Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Musolini
Musolini
Musolini
Ebook147 pages1 hour

Musolini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Musolini, Guhan, Biography, Tamil, Novel, Ebook
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580107301230
Musolini

Read more from Guhan

Related to Musolini

Related ebooks

Reviews for Musolini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Musolini - Guhan

    http://www.pustaka.co.in

    முசோலினி

    Musolini

    Author:

    குகன்

    Guhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/guhan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஹிட்லரின் நடுக்கம்

    2. பழைய இத்தாலி

    3. விளையும் பயிர்

    4. பேனாக்காரன்

    5. முசோலினியின் மனைவிகள்

    6. கருஞ்சட்டை படை

    7. இத்தாலி அதிபர்

    8. முசோலினியின் ஆட்சி

    9. இத்தாலி முன்னேற்ற திட்டங்கள்

    10. முசோலினியின் அரசியல் திட்டம்

    11. எத்தோப்பிய யுத்தம்

    12. ஹிட்லரும் முசோலினியும்

    13. ஹிட்லர் – முசோலினி தொடர்கதை

    14. இரண்டாம் உலகப் போர்

    15. முசோலினி கைது நடவடிக்கை

    16. மீட்பு நடவடிக்கை

    17. இறுதி நாட்கள்.

    1. ஹிட்லரின் நடுக்கம்

    செயல்படாமல் இருப்பது மரணத்திற்கு சமம்

    – பெனிட்டோ முசோலினி

    தனது ஆலோசகர்களை எல்லாம் அவரமாக அழைத்திருந்தார் ஹிட்லர். தனது நீண்ட நாள் கனவை பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனுக்கு ஏற்பட்ட கலந்தத்தை துடைப்பது தான் ஹிட்லரின் விருப்பமாக இருந்ததில்லை. உலகத்திலே மிக பெரிய சக்தி ஜெர்மனி என்று எல்லோரும் சொல்ல வேண்டும். அது தான் அவரது லட்சியமாக இருந்தது. அதற்கு 'ஆஸ்திரியா' இணைப்பு தான் முதல் படி.

    ஹிட்லரின் ஆலோசகர்கள் எல்லோரும் சுத்தி வலைத்து ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் 'அவர்' உதவி வேண்டும். 'அவர்' ஆதரவுயில்லாமல் ஆஸ்திரியாவில் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. 'அவர்' இத்தாலியில் தான் இருக்கிறார். ஆனால், ஆஸ்திரியாவில் ஜெர்மனி இராணுவம் உள்ளே நுழைய போகிறது என்று தெரிந்தால் போதும், உடனே இத்தாலிய இராணுவம் ஜெர்மனியை தாக்கும். ஆஸ்திரியாவின் ச்சான்ஸ்லர் டால்பஸ்க்கும், இத்தாலிக்கும் அப்படி ஒரு நட்பு உள்ளது.

    தனது ஆலோசகர் வார்த்தைகளின் உண்மை இருப்பதை ஹிட்லர் உணர்ந்தார். ஹிட்லர் 'அவரை' எதிர்க்க தயங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹிட்லரின் மானசீக குருவும் அவர் தான். ஏகலைவனாக பல விஷ்யங்களை அவரிடம் இருந்து கற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அவர் எதிர்த்து மோதுவது என்பது தற்கொலைக்கு சமம். அவருக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ் இருவரும் வருவார்கள். அதனால், அவரின் ஆதரவு பெற சமாதானமாக போவது தான் நல்லது என்று ஹிட்லர் முடிவுக்கு வந்தார்.

    ஹிட்லர் அவரை முதல் முதலில் 1934ஆம் ஆண்டு வென்னிஸ் நகரத்தில் தான் சந்தித்தார். 'அவர்' சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். அதற்கு தகுந்த பருமலான தேக அங்கம்; விசாலமான நெற்றி;

    நீண்ட கண்கள்; கூரிய மூக்கு; சிரிப்பிலே கம்பீரம் தரும் உதடுகள். வீரம், துணிச்சல், கம்பீரம் எல்லாம் நிறைந்தவரை அன்று தான் பார்த்தார். ஹிட்லரே ஒரு கனம் அஞ்சினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஹிட்லர் அவரிடம் டியூஸ்! உங்களை தான் நான் அரசியல் குருவாக கொண்டு ஜெர்மனியில் ஆட்சி புரிகிறேன். என் ஆலோசகர்களிடம் பேசும் போது கூட உங்களை மேற்கோள் காட்டி தான் நான் பேசுவேன். இத்தாலியை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள். நீங்கள் தான் எனக்கு வழிக்காட்டி! என்றெல்லாம் ஹிட்லர் பல புகழ் மாலைகள் அவருக்கு சுட்டினார். அவரும் மௌனமாக எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.

    தன் உரையாடல் முடிவில் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பல ஜெர்மனி மக்கள் வாழ்கிறார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க உங்கள் ஆதரவு வேண்டும் என்றார். அது வரை மௌனமாக இருந்த அவர் அப்போது தான் பேசினார். ஒரே வார்த்தை...முடியாது என்றார். அதற்கு மேல் பேசி எந்த பலனுமில்லை என்று ஹிட்லரும் தன் வாடிய முகத்துடன் ஜெர்மன் திரும்பினார்.

