Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

J.J: Tamizhagathin Irumbu Penmani
J.J: Tamizhagathin Irumbu Penmani
J.J: Tamizhagathin Irumbu Penmani
Ebook166 pages55 minutes

J.J: Tamizhagathin Irumbu Penmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிசம்பர் 24, 1987

தமிழகமே இருண்டது போல் உணர்வு. மக்களைப் பற்றிச் சிந்திக்கிற தலைவர் மீண்டும் தமிழ்நாட்டில் பிறப்பார்களா என்ற கவலை. ”மக்கள், மக்கள்” என்று உழைத்தவரின் உடல் உயிரற்றுக் கிடப்பதைக் கண்ணீரும், கவலையுமாகப் பார்க்க மக்கள் அலையெனத் திரண்டனர். இப்படி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததால்தான் இன்று வரை ”புரட்சித் தலைவர்”, “மக்கள் திலகம்” என்றே அழைக்கப்படுகிறார்.

மக்களுக்காக உழைத்து உழைத்து தனது உடலைக் கவனிக்காமல் விட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு கூட்டம். பெரியார், அண்ணா ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிகரான கூட்டம். மக்களுக்காக உழைத்த மாசற்ற மாணிக்கத்தைப் பார்க்க இறுதி வாய்ப்பு.

எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று பார்த்தார்கள். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

மதியம் 1 மணி அளவில் எம்.ஜி.ஆரின் உடல் இராணுவ டிரக்கில் ஏற்றினர். அவரது இறுதி பயணத்தில் கடைசி வரை செல்ல விரும்பிய அவரை ஒரு சிலர் ஓரம் கட்ட நினைத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அவரை டிரக்கில் ஏற்ற நினைத்தும், அவர்கள் விடவில்லை. நாகரிகமற்ற வளர்ந்தவர்களிடம் அந்தச் சமயத்தில் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்லித்தர முடியும். அந்தப் புனிதமான சூழ்நிலையில் மாசுபடுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருந்தார்.

அவரை அரசியலில் தனியாளாகிவிட்டோம் என்ற மிதப்பில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது எனப் பலர் கொண்டாடினார்கள். புரட்சித் தலைவருக்குப் பிறகு தங்களை எதிர்க்கும் சக்தி இல்லை என்று நினைத்தார்கள். இனி, நம் ராஜ்ஜியம் என்று துள்ளிக் குதித்தார்கள். உண்மையில் அவரின் அரசியல் வாழ்க்கை அங்கு இருந்து தான் தொடங்கியது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது என்று பலர் நினைத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் உதயமாகும் ஒரு வாய்ப்பு இருக்கும் சூழ்நிலை உருவானது. ஒரு சில அ.தி.மு.கவினர் தங்கள் கட்சியை விட்டு எதிர் முகாமுக்குச் சென்றார்கள். அவர்களின் கனவை எல்லாம் கனவாய் வைத்து, நிஜத்தில் வெற்றிகள் குவித்தவர் ஜெ.ஜெயலலிதா.

”ஜெயலலிதா” என்ற ஆளுமை மிக எளிதாகத் தோன்றவில்லை. சுற்றியிருப்பவர்கள் உதாசீனத்தில், துரோகத்தில் உருவான ஆளுமை. மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். பிடிவாதம் அதிகம். திமிர்ப் பிடித்தவர் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யலாம். அலுவலகத்தில் ஒரு பெண் அமைதியாக இருந்தாலே ஏறி மிதிக்கும் உலகம். அரசியலில் அமைதியாக இருந்தால், வளரவிட்டுவிடுவார்களா?

ஆண்களைக் கொண்டு, அவர்களிடம் தன்னைக் காத்துக்கொண்டு வளர வேண்டும் என்றால் கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகவும் அவசியம். அதைத்தான் ஜெ.ஜெயலலிதா செய்தார். ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருக்கு வரை அவரை அடுத்து கட்சித் தலைவர் யார் என்ற பேச்சு வந்ததேயில்லை. அதைப்பற்றிப் பேச யாருக்கும் துணிவுமில்லை. அவரை மிஞ்சிக் கட்சியில் ஒருவராலும் செயல்பட முடியாது. தனது கட்சியைக் கட்டுப்படாக நடத்தி வந்தார். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு கட்சியைச் சீராக நடத்தியவர் ஜெ.ஜெயலலிதா மட்டும்தான்.

எப்படி எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கி நான்கு வருடத்தில் தமிழக முதலமைச்சரானாரோ அதே போல் கட்சியை ஒருங்கிணைத்து, மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்து நான்கு வருடத்தில் முதலமைச்சரானவர். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் தலைவர் யார் என்று யாரும் ஒரு போதும் சிந்தித்ததில்லை. சிந்திக்கவும் மாட்டார்கள்.

