Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alexander
Alexander
Alexander
Ebook100 pages2 hours

Alexander

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூர்யா சரவணன்

சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு எம்.ஏ. பத்திரிக்கை, எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் சென்னை வந்து பிரபல நாளிதழில் பணியாற்றுகிறார். சுமார் 12 நூல்களை எழுதியுள்ளார். ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். எழுத்து, பத்திரிக்கை துறையில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.

இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், பத்திரிக்கை ஆகியவை இவருக்கு பிடித்த துறைகள். சுயமுன்னேற்றம். ஊடகம் குறித்து கல்லூரிகளிலும் மேடையில் வகுப்பு எடுத்துள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110401522
Alexander

Read more from Surya Saravanan

Related to Alexander

Related ebooks

Reviews for Alexander

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alexander - Surya Saravanan

    http://www.pustaka.co.in

    அலெக்சாண்டர்

    Alexander

    Author :

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/surya-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அலெக்சாண்டர்

    - சூர்யா சரவணன்

    கி.மு. 356 ஜூலை 26

    அழகிய மலர்களையும் பார்க்கும்போதெல்லாம் குழந்தையின் சிரிப்பை பார்ப்பதைப்போன்ற ஒரு மகிழ்ச்சி. சிறுசிறு செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் சிறுமியின் சிரிப்பை பார்ப்பதைப்போன்ற ஓர் உற்சாகம். சாதாரண மனிதனுக்கு ஏற்படும் இந்த உற்சாகம் மன்னர் பிலீப்புக்கும் ஏற்பட்டது. மனம் சஞ்சலம் அடையும் போதெல்லாம் மன்னர் பிலிப் பூங்காவில் உலா வருவது வழக்கம்.

    அதேபோல் அன்றும் உலவிக்கொண்டிருந்தார். திடீரென பிலீப்பின் மனதுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அலெக்சாண்டரை’அலெக்சாண்டார் வா நான் உன்னை ஓர் இடத்துக்கு செல்லலாம்" உடனே மறு பேச்சில்லாமல் தந்தைய பின் தொடர்ந்தான். அரண்மனையின் பின்பக்கம் உள்ள ஓர் அறைக்கு இருவரும் சென்றனர். அரசாங்கத்தின் பல முக்கிய விஷயங்களை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விவாதம் செய்யும் அறை அது. இங்கே எதற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் தந்தை என்பது அலெக்சாண்டருக்கு பெரும் குழப்பமாக இருந்தது. சுவற்றில் வரையப்பட்ட ஓர் உலக வரைபடத்தை அலெக்சாண்டரிடம் பிலிப் காட்டினார்.

    "அன்புமகனே அலெக்சாண்டர், இந்த உலக வரைபடத்தின் கிழக்கு திசை இது. இங்கே வளமான நாடு ஒன்று உள்ளது. கிரேக்கத்தில் ஹோமரின் இலியாட், ஒடிசி காவியங்களைப்போல் அங்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற வீர காவியங்கள் உள்ளன.

    ராமாயணத்தை வால்மீகி என்பவர் எழுதி உள்ளாராம். அந்த காவியங்களில் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல தத்துவங்கள் உள்ளன. இந்தியர்கள் நம்மைவிட நாகரிகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். அந்த நாட்டில் உள்ள நான்கு வேதங்கள், உபநிடதங்கள்

    உள்ளன. அதுமட்டுமல்ல. விலை உயர்ந்த மாணிக்கங்கள், வைரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. வற்றாத ஜீவநதியான கங்கை அங்கே ஓடுகிறது. அந்த நதி இந்தியாவிற்கு அழகையும் கம்பீரத்தையும் செழுமையையும் தருகின்றன. அங்கு யானைகள் அதிகம். அந்த நாட்டில் உள்ள மன்னர்கள் அனைவரும் யானைப்படை வைத்துள்ளனர். அதைவிட இந்தியாவின் மிகச் சிறப்பு தன்யைறிந்து,

    நாட்டையும் மனிதர்களையும் வழி நடத்தும் ஞானியர்கள் அங்கு அதிகம் வாழ்கின்றனர். அது தான் என் கனவு தேசம். என் இந்தியாவை வெற்றி கொள்வது உனது தலையாய இலச்சியமாக இருக்க வேண்டும். இந்தியாவின் கலாச்சாரத்தை மேற்குக் கலாச்சாரத்துக்கும் மாசிடோனியர்களுக்கும் நீ அறிமுகம் செய். அது உன்னால் மட்டும் தான் முடியும். ஆம் திரைகடல் ஓடு திரவியம் தேடு!

