காதவர்

    எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?

    ஊர் மக்களைக் கவர்ந்தார்

    அசத்தும் எம்.ஜி.ஆர்.

    மக்களை அடிக்காதீர்கள்

    தொண்டரும் எம்.எல்.ஏவும் ஒன்றே

    வெற்றிக்கான முயற்சி

    எம்.ஜி.ஆர். கொடுத்த இன்ப அதிர்ச்சிகள்

    தொடர் இன்ப அதிர்ச்சிகள்:

    தேடிவந்த இயக்குநர்கள்

    தேடிவந்த பிரபலங்கள்

    நடிகர்களின் ஆரூயிர்த் தோழர்

    வெற்றியின் பார்மூலா

    தெய்வநம்பிக்கை

    எளிமையான திருமணம்

    தன்னம்பிக்கையாளர்

    என்னுரை

    சின்ன வயதிலிருந்து எங்கள் வீட்டில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன், எனது அண்ணன் பாஷா சிவாஜி ரசிகர். இப்படி தமிழ்நாட்டில் எல்லா இல்லங்களிலும் இருவகை ரசனையாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    சில நேரங்களில் உடன்பிறப்புகளுக்கான எங்களுக்கிடையே எம்.ஜி.ஆர். சிவாஜி குறித்த வாக்குவாதம் தொடங்கி வார்த்தைகளின் தள்ளுமுள்ளுகளும், சிலநேரம் அது முற்றிப் போய் சிறிய கை கலப்பு வரை சென்றதும் உண்டு.

    இன்றைக்கு அதை அசைப் போட்டு பார்த்தால், அதில் ஒளிரும் அறியாமை தெரியும், ஒருவர் ரசனையை இன்னொருவர் காயப்படுத்தாமல் இருப்பதுதான் நாகரிகம் என்பது புரியும், அதற்காக அது தப்பு என்று சொல்ல மாட்டேன், அந்த வயதில் இது இயல்பு.

    300கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று சினிமாவை ஒரு ரசிகனாகப் பார்த்து வந்த நான் அதே திரைப்படவுலகில் ஒரு பத்திரிகையாளனாக வருவேன் முன்னணி நட்சத்திரங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசுவேன் என்பது கற்பனைக் கூட செய்யாதது.

    1982ல் சென்னையில் வந்து இறங்கியபோது என் கையிருப்பு சில்லறையாக ஐந்து ரூபாய் மட்டும்தான், நல்லவேளை அன்றைக்கு ஒரு இட்லி ஐம்பது பைசா என்பதால் அதில் ஒரு நாளை செலவிட முடிந்தது.

    ஒரு எழுத்தாளனாகும் கனவுடன் வந்த எனக்கு அது அவ்வளவு எளிதல்ல என்பதை என் ஊர்க்காரர் உணர்த்தினார், அதற்காக அந்த கனவை கைவிடவில்லை. முதலில் எனது இருத்தலை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, மளிகைக்கடை, காய்கனி வியாபாரம், நைலான் நூல் கம்பெனி வேலை என்று கிடைத்த வேலைகளை செய்து கொண்டே எழுத்து முயற்சிகளில் கவனம் செலுத்தினேன்.

    ஒரு துணுக்கு எழுத்தாளனாக தினமலர் வாரமலர் தினத்தந்தி குடும்பமலர், தாய், ராணி, அமுதசுரபி, சாவி, தினகரன் வசந்தம் என முன்னணி ஏடுகளில் தலை காட்டினேன், அப்படியே நண்பர் அந்தணன் கொடுத்த தைரியத்தில் சினிமா பத்திரிகையாளனாக, ‘சினிமா ரிப்போர்ட்டர்’ ‘போலீஸ் செய்தி’ ‘மின்மினி’ ‘பேசும்படம்’ எனத் தொடங்கி, ‘வண்ணத்திரை’யில் நான் கொண்டு எழுதியதில் முன்பக்கம் வந்தேன், எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களின் நட்பு என்னை ‘குமுதம்’ ‘ராணி’ போன்ற ஏடுகளில் எழுதவும் முன்னணி பத்திரிகையாளர்கள் வரிசையில் என்னை சேர்த்தது. குமுதத்தில் நான்கு ஆண்டு நாடறிய செய்தது.

    ‘குங்குமம்’, ‘குங்குமச்சிமிழ்’ எனது எழுத்துப் பயணம் தொடர பின்பலமாய் இருந்தன. அப்புறம் நடிகர் பிரசாந்த்தின் செய்தித் தொடர்பாளராக இரண்டு ஆண்டு, டி. சினிமா புதிய வண்ண இதழில் பொருப்பாசிரியராக மூன்றாண்டு அப்போது பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேசிப் பழகும்போது விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்மூலா, அஜீத், விஜய், விக்ரம் மற்றும் பல இயக்குநர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பால் கொண்டிருந்த ரசனைமிக்க ஈடுபாட்டையும், பார்த்து வியந்து சொன்ன விஷயங்களும் என்னை எனது அபிமான புரட்சி நடிகரிடம்மீது மேலும் நேசம் அதிகரிக்கச் செய்தன.

    நடிகர் ராஜேஷ் புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர், எம்.ஜி.ஆர். பற்றி பல புத்தகங்கள் எழுதும் அளவுக்கு தகவல்களைத்

    Enjoying the preview?
    Page 1 of 1