Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagam Ippadithan!
Ulagam Ippadithan!
Ulagam Ippadithan!
Ebook489 pages1 hour

Ulagam Ippadithan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசைகளும் அவஸ்தைகளும்

நிறைய சுவாரஸ்யங்கள் கொண்டது மனித வாழ்க்கை. அபத்தங்களும்கூட அதன் அழகாகத்தான் இருக்கிறது. இன்னமும் நம் ஜீவிதம் நமக்குள், மாற்றங்களும் வித்தியாசங்களும் நிறைந்து ஒரு மெல்லிய நீரோட்டம் போல சலசலத்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சின்னச்சின்ன காரணங்கள் நமக்குள் தேங்கிக் கிடக்கின்றன.

பல்வேறு உணர்ச்சிகளை பயணவெளியில் கடந்து போகிறோம். நாமே நமக்கு மாபெரும் புரியாத புதிர். அந்தப் புதிர் விளங்கிக் கொள்ளப்படும் வரை நமது வாழ்க்கையின் சுவை குறையாமலேயே இருக்கும். ஆசைகளும் அவஸ்தைகளும், இன்னும் இன்னும் இருக்கின்றன. இதுபோலவே நம்முடன் இருக்கிற ஆகச்சிறந்த உணர்ச்சிகளெல்லாம் 'உலகம் இப்படித்தான்' என்கிற இந்த நூலின் வழி பதிவாகியிருக்கின்றன.

'காக்டெயில்' என்ற தலைப்பில் பதிவாகி வந்த இந்தத் தொடர் வாசகர் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இது வெளிவந்த நாட்களிலேயே, பலரும் இந்தத் தொடர் நூலாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், அது இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த நூல் நீங்கள் பெறுவதற்குரிய விஷயங்களோடு வந்திருக்கிறது. உலகம் என்னதான் மாற்றங்களை அடைந்து கொண்டே இருந்தாலும், மாறாத சில விஷயங்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாமும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் இந்த வாழ்க்கையை. அட... 'இது நம்மளகூட க்ராஸ் பண்ணி போச்சில்ல...' என்று சில இடங்களை வாசிக்கும்போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றச் செய்வதே இந்த நூலின் முக்கிய அம்சம். அவற்றை நீங்களே காணப்போகிறீர்கள். வேறென்ன சொல்வது...?

புத்தக வடிவில் இதோ ஒரு உலகம்; எழுத்துப் பயணிகளுக்கான உலகம். பயணப்படுங்கள்...

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580126704520
Ulagam Ippadithan!

Read more from Ra. Ki. Rangarajan

Related to Ulagam Ippadithan!

Related ebooks

Reviews for Ulagam Ippadithan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagam Ippadithan! - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    உலகம் இப்படித்தான்!

    Ulagam Ippadithan!

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அறிந்திராத பல தகவல்களை

    சுவாரஸ்யமாகச் சொல்லும்

    எழுத்துப் பயணிகளின் உலகம்

    ஆசைகளும் அவஸ்தைகளும்

    நிறைய சுவாரஸ்யங்கள் கொண்டது மனித வாழ்க்கை. அபத்தங்களும்கூட அதன் அழகாகத்தான் இருக்கிறது. இன்னமும் நம் ஜீவிதம் நமக்குள், மாற்றங்களும் வித்தியாசங்களும் நிறைந்து ஒரு மெல்லிய நீரோட்டம் போல சலசலத்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சின்னச்சின்ன காரணங்கள் நமக்குள் தேங்கிக் கிடக்கின்றன.

    பல்வேறு உணர்ச்சிகளை பயணவெளியில் கடந்து போகிறோம். நாமே நமக்கு மாபெரும் புரியாத புதிர். அந்தப் புதிர் விளங்கிக் கொள்ளப்படும் வரை நமது வாழ்க்கையின் சுவை குறையாமலேயே இருக்கும். ஆசைகளும் அவஸ்தைகளும், இன்னும் இன்னும் இருக்கின்றன. இதுபோலவே நம்முடன் இருக்கிற ஆகச்சிறந்த உணர்ச்சிகளெல்லாம் 'உலகம் இப்படித்தான்' என்கிற இந்த நூலின் வழி பதிவாகியிருக்கின்றன.

    'காக்டெயில்' என்ற தலைப்பில் பதிவாகி வந்த இந்தத் தொடர் வாசகர் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இது வெளிவந்த நாட்களிலேயே, பலரும் இந்தத் தொடர் நூலாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், அது இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.

    கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த நூல் நீங்கள் பெறுவதற்குரிய விஷயங்களோடு வந்திருக்கிறது. உலகம் என்னதான் மாற்றங்களை அடைந்து கொண்டே இருந்தாலும், மாறாத சில விஷயங்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நாமும் சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் இந்த வாழ்க்கையை. அட... 'இது நம்மளகூட க்ராஸ் பண்ணி போச்சில்ல...' என்று சில இடங்களை வாசிக்கும்போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றச் செய்வதே இந்த நூலின் முக்கிய அம்சம். அவற்றை நீங்களே காணப்போகிறீர்கள். வேறென்ன சொல்வது...?

    புத்தக வடிவில் இதோ ஒரு உலகம்; எழுத்துப் பயணிகளுக்கான உலகம். பயணப்படுங்கள்...

    *****

    இளமையான எழுத்து வீச்சுடன் சுவாரஸ்யமான கதை, கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் ரா.கி.ரங்கராஜன். வயது 80. கும்பகோணத்தில் பிறந்த ரங்கராஜன் 65 வருட காலமாக சென்னை வாசி. தந்தை ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரியார் மாபெரும் சமஸ்கிருத அறிஞர்; 'மகா மகோபாத்யாய' விருது பெற்றவர். தமையனார் ஆர்.கே.பார்த்தசாரதியும் சிறந்த சமஸ்கிருத வித்வான்.

    16 வயது முதல் எழுத ஆரம்பித்த ரா.கி.ர, 'சக்தி' மாத இதழில் வை.கோவிந்தனின் கீழும், கோவை 'காலச்சக்கரம்' இதழில் ம.ப.பெரியசாமி தூரனின் கீழும் பணியாற்றியவர். குமுதம் இதழில் அமரர் எஸ்.ஏ.பி. அவர்களின் வலது கரமாக 42 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கவிஞர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்களில் ரங்கராஜனும் ஒருவர்.

    1500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50 நாவல்கள், ஏராளமான மொழிபெயர்ப்பு நாவல்கள், நாடகங்கள் படைத்திருக்கிறார். 'நான் கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திர நாவல் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று. மன்னன் கிருஷ்ண தேவராயன் தன் கதையைத் தானே சொல்வதுபோல், புதுமையான உத்தியில் அந்தத் தொடர் அமைந்திருந்தது. மூன்று திரைப் பாடல்கள், பல டிவி நிகழ்ச்சிகள் இவரது படைப்புகளாக வந்துள்ளன. 'துக்ளக்' இதழில் டிவி விமர்சனமும் அரசியல் குறிப்பும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    *****

    இந்நூல்

    அமரர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு

    *****

    ஷேக்ஸ்பியர் வரி கட்ட மறந்தாரா?

    ஷேக்ஸ்பியர் தன் வீட்டைச் சுற்றி நிறைய நிலம் வாங்கிப் போட்டிருந்தார் என்று பார்க் ஜோனான் என்ற ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து தெரிகிறது. கிரேட் ரெட்ரால் என்ற இடத்தில் 8 ஏக்கர், நெதல் கில்பிட் என்ற இடத்தில் 2 ஏக்கர், லைம் ஃபர்லால் என்ற இடத்தில் 6 ஏக்கர் - இப்படி பல நிலத்துக்குச் சொந்தக்காரராக விளங்கினார் ஷேக்ஸ்பியர்.

    பெம்ப்ரோக் சீமாட்டி என்பவர் அவருடைய போஷகராக இருந்தார். அவர் ஷேக்ஸ்பியரின் நாடகக் கம்பெனிக்கு கொடுத்த பணத்தைப் பற்றிய கணக்கும் இப்புத்தகத்தில் இருக்கிறது. 'இனிப்பான ஒரு பசையை ஒரு துணித்துண்டில் நனைத்து, அதனால் பல்லைத் துடைத்துக் கொள்வது ஷேக்ஸ்பியரின் வழக்கம்' என்றும் இப்புத்தகம் சொல்கிறது.

