Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - August 2018
Kanaiyazhi - August 2018
Kanaiyazhi - August 2018
Ebook215 pages1 hour

Kanaiyazhi - August 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

August month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503262
Kanaiyazhi - August 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - August 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - August 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - August 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி ஆகஸ்ட் 2018

    மலர்: 53 இதழ்: 05 ஆகஸ்ட் 2018

    Kanaiyazhi August 2018

    Malar: 53 Idhazh: 05 August 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, ஆகஸ்ட் 2018

    தலையங்கம் - ம.ரா.

    வீர சுதந்திரம் வேண்டி நின்றோம்?

    தடைகளை உடைத்து வரும்

    காவிரி போல

    சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்.

    நிலம், நீர், தீ, காற்று, விண் -

    எதற்கும் உயிரில்லை;

    பஞ்ச பூதங்கள் கலக்கிறபோது

    உயிர் பிறக்கிறது!

    உயிர் சுதந்திரத்தின் அடையாளம்!

    உயிரற்றவற்றின் மயக்கக் கலத்தலில்

    உயிரின் பிறப்பு! சுதந்திரத்தின் வெளிப்பாடு!

    பூமி பழைய நெருப்பு மட்டுமில்லை

    உறைந்த நெருப்பு; உறங்கும் நெருப்பு!

    சுதந்திரச் சூடு குறையாமல்

    உயிர் வளர்க்கும் நெருப்பமிழ்தம்!

    பூமியைப் பிளக்கும் விதை வெடிப்பில்

    வெளியை உடைக்கும் முட்டைத் தெரிப்பில்

    பயிரும் உயிரும் மட்டுமில்லை

    அடங்கிக் கிடக்கும்

    சுதந்திரமும் தலைதூக்கும்!

    அழுத்தம் அதிகமாக அதிகமாகப்

    பூமியின் சுதந்திரம் தீயாக வெளிவரலாம்

    கடலின் சுதந்திரம் சுனாமியாகலாம்.

    வளர்க்கும் சுதந்திரம் போற்றப்படவும்

    அழிக்கும் சுதந்திரம் மாற்றப்படவும்

    தகவலும் கருத்தும் பரவ வேண்டும்!

    மக்கள் சுதந்திரத்தை மறக்கவும் மாற்றவும்

    மக்கள் வரிப் பணத்தில்

    விளம்பரப் பொய்கள் கோடிக் கணக்கில்!

    அரசுப் பொய்களை அலங்கரிக்கத்

    தனியார் ஊடக ஊதுகுழல்கள்!

    அம்பலப்படுத்த வந்த சமூக ஊடகங்களில்

    அரசியல் பொய்களின் ஆக்கிரமிப்புகள்!

    ஐம்பதாண்டு & ஒரு கட்சியின் தலைவர்

    தமிழ்மீது அன்புகொண்டவர் மனதில்

    தனக்கென இடம் கொண்ட கலைஞரின்

    உடல்நலம் பற்றிய வதந்தித் தொற்றுக்குள்

    கட்செவி சுட்டுரை முகநூல்!

    ஒவ்வொரு செல்பேசியும்

    ஒரு அலைவரிசையாகிப்

    பொய்யை விதைக்கும் போட்டியில்

    நவீனத் தொழில் நுட்ப அவதாரங்கள்!

    அவரவர் சுதந்திரம் அவரவரிடம் தானா?

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து

    ஊடகம் புகட்டும் உலகியல்தானா?

    கருத்துச் சுதந்திரம் ஊடகச் செல்வாக்கா?

    சொல்பேச்சு கேட்காதே என்றது

    ஊடக வருகையின் எச்சரிக்கையா?

    உண்மை அறியும் சுதந்திரத் தேடலில்

    பொதுமக்களின் கருத்துத் திணறல்!

    வதந்திகளின் தூக்கில் அப்பாவி மக்கள்!

    பாலியல் வல்லுறவில் பறிபோகும் உயிர்கள்!

    சாதி, மத, அரசியலில்

    உயிர் எடுக்கும் வன்முறைகள்!

    இவ்வளவுக்கும் மேலாகத்

    தற்கொலைகள்!

    உயிர், சுதந்திரத்தின் அடையாளம் எனில்

    தற்கொலை?

    சுதந்திர மறுப்பின் விளைச்சலா?

