Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - September 2019
Kanaiyazhi - September 2019
Kanaiyazhi - September 2019
Ebook196 pages57 minutes

Kanaiyazhi - September 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

September 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580109504547
Kanaiyazhi - September 2019

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - September 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - September 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - September 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, செப்டம்பர் 2019

    மலர்: 54 இதழ்: 06 செப்டம்பர் 2019

    Kanaiyazhi September 2019

    Malar: 54 Idhazh: 06 September 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி செப்டம்பர் 2019

    தலையங்கம் - ம.ரா.

    நம்மைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்?

    பற்றி எரிகிறது தீ சுற்றிலும்!

    முன்பொருகால்

    சிவபெருமானின்

    நெற்றிக் கண் நெருப்பில்

    எரிந்திருக்கிறது முப்புரம்.

    கருத்து சொன்ன நக்கீரனும்

    கருகிப் போயிருக்கிறான்!

    பின்பொருநாள்

    இராம தூதுவன் வால் நெருப்பில்

    எரிந்திருக்கிறது தென் இலங்கை

    பின்பொருநாள் வட இலங்கையும்

    போர் நெருப்புக்குத் தீனியானது!

    இப்போது

    அமேசான் முதல் காஷ்மீர் வரை

    நெருப்பும் கோபமும்!

    நெருப்பு

    சினத்தைப் போலவாம்

    திருவள்ளுவர் சொல்கிறார்.

    கோபம், கோபப் பட்டவரையும்

    சேர்த்துக் கொல்லுமாம்

    தீயைப் போல!

    நெருப்பு எப்போதும்

    கூட்டணி இல்லாமல்

    தனியாக இருக்காது.

    பற்றி எரியும் போது

    கூட்டணியையும்

    கட்டிப் பிடித்துக் கொண்டே

    கருகிப் போகும்.

    ஒன்றைப் பற்றிக்கொண்டு

    எரிவதால்தான், தீ

    பற்றி எரிகிறது அல்லது

    பிடித்துக் கொள்கிறது.

    கோபமும் அப்படித்தான்.

    தனியாக இருக்காது.

    அதனால்தான் கோபம்

    பற்றிக்கொண்டு வருகிறது.

    இப்போது சினமும் நெருப்பும்

    சேர்ந்து வந்திருக்கின்றன.

    பற்றி வருகிற போது

    பற்றவைத்தவர்களும் தப்ப முடியாது!

    அப்படியானால்

    நம்மைக் கொண்டு

    நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று

    யுவல் நோவா ஹராரி கேட்கிறார்.

    இதுவரை கேட்டிராத கேள்வி.

    இந்த நூற்றாண்டு

    விடை கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி!

    பறவை, விலங்கு

    பருவ மாற்றங்கள் என

    பயந்து பயந்து மரங்களின் மீதும்

    குகைகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்த

    ஆதி மனித வாரிசுகளிடம்

    அனைத்து உயிரினங்களும்

    இப்போது

    அடைக்கலம் கேட்கின்றன!

    பெரிய விலங்குகளின்

    ஆளுகையில் இருந்த காடுகளும்

    மனிதக் கட்டுப்பாட்டில்!

    பூமிக்கு மனிதனே

    இப்போது தலைவன்.

    வாசல் படியில்

    மரணம் காத்திருக்கிறது.

    ஆனாலும்

    மரணமிலாப் பெருவாழ்விற்கும்

    நிரந்தர இளமைக்கும்

    ஏங்கிக் கொண்டிருக்கிறோம்!.

    கடந்த நூற்றாண்டில்

    சராசரி வயதாக 40 இருந்தது.

    இப்போது 70 ஆகியிருக்கிறது.

    நவீன மருத்துவமும் தொழில் நுட்பமும்

    நமது ஆயுட் காலத்தை

    நாம் வாழ வேண்டிய காலத்திற்கு

    உறுதி அளித்திருக்கிறது.

    ஆனாலும்

    ஆயுட்கால நீட்டிப்புக்கு

    ஆய்வு செய்கிறோம்.

    கூகுள் நிறுவனம்

    மரணமிலாப் பெருவாழ்வுக்கு

    வழிகளைக் கண்டறிய

    கேலிகோ நிறுவனத்தை

    2013 இல் தொடங்கியிருக்கிறது.

    கூகுள் வென்சர்ஸ் தலைவர்

    பில் மாரீஸ் சொல்கிறார்

    500 வயதுவரை

    மனிதர்கள் வாழ முடியுமாம்.

