Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathanai Pengal
Saathanai Pengal
Saathanai Pengal
Ebook143 pages47 minutes

Saathanai Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்.

வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் நூல் இது.

ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் உள்ள தனித் திறமைகளை வெளியில் கொண்டுவந்து வெற்றிபெற்ற கதைகளை அவர்கள் மூலமாகவே நேரடியாக பேசுவதுபோல் அனுபவத்தை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நூல் அனைத்து பெண்களுக்கும் வழிகாட்டும். பெண்களின் வாழ்க்கையில் ஒளியூட்டும்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580110408333
Saathanai Pengal

Read more from Surya Saravanan

Related to Saathanai Pengal

Related ebooks

Reviews for Saathanai Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathanai Pengal - Surya Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாதனைப் பெண்கள்

    Saathanai Pengal

    Author:

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/surya-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    கனவுகள் விற்பவள்

    கோபம் - ஆக்ரோஷம் - எதிர்பார்ப்பு - இயலாமை ஆகியவற்றை எழுச்சிமிகு வார்த்தைகளில் வெளிப்படுத்துவதே புலம்பெயர்ந்த இலக்கியம்.

    இயற்கை விவசாயி இந்திரா

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண்முகத்திறமை - ஆனந்தி

    கால்வாய்களின் காதலி - சியாமளா நாகராஜன்

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் கோமதி வடிவேலு

    வசனம் எழுத உதவிய தந்தை பெரியாரின் சிந்தனைகள்.

    வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்!

    கனவிடம் தோற்ற கல்வி - டாக்டர் மென்ஹா

    பனை விருட்சம் - பாரதி

    பெண்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் - லட்சுமி சுந்தரம்

    மனதிற்கு நிறைய முகங்கள் உண்டு - விக்டோரியா நிவேதிதா

    ஆடிய கால்கள் மட்டுமல்ல விளையாடிய கால்களும் சும்மா இருக்காது - ஹரிதா

    மாடலிங் துறைக்கு நம்பகத் தன்மை மிகவும் முக்கியம் - சந்தியா

    மாடலிங் துறையில் நியூயார்க், மியான்மரில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்

    பெற்றோர் பேச்சை கேட்காததால் மிகவும் கஷ்டப்பட்டேன் - நடிகை பானு பரத்வராஜ்

    சமூக சேவை ஒரு போதை - ஷீஜா

    ‘சிலம்பத்தின் சிங்கப்பெண்ணே…’

    கட்டிடக்கலை பேராசிரியர் – எஸ். ஹரினி

    கற்றக் கலையையும் நமக்குள் இருக்கும் திறமையயும் அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்

    முன்னுரை

    நிழலை நிஜமாக்கிய பெண்கள்

    பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் தங்கள் அனுபவங்களை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் நூல், ‘சாதனைப் பெண்கள்’

    பெண்ணாக தனித்து நின்று போராடி நிழலை நிஜமாக்கிக் கொண்டவர்கள். கனவை கைகளில் பிடித்தவர்கள்.

    நமது கண்முன் உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை பெண்களுக்கு நல்வழிகாட்டும்.

    பிரபல இதழ்களில் இவர்களைப் பற்றிய பேட்டிகள் வெளிவந்துள்ளது.

    இந்த நூல் உருவாக அடிக்கடி ஆலோசனை கொடுத்து உதவிய ஆரபி சுந்தரம் அவர்களுக்கும்

    மின் நூலாகவும் பதிப்பித்தும் கொடுத்த www.pustaka.co.in ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் படம் வரைந்து கொடுத்த சாருலதா அவர்களுக்கும் எனது நன்றிகள்

    அன்பன்

    சூர்யா சரவணன்

    ###

    கனவுகள் விற்பவள்

    ஞான நல்லறம் வீர சுதந்திரம்

    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ

    - சுப்பிரமணிய பாரதி

    "நான் உன்னைவிட்டு பிரிவதும் இல்லை.

