Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - March 2018
Kanaiyazhi - March 2018
Kanaiyazhi - March 2018
Ebook219 pages1 hour

Kanaiyazhi - March 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

March month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109502865
Kanaiyazhi - March 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - March 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - March 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - March 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, மார்ச் 2018

    மலர்: 52 இதழ்: 12 மார்ச் 2018

    Kanaiyazhi March 2018

    Malar: 52 Idhazh: 12 March 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அதிகார மூக்கணாங்கயிறுகள்!!

    மாடுகளுக்கு மூக்குக் குத்துவது

    மூக்குத்தி போட்டு

    அழகு பார்க்க இல்லை;

    மூக்கணாங்கயிறு போட்டு

    அடக்குவதற்குத்தான்.

    பாவையாட்டியின் கை, கால்களில்

    பொம்மைகளின் மூக்கணாங்கயிறுகள்

    பாவையாட்டியின் மூக்கணாங்கயிறு

    கதைகளின் கையில்!

    கதைகளின் மூக்கணாங்கயிறுகள்

    காலத்தின் கையில்.

    அதுசரி.. யாருடைய கையில்

    நமது மூக்கணாங்கயிறுகள்?

    கையும் காலும் தூக்கத் தூக்கும்

    நடிகர்களின் கைகளுக்கு

    அதிகார மூக்கணாங்கயிறு பிடிக்க

    ஆசைகள் தொடர்கின்றன!

    இலை உதிர்ந்த மரத்தில்

    முதல்வர் ஆக, யார்யாருக்கோ

    துளிர்விடுகின்றன விருப்பங்கள்!

    தலைவனை உருவாக்கும்

    தேவைகளைப் பட்டியலிட்டவர்கள்

    நடிகர்களின் தேவைக்கு

    நாடி சோசியம் சொல்கிறார்கள்!

    கமலும் ரஜினியும்

    நீண்ட காலத்துக்குப் பிறகு.

    அரசியல் திரைப்படத்தில்

    ஒன்றாக வருகிறார்கள்.

    இருபெரும் கதா நாயகர்கள்

    ஒருவருக்கு ஒருவர் வில்லனாகத்

    தமிழகத் தெருக்களில்!

    பாதை வேறு ஆனாலும்

    பதவி இலக்கு ஒன்றுதான்!

    தமிழக ரசிகர்களுக்கும்

    பதவி உயர்வு!

    பால்குடம் தூக்கிய கைகளில்

    பறக்கும் கொடிகள்!

    வேலைக்குக் காத்துக் கிடக்கும்

    இளைஞர்களுக்கு

    ஊராட்சி முதல் மாநகரம் வரை

    புதிய வேலைவாய்ப்புகள்.

    முதலமைச்சர் பதவிக்குக்

    காத்திருப்போர் பட்டியலில்

    இப்போது கமலும் ரஜினியும்.

    கடவுள் மனிதர்களைப் படைத்ததாக

    ரஜினியின் ஆன்மீக அரசியலும்.

    மனிதர்கள் கடவுளைப் படைத்ததாகக்

    கமலின் பகுத்தறிவு அரசியலும்

    சொல்லக்கூடும்!

    மனிதர்கள் படைத்த

    கடவுள்களுக்குள் சண்டை இல்லை!

    கடவுள் படைத்த மனிதர்களுக்குள்

    கடவுளாலும் சண்டைகள்!

    கமலுக்கும் ரஜினிக்கும் நட்பு!

    அவர்கள் உருவாக்கிய

    ரசிகர்களுக்குள் மோதல்

    அவர்களாலேயே!

    அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு

    உட்பட்டுத்தான்

    யார் வந்தாலும் ஆள முடியும்.

    ஜனநாயகம்

    அதிகாரத்தில் இருப்போர்

    தவறு செய்வதற்கு மட்டுமில்லை

    அரசியல் நிலை கடந்து

    தண்டிக்கவும் இடம் வைத்திருக்கிறது.

    இந்த நிலையில்

    புதிய கட்சியும் கொள்கையும்

    என்ன செய்ய?

    நேர்மையாகக் கட்சியே

    நடத்த முடியாத நிலையில்

    ஊழல் இல்லாமல் ஆட்சியா?

    தேவைப்படுவது கட்சி இல்லை.

    ஊழலைத் தட்டிக் கேட்க

    இயக்கம் வேண்டும்.

    அதிகாரப் பறிப்புக்காகவும்

    பங்கேற்புக்காவும்

    சமுதாய நலப் போர்வையில்

    முதல்வராகும் ஆசையில்

    பணம் கொடுத்துக் கூட்டம் காட்டும்

    தலைமை வேண்டாம்!

    அநீதியைத் தட்டிக் கேட்கும்-

    ஊழலைத் தடுத்து நிறுத்தும்

    அரசியல் வேண்டும்!

    தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த கட்சிகள்

    ஏற்கெனவே நிறைய இருக்கின்றன.

    இன்றையத் தேவை

    தேர்தலில் போட்டியிட

    வாக்குகளைக் குறிவைக்கும்

    புதிய கட்சிகள் இல்லை; இயக்கம்.