    தில்லியில் ஒரே குடும்பத்தில்

    பதினோரு பேர் தொங்கியுள்ளனர்.

    கலிபோர்னியாவின் கோல்டன் கேட்

    தற்கொலைக்கு உறவுப் பாலமாம்!

    1937 இல் திறப்புவிழா.

    கட்டிய பொறியாளர் ஜோசப் ஸ்டாவுஸ்,

    இந்தப் பாலத்திலிருந்து யாரும்

    தற்கொலை செய்துகொள்ள முடியாது என்றார்.

    இதுவரை 1600 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள்.

    பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்களாம்!

    இந்தப் பாலத்திலிருந்து குதித்தால்

    மனக்கவலை நீங்குமாம்!

    ஆன்மா சுத்தமாகுமாம்!

    கதை வைத்திருக்கிறார்கள்!

    ஆனால்

    பாலத்திலிருந்து குதித்த சில விநாடிகளில்

    75 மைல் வேகத்தில்

    தண்ணீரில் உடல் மோதும் போது

    எலும்புகள் நொறுங்குமாம்!

    உறுப்புகள் கிழியுமாம்!

    அப்போதே உயிர் பிரியுமாம்!

    மூழ்கி இறப்பவர்கள் கொஞ்சம் பேர்தானாம்!

    மற்றவரைக் காயப்படுத்தவா?

    தன்னைக் குணப்படுத்தவா?

    சமூகத்தைக் கண்டிக்கவா?

    தற்கொலைக்குப் போகிறவர்களிடம்

    பேசிப் பயனில்லையாம்;

    பேசச் சொல்லிக் கேட்க வேண்டுமாம்!

    கேட்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்பதே

    தற்கொலை முயற்சியைத் தடுத்துவிடுமாம்!

    நம்பிக்கை இழத்தல்

    மோசமாக இருப்பதாக உணர்தல்

    மீண்டுவர முடியாத மனநிலை

    சிக்கல் தீர்வதற்கு வழி அறியாமை

    ஒதுக்கப்பட்டிருக்கும் உளவியல்

    வாழ மீண்டும் ஒரு வாய்ப்புக்கான

    ஏக்கமும் இயலாமையுமே

    தற்கொலையின் ஊற்றுக் கண்களாம்!

    ஜனநாயகம் தப்பிக்க வேண்டும்!

    ஜனநாயகத்தில் பேச்சுரிமை

    சுதந்திரத்தின் உயிர் மூச்சு!

    சுதந்திரத்தின் முடிவு அதிகாரத்தின் கைகளில்!

    அதிகாரத்திற்கு மட்டும்தான்

    சுதந்திரம் என்பது

    ஜனநாயகப் பயிர் வளர இடம் தராது.

    இராணுவம் கூட

    மக்களின் சுதந்திரம் காக்கத்தான்!

    எல்லையில் சண்டை போடவும்

    எதிர் நாட்டினரைக் கொல்லவும்தான்

    இராணுவ விமானங்களா?

    உயிர் காக்கவும் ஓடிவரும் என்று

    உணர்த்தியிருக்கிறார்

    பாதுகாப்புத்துறை அமைச்சர்

    நிர்மலா சீதாராமன்.

    உயிருக்குப் போராடும் எல்லோருக்கும்

    உதவினால் நல்லதுதான்

    ஆனால்

    உயிருக்குப் போராடுபவர்

    ஓ.பி.எஸ். சகோதரராக இருக்க வேண்டும் என்ற

    பா.ஜ.க. வின் பாதுகாப்பு விதி

    தளர்த்தப்பட வேண்டும்!

    இந்திய சுதந்திரம் வீர சுதந்திரம்!

    வீர சுதந்திரம் வேண்டும் என்றார்

    பாரதியார்!

    ஏய்ப்போருக்கு ஏவல் செய்யவா

    வீர சுதந்திரம் வேண்டி நின்றோம்?