    என்றென்றும் உயிரோடு வாழ விரும்பும்

    பே பால் நிறுவனர் பீட்டர் தியலை

    அறிவிக்கின்றன ஊடகங்கள்.

    செய்த சாதனைகளின் மூலம்

    நீண்ட காலம் வாழும்

    புகழ் உடம்பை விட

    இருக்கிற உடம்புடன்

    அதிகக் காலம் வாழவே

    விரும்புகிறேன் என்றாராம்

    ஆலிவுட் நடிகர் உட்டி ஆலன்.

    வாழ்வதற்கான உரிமைதான்

    மனித குலத்தின் அடிப்படை விழுமியம்.

    மரணம்

    மனிதர்களுக்கு எதிரான குற்றம்!

    மரணத்தை

    ஏற்கலாம் : மறுக்கலாம்;

    எதிர்த்துச் சண்டை போடலாம்..

    மனிதனே மதிப்பு வாய்ந்தவன்

    அரிது அரிது

    மானிடராய்ப் பிறத்தல் அரிது.

    சாதலின் இன்னாதது இல்லை.

    வாழ விடாமல் சுற்றிலும்

    பற்ற வைத்திருக்கிறார்கள்.

    இனி மக்களுக்குப் போர்

    மரணத்தை எதிர்த்துத்தான்.

    தன் மரணத்தை எதிர்த்து மட்டுமில்லை…

    450 கோடி வயதான பூமியையும்

    300 கோடிக்கு மேலான உயிரினங்களையும்

    காப்பாற்றும் பொறுப்பு

    இப்போது மனிதர்களிடம்!

    தாம் வாழ மனித குலம்

    அவற்றைக்

    காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

    மலையும் காடும் வளர்க்கும் தாய்

    தாயின் தலையில் கொள்ளி வைக்கலாமா?

    அப்படியானால் போர் என்பது

    உயிரினங்களின், சுற்றுச் சூழலின்

    மூச்சுக் காற்றில் நஞ்சு கலக்கும்

    மரண விற்பனையோடும்தான்.

    இனி

    நம்மைக் கொண்டு நாம்

    என்ன செய்யப் போகிறோம்?

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - பாவண்ணன்

    கவிதை - சென்னிமலை தண்டபாணி

    சிறுகதை - சாந்தி சித்ரா

    கட்டுரை – ஆத்மார்த்தி

    சிறுகதை - இலக்கியா நடராஜன்

    கவிதை - இரா.கவியரசு

    கட்டுரை - கவிஞர் பிருந்தாசாரதி

    கவிதை - மாராணி

    கட்டுரை – சுகன்யா

    கவிதை - மு.ச.சதீஷ்குமார்

    சிறுகதை - ரமேஷ் ரக்சன்

    கவிதை -தமிழ் உதயா

    கட்டுரை- முனைவர் அ. பத்மாவதி

    குறுநாவல் - பா. செயப்பிரகாசம்

    கவிதை - எஸ். சுசித்ரா

    கட்டுரை - புலவர் மி. காசுமான்

    கட்டுரை - அ. நாகராசன்

    கட்டுரை - கோ.வி. நீலாம்பரி

    கவிதை -கவிஜி

    கவிதை- ஆர். வத்ஸலா

    எனது சுதந்திரம் - சீனி. விசுவநாதன்

    கடைசிப் பக்கம் – இந்திராபார்த்தசாரதி

    ***

    கட்டுரை – பாவண்ணன்

    வெற்றியென்னும் ஏணி

    உலகெங்கும் பல நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர்பெற்ற பிரிட்டனில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது என்னும் செய்தி இன்று பலரை வியப்பில் ஆழ்த்தக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்னும் வேறுபாடின்றி ஏறத்தாழ முப்பது லட்சம் பேர் வேலையின்றித் தவித்தார்கள். அவர்களில் ஒருவர் ரொனால்ட் டங்கன். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தன் இலட்சியக்கனவுகளாகக் கொண்டவர்.

