Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal
Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal
Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal
Ebook168 pages1 hour

Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்த சில ஆண்டுகளில் இரசாயன மூலகங்கள் வேதியியல் தனிமங்கள் பற்றிய சுவையான செய்திகளையும், அறிவியல் விஷயங்களையும் தொகுத்து வெளியிட்டேன். அதைப் படித்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ரசாயனம், வரலாறு போன்ற விஷயங்களையும் சுவையான முறையில் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும். அப்போதுதான் படிக்கும் ஆர்வமும் வரும்; நினைவில் வைத்துக்கொள்ளுவதும் எளிதாகும். வாருங்கள் வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580153508358
Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal

Read more from London Swaminathan

Related to Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal

Related ebooks

Reviews for Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velli, Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal - London Swaminathan

    http://www.pustaka.co.in

    வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

    Aluminium, Uranium Patriya Suvaiyana Kathaigal

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசிரியரைப் பற்றி

    வெள்ளி பற்றிய சுவையான தகவல்கள் - Part 1

    வெள்ளி(Silver) பற்றிய சுவையான விஷயங்கள் - பகுதி 2

    இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை - 1

    இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2

    உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -1

    உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி - 2

    அடடா! அடடா! அயோடின் Iodine-டா!

    அயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும்

    ரசாயன மூலகம் டெல்லூரியத்தின் கதை

    நியோடைமியம்(NEODYMIUM) பற்றிய சுவையான தகவல்

    தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!!

    அழகிகளைக் கொன்ற ரேடியம்

    அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள்

    படிகாரம் பற்றிய அதிசய நம்பிக்கைகள்

    கரி என்னும் அற்புத மூலகம்- Part 1

    கரி என்னும் அற்புத மூலகம்-2; CO உயிருக்கு ஆபத்து

    அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு!

    நிக்கல் என்னும் அற்புத உலோகம் Part - 1

    ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்!

    பேரியம் கஞ்சியும் பச்சை மத்தாப்பும்

    பெண்களுக்கு அழகு தரும் ‘பள, பள, தள, தள’ பிஸ்மத்!

    இந்திரஜால வித்தை செய்யும் உலோகம் கோபால்ட் – ரத்தசோகையை அகற்றும்!

    யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை

    மக்னீஷியம்- பேதி மருந்து! அக்னி வெடிகுண்டு!!

    கொலைகார மூலகம்(THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்!

    குளோரின் - நாம் தினசரி உபயோகிக்கும் வாயு

    மன நோயாளிகளுக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்!

    பாஸ்வரம் - உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 1

    பாஸ்வரம் -உடலுக்கும் தேவை உரத்துக்கும் தேவை பகுதி - 2

    தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான, வரலாற்று விஷயங்கள்(Post No.8543)

    முன்னுரை

    கடந்த சில ஆண்டுகளில் இரசாயன மூலகங்கள்( CHEMICAL ELEMENTS வேதியியல் தனிமங்கள்) பற்றிய சுவையான செய்திகளையும், அறிவியல் விஷயங்களையும் தொகுத்து எனது இரண்டு ‘பிளாக்’குகளில்வெளியிட்டேன். அதைப் படித்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ரசாயனம், வரலாறு போன்ற விஷயங்களையும் சுவையான முறையில் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும்.அப்போதுதான் படிக்கும் ஆர்வமும் வரும்; நினைவில் வைத்துக்கொள்ளுவதும் எளிதாகும்…

    ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் அது வெளியான தேதி, கட்டுரையின் எண் இருக்கும். ஏனெனில் பிற்காலத்தில் மேலும் பல புதிய செய்திகள் வரக்கூடும். ஆகையால் எழுதிய வெளியான தேதி முக்கியம் பெறுகிறது. வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் ஒரு தொடர்ச்சியையோ, இணைப்பையோ எதிர்பார்க்கக் கூடாது. சில குறிப்புகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். மூலகம் என்றால் என்ன என்ற விளக்கத்தை பல கட்டுரைகளில் சொல்லியிருப்பேன்; இதை நீக்கவில்லை. ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு கட்டுரையைப் படித்தாலும் அதைப் புரிந்து கொள்ள இது உதவும்.

    இதுவரை 40-க்கும் மேலான மூலகக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இது முதல் பகுதியாகும்; விரைவில் இரண்டாவது பகுதி வெளிவரும். எல்லாம் உங்கள் ஆதரவையும் ஆக்கபூர்வ விமர்சனத்தையும் பொறுத்தது.

