Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Singa Pengal
Singa Pengal
Singa Pengal
Ebook113 pages40 minutes

Singa Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜான்சிராணி சானியா மிர்சா பெண்களை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொண்டோம்.

நம் வீட்டுப் பெண்களும் சாதனை பெண்களே கனவுகளை தொலைக்காமல் லட்சியத்தை அடைந்த 10 பெண்களின் கதை இவர்கள் வாழும் காலத்திலேயே நமக்கு வழிகாட்டும் பெண்கள்.

திருமணம் முடிந்து விட்டாலே வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் திருமணத்துக்கு பின் சாதித்த பெண்கள் இவர்கள்.

தற்போது நம்மிடையே வாழ்ந்து, வழிகாட்டி வருகிறார்கள். வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்நூல் பயன்படும் என நம்புகிறோம். தொடர்ந்து படிக்கலாம்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580110406803
Singa Pengal

Read more from Surya Saravanan

Related to Singa Pengal

Related ebooks

Reviews for Singa Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Singa Pengal - Surya Saravanan

    http://www.pustaka.co.in

    சிங்க பெண்கள்

    Singa Pengal

    Author :

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/surya-saravanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முயற்சியால் பெறும் ஊண் முற்றிலும் சிறந்தது

    2. கனவுகள் விற்பவள்

    3. குறும்பட நாயகி

    4. மாயாவின் மாய உலகம்

    5. பசி, தாகம், தேடல், கனவு = நாட்டியம்

    6. வலியை போக்கும் வழிகள்

    7. பெண்களை காக்கும் வர்ம அடி முறை

    8. பேரிடர் காலத்தில் களத்தில் குதிக்கும் பெண்

    9. தமிழ் என் உயிரானதினால் தமிழாலே உயர்ந்தேன்

    10. நம்மை நாம் நேசித்தால் நாம் வாழ்க்கையில் சாதிக்கலாம்

    11. கற்றக் கலையையும் நமக்குள் இருக்கும் திறமையயும் அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்

    12. கனவே கலையாதே

    1. முயற்சியால் பெறும் ஊண் முற்றிலும் சிறந்தது

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் பசுமை போர்த்திய ரைபரேலி நகரம். பகல் 11 மணி. நிலப்பகுதியில் இன்னும் பனி விலகாமல் அடர்ந்திருக்க… நேர் மேலே, 10 ஆயிரம் அடி உயரத்தில்… பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் மிதந்தபடி அந்த குட்டி விமானம் வட்டமடித்து சுழல்கிறது. விமானி இருக்கையில் 30 வயது கடக்காத இளைஞன். பின் இருக்கையில் 45 வயது பெண்மணி. தென்கிழக்கு திசையில் இருந்து நீள்வட்ட கோணத்தில் சிறகடிக்கும் விமானம், வினாடிக்கும் குறைவான ஒரு தருணத்தில், திடீரென கட்டுப்பாடுகள் இழந்து தரையை நோக்கி குப்புற பாய்கிறது. விமானத்தின் இயங்கு விசையை அழுத்திப் பிடித்து மேலே உயர்த்துகிறான் இளைஞன். பெரிதாக பலனில்லை. பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி படு வேகமாக குட்டிக்கரணம் அடித்தபடி பாய்கிறது. கீழே… விமானத்தளத்தின் ஓடுபாதை, கோடு கிழித்தது போல நீ…ளமாகத் தெரிகிறது. இன்னும் சில நொடிகள். திக்… திக்… என கரைய… தரைக்கு மிக அருகே மோதுவது போல செங்குத்தாக பாயும் விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென சுதாரித்து… தலை நிமிர்ந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மறுவினாடி, மேல்நோக்கி முகம் திருப்பி மீண்டும் விண்ணை நோக்கி சீறி ஏறுகிறது.

    பைலட் இருக்கையில் இருந்த இளைஞன் முகத்தில் மிகச்சிறிய மென்சிரிப்பு. மெதுவாக பின் இருக்கை நோக்கி திரும்பி அந்த 45 வயது பெண்மணியைப் பார்க்கிறான். பயந்திட்டியா அம்மா…? அந்தப் பெண்மணி, முகத்தில் துளி கலக்கமின்றி சிரிப்புடன் அவனைப் பார்க்கிறார். நீ இருக்கும்போது எனக்கு என்ன ராஜா பயம்? அம்மாவின் அந்த வார்த்தைகளில் துணிச்சல் பெற்ற அந்த இளைஞன் கூடுதல் உற்சாகம் பெற்று குட்டிக்கரணம் அடிப்பது, தலைகீழாக பறப்பது என இப்போது விமானத்தில் மேலும், சில சாகசங்கள் செய்கிறான். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. தரையிறங்கலாம் அம்மா… என்று பின்பக்கம் திரும்பிச் சொல்லிவிட்டு, விசையைத் திருப்ப… ஓடுதளத்தில் தீப்பொறி பறக்க… சறுக்கியபடி இறங்கி… ஓடிக் களைத்து நிற்கிறது குட்டி பயிற்சி விமானம்.

    அங்கு கூடியிருந்த பயிற்சி விமானிகள், டிரெய்னர்கள், ஓடி வந்து சூழ்ந்து கைதட்டி வரவேற்க… விமானத்தின் கதவு திறந்து அம்மாவின் கைபிடித்தபடி கம்பீரமாக கீழே இறங்குகிறான் இளைஞன். இடம்: உத்தரப்பிரதேச மாநிலம், ரைபரேலி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், சுல்தான்பூர் சாலையில் உள்ள இந்திராகாந்தி நேஷனல் ஏவியேஷன் அகாடமி. கமர்ஷியல் பைலட் பயிற்சி சக்சஸ். உங்க பையன் அமர்க்களமாக செஞ்சிருக்கார் ஆண்டாள் மேடம். வாழ்த்துக்கள்… ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே அந்த வட இந்திய இன்ஸ்ட்ரக்டர் அருகே நடந்து வர… அந்தப் பெண்மணியின் கண்களில் கதகதப்பான ஈரம். தலை உயர்த்தி அருகே பார்க்கிறார். அந்த இளைஞன்… அவரது மகன் ப்ராஜ் விஷ்ணு முகமெல்லாம் உற்சாகம் கொப்பளிக்க… பயிற்சி தளத்தின் அலுவலக அறைக்கு நடந்து கொண்டிருக்கிறான்.

    மகனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவனைப் பின்தொடர்கிறார் ஆண்டாள். அவரது கால்கள் வேக, வேகமாக முன்னோக்கிச் செல்ல… அதை விடவும் வேகமாக அவரது எண்ணங்கள் பின்னோக்கிப் பாய்கின்றன.

    பூமியில் ஒரு சிலருக்குத்தான் அமைகிறது. பூமியின் அடி விளிம்பில் அமிழ்ந்து கிடக்கிற சூரியன், யாருடைய உதவியுமின்றி கிளம்பி மேலேறி… உச்சிக்குச் சென்று உலகிற்கே ஒளிவழங்கும் பணி செய்கிறது. பணிமுடிந்து பழைய இடம் திரும்பும் சூரியன்… மீண்டும் மறுநாளில் அதே பணியை அயர்ச்சியின்றி தொடர்கிறது. மேலே, உயரத்துக்கு, உச்சிக்கு ஏறிச் செல்ல எவருடைய உதவியையும், என்றைக்கும் அது எதிர்பார்த்து நின்றதில்லை. இந்தியாவின் முன்னணி பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக இன்று உச்சிக்கு உயர்ந்து கொண்டிருக்கும் குன்னூர் ஆண்டாளுக்கும் ஏறக்குறைய அப்படி ஒரு சூரிய வாழ்க்கையே. இன்றைக்கு அவர் அடைந்திருக்கும் உயரம் எளிதில் வந்ததல்ல. வாழ்க்கையின் அடி விளிம்பில் துவங்கி, தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பி விசையாகக் கொண்டு உச்சிக்கு வந்திருக்கிறார். தான் உயர்ந்தது மட்டுமல்ல… தனது குழந்தைகளின் விருப்பத்தையும் பூர்த்தி செய்து, அவர்களுக்கு மிக அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கதை… ஆச்சர்யங்கள் மிக நிரம்பியது. வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் விளிம்புநிலை பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்!) நடமாடும் முன்னுதாரணமாக இருக்கிறார் குன்னூர் ஸ்ருதி ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டாள் ஆழ்வார்சுவாமி.

    "ரொம்ப சாதாரண நிலையில் இருந்து, இந்த இடத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1