Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - July 2022
Kanaiyazhi - July 2022
Kanaiyazhi - July 2022
Ebook175 pages55 minutes

Kanaiyazhi - July 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

July 2022 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580109508749
Kanaiyazhi - July 2022

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - July 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - July 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - July 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜூலை 2022

    மலர்: 57 இதழ்: 04 ஜூலை 2022

    Kanaiyazhi July 2022

    Malar: 57 Idhazh: 04 July 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி - ஜூலை 2022
    தலையங்கம் - ம.ரா.
    ஆன்லைன் சூதும்!
    அரசியல் வாதும்!!

    ஆன்லைன் சூதும்

    அரசியல் வாதும்

    கூடவே

    இன்றைய இந்தியாவின்

    இரண்டு குரல்கள்!

    ஒன்று

    முதல்வரின்

    கல்லூரிக் கனவு

    மற்றது

    பிரதமரின் அக்னிபாத்!

    படிக்க வா என்று அழைக்கிறார்

    தமிழக முதல்வர்!

    அக்னிபாத்துக்கு அழைக்கிறார்!

    ஒன்றியப் பிரதமர்!

    சூது வேறு; போட்டி வேறு!

    போட்டியில் திறமை வெளிப்படும்.

    சூதில் சதியே வெல்லும்!

    ஒரு சிலருக்கே

    கல்வி என்பது சூது

    எல்லோருக்கும் கல்வி என்பது

    அறிவு!

    கல்வி சூதாட்டம் இல்லை!

    சூதினைக் கண்டுபிடிப்பது!

    பிச்சை எடுத்தாவது

    படி என்றார் ஔவையார்!

    வேண்டாம்

    அரசே உதவும் என்று

    மகளிர் படிக்க மாத உதவித் தொகை

    வழங்கியிருக்கிறார் முதலமைச்சர்!

    கல்வி நல்காக் கசடர்களைத்

    தூக்குமரத்தில் ஏற்றச் சொன்னார்

    பாவேந்தர்!

    கல்விதர மறுத்தவர்களுக்கும்

    கல்வி கற்க உதவுகிறது தமிழக அரசு!

    கல்வி அழியாதது மட்டுமில்லை

    அடுத்தடுத்தத்

    தலைமுறைகளுக்கும் கைமாறுவது!

    பாரதத்திலும் தர்மர்

    யுத்தம் மட்டும் நடத்தவில்லை

    சூதாடியும் இருக்கிறார்!

    தன்னையும் தம்பிகளையும்

    பாஞ்சாலியையும்

    தோற்று இருக்கிறார்!

    அரசியல் சூதில்

    எம்.ஜி.ஆர்; ஜெயலலிதாவின்

    இரத்தத்தின் இரத்தமான

    உடன்பிறப்புகளை

    இரு பகடை என்று

    யார் யாருக்கோ

    அடிமை ஆக்குகிறார்கள்.

    சீட்டாட்ட சூதாட்டத்தில்

    படம் போட்ட

    ஜோக்கருக்கு மட்டும்

    இரட்டைத் தலை!

    ஒன்று போலவே

    மற்றொரு தலையும்!

    இரண்டு தலை என்றாலும்

    ஒருதலை மேலேயும்

    இன்னொரு தலை கீழேயுமாக!

    ஆனாலும் எப்போதும்

    சிரித்துக்கொண்டே இருக்கும்!

    ஒன்றைப் பார்த்து

    மற்றொன்று

    சிரித்தால் கூட பரவாயில்லை

    கூச்சப்படாமல்

    பார்க்கிறவர்களைப்

    பார்த்தும் சிரிக்கும்!

    தனக்கென்று தனிமதிப்பில்லை

    என்பது தெரிந்து

    ஆடுகிறவர் விருப்பத்திற்கேற்ப

    இடம் மாறும்! எதிலும் சேரும்!}

    ஆனால்

    வேறு ஒரு சீட்டு இல்லாமல்

    சேர்ந்து செயல்படாது!

    தாமே செட் ஆகாது!

    ஆனாலும்

    ஆடுகளைக் கொண்டு

    புலிகளை அடைக்க

    ஆடு புலி ஆட்டம்

    தொடர்கிறது!

    வெட்டிப் போட்டு

    விரைவாக முன்னேற

    தாயக்கட்டை உருட்டுகிறார்கள்!

    விவசாயிகள் போராட்டத்தில்

    மக்கள் திரண்ட

    அதிகார முற்றுகையில்

    மிரண்டு போனவர்கள்

    ஆளும் கட்சிக்குப்

    படைப்பயிற்சி தேடுகிறார்கள்!

    படிக்க வா என்று

    இளைஞர்களை அழைக்கிறது

    திராவிட மாடல்

    பயிற்சிப் பாசறை!

    என்ன சொல்லித் தர வருகிறது

    ஒன்றியத்தின் அக்னிபாத்?

    தன்னைத்தானே

    வெல்வதற்குக்

    கற்றுதருவது கல்வி!

    அடுத்தவரை அடக்குவதற்குத்

    தேவை என்கிறது

    அக்னிபாத்!

    தான் வெற்றிபெற

    மற்றவரை தோற்கச் செய்வது

    சூதாட்டம்!

    மற்றவர்களை அழிக்காமல்

    தன்னைத்தானே

    வளர்த்துக்கொள்ள

    தன்னைத்தானே

    செதுக்கிக் கொள்ள

    வழிகாட்டுகிறது கல்வி!

    அதனால்தான்

    முதல்வர்

    நான் முதல்வன் என்று

    ஒவ்வொரு மாணவரையும்

    மனதளவில் ஊக்கப்படுத்துகிறார்!