    உன்னால் மாசிடோனியா பெருமையடைய வேண்டும். பிலீப்பின் மகன் அலெக்சாண்டர் என்ற நிலைமாறி அலெக்சாண்டரின் தந்தை பிலிப் என்ற நிலைக்கு நீ உயரவேண்டும். உனது தகுதிக்கும் திறனுக்கும் நான் வென்று வைத்திருக்கும் நாடுகள் போதாது. நீ வெல்ல வேண்டும்.

    இந்தியாவை மட்டும் இல்லை இந்த உலகையும்.பெரிதினும் பெரிது கேள் உலகை வெல்லுவதற்கானபோர்த்தொழில் பழகு

    என் அன்புத் தந்தையே உங்களது கனவை நிறைவேற்றுவதே என்னுடைய லட்சியம். இதோ அதற்கான் முயற்சியை இதோ இப்போதே தொடங்கிவிட்டேன். இந்தியாவை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்கப்போகிறேன். இந்தியாவை பற்றியே இரவும் பகலும் சிந்திக்கப்போகிறேன். இந்தியாவை வென்று அந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்பேன். அதற்கான பயிற்சிகளை இன்றே தொடங்குவேன்.

    மகனின் பேச்சைக் கேட்ட பிலீப்பின் உள்ளம் பூரித்தது, மகனை அள்ளி அனைத்து முத்தமிட்டார்.

    அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றாரா?...

    ============================================

    ஐரோப்பியா கண்டத்தில் கிரேக்க நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது மாசிடோனியா, இதன் தலைநகரம்பெல்லா!.கலைநயம் மிக்க மர வேலைப்பாடுகள், கம்பீரம் கொண்டது. பிலீப்பின்கோட்டை. கண்ணை இமை காப்பதுபோல் எப்போதும் கோட்டையை காத்து நிற்கும் வீரர்கள் ஏராளம். மாசிடோனியாவில் மலைகள், வயல்வெளி, காடுகள், பரந்த சமவெளி ஆகியவற்றை உள்ளடக்கிய அழகிய தேசம். இங்கு நேரடியான மன்னராட்சி நடந்து வந்து. மக்கள் மன்னரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் இருந்தனர். மக்கள் மன்னனை தன்னை ரச்சிக்க வந்த கடவுளாகவே கருதினர். மன்னரின் கட்டளைகளையும் அரசின் உத்தரவுகளுக்கும் மறுபேச்சு இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இறை நம்பிக்கை அதிகம் இருந்தது. நெருப்பை வழிபட்டனர். பூனை குறுக்கே போனால் அதை சகுனத்தடை என்று நாம் இன்றும் நம்புகிறோமே அந்த மூட நம்பிக்கையின் மூலகாரணம் இவர்களிடம் இருந்து நமக்கு வந்திருக்கலாம். எந்த ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்கினாலும் புதிய வெற்றி கிடைத்தாலும் இறைவனுக்கு பலியிடுவது மாசிடோனியர்களின் வழக்கம்.

    மாசிடோனியாவுக்கும் இல்லீரியாவுக்கும் இடையில் கடும்போர் நடந்து கொண்டிருந்தது. குதிரைகள் தனது பின்னங்கால்களை பூமியில் அழுத்தி, முன்னங்காள்களால் எதிரிகளை பந்தாடிக்கொண்டிருந்தன. வீரர்கள் நெஞ்சுரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். எதிரிகளின் தலைகளை மாசிடேனியா வீரர்கள் சீவினர். போர்க்களம் முழுவதும் இல்லீரியர்கள் தலை, கை, கால்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததன. பிலீப், வீரர்களுக்கு கட்டளை வழங்கியபடியே போரிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, உள்நாட்டு போர்வீரன்

    ஒருவன் குதிரையில் வேகமாக வந்தான். மன்னர்கள் போருக்கு செல்லும்போது எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடாஅல் நாட்டை பாதுகாக்கவும் உள்நாட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1