    கைவிடுவதும் இல்லை"

    - ஏசு

    சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்து காணப்பட்டனர். 18 வயதை தாண்டிய பெண்கள் முதல் 60 வயது பெண்கள் வரை இருந்த அவர்கள் முகத்தில் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்கள் என்பதைக், காணமுடிந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகளிடம் சொத்துகளை ஏமாந்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் அங்கு இருந்தனர். அவர்களின் அடுத்த வேளை உணவை நிர்ணயிக்கும் பெண்ணாக அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் எலிசபெத் கம்பீரமாக உள்அறையில் அமர்ந்திருந்தார். நாம் உள்ளே நுழைந்தது முதல் செல்போனும், லேண்ட் லைன் போனும் இடைவிடாமல் சிணுங்கிக் கொண்டே இருந்தன. வீட்டு வேலைக்கு பெண் வேணும், முதியோரை கவனிக்க ஆள் வேண்டும், நோயாளிகளைப் பராமரிக்க நல்ல நர்ஸ் வேணும், சிறப்பு குழந்தைகளைப் பராமரிப்பது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கவனித்துக் கொள்வது, உடனடியாக கார் டிரைவர் தேவை என கேட்டு தொலைபேசியில் வரும் அழைப்புகளுக்கு பதில் அளித்தபடி நம்முடன் பேசினார் எலிசபெத். விருகம்பாக்கம் எண் 42, ஆற்காடு சாலையில் உள்ள யுனிவர்சல் மேன்பவர் நிறுவனம்தான் அது.

    ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சாதனைப் பெண், ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் அளித்த சிறந்த பெண் தொழிலதிபர் ஆகிய விருதுகளுக்கான கேடயங்கள் அவரது அலுவலகத்தை அலங்கரித்தன. நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட எலிசபெத்துக்கு, வீட்டு வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்யும் அமைப்பை உருவாக்கத் தூண்டியது ஒரு சுவாரஸ்யமான கதை. பட்டப்படிப்பு, சுருக்கெழுத்து என பலவற்றையும் படித்துவிட்டு சென்னைக்கு திருமணமாகி வந்த அவருக்கு சும்மா இருக்க பிடிக்காமல் வேலை வாய்ப்பு கேட்டு பதிவு செய்ய சென்றபோது தான், நாமே இவ்வாறு ஒரு அமைப்பை தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறினார்.

    இப்போது தன்னால் படிப்பறிவற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை அனைத்து பெண்களுக்கும் வேலை தேடித் தரமுடியும் என பெருமை பொங்கக் கூறுகிறார் எலிசபெத். கடந்த 2002ல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். சுமார் 17 ஆண்டுகள் வேலை தேடித் தரும் நிறுவனத்தை நடத்தும் பெண்மணி என்ற சிறப்பு அவருக்கு உண்டு. சமையலுக்கு பெண்கள் தேவையா?, வீட்டோடு தங்கி வீட்டு வேலை செய்ய வேண்டுமா?, முதியோரை பராமரிக்க நர்ஸ் வேண்டுமா? எதற்கும் தன்னிடம் ஆட்கள் உள்ளது என்கிறார். இங்கு சில மணி நேரம் முதல் மாதக்கணக்கில் தங்கி வேலை செய்வது வரை பல பிரிவுகளில் பெண்கள் கிடைக்கின்றனர். இதற்காக சென்னை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களை தானே நேரில் சென்று தேர்வு செய்கிறார். இதன் மூலம் கல்வியறிவு அற்றவர்கள் முதல் பட்டம் பெற்ற பெண்கள் வரை பலரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதுவரை இந்த நிறுவனம் மூலம் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 மணி நேர வீட்டு வேலைக்கு மாத சம்பளம் ரூ.6 ஆயிரமும், 8 மணி நேர வேலைக்கு ரூ.15 ஆயிரம் வரையும், பெற்றுத்தருகிறார் எலிசபெத்.

    சென்னை மட்டுமின்றி டெல்லி, மதுரை, ஐதராபாத் போன்ற வெளியூர்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இவர் வீட்டு வேலை உள்ளிட்ட பணிகள் செய்வதற்காக பெண்களை அனுப்புகிறார். வீட்டில் தங்கிப் பணிபுரியும் பெண்களுக்கு கட்டாயம் 6 மாதத்திற்கு ஒருமுறை சில நாட்கள் விடுமுறை தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் ஒப்பந்தம் செய்கிறார். வேலைக்கு அனுப்பியதுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று அவர் கருதுவதில்லை.

    பெண்களைத் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக புகார் வந்தால் அவர்களை காவல் துறை

    Enjoying the preview?
    Page 1 of 1