ஆசிய கண்டத்தில் அதிகாரத்திற்கு வந்த அனைத்துப் பெண் தலைவர்களும் குடும்பப் பின்னனி, பிறரின் ஆதரவுடனேயே வந்தார்கள். ஆனால், ஜெயலலிதா அரசியல் பாதை அவ்வளவு எளிதானது இல்லை. எந்தக் குடும்பப் பின்னணியோ, ஆதரவோ கிடையாது. தன்னுடைய அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்று எம்.ஜி.ஆர் அறிவிக்கவில்லை. அவருக்கான அரசியல் பாதையை எம்.ஜி.ஆர் உருவாகி வைக்கவில்லை. அவரைக் கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுத்ததோடு எம்.ஜி.ஆர் வேலை முடிந்தது. தொண்டர்களைத் தனது களப்பணி மூலம் அ.தி.மு.கவுக்குப் புது தெம்பளித்ததும், வாக்குகளாக மாற்றியதும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட முயற்சியே ஆகும்.

ஜெயலலிதாவை ஓரம்கட்டிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் மக்கள் மறந்துவிட்டார்கள். ஆனால், ஜெயலலிதாவை மக்களால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை புயலுக்கு நிகரானது என்று சொன்னால் கூட ஒப்பாகாது. அதைவிட மிகப் பெரிய சவாலானதும் கூட.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580107304445
J.J: Tamizhagathin Irumbu Penmani

Read more from Guhan

Related to J.J

Related ebooks

Reviews for J.J

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    J.J - Guhan

    http://www.pustaka.co.in

    ஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

    J.J: Tamizhagathin Irumbu Penmani

    Author:

    குகன்

    Guhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/guhan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அம்மு என்ற சந்திரோதயம்

    2. யார் நீ?

    3. எங்கள் தங்கம் அம்மா!!

    4. மணி மகுடம்

    5. தேர் திருவிழா

    பிற்சேர்க்கை - 1

    பிற்சேர்க்கை - 2

    பிற்சேர்க்கை - 3

    பிற்சேர்க்கை - 4

    இன்னும் சில திட்டங்கள்.

    பிற்சேர்க்கை - 6

    பிற்சேர்க்கை - 7

    ஜெயலலிதாவின் வாழ்க்கை – ஒரு வேகமான பார்வை

    1. அம்மு என்ற சந்திரோதயம்

    டிசம்பர் 24, 1987

    தமிழகமே இருண்டது போல் உணர்வு. மக்களைப் பற்றிச் சிந்திக்கிற தலைவர் மீண்டும் தமிழ்நாட்டில் பிறப்பார்களா என்ற கவலை. மக்கள், மக்கள் என்று உழைத்தவரின் உடல் உயிரற்றுக் கிடப்பதைக் கண்ணீரும், கவலையுமாகப் பார்க்க மக்கள் அலையெனத் திரண்டனர். இப்படி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததால்தான் இன்று வரை புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்றே அழைக்கப்படுகிறார்.

    எம்.ஜி.ஆரை நண்பர் என்று கருணாநிதி அழைத்தாலும், அவரது எதிர்க்கட்சியாகச் செயல்படுபவர். அவரது உடலைப் பார்க்கச் சென்றால் கண்டிப்பாகச் சலசலப்பு ஏற்படும். அதனால், தகவல் பரவுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

    மக்களுக்காக உழைத்து உழைத்து தனது உடலைக் கவனிக்காமல் விட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

    இப்படி ஒரு கூட்டம். பெரியார், அண்ணா ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிகரான கூட்டம். மக்களுக்காக உழைத்த மாசற்ற மாணிக்கத்தைப் பார்க்க இறுதி வாய்ப்பு.

    எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று பார்த்தார்கள். ராஜாஜி பவனில் தொடங்கிய வரிசை சாந்தி திரையரங்கம் வரை நீண்டது. எத்தனை மணி நேரம் வரிசையில் நின்றாவது பார்த்துவிட்டுக் கண்ணீர் சிந்தி அழ வேண்டும் என்று மக்கள் துடித்தனர்.

    திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

    ஒரு காவல் துறை அதிகாரியிடம், அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்! என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் ஒரு கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.

    வெளியூரிலிருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்கக் குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா... என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா? எங்களை அனாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு... என்று விசும்பினார்!

    அரசு தரப்பு நிகழ்ச்சி எல்லாம் ரத்தானது. அரசு விடுமுறை கொடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் யாரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்தியிருக்க முடியாது. உறங்கிய ஆத்மா அப்படிப்பட்டது. சினிமாவில் மக்களைச் சந்தோஷப்படுத்தியது. அரசியலில் மக்கள் நலன் தவிர்த்து வேறு எதையும் நினைக்காத ஆத்மா சாந்தியடைய வேண்டும் அல்லவா பலர் நினைத்திருப்பார்கள்.