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கேள்வி-பதில்

    வத்ஸலா

    கவிதை - ரமேஷ் ரக்சன்

    சிறுகதை - கவிஜி

    கட்டுரை - அக்‌ஷித் (தமிழில் : பாரதிராஜா)

    டோட்டோ கவிதைகள்

    சிறுகதை

    மூலம் தெலுங்கு: துரகா ஜானகிராணி

    தமிழில்: ராஜி ரகுநாதன்

    ஏன் எழுதினேன்? - புலியூர் முருகேசன்

    கட்டுரை - உஷாதீபன்

    குறுநாவல் - அ. நாகராசன்

    கவிதை - அமுதவல்லி இராகவசாமி

    கட்டுரை - பிரசாத் சுந்தர்

    சிறுகதை - சுரேஷ் மான்யா

    எதிர்வினை - புலவர் செ. இராசு

    சிறுகதை - ராம் முரளி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கேள்வி-பதில்

    வத்ஸலா

    கவிதைக்காரன் இளங்கோ

    தற்கொலை

    அண்மையில் ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியிலிருந்து விடுபட கணையாழி பதில்களைத் தேடிய போது எழுத்தாளர் வத்சலா, கவிதைக்காரன் இளங்கோ அவர்களின் கருத்துகள்:

    1. தற்கொலை செய்யும் எண்ணத்தின் ஊற்றுக்கண்கள்?

    வத்ஸலா: ஆழ்ந்த மனச் சோர்வு, இயலாமை, தீரா வறுமை, ஆதரவின்மை, தனிமை, தீராத உடல் வேதனை தரும் வியாதி இப்படி பல காரணங்கள் உண்டு. ஆனால் சாதி, மத, வர்க்க, பாலின பேதங்களால் செயலற்று போய் ஒரு சிலர் தற்கொலைக்கு தள்ளப் படுவது நமக்கு ஒரு வெட்கக் கேடு.

    இளங்கோ: தனிமனித அல்லது ஒட்டுமொத்த குடும்பத்தின் அவமானம். சமூகக் கட்டமைப்புக்குள் பொருந்த முடியாத இருப்பு மற்றும் அதன் மதிப்பீடு குறித்த ஒப்பிடலில் உருவாகும் தாழ்வு மனப்பான்மை. விருப்பங்கள் மறுக்கப்பட்டு அடைய முடியாத ஆசைகளை நினைத்து மனம் குமைவது. கடன் தொல்லைகளால் ஏற்படும் மன நெருக்கடிகள். குடும்ப உறவுகளுக்கு நடுவே உருவாகிற பரஸ்பர புரிதலின்மை. துரோகங்களால் உண்டாகும் ஆழமான காயங்கள். அவற்றுக்குத் தீர்வோ மருந்தோ இல்லையென்கிற சுயத் தீர்மானம். தனது பக்குவத்தின் மீது தான் சுத்தமாக நம்பிக்கையற்று போவது. அறிவியல் ரீதியான உடற்கூறு மற்றும் உளவியல் நோய்கள். வேலைச் சுமைகளால் அதிகமாகிற மன அழுத்தம். வெளியே பகிர முடியாத பாலியல் தொல்லைகள். எதிர்காலம் குறித்த அச்சுறுத்தும் கையறு நிலை. பூர்த்தியாகாத நெடுநாளைய அடிப்படைத் தேவைகள்.

    தற்கொலைக்குரிய ஊற்றுக்கண்களில் சில என இவற்றை நாம் வரிந்துகொள்ள முடியும்.

    2. தற்கொலை சொர்கத்துக்கு அழைத்துப் பொகும் என்று நம்புகிறார்களா?

    வத்ஸலா: தற்கொலை செய்து கொள்பவர்கள் எல்லோரும் அப்படி நினைத்து செய்து கொள்வதில்லை. அண்மையில் டில்லியில் புராரி எனும் இடத்தில் நடந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினர், சொர்கத்தில் இருக்கும் குடும்பத் தலைவருடன் ஒன்று சேருவோம் என நம்பியதாக கூறப் படுகிறது. இது போல மூட நம்பிக்கைகளால் உந்தப் பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் சொர்கத்திற்கு போகலாம் என்றோ செத்த பின் ஏதோ ஒரு நல்லது நடக்கும் என்றோ நம்பி அப்படி செய்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட தற்கொலைகள் அதிகமில்லை.

    இளங்கோ: இருக்கும் / வாழும் உலகத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத சுய அவஸ்தையில் இன்னோர் உலகம் இருக்கும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் வழியாக அது ஒரு சொர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்றும் இவ்விடம் ஒரு நரகம் என்ற முடிவுமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் நியாயமாகவும் அது உருமாறிவிடுகிறது.