    தொடக்கத்தில் யார்க்ஷையர் நிலக்கரிச்சுரங்கத்தில் வேலை செய்தார் டங்கன். சுரங்கத்தொழிலாளிகளின் துயரங்களைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் அவருக்கு உதவியது. பிறகு அவர் லண்டனுக்குத் திரும்பினார். அப்போது ரோண்டா பள்ளத்தாக்கிலிருந்த நிலக்கரிச்சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சங்கத்தின் ஆலோசனையும் ஆதரவுமின்றி அவர்கள் தன்னிச்சையாக அந்த வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். மொத்தம் முப்பது தொழிலாளிகள். சுரங்கத்துக்குள் இறங்கியவர்கள் வெளியேற மறுத்து ஓய்வின்றி இடைவிடாமல் வேலை செய்தபடியே இருந்தார்கள். நான்கு இரவுகளும் பகல்களும் கழிந்தன. தொழிலாளிகளின் குடும்பங்கள் சுரங்கத்துக்கு வெளியே தவித்தபடி கூடியிருந்தார்கள்.

    உடனடியாக டங்கன் அங்குச் சென்றார். தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். சுரங்கத்துக்குள் தங்கித் தொழிலாளிகள் வெளிப்படுத்தும் நேர்மறையான எதிர்ப்பின் வழியாக, சுரங்க முதலாளிகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப முடியும் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அரசியல் இயக்கங்களின் எதிர்ப்புகளுக்கு உள்ள வலிமையைவிட, அகிம்சைப்போராட்டத்தின் வலிமை பெரியது என்று பலவாறாக எடுத்துச் சொல்லிப் புரியவைத்தார். அவ்வப்போது தொழிலாளிகளின் குடும்பத்தார் தயாரித்து அளிக்கும் உணவுப்பொருட்கள் சுரங்கத்துக்குள் சென்றன. உணவுக் கூடைகளிடையே அவர்களுக்குத் தேவையான புகையிலையையும் போராட்ட முறையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் சிறுசிறு கடிதங்களையும் டங்கன் ரகசியமாக அனுப்பிவைத்தார்.

    தொழிலாளிகளின் போராட்டம் மெல்ல மெல்ல வலிமைபெற்று வரும் வேளையில் மேலே இருந்த தொழிலாளிகள் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் வகையில் வேறொரு போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதற்காகவே காத்திருந்த நிர்வாகமும் காவல்துறையும் சுரங்கத்துக்கு உள்ளே இருந்தவர்கள், வெளியே இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது. தொழிலாளர்களைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு டங்கனும் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் நாடோடி என்பதை அறிந்து காவல்துறை அவரை விடுதலை செய்தது.

    அகிம்சைப் போராட்ட வழிமுறையையும் தனிமனித நேர்மையையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அன்று டங்கன் நேரிடையாகக் கண்டுணர்ந்தார். அந்தப் புரிதலை முன்வைத்து, அன்று நிலவிய அரசியல் போக்குகளை அவர் மதிப்பிடத் தொடங்கினார். சமூகப்பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளவும் தீர்த்துவைக்கவும் முயற்சி செய்யும் அரசியல் இயக்கங்கள் மீதான விமர்சனப் பார்வையை வளர்த்துக்கொண்டார். தன்னுடைய நேரடி அனுபவத்தையும் புரிதலையும் உள்ளடக்கி மிகச்சிறிய பிரசுரமொன்றை எழுதி வெளியிட்டு நகரெங்கும் வழங்கினார். ரோண்டா நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களின் அகிம்சைப்போராட்டத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டுமென விரும்பி அன்று உலக அளவில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்ட எல்லாத் தலைவர்களுக்கும் அந்தப் பிரசுரத்தை அனுப்பிவைத்தார். அந்தப் பட்டியலில் ஒருவர் காந்தியடிகள்.

    உலக அளவில் யாருமே அந்தப் பிரசுரத்துக்கு எதிர்வினை புரியாத தருணத்தில் ஒரே ஒரு கடிதம் மட்டுமே டங்கனுக்கு வந்து சேர்ந்தது. அது காந்தியடிகள் எழுதிய கடிதம். போராட்டத்தைப்பற்றி மட்டுமின்றி அகிம்சையைப் பற்றியும் நேர்மையைப்பற்றியும் பல கருத்துகளை அவர் டங்கனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். டங்கன் மகிழ்ச்சியில் மூழ்கினார். அகிம்சைக் கொள்கையைப்பற்றி அவருக்கு மேலும் சில ஐயங்கள் எழுந்தன. உடனே அவற்றைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்டு மீண்டுமொரு கடிதத்தைக் காந்தியடிகளுக்கு எழுதினார். அதற்கும் உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்து சேர்ந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1