    மதியம் 1 மணி அளவில் எம்.ஜி.ஆரின் உடல் இராணுவ டிரக்கில் ஏற்றினர். அவரது இறுதி பயணத்தில் கடைசி வரை செல்ல விரும்பிய அவரை ஒரு சிலர் ஓரம் கட்ட நினைத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அவரை டிரக்கில் ஏற்ற நினைத்தும், அவர்கள் விடவில்லை.

    நாகரிகமற்ற வளர்ந்தவர்களிடம் அந்தச் சமயத்தில் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்லித்தர முடியும். அந்தப் புனிதமான சூழ்நிலையில் மாசுபடுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருந்தார்.

    அவரை அரசியலில் தனியாளாகிவிட்டோம் என்ற மிதப்பில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது எனப் பலர் கொண்டாடினார்கள். புரட்சித் தலைவருக்குப் பிறகு தங்களை எதிர்க்கும் சக்தி இல்லை என்று நினைத்தார்கள். இனி, நம் ராஜ்ஜியம் என்று துள்ளிக் குதித்தார்கள். அ.தி.மு.க கட்சி தங்களுடையது தான் என்று நினைத்தனர். உண்மையில் அவரின் அரசியல் வாழ்க்கை அங்கு இருந்து தான் தொடங்கியது.

    அதற்கு முன் எம்.ஜி.ஆர் அரசியல் தளபதியாக இருந்தவர், எம்.ஜி.ஆர் இருந்த தலைமைப் பொருப்பை எடுத்து நிரப்பியவர். நெருக்கமானவர்களுக்கு ‘அம்மு’. திரையுலகத்தினருக்கு ஜெ.ஜெயலலிதா. அனைவராலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவர்.

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது என்று பலர் நினைத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் உதயமாகும் ஒரு வாய்ப்பு இருக்கும் சூழ்நிலை உருவானது. ஒரு சில அ.தி.மு.கவினர் தங்கள் கட்சியை விட்டு எதிர் முகாமுக்குச் சென்றார்கள். அவர்களின் கனவை எல்லாம் கனவாய் வைத்து, நிஜத்தில் வெற்றிகள் குவித்தவர் ஜெ.ஜெயலலிதா.

    ஜெயலலிதா என்ற ஆளுமை மிக எளிதாகத் தோன்றவில்லை. சுற்றியிருப்பவர்கள் உதாசீனத்தில், துரோகத்தில் உருவான ஆளுமை.

    மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். பிடிவாதம் அதிகம். திமிர்ப் பிடித்தவர் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யலாம். அலுவலகத்தில் ஒரு பெண் அமைதியாக இருந்தாலே ஏறி மிதிக்கும் உலகம். அரசியலில் அமைதியாக இருந்தால், வளரவிட்டுவிடுவார்களா?

    ஆண்களைக் கொண்டு, அவர்களிடம் தன்னைக் காத்துக்கொண்டு வளர வேண்டும் என்றால் கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகவும் அவசியம். அதைத்தான் ஜெ.ஜெயலலிதா செய்தார்.

    ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருக்கு வரை அவரை அடுத்து கட்சித் தலைவர் யார் என்ற பேச்சு வந்ததேயில்லை. அதைப்பற்றிப் பேச யாருக்கும் துணிவுமில்லை. அவரை மிஞ்சிக் கட்சியில் ஒருவராலும் செயல்பட முடியாது. தனது கட்சியைக் கட்டுப்படாக நடத்தி வந்தார். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு கட்சியைச் சீராக நடத்தியவர் ஜெ.ஜெயலலிதா மட்டும்தான்.

    ஆண்கள் சிங்கமாக நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்புலியாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய்ப் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர்!

    பல ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படி சாதிக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம்தான். கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து, சிதைந்து, தற்கொலை செய்துகொள்ளும் பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்த தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

    நம்முடைய காலத்தில் ஜெயலலிதாவை விடச் சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

    எப்படி எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கி நான்கு வருடத்தில் தமிழக முதலமைச்சரானாரோ அதே போல் கட்சியை ஒருங்கிணைத்து, மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்து நான்கு வருடத்தில் முதலமைச்சரானவர். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் தலைவர் யார் என்று யாரும் ஒரு போதும் சிந்தித்ததில்லை. சிந்திக்கவும் மாட்டார்கள்.

    ஆசிய கண்டத்தில் அதிகாரத்திற்கு வந்த அனைத்துப் பெண் தலைவர்களும் குடும்பப் பின்னனி, பிறரின் ஆதரவுடனேயே வந்தார்கள். விசுவாசமான மனிதர்கள் கொண்டு அரசியல், அதிகாரத்தில் வெற்றி கண்டு வந்தார்கள். ஆனால், ஜெயலலிதா

    Enjoying the preview?
    Page 1 of 1