    3. இயலாமை தற்கொலையைத் தூண்டுகிறதா?

    வத்ஸலா: நிச்சயமாக

    இளங்கோ: தான் எதற்குமே லாய்க்கு கிடையாது என்கிற இயலாமை பிறரோடு அனைத்து விஷயங்களிலும் தன்னை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், மன அழுத்தம் அதிகமாகி அதை யாரோடும் பகிராமல், கலந்தாலோசிக்காமல் தன்னைத் தானே மாய்த்துக்கொள்வதும் நடக்கிறது.

    4. தற்கொலை சமூகத்தைத் தண்டிக்கவா?

    வத்ஸலா: ஒரு சிலர் தன் மேல் அன்பு கொண்டவரைத் தண்டிக்க தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது பெரிய சோகம். ரோஹித் வெமூலாவைப் போன்றவர் ஒரு கோட்பாட்டை வலியுறுத்தவோ அல்லது சமுகத்தின் ஒரு பெரிய குறையைச் சுட்டிக் காட்டவோ தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மற்றபடி சுய நலமே உருவான சமூகத்தைத் தண்டிக்க தற்கொலை செய்து கொள்பவர் பரிதாபத்துக்குரியவர்.

    இளங்கோ: இந்தச் சமூகத்தின் முரண்பட்ட சட்டத்திட்டங்களை அதன் மக்கள்விரோத போக்கைக் கண்டித்து அதன் மூலம் ஓரு கவனத்தை ஈர்க்கவும் அரசு இயக்கும் சமூகத்தைத் தண்டிக்கும் விதமாகவும் தற்கொலைகள் நடக்கின்றன.

    5. தற்கொலை எதற்காவது தீர்வாகுமா?

    வத்ஸலா: தற்கொலை செய்து கொள்பவர்கள் தீர்வு காண்பதற்காக அல்ல, தன்னை அழித்து கொள்வதன் மூலம் தன் பிரச்சினை பற்றி யோசிக்க வேண்டிய அவசியத்தை அழித்துக் கொள்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட பிரச்சினைக்கு அது என்றும் தீர்வாக முடியாது.

    இளங்கோ: தற்கொலையால் இறப்பவர் எதற்கான தீர்வாகவும் தன் கற்பிதங்களை வலுவாக நிறுவிட முடியாது. ஆனால், அதுவே ஓர் அடையாளமாக அறியப்பட ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் வாய்ப்புண்டு. பின்பற்றும் கொள்கைக்காகவோ கொண்டிருக்கும் லட்சிய அடையாளத்துக்காகவோ மேற்கொள்ளுகிற சாகும்வரை உண்ணாவிரதம் என்பது தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் துணிந்துவிட்ட ஒருவகையான தற்கொலை எனச் சொல்லலாம். ஒரே வித்தியாசம் இவ்வகை மரணத்தில் மர்மங்களோ புதிர்களோ எதுவுமிருப்பதில்லை. மாறாக அவை ஒரு முன்னறிவிப்போடு நிகழ்பவை.

    6. தற்கொலை, சாதி, மதம், சமூகம் காரணிகளாக இருப்பது ஏன்?

    வத்ஸலா: சாதி, மதம் இவற்றின் பெயரால் சமூகம் படிநிலையை உருவாக்குகிறது. தனி மனிதன் பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவனுக்கு ஆதரவு தருவதற்கு பதிலாகத் தனது படிநிலையால் உருவான முன் தீர்மானங்களையும் பழமை வாதத்தையும் அவர் மேல் திணிக்கிறது. இதனால் நேரும் அநியாயங்களை எதிர் கொள்ள இயலாதவர் தற்கொலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

    இளங்கோ: சமூகக் கட்டமைப்பில் உருவாகிற மதம், மனிதனை நெறிப்படுத்துவதாக முன்னிறுத்தும் போதனைகளும் சடங்குகளும் தனிமனித உளவியலோடு முரண்படும்போதோ அதுவரை கொண்டிருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையைகூட இழக்க நேரிடும்போதோ, அல்லது அதீத நம்பிக்கையினால் சுய நினைவை இழக்கும்போதோ அதற்குரிய

    Enjoying the preview?
    Page 1 of 1