    இன்றைய உலகின் தேவையாகவும்

    எதிர்கால உலகின்

    இயக்கு விசையாகவும் இருக்கிறது

    இருக்கும்

    கலை, பண்பாட்டு, நல்லிணக்கக்

    கட்டுமானங்களை

    இடிக்க வா என்று

    அழைக்கும் குரலைத் தாண்டி

    ஆன்லைன் சூதினையும்

    அரசியல் வாதினையும் கடந்திட

    படிக்கவா எனும்

    முதல்வரின் குரல்!!

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    சிறுகதை - தெலுங்கில் : பி.அஜய் ப்ரசாத் தமிழில் : பொருநை க.மாரியப்பன்

    கவிதை - நேசன் மகதி

    கட்டுரை - வ.ந.கிரிதரன்

    கவிதை - சிவக்குமார் கணேசன்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - வலங்கைமான் நூர்தீன்

    சிறுகதை - கனகா பாலன்

    கவிதை - தங்கேஸ்

    சிறுகதை - சேஷசாயி

    கவிதை - தசாமி

    நூல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்

    கவிதை - ப்ரதிபா ஜெயச்சந்திரன்

    சிறுகதை - அலர்மேலு

    சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    Ramesh.jpg

    பாவை பாடிய புலவரின் பரங்கி நாற்காலி

    விஞ்ஞானம் என்பது கண்டுபிடிப்புகளைச் சார்ந்தது. மெய்ஞானம் என்பது சுய நம்பிக்கையைச் சார்ந்தது. விஞ்ஞான உண்மையை ஆய்வகத்தில் குடுவையில் சோதனை செய்வதால் அறியலாம். மெய்ஞானத்தை அவ்வாறு ஆய்வகக்குடுவையில் ஆய்வு செய்து காண இயலாது. ஸ்தூலப்பொருட்களை ஆய்வு செய்துகொண்டு போகும் விஞ்ஞானம் எந்தப்புள்ளியில் நின்று போகிறதோ, அந்தப்புள்ளியில் இருந்து மெய்ஞானம் துவங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், மெய்ஞானம் என்பது சுய அனுபவத்தின் பால் தன்வயப்பட்ட ஓர் அனுபவ நிலையாகும்.

    ஆபிரகாமிய சமயங்களான யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் இல்லாத சிறப்பு இந்து மதத்தில் உண்டு. இங்கு இந்து மதம் என்பது, சமுதாயப்பணியிலும், மொழி வளர்க்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில், 7-ஆம் மற்றும் 8-ஆம் நூற்றாண்டுக்குப்பின்னே வளர்ந்த பக்தி இயக்கம், தென்னிந்திய மொழிகளை செழுமை செய்துள்ளது. சைவ, வைணவ மார்க்கவாதிகளான ஆழ்வார்களும், நாயன்மார்களும், பக்திப்பாக்களைப் பாடி மெய் உருகி, மொழிப்பணியும் செய்துள்ளனர். வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே ஒரு பெண் ஆழ்வார் கோதை என்னும் ஆண்டாள் நாச்சியார் ஆவார். இவரது காலம் 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பட்டர் பிரான் என்ற பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார். இவரது தீம்பாசுரங்களாகிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவை இன்றும் தமிழ் மொழியின் செம்மொழித் தன்மைக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள் என்பது கவியரசரின் வாக்கு.

    மல்லி நாடாண்ட மயில் என்ற பட்டமும் ஆண்டாளுக்கு உண்டு. மல்லி என்ற ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கே உள்ளது. அந்த மல்லி நாடு என்ற சிற்றரசை ஆண்டவர் அல்லது ஒருவேளை அந்நாட்டு மக்களின் இதயம் கொண்டவர் ஆண்டாள் என்றும் கொள்ளலாம். இவர் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், இவர் மேல் பக்தி கொண்ட மக்கள் சொல்லும் செவி வழிச்செய்திகள் இன்றும் அநேகம் உள்ளன.

    17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு பேசிய மாமன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், ஸ்ரீஆண்டாளுக்கு வழங்கப்பட்ட விலை உயர்ந்த நகைகள் இன்றும் இந்தத் திருக்கோவிலில் இருக்கின்றன. மாமன்னர் திருமலை நாயக்கரின் ஆண்டாள் பக்திக்கு இது ஒரு சான்று. தனது வெற்றிகளுக்கெல்லாம் ஆண்டாள் துணை நின்றாள் என்று அவர் நம்பினார். அந்த வகையில், இரவில் எட்டு மணிக்கு, ஸ்ரீஆண்டாளுக்கு இந்தத் திருக்கோவிலில் நடத்தப்படும் அரவணை என்ற இரவு நேர உணவுப் படையலை ஆண்டாளுக்கு படைத்த பிறகு, இங்கு கோவிலில் உள்ள கோபுரத்திலிருந்து ஒரு வெண்கல மணி கணீரென்று துல்லியமாக ஒலிக்கப்படும். அந்த மணிச்சத்தத்தைக் கேட்ட பிறகு, சில மைல்கள் தொலைவில், வடக்கு திசையில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் இன்னொரு மணிச்சத்தம் எழுப்பப்படும். அதற்கு அடுத்த மண்டபத்தில் அடுத்த மணிச்சத்தம். இதே போல, இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் ஐம்பது மைல்கள் தொலைவில் உள்ள மதுரை நகரில் உள்ள திருமலை நாயக்கரின் அரண்மனை வரை அந்த மணி ஒலியின் தொடர்ச்சி இருக்கும். அந்த மணி ஒலியினைக் கேட்ட பிறகே மன்னர் திருமலை நாயக்கர் இரவு உணவு சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் துவங்கி, மதுரை நகர் வரை, சாலையின் இருபுறமும்

    Enjoying the preview?
    Page 1 of 1