Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Italy Puratchi Veerar Mazzini
Italy Puratchi Veerar Mazzini
Italy Puratchi Veerar Mazzini
Ebook101 pages38 minutes

Italy Puratchi Veerar Mazzini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூர்யா சரவணன்

சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு எம்.ஏ. பத்திரிக்கை, எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் சென்னை வந்து பிரபல நாளிதழில் பணியாற்றுகிறார். சுமார் 12 நூல்களை எழுதியுள்ளார். ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். எழுத்து, பத்திரிக்கை துறையில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.

இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், பத்திரிக்கை ஆகியவை இவருக்கு பிடித்த துறைகள். சுயமுன்னேற்றம். ஊடகம் குறித்து கல்லூரிகளிலும் மேடையில் வகுப்பு எடுத்துள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110401874
Italy Puratchi Veerar Mazzini

Read more from Surya Saravanan

Related to Italy Puratchi Veerar Mazzini

Related ebooks

Reviews for Italy Puratchi Veerar Mazzini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Italy Puratchi Veerar Mazzini - Surya Saravanan

    http://www.pustaka.co.in

    இத்தாலி புரட்சி வீரர் மாஜினி

    Italy Puratchi Veerar Mazzini

    Author:

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/surya-saravanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இத்தாலி புரட்சி வீரர் மாஜினி

      - சூர்யா சரவணன்

    *****

    உள்ளே...

    1.முன்னோட்டம்

    2.இளமைக்காலம்

    3.சிறையில் மலர்ந்த சிந்தனைகள்

    4.இளமை இத்தாலி

    5.இருள்மிகு வாழ்க்கை

    6.விடுதலைப் போராட்டம்

    7.அமரத்துவம்

    8.மாஜினியின் சிந்தனை மொழிகள்

    9.மாஜினியின் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள்...

    1.முன்னோட்டம்

    மாவீரன் நெப்போலியன் உலகையே ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிய வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன் களத்தில் இறங்கி வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த காலகட்டத்தில், வல்லரசுகளாக இருந்து வந்த பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, பிரஷ்யா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து 1814 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெப்போலியனை வீழ்த்தின. அவனும் ஆட்சியை இழந்து வட இத்தாலிக்கு மேற்கே உள்ள எல்பா தீவிற்குச் சென்று விட்டான்.

    ஆனால், அதற்கடுத்த மார்ச் மாதம் அங்கிருந்து தப்பித்து, பிரான்சிற்கு வந்து ஆட்சியை கைப்பற்றி நூறு நாட்களே ஆட்சி புரிந்தான். அதற்கு மேல் நீடிக்க வல்லரசு நாடுகள் விடவில்லை. அவைகள் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸுக்கு அருகில் உள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியனின் படையை எதிர்கொண்டன. அப்படையை அடியோடு வீழ்த்தின. நெப்போலியன் கைது செய்யப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு மேற்கே பிரிட்டனின் அதிகாரத்திற்கு உட்பட்ட செயின்ட் ஹெலீனா தீவுக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டான்.

    நெப்போலியனின் வாழ்க்கையும் அந்தத் தீவிலேயே முடிந்து விட்டது.

    இனியேனும் ஐரோப்பாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று வல்லரசு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. அதன் நிமித்தமாக ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1814 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மாநாட்டைக் கூட்டின. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு ‘வியன்னா காங்கிரஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

    1815 ஆம் ஆண்டு கூடிய வல்லரசு பிரதிநிதிகள் ‘ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டிலாவது அரசுக்கு விரோதமாகச் செயல்பட்டால், புரட்சி இயக்கங்கள் தோன்றுமானால் அவற்றை எப்படி அடக்குவது என்பது பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக அடிக்கடி சந்திக்க வேண்டும்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இத்தகைய மாநாடு கூட்டுவதற்கு மூளையாகச் செயல்பட்டவன் ஆஸ்திரியாவின் பிரதமரான ‘மெட்டர்னிக்’ ஐரோப்பிய சர்வாதிகாரிகளையெல்லாம் ஆட்டிப்படைக்கும் சூத்ரகாரி. அவன் அந்த மாநாட்டின் மூலம் ஐரோப்பா முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்தான். அதன் காரணமாகவே புரட்சி விதைகள் ஆங்காங்கு முளைக்க ஆரம்பித்தன.