    அரசாங்கத்துக்கு வரி பாக்கி வைப்பவர்களை, லங்காஷயரில் ஒரு வீட்டில் கட்டாயமாகப் பிடித்து வைத்திருப்பது அந்நாளைய வழக்கம். அப்படிப்பட்ட வீட்டில் 1580-ம் ஆண்டு வாக்கில் சில காலம் வசித்து வந்தாராம் ஷேக்ஸ்பியர்.

    ஷேக்ஸ்பியர்

    இங்கிலாந்தில், கடற்கரைப் பிரதேசமே இல்லாத உள்நாட்டில் ஆயுள்பூரா வசித்தவர் ஷேக்ஸ்பியர். ஆனால், கடலைப் பற்றி பல நாடகங்களில் விஸ்தாரமாகவும் மிகத் தத்ரூபமாகவும் வர்ணித்திருக்கிறார். அது அவருடைய வளமான கற்பனையைக் காட்டுகிறது என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

    (டிசம்பர் சீஸனில் ரசிகர்கள் சொல்லிக் கொள்கிற மாதிரி, 'எல்லாம் கேள்வி ஞானம்தான்.’)

    *****

    'செக்ஸ்' பேசினார்... 'சக்ஸஸ்' அடைந்தார்!

    கேபி ரோஸ்லின் என்ற பி.பி.ஸி பெண் நிருபர், முன்பு ரொம்பப் பிரபலமாக இருந்து பிறகு கொஞ்ச நாள் மங்கியிருந்தார். இப்போது மறுபடி கிடுகிடுவென்று புகழ் பெருகிவிட்டது.

    காரணம்,

    ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாகப் போய் நோயாளிகளிடமும், டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் அவர்களுடைய செக்ஸ் அனுபவங்களைப் பற்றி பேட்டி காணுகிறார். அத்துடன், கருத்தடை ஆபரேஷன்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறார்.

    கேபி ரோஸ்லின்

    டி.வி.நிகழ்ச்சியில்...

    இருதய ஆபரேஷன் செய்து கொண்ட ஒருவரிடம், 'உங்கள் செக்ஸ் அனுபவம் எப்படி?' என்று கேபி ரோஸ்லின் கேட்க அவர், 'இரண்டு மாதத்துக்கு எதுவும் கூடாது என டாக்டர் எச்சரித்திருக்கிறார். மார்பை வைத்து அழுத்தினால் இதயம் வெடித்து விடும்!' என்று சொன்னதை வெளியிட்டு இருக்கிறார். நர்ஸ்களும் டாக்டர்களும் அவரிடம் தங்கள் காதல் லீலைகளை டி.வி.நிகழ்ச்சியில்... ஒப்பிக்கிறார்கள்.

    'இது தனி மனிதர்களின் அந்தரங்கத்தைக் குடைவதல்லவா?' என்று கேட்டால், அதற்கு கேபி ரோஸ்லினின் பதில்: 'இல்லை, தங்களைப் பேட்டி காணும்படி அவர்களே கூப்பிடுகிறார்கள்.

    ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு வந்த ஒருவர், நான் வந்து பேட்டி கண்டால்தான் வண்டியிலிருந்து இறங்குவேன் என்று அடம் பிடித்தார்.'

    (அபாய நிலையில் இருக்கும் நோயாளி, 'கேபி ரோஸ்லின் வந்தபின்தான் கடைசி மூச்சை விடுவேன்!' என்று சொல்வார் போலிருக்கிறது.)

    *****

    வயது ஏறினால் மதிப்பு ஏறும்!

    பாரீஸ் மாநகரத்தின் புகழ்பெற்ற ஈபல் கோபுரத்தைப் பார்க்க வரும் டூரிஸ்ட்டுகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 1992ஆம் ஆண்டுதான் அதைப் பார்க்க வந்தவர்கள் மிக அதிகம் என்று ஒரு ரெக்கார்ட் இருந்தது. சுமார் ஐம்பத்தேழு லட்சம் பேர்.

    ஈபல் கோபுரம்

    1998ல் அந்த ரெக்கார்டை முறித்து, அறுபது லட்சம் பேர் வந்திருக்கிறார்கள்! உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் டூரிஸ்ட்டுகள் வருகை தந்த இடம் ஈபல் கோபுரம்தானாம்! நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கூட இதற்கு அடுத்தபடிதான். முப்பத்தாறு லட்சம் பேர்தான் அதைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஈபல் கோபுரத்தின் வயது 110.

    (இந்தத் தள்ளாத வயதிலும் சிறிசுகள் அதை மதித்துப் போற்றுகிறார்களே!)

    *****

    வள்! வள்! கவனியுங்கள்!

    நாய்கள் நல்ல மனநலத்துடன் வாழ்வதற்காக இரண்டு புதிய மருந்துகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரமும் அளித்துள்ளது.

    எஜமானர்களிடம் 'நல்லபடி' நடந்து கொள்ளவில்லை என்பதற்காக, வருடத்துக்கு எழுபது லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றனவாம். எனவே, நாய்கள் நல்ல மனநலத்துடன் இருக்க இந்த மருந்துகள். ஒன்றின் பெயர்: 'க்ளோமிகாம்'. இது, தனிமை நோயைக் குணப்படுத்துமாம். இந்த நோய் கண்ட நாய்கள், எஜமானர்கள் அவைகளைத் தனியே விட்டுவிட்டுப் போனால், இடைவிடாமல் குரைக்கும். எஜமானர்களின் உடைமைகளைக் கடித்துக் குதறும். வீட்டுக்குள் அசிங்கம் செய்யும். 'க்ளோமிகாம்' மருந்து இந்த நோயைக் குணப்படுத்துமாம்.

    இன்னொரு மருந்தின் பெயர்: 'அனாப்ரில்'. வயது முதிர்ந்த நாய்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு, நாய்கள் எஜமானர்களையே அடையாளம் தெரியாமல் போவதை இந்த மருந்து குணப்படுத்துமாம். 'மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள நேயத்தை இந்த மருந்துகள் அதிகப்படுத்தும்' என்கிறார்கள் இவற்றின் தயாரிப்பாளர்கள்.

    (நாய் விற்ற காசும் குரைக்காது. நாய் மருந்து விற்ற காசும் குரைக்காது.)

    *****

    அபார புத்திசாலி

    ரோமாபுரி நகரமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செய்தது அந்தப் பெண்ணுக்காக. 1807 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று காலமான 'ஏஞ்சலிகா காஃப்மன்' என்ற ஓவியக் கலைஞர் தான் அந்தப் பெண். பாடகியாகப் புகழ் பெறவேண்டுமென்று ஆசைப்பட்ட ஏஞ்சலிகா, பன்னிரண்டாவது வயதில் ஓர் ஓவியம் தீட்டினாள். உள்ளூர் பாதிரியார் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, தன்னை வரையும்படி கேட்டுக் கொண்டார். அதைக் கண்டு பல சீமான்களும் சீமாட்டிகளும் தங்களை ஓவியம் தீட்டச் சொன்னார்கள்.

    ஓவியக் கலைஞர் என்கிற சிறப்போடு, சிறந்த அறிவாளி என்றும் போற்றப் பட்டார் ஏஞ்சலிகா. ரஷ்யாவின் ஜார் மன்னர், ஆஸ்திரிய சக்ரவர்த்தி, போலந்து மன்னர், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் - இப்படி பல பெரும்புள்ளிகளை ஏஞ்சலிகா வரைந்தார்.

    இருபத்தாறாவது வயதில் 'பிரபு' என்று சொல்லிக்கொண்ட ஒரு மோசக்காரனை மணந்து ஏமாந்த பின், ஏஞ்சலிகாவின் புகழ் மங்கலாயிற்று. அவள் தீட்டிய ஓவியங்கள் எங்கெங்கோ அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் இருந்ததால், மக்களிடையே பிரபலமாகாமல் போய்விட்டது. 120 ஓவியங்களைச் சேகரித்து ஜெர்மனியில் 'டஸ்ஸல்டார்ஃப்' நகர மியூசியத்தில் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.

    *****

    மகுடத்தை அடகு வைத்தார்!

    தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா வைரச் சுரங்கத்தில் 1905ம் ஆண்டு, உலகிலேயே மிகப் பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டது. 3106 கேரட் வைரம்! இதை ஏழாம் எட்வர்டு மன்னருக்குப் பரிசாக அனுப்பத் தீர்மானித்தார்கள். ஆனால், பந்தோபஸ்து அதிகமாக செய்யச் செய்ய திருடர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், ஸ்காட்லாந்து யார்டு ரொம்ப சுலபமான வழி கண்டுபிடித்தது. எல்லாத் தபால்களையும் அனுப்புகிற மாதிரி, சாதாரண தபாலிலேயே லண்டனுக்கு அனுப்பினார்கள். பத்திரமாகப் போய்ச் சேர்ந்தது அது!

    'கல்லினான்' என்ற இந்த முட்டை சைஸ் வைரத்தை வெட்டி பல துண்டுகளாக்கி, மணிமகுடத்திலும் மற்ற ஆபரணங்களிலும் பொருத்தியிருக்கிறார்கள்.

    பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் என்னென்ன வைர வைடூரியங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டார்கள். சில பக்கங்களில் சில நாட்களில் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த வேலை, பதினைந்து வருடங்களை விழுங்கி, இரண்டு பிரம்மாண்ட வால்யூம்களாக வளர்ந்துள்ளது!

    கூடவே, பிரிட்டிஷ் மணிமகுடம் பற்றிய பல குட்டிக் கதைகளும் கிடைத்துள்ளன. இந்த மகுடம் தயாராகி ஆயிரம் ஆண்டுகளாகிறது. திருமணம், யுத்தம், அரண்மனைப் பராமரிப்பு முதலிய நிகழ்ச்சிகளின் போது மன்னர்கள் இதை அடகு வைத்தது உண்டாம்!

    போருக்குப் போகும் மன்னர்கள் இதையும் கூடவே எடுத்துச் செல்வார்களாம். விட்டுவிட்டுப் போனால், அரண்மனையில் உள்ள உறவினர்கள் திருடிவிடுவார்கள் என்ற பயத்தினால்!

    1830 ஆம் ஆண்டு, நாலாவது வில்லியம் முடிசூட்டிக் கொண்டபோது, இந்த மகுடத்தில் வைரம், முத்து, பவளம் என்று எக்கச்சக்கமாகப் பொருத்தும்படி ஆணையிட்டார்.

    விளைவு...

    கிரீடம் எக்கச்சக்கமாக கனம் ஏறி, மன்னருக்குத் தலைவலியும் பல்வலியும் ஏற்பட்டு, பாதி மகுடாபிஷேகத்தின்போது எழுந்து போய்விட்டாராம்! எலிசபெத் அரசி, பார்லிமென்ட் தொடக்க தினத்தன்று மட்டுமே இதை அணிந்தார்!

    (அரசியல் தலைவலியே போதும்... இது வேற எதுக்கு...?)

    *****

    இரண்டு செங்கல் இருந்தால் இருமல் நிற்கும்!

    'பாட்டி வைத்தியம் கை வைத்தியம்' என்று கேலியாகச் சொல்லப்படும் பழைய சிகிச்சைகள் உண்மையிலேயே பயனுள்ளவைதான் என்று அடித்துச் சொல்கிறார் பிரபல பிரிட்டிஷ் வைத்தியரான டாக்டர் ஜேம்ஸ் லே ஃபானு. அவர் சேகரித்த தகவலின்படி:

    'ஒருவர் இருபது வருடமாக இருமல் நோயினால் அவதிப்படுவதாகச் சொன்னார். தாடி வளர்க்கும்படி அவருக்குச் சொன்னார்களாம். அவரும் வளர்த்தாராம். இருமல் மறைந்து விட்டதாம். தாடி கழுத்துக்குப் பாதுகாப்புக் கொடுத்ததால்தான் இருமல் நின்றது' என்கிறார் இந்த டாக்டர். பெண்களும், குழந்தைகளும் கழுத்தைச் சுற்றி மஃப்ளர் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது இவர் யோசனை.

    தலையணையின் கீழே இரண்டு செங்கல் வைத்து, தலையை சற்றே உயரமாக வைத்துப் படுத்தால் இருமல் நின்றுவிடும் என்பது இந்த டாக்டர் கண்டுபிடித்துள்ள இன்னொரு பாட்டி வைத்தியம்.

    (செங்கல்லினால் ஏற்படக்கூடிய தலைவலிக்கு என்ன பாட்டி வைத்தியம்?)

    *****

    இசை வெள்ளத்தின் நடுவே பரிசு வெள்ளம்!

    கார்த் ப்ரூக்ஸ் என்ற பாடகர் தன் இசைக்குழுவுடன் உலகமெங்கும் சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தினார். 1998-ல் ஒருமுறை இவர் அமெரிக்காவுக்கு வந்தார். பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். மினியோ பாலிஸில் நிகழ்ச்சி நடத்தியவர், வெய்ன் மார்ஸ் என்பவருக்கும் அவர் மனைவி மேரிக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்கினார். கார்த் ப்ரூக்ஸின் கச்சேரிக்கு வந்த ஐம்பது லட்சமாவது ரசிகராம் இவர். முந்தின 4999999 பேருக்குக் கிடக்காத பரிசு இவருக்குக் கிடைத்தது.

    கார்த் ப்ரூக்ஸ்

    பரிசு விவரம்: இரண்டு லாரிகள், ஒரு பெரிய கார், மெக்ஸிகோவுக்கு உல்லாசப் பயணம், தங்கம், ரொக்கமாக ஐயாயிரம் டாலர், நூறு டஜன் சிவப்பு ரோஜாக்கள். கார்த் ப்ரூக்ஸூக்கு இதில் நஷ்டம் ஏதுமில்லை.

    மினியோ பாலிஸில் மொத்தம் எண்பது இசை நிகழ்ச்சிகள் நடத்தினார் அவர். ஒவ்வொன்றிலும் இரண்டு லட்சம் டாலர் வருமானம்.

    (கச்சேரி கிடைக்காத யாராவது ஒரு வித்வான் இப்படிச் செய்யக்கூடாதோ?)

    *****

    தோண்டி எடுத்தார் ஒரு கப்பலை!

    எகிப்திய துறைமுகமான அலெக்ஸாண்டிரியாவுக்கு 15 மைல் தூரத்தில், மத்திய தரைக்கடல் வளைகுடாவின் ஆழத்தில், இரண்டு நூற்றாண்டுகளாக மூழ்கிக் கிடந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    நெப்போலியனின் கொடிக் கப்பல் இது. லா ஓரியண்ட் என்ற பெயர் கொண்ட இதை, பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி அட்மிரல் நெல்ஸன் வீழ்த்தினார். 120 பீரங்கிகளுடன் 200 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், நெல்ஸன் சுட்டபோது வெடி மருந்துக் கிடங்கில் தீப்பிடித்துத் தரை மட்டமாயிற்று. கப்பலில் இருந்த ஆயிரம் மாலுமிகளும் இறந்து போனார்கள். தேதி: ஆகஸ்ட் 1, 1798.

    இதைக் கண்டுபிடித்த பிரெஞ்சு இன்ஜினியர் ப்ராங்க் காடியோ, தோண்டியெடுப்பதில் வல்லவர். இவர் கண்டுபிடித்தவை: க்ளியோபாட்ராவின் அரண்மனை; அவள் காதலன் மார்க் ஆன்ட்டனியின் மாளிகை. ஒரு பூகம்பத்தில் இந்த இரண்டும் புதையுண்டு போயிருந்தன.

    (சரியான தோண்டல் திலகம்.)

    *****

    குச்சியில் ஆரம்பித்தால் கோடியில் முடியும்!

    பிலடெல்பியாவில், ஒரு சாதாரண பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வந்தார் ஜோயல் க்ளிக்மேன். பிளாஸ்டிக் நாற்காலிகளின் கால்களுக்குப் பொருந்தக் கூடிய தட்டுக்களைத் தயாரித்து வந்தார் இங்கே. சுமாரான வியாபாரம்தான். திருப்தியில்லாமல் தொழில் நடத்தி வந்தார். ஒரு திருமண ரிசப்ஷன் போனார் ஒருநாள்.

    அங்கே ஒரு மூலையில் போய் உட்கார்ந்கொண்டு பிளாஸ்டிக் ஸ்ட்ரா மூலம் குளிர்பானம் அருந்தினார். நிறைய ஸ்ட்ரா குச்சிகள் அங்கே இருக்கவே, போரடித்துப் போன ஜோயல், அந்தச் குச்சிகளை ஒடிப்பதும் மடிப்பதும் சேர்ப்பதுமாக அடுக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு ஐடியா. ஏன் குழந்தைகளுக்கான 'வீடு கட்டும்' விளையாட்டுகளைத் தயாரிக்கக் கூடாது என்று தோன்றியது. பதினெட்டு மாதங்கள் பரீட்சை செய்து, பலவகை நீளங்களில் குச்சிகளும் அவற்றுக்கான இணைப்புகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1