    முதல்வராகும் கனவுகளில்

    போட்டிபோடும் தலைவர்கள்

    இருக்கிறார்கள்!

    வழிகாட்ட அரசமைப்பு இருக்கிறது!

    தேவை ஆட்சியாளர் இல்லை

    ஆட்சியாளர்களைக்

    கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும்

    அதிகாரமுள்ள இயக்கம் தேவை..

    அதிகாரத்தில் யாரை வைப்பது என்பதை

    மக்கள் முடிவு செய்யட்டும்!

    அவர்கள்

    அதிகாரத்தைத் தவறாகப்

    பயன்படுத்துவதையும்

    பயன்படுத்த நினைப்பதையும்

    தடுத்து நிறுத்தும் இயக்கம் வேண்டும்!

    நடிகர்களும் அறிவு ஜீவிகளும்

    தங்களுக்குக் கிடைத்துள்ள

    விளம்பரத்தையும் பெருமையையும்

    முதல்வராகும் வாய்ப்புக்காக இல்லாமல்

    முதல்வரைக் கண்காணிக்கும்

    விழிப்புணர்வை ஏற்படுத்தப்

    பயன்படுத்தட்டும்.

    நமக்குத் தேவை

    பதவிதேடும் பாதை இல்லை!

    பதவியை மறுக்கும் பாதை வேண்டும்.

    யாருக்கு வேண்டும் இந்த

    அதிகார மூக்கணாங்கயிறு!

    சமுதாய நலனில் பொறுப்பேற்கக்

    கைப்பற்ற வேண்டுவது

    அடக்கி வைக்கவும் சொத்து சேர்க்கவுமான

    ஆதிகார மூக்கணாங்கயிறு இல்லை;

    அதிகாரத்தில் உள்ளவர்களின்

    மூக்கணாங்கயிறு!!

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - வெ. வெங்கடாசலம்

    கவிதை – வைதீஸ்வரன்

    சிறுகதை - மதியழகன்

    கவிதை - வளவ. துரையன்

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    கட்டுரை - நா. விச்வநாதன்

    கட்டுரை - ரமேஷ் ரக்சன்

    சிறுகதை – உமையாழ்

    கவிதை – கவிஜி

    கட்டுரை - கணபதி சுப்பிரமணியம்

    குறுநாவல் - பா. கண்மணி

    கவிதை- அதங்கோடு அனிஷ்குமார்

    கவிதை - அருணா சுப்ரமணியன்

    ஓவியர் நரேந்திரபாபு நேர்காணல்

    சொல்வயல்

    சிறுகதை - செய்யாறு தி.தா. நாராயணன்

    கவிதை - ஸ்ரீதர் பாரதி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    *****

    கட்டுரை - வெ. வெங்கடாசலம்

    பெண்ணின் பெருமை பேசுக மனமே

    தனக்குப் பின்னால் தனது சொத்து, இரத்த உறவுள்ள வாரிசுக்கே சென்றடைய வேண்டும், இந்தக் காரணத்திற்காகப் பெண்களிடம் கறாரான கற்பு கோரப்பட்டது. குடும்பம் என்னும் சிறையில் பெண்ணினம் பூட்டப்பட்டது. தாய்வழிச் சமூக அமைப்புத் தகர்க்கப்பட்டுத் தந்தைவழிச் சமூகம் நிலைநிறுத்தப்பட்டு, ஆணாதிக்கம் வரலாற்றில் கோலோச்சத் தொடங்கியது - ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்

    ஆதியிலே குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெண்ணே தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தாள். தாய்வழிச் சமூகம் என்றழைக்கப்படும் அச்சமுதாயத்தில் பிரிவினை வாதங்களும், ஆண் பெண் என்ற வேறுபாடும், இதர வகை அநீதிகளும் இல்லாமல் சமதர்ம, சமூக சமத்துவ நிலையிருந்தது. பெண் தலைமை அபகரிக்கப்பட்டுத் தந்தைவழிச் சமூக / ஆணாதிக்கச் சமுதாய அமைப்பு உருவானபின்தான் உலகத்தில் பெண்களுக் கெதிரான அத்தனை கொடுமைகளும் வழக்கத்துக்கு வந்தன எனலாம்.

    ‘தாய் நாடு, தாய் மண் என்று பெண்ணை முன்னிறுத்தி நமது மண்ணைப் போற்றும் நாம், ஐம்பொறிகளை ஆகாசவாணி, பூமாதேவி, கங்காதேவி என்றும் நதிகளைக் கங்கை, யமுனா, சரஸ்வதி என்றும் பெண்ணின் பெயர்களால் அழைத்து மகிழ்கிறோம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்னும் ஔவையின் பொன்மொழிகளிலும் பெண்ணே முதலிடம் பெற உலகிலேயே அதிக பெண் தெய்வங்கள் உள்ள நாடு இந்தியா என்றும் சொல்லப்படுகிறது.