    அன்புடன்

    சுவாமிநாதன், மார்ச் 2022

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப்பட்டங்களைப் பெற்றார்(வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக(SENIOR SUB EDITOR)உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில்(PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய(TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை(1993)நிறுவுவதில்டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 5 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ.சந்தானம்(V.SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    வெள்ளி பற்றிய சுவையான தகவல்கள் - Part 1

    புகழ் பெற்ற சைரஸ்(Cyrus) என்ற பாரசீக மன்னன், எங்கே சென்றாலும் பெரிய வெள்ளிப்பபானைகளில்குடிநீரைக் கொண்டு செல்வாராம். அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட ஆற்றிலிருந்து எடுத்து காய்ச்சி வடித்துப் பின்னர் வெள்ளிக் குடங்களில் நிரப்புவார் என்று புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடோட்டஸ்(Herodotus485- 425 BCE) எழுதி வைத்துள்ளார் கொஞ்சம் வெள்ளி இருந்தாலே கிருமிகள் இறந்து விடும் என்பது தற்கால விஞ்ஞானஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நீச்சல் குளங்களை குளோரின் வாயு ஏற்றி சுத்தப் படுத்துவதை விட வெள்ளி உலோக உப்புக்களைக் கலந்து சுத்தப்படுத்துவதே மேல்.

    அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்காக வெள்ளி இழை கலந்து நெய்யப்பட்ட சாக்ஸ்/ socks காலுறைகள் விற்கப்படுகின்றன. அவர்களுக்கு அதிகமாக வியர்த்து, அங்கே உற்பத்தியாகும் பாக்டீரியா கிருமிகளால் துர் நாற்றம் வீசுவதை இது தடுக்கும். ஆனால் எல்லா பாக்டீரியாக்களையும் வெள்ளி கொல்லாது. கனடாநாட்டு வெள்ளிச் சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டஒருவகை பாக்டீரியா தேவை இல்லாத வெள்ளியை செல் சுவர்களில் தள்ளிவிடுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.

    பல நாடுகளில் கிணறுகளிலும், குளங்களிலும், புனித நீர் நிலைகளிலும்மக்கள் வீசி எறிந்த வெள்ளிக் காசுகள் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கு தண்ணீரை சுத்தப்படுத்தும் குணம் இருப்பதை அறிந்த பழங்கால மக்கள் மற்றவர்களும் இப்படிச் செய்யட்டுமே என்று கருதி அதற்குப் பல சமய நம்பிக்கைகளையும் கற்பித்து இருக்கலாம். உதாரணத்துக்கு நாம் மருத்துவ குணமுள்ள துளசி, வில்வம், அருகம் புல் போன்றவற்றை இந்து தெய்வங்களுக்குப் படைக்கிறோம். அதனால் நம்மை அறியாமலேயே நமக்கு கிடைக்கும் மருத்துவபலன்களையும் அனுபவித்துப் பயன் அடைகிறோம்.

    இந்தியர்களுக்கும் வெள்ளியின் அருமை தெரியும். கோவில்களில், குறிப்பாக வைஷ்ணவ கோவில்களில், அதிகமான வெள்ளிப்பாத்திரங்களைக் காணலாம். உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் மஹாராஜா அரண்மனையில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று பெரிய வெள்ளிப் பானைகள் செய்யப்பட்டன.இவற்றில் 4000 லிட்டருக்கு மேல் கங்கை ஜலத்தை சேமித்து வைக்கலாம். ஜெய்பூர் மன்னர் லண்டனுக்கு இங்கிலாந்து மன்னரின் பட்டமேற்பு விழாவுக்கு கப்பலில் வந்த போது இதில் கங்கா ஜலம் கொண்டுவரப்பட்டது. அவர் பயணம் செய்த கப்பலில் மூன்று பிரம்மாண்டமான பானைகளில் கங்கை நீர் எடுத்துவரப்பட்டது. ஒவ்வொரு பானையும் 5 அடி உயரமும் 15அடி சுற்றளவும் உடையது.

    ***

    தேவையற்ற ரசாயன ஆயுதங்களை அகற்றவும் வெள்ளி பயன்படுகிறது.மஸ்டர்ட் கேஸ், நெர்வ் கேஸ்(Mustard Gas, Nerve Gas)எனப்படும் யுத்த கால விஷ வாயுக்களை, விஷமற்ற உப்புக்களாக மாற்ற வெள்ளி நைட்ரேட் கரைசலும்(Silver Nitrate and Nitric Acid) நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

    வெள்ளி என்பது தங்கம் போலவே பளபளப்பானது. கம்பியாக இழுக்கலாம்; தகடுகளாகத் தட்டலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1