    உலகில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக 1918 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தின் அருகிலுள்ள ‘வார்சேல்’ என்ற இடத்தில் ஒரு மாநாடு கூடியது. அதில் நானூற்று நாற்பது ஷரத்துக்களைக் கொண்ட ஒரு உடன்படிக்கையை 28-06-1819 அன்று நிறைவேற்றினர்.

    ஆனால், இரண்டாம் உலகப் போர் மட்டுமல்லாது மேலும் பதினேழு போர்கள் 1919 ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பின்னர்தான் நடைபெற்றன.

    நெப்போலியன் ஒரு சர்வாதிகாரியாக இருந்த போதிலும் அவனையறியாமலேயே அவனால் அநேக நன்மைகள் ஏற்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் தூங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சி தலைதூக்கியது. மக்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டது.

    அதுபற்றி ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்-

    ‘நெப்போலியனுடைய படைகள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றனவோ, அங்கெல்லாம் அவை புரட்சி விதைகளை ஊன்றிக் கொண்டே சென்றன’

    நெப்போலியன் தனது ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் எல்லாம் வலுவான ஒரு மத்திய அரசை நிறுவினான். மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி கிடைக்குமாறு செய்தான். போக்குவரத்து சாதனங்களை அதிகப்படுத்தினான். பள்ளிகளை ஏற்படுத்தினான்.

    மக்கள் இவற்றையெல்லாம் அனுபவித்து மனநிறைவு பெற்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால், ஒழுங்கான கண்டிப்பான அரசு நம்மை ஆள்கிறது என்பதை உணர்ந்தனர். இத்தாலியைப் பொறுத்த வரையில் நெப்போலியன் ஒரு சிறப்பு கவனம் செலுத்தி வந்தான். அவர் கார்சிகா தீவில் இத்தாலியைப் பரம்பரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்.

    இவனுடைய ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் இத்தாலி பன்னிரண்டு துண்டு துண்டு நாடுகளாகச் சிதறியிருந்தன. இந்தப் பிரிவுகளை நீக்கி மூன்று மாநிலங்களாக ஆக்கினான். மேலும் பல நன்மைகள் செய்தான். சர்வாதிகாரத்தை அடியோடு வெறுக்கும் மாஜினி கூட நெப்போலியன் ஆட்சி பற்றி இவ்வாறு கூறுகிறார்-

    ‘இத்தாலிய வரலாற்றில் 1805 முதல் 1813 ஆம் ஆண்டு வரையிலான காலம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் கால கட்டத்தில் இத்தாலி மக்களிடம் கல்வி வளர்ச்சி பெற்றது. பொருளாதார நிலையும் வமர்ச்சி பெற்றது. இத்தாலியர்கள் பிரான்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவை எதிர்பார்த்து இருந்தார்கள் என்பதும் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருந்தார்கள் என்பதும் போர்களில் அடிக்கடி ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதும் உண்மை.

    ஆனால், அவர்களிடத்தில் ஊட்டப்பட்ட தேசிய உணர்வானது அவர்களின் ஆன்மாவை உயர்த்தி விட்டது. எந்த இலட்சியத்திற்காக அவர்கள் உழைக்கிறார்களோ அந்த இலட்சியமாகிய ஒன்றுபட்ட இத்தாலியை அவர்கள் தொலைவிருந்து தரிசிக்க முடிந்தது’

    இத்தகைய தேசிய உணர்வும், ஒற்றுமையும் ஐரோப்பாவில் பல இடங்களில் பரவியிருப்பதை ஆங்காங்கு அடங்கிக் கிடந்த சர்வாதிகாரிகள் மௌனமாகச்

    Enjoying the preview?
    Page 1 of 1