    ‘மங்கையராய் பிறப்பதற்கு

    மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’

    என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும். இவையாவும் பெயரளவில் நாம் பெண்ணுக்கு வழங்கும் அங்கீகாரங்களேயாகும். யதார்த்தத்தில் ஒரு பெண் ஆணுக்கு நிகரான சம உரிமை, சமவாய்ப்பு, சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவே இருந்து வருகிறாள்; வீடு, நாடு என எங்கெங்கும் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு கல்வி, வேலை, அரசியல், சமூகம் என யாவற்றிலும் சமவாய்ப்பு மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறாள் என்றால் அது மிகையாகாது.

    ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்ற காலம் மாறி நவீனகால பெண்கள் கல்வி நிலையில் முன்னேற்றமடைந்து, இன்று மண்ணிலும் விண்ணிலும் சாதனைகள் பல புரிந்துவரும் நிலையிலும் பெண் சிசுவைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் கொடுமையும், கள்ளிப்பால் புகட்டி பெண் சிசுவைக் கொலை செய்யும் பாதகமும், வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை, பால்ய விவாகம், கற்பழிப்பு, கடத்தல், தற்கொலை, தீக்குளிப்புகள், பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்துதல்கள் எனப் பெண்கள் மீதான வன்முறைகள் பலபல ரூபங்களில் தொடர்ந்துகொண்டிருக்க, அவள்மீது அடக்கு முறைகள் பலவற்றைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டுதானிருக்கிறது இந்த ஆணாதிக்கச் சமுதாயம்.

    ஐ. நா. சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் (who) உலகின் 35% பெண்கள் (மூன்றில் ஒருவர்) தன் குடும்பத்தில் உள்ள மிக நெருக்கமான மற்றும் தெரிந்த நபர்களால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகவும், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாகவும், உலகளவில் கொல்லப்படும் பெண்களில் 70% பேர் கணவர்களாலேயே கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் என்ற வகையில் 14, 545 வழக்குகள் நிலுவையில் இருக்க, அவற்றுள் கற்பழிப்பு வழக்குகள் 1751 மற்றும் பாலியல் தொந்தரவு வழக்குகள் 2320 என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 834 கற்பழிப்பு வழக்குகள் உட்பட 5861 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    இந்தியாவின் 2011 ஆம் ஆண்டைய பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறித்தப் புள்ளி விவரம் 2.28 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. 54 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக, 34 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு, 78 மணி நேரத்துக்கு ஒரு வரதட்சணைக் கொலை எனப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்கொடுமைகளின் புள்ளி விவரம் துயர நிகழ்வாய் நீள்கிறது.

    ஒருபுறம் பெண் மகள், மனைவி, தாய், மருமகள் எனப் பல பரிமாணங்கள் கொண்டு குடும்பத்தின் சரிபாதி அங்கமாய் விளங்கிடினும் இன்னொருபுறம் கைம்பெண், வாழாவெட்டி, விதவை, வேசி என்று பல பல இழிவான பெயர்களில் அடையாளப்படுத்தப்படுவதோடு இந்தப் பழமைவாத சமுதாயம் ஒரு போகப் பொருளாக, சமூக அடிமையாக, சம்பளம் இல்லாத வேலையாளாக நடத்துகிறது. இதனைக் கண்டு மனம் வெம்பிய பாரதியார்

    மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றார்.

    பெண்கள் மத்தியில் கல்வி மற்றும் உரிமை சார்ந்த விழிப்புணர்வு மட்டம் குறைவாயிருந்தக் காலகட்டத்திலேயே நம்மிலிருந்து விடுதலைப் போராட்ட வீர மங்கைகள் பலர் கிளர்ந்தெழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சி ராணி லக்குமிபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, அன்னைதெரேசா, கேப்டன் லட்சுமி, விஜயலட்சுமி பண்டிட், தில்லையாடி வள்ளியம்மை, வேலு நாச்சியார், சாவித்திரி பாய் பூலே என வீரத்திற்கும், விவேகத்திற்கும், ஆளுமைப் பண்பிற்கும் பேர்போன வீர மங்கைகள், அரசியல், விஞ்ஞானம், கல்வி போன்ற பல்துறை சார்ந்த பெண் சாதனையாளர்கள் நம்மிடையே ஏராளமாக இருந்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று வெள்ளையனுக்கு எதிராக வீரச் சமர் புரிந்து வெற்றிக் கண்ட வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கும் மேற்கண்ட இந்தியப் பெண்களே ஒரு பெண் எந்த விதத்திலும் ஆணுக்கு இளைத்தவளல்ல என்பதற்கு உதாரணமாகவும் விளங்குகின்றனர்.

    இந்திராகாந்தி, சோனியா காந்தி, மீராகுமார், பிரதீபா படேல், மாயாவதி, மம்தாபானர்ஜி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் விடுதலைக்குப் பின்பான இந்திய நாட்டின் அரசியலில் மகத்தான பங்காற்றியுள்ளனர் என்பதற்குச் சமகாலமே சாட்சியாக விளங்குகிறது. இந்தியச் சமுதாயம் முன்னேற்றம் கண்டதில் பெண்களுக்கிருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1