    ‘அவர்’ மறுத்த செய்தியை கேட்ட ஆஸ்திரிய ச்சான்ஸ்லரான டால்பஸ்க்கு பயங்கர மகிழ்ச்சி. அவருடைய நட்பை நினைத்து மிகவும் பெருமையாக நினைத்தார் கொண்டார். ஹிட்லர் முக்குடையப்பட்டத்தில் டால்பஸ் முசோலினி பெரிய பரிசு பொருள் எல்லாம் அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவரின் சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

    ஆஸ்திரிய நாஜி கட்சியினரால் டால்பஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்ட 'அவர்' கோபத்தில் எழுந்தார். ஜெர்மனி மீது போர் என்று அறிவிக்கலாம். தற்போதைய அரசியல் சூழல் சரியில்லாததால், ஆஸ்திரியாவின் பாதுக்காப்பை பற்றியும் சிந்தித்தார். தனது இராணுவத்தை ஆஸ்திரியாவின் எல்லை பகுதியில் நிரப்பி வைத்தார். இராணுவ உதவி தேவைப்பட்டால் தனக்கு உடனே தகவல் கொடுக்கவும் என்று ஆறுதலும் கூறினார்.

    இராணுவ நடவடிக்கையிலோ அல்லது வேறு நடவடிக்கையிலோ ஆஸ்திரியாவை நெருங்குவது இது சரியான நேரமில்லை. ஆஸ்திரிய கனவை ஹிட்லர் கொஞ்ச நாள் மறந்திருக்கலாம் என்று இருந்தார். அவரின் அதிரடி நடவடிக்கையால் ஹிட்லர் ஜெர்மனியை ஆஸ்திரியாவுடன் இணைக்கும் திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டியதாக இருந்தது.

    'அவர்' சர்வாதிகாரத்தில் ஹிட்லரை விட சீனியர். ஆனால், அதன் பின் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அவரை ஹிட்லர் முந்திவிட்டார். அதன் பின் இருவரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நண்பர்களாக மாறினர். பிறகு இருவரும் சேர்ந்து உலகத்தையே மிரட்ட தொடங்கினர். அந்த 'அவர்' தான் பெனிட்டோ முசோலினி. பாசிசத்தின் தந்தை. இருபதாம் நூற்றாண்டின் மறக்க முடியாத இன்னொரு சர்வாதிகாரி.

    ஹிட்லர் தனிப்பட்ட ஒருவருக்கு பயந்து தன் திட்டத்தை தள்ளி வைத்தார் என்றால் அது பெனிட்டோ முசோலினியாக தான் இருக்கும். பெனிட்டோ முசோலினி ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹிட்லர் உலகத்தையே மிரட்ட ஆரம்பித்தார். பொலாந்தை தாக்கி இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் துவக்கியவுடன், பெனிட்டோ முசோலினி உடனே கலத்தில் குதிக்கவில்லை. சற்று நிதானமாக யோசித்து தான் ஹிட்லருக்கு உதவ முன்வந்தார். இந்த இரண்டு பேர் இறந்தால் தான் உலகப்போர் முடியும் என்று பலரும் கருதிவந்தார்கள்.

    அவ்வபோது இருவருக்குள் அரசியல் 'ஈகோ' இருந்தாலும், இருவரின் நட்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துரியோதனன், கர்ணன் போல் இந்த இரண்டு பேரின் நட்பும் இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியும் கற்பனை செய்து பார்த்தால் கூட தவறில்லை. ஒரு கட்டத்தில் சர்வதேச அரசியலில் பெனிட்டோ தனிமையாக்க பட்ட நேரத்தில், ஹிட்லர் அவருடன் கூட்டனி வைத்து கொண்டார். பெனிட்டோ இறந்த இரண்டாவது நாளில் ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டார். மேலோட்டமாக பார்த்தால் நண்பர்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட்ட கூட்டனி என்று தான் சொல்ல வேண்டும்.

    ஹிட்லரை பற்றி பல ஆயிரக்கணக்கான புத்தங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், அவருக்கு மானசீக குருவாக இருந்த பெனிட்டோ முசோலினி பற்றி வந்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஹிட்லரின் கொள்கை நாஜிசம் என்றால், பெனிட்டோவின் கொள்கை பாஸிசம்.

    இருபது ஆண்டுகளாக இத்தாலி சர்வாதிகாரியாக வாழ்ந்து பாஸிசத்தை உலகிற்கு அறிமுகம் படுத்தியவர். இவரின் ஆட்சி காலத்தில் இத்தாலியில் எத்தனையோ மாற்றங்கள். ஒரு காலத்தில் சர்வாதிகாரத்தில் ஹிட்லருக்கு போட்டியாக இருந்து, அதன் பின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லருக்கு தோழராக மாறியவர்!! ஹிட்லருக்கு தோழர் என்று சொல்லும் போதே புரிந்திருக்கும் அவர் எப்படிப்பட்ட சர்வாதிகாரி என்று....!!

    பெனிட்டோ ஹிட்லருடன் மட்டும் சேராமல் இருந்திருந்தால், இன்றைய சரித்திர பக்கங்கள் முசோலினியை தலை மேல் வைத்து கொண்டாடியிருக்கும். இரண்டாம் உலகப் போர் முன் இறந்திருந்தால், அவர் பெயரில் பல்கலைக்கழகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஹிட்லரும், இரண்டாம் உலகப் போரும் முசோலினியின் பெயரை முற்றிலும் எதிர்மறையாக மாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

    பெனிட்டோவை பற்றியும், அவரது பிறப்பு, சர்வாதிகாரம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் முன்பு முந்தைய இத்தாலி பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்பொது தான் பெனிட்டோவின் சர்வாதிகாரம், அவரின் அடிப்படை தத்துவம் புரியும்.

    2. பழைய இத்தாலி

    நல்ல இரத்தத்தை சில சமயம் முட்டாள்களும், கொசுக்களும் உரியத்தான் செய்யும்

    – பெனிட்டோ முசோலினி

    இத்தாலி... இந்தியாவை போலவே முன்று புறமும் கடல் நீர். ஐரோப்பா கண்டத்தின் தெற்கேயுள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1