Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - July 2023
Kanaiyazhi - July 2023
Kanaiyazhi - July 2023
Ebook173 pages55 minutes

Kanaiyazhi - July 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

July 2023 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580109510043
Kanaiyazhi - July 2023

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - July 2023

Related ebooks

Reviews for Kanaiyazhi - July 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - July 2023 - Kanaiyazhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜூலை 2023

    மலர்: 58 இதழ்: 04 ஜூலை 2023

    Kanaiyazhi July 2023

    Malar: 58 Idhazh: 04 July 2023

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கவிதை - எல்லென் பிரென்மேன் (Ellen Brenneman) - தமிழில்: வ. ஜெயதேவன்

    நாடகம் - கலைஞர் மு.கருணாநிதி

    கவிதை - ஆர். வத்ஸலா

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    சிறுகதை – சந்திரகிருஷ்ணன்

    கவிதை - நீரை. மகேந்திரன்

    கட்டுரை - சா.தேவதாஸ்

    சிறுகதை - உத்தமன்ராஜா

    கவிதை - சா.கா. பாரதி ராஜா

    கட்டுரை - நா. கோகிலன்

    சிறுகதை கார்த்திக் கிருபாகரன்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - சுசித்ரா மாரன்

    கவிதை கி. சரஸ்வதி

    கட்டுரை - கவிஜி

    கவிதை - து.பா. பரமேஸ்வரி

    கவிதை - இளையவன் சிவா

    கட்டுரை - வீர. ரமேஷ்குமார்

    கடைசிப் பக்கம் – இ. பா

    / A person with a mustache wearing glasses Description automatically generated with low confidence

    தோன்ற வேண்டும் மக்கள் தோன்றாத் துணை நாதராக!

    கள்ளச் சாராயச் சாவுக்கே

    களத்திற்கு விரைகிறார் முதல்வர்!

    அதற்குப் பிறகு

    எதிர்க் கட்சித் தலைவர்

    எடப்பாடி போகிறார்!

    ஆனால் பற்றி எரிகிறது மணிப்பூர்

    கள்ள மௌனத்தில்

    பயணித்துக் கொண்டிருக்கிறார்

    பாரதப் பிரதமர்!

    ஆறுதல் தரப் போகிறவர்களுக்கும்

    அனுமதி மறுப்பு!

    அமைச்சரை நீக்குகிறார் ஆளுநர்

    அதிகாரம் இல்லை என்கிறார் முதல்வர்!

    கோப்புகளைப் போலத்

    தனது ஆணையையும் தானே

    நிறுத்தி வைக்கிறார் ஆளுநர்!

    எப்போது கைவைப்பார்களோ என்று

    திகைப்பில் தவிக்கின்றன

    அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும்!

    மாற்றப்பட வேண்டியது

    அரசமைப்புச் சட்டம் இல்லை;

    அதிகார ஆணவம்.

    பொதுநிதி மட்டுமன்றிப்

    பொது நீதியும் காக்கப்பட வேண்டும்.

    அரசமைப்புச் சட்டப்படி

    பொதுமக்கள் விரல் ரேகையில்

    அதிகாரத்தின் ஆயுட் காலம்!

    எஜமானர்களாகக் கருதாமல்

    பொறுப்பான தலைவர்களாகப்

    பதவிக்கு வருகிறவர்கள்

    பக்குவப்பட வேண்டும்!

    பதவி கொடுத்தவர்களைப்

    பரிதவிக்க விட்டுவிட்டு

    வெண்சாமரக் காற்று வேண்டி

    வெளிநாட்டில் சுற்றுகிறார்கள்!

    ஜனநாயகம் என்பது

    ஏழைகளின் வாக்குகளைப் பெற்றுப்

    பணக்காரர்களோடு பயணிப்பதன்று.

    நம்பிக்கைக்கும் உண்மைக்குமான

    இடைவெளியைப்

    பொதுமக்கள் உணரும் காலம் இது!

    நம்பிக்கை என்பது

    கதைகளால் கட்டமைக்கப்பட்ட

    தனிக்குழு விருப்பம்!

    உண்மை என்பது சான்றுகளைக் கொண்டு

    நிறுவப்படும் சமூக நலன்!

    தனிக்குழு நம்பிக்கையைச்

    சமூக உண்மையாக்கி

    மதத்தைக் காட்டி ஜனநாயகத்தை

    வெறுப்பு அரசியலின் நெருப்புக் கடலில்

    மூழ்கடிக்கிறார்கள்!

    கலைஞர் கோட்டத்தைத்

    திறந்து வைத்த கையோடு

    ஜனநாயகக் கோட்டத்தைக்

    கட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    பாட்னா பீகார் தலைநகரம்

    அஜாதசத்ரு காலத்திலிருந்தே(கி.மு. 490)

    தலைநகராக இருக்கிறது!

    பாட்னாவின் பழைய பெயர்

    பாடலிபுத்திரம்!

    சங்க காலத்திலேயே

    பாடலிக்கும் தமிழுக்கும்

    தொடர்பு இருந்திருக்கிறது!

    கங்கைப் பகுதியில்

    நிதியை மறைத்து வைத்த

    நந்தர்கள் கதையைச் சொல்கிறது

    அகநானூறு(265)

    பொன்மலி பாடலி என்று

    கொண்டாடுகிறது குறுந்தொகை(75)

    கடலூர் மாவட்டத்தில் உள்ள

    திருப்பாதிரிப் புலியூரின்

    பழைய பெயரும் பாடலிபுத்திரம்!

    பாதிரி மரத்தின் பெயர் பாடலி ஆகியிருக்கிறது.

    கங்கைக்கரை பாடலிக்கும்

    கடலூர் பாதிரிக்கும் 2000 கி.மீ. இடைவெளி!

    ஆனால் கலைவளமும் தொன்மையும் புராணமும்

    நிரம்பி இருக்கும் இடங்கள்!

    நெருக்கடி காலத்தில்

    ஜனநாயகத்தைக் காப்பாற்றப்

    போராடிய கலைஞர்தான்

    இப்போதும் ஜனநாயகத்துக்குத்

    தோன்றாத் துணை நாதர்!

    தொல்காப்பியப் பூங்கா தந்தவருக்குத்

    திருவாரூருக்கு அருகே கலைஞர் கோட்டம்!

    இருநூறு ஆண்டுகளுக்கு முன்

    காணாமல் போக இருந்த

    தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும்

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக்

    காப்பாற்றிக் கொடுத்தது திருவாரூர்!

    ஆரூரில் இருந்த வடுகநாத தேசிகர் மட்டுமே

    அப்போது தொல்காப்பியம்

    அறிந்தவராக இருந்தாராம்.

    அவரிடம் சென்று இரண்டு ஆண்டுகள்

    ஆரூரில் தங்கிப் பயின்றவர்

    வேங்கடாசல முதலியார்!

    அவர் தனது மகன்

    வரதப்ப முதலியாருக்குக் கற்றுக் கொடுத்தாராம்

    அவர் வழிதான் தமிழகத்தில்

    தொல்காப்பியப் பொருளதிகாரம்

    பரவத் தொடங்கியதாம்.

    அதனால் அவர்

    தொல்காப்பிய வரதப்ப முதலியார் என்றே

    அழைக்கப்பட்டார் என்று

    தொல்காப்பியத்தை அச்சில் கொண்டுவந்த

    சி.வை. தாமோதரம் பிள்ளை

    திருவாரூருக்கும் தொல்காப்பியத்துக்குமான

    தொடர்பை 1885-ஆம் ஆண்டே

    குறிப்பிட்டிருக்கிறார்.

    அங்கேதான்

    ஆழித்தேரில் கலைஞரை அமரவைத்துக்

    கலைஞர் கோட்டத்தைக்

    கட்டி எழுப்பியிருக்கிறார் முதல்வர்!

    அவர்தான் தமிழுக்கும்

    இப்போது தோன்றாத் துணை நாதர்!

    ஆட்சியில் இருந்தவன் சமயக் காழ்ப்பில்

    கல்லில் கட்டிக் கடலில் தூக்கி எறிந்த

    திருநாவுக்கரசர் கரையேறியது

    கதையாக இருந்தாலும் ‘கரையேறவிட்ட குப்பம்’

    இப்போதும் இருக்கிறது திருப்பாதிரிப் புலியூரில்!

    அப்பரும் சம்பந்தரும் பாடிய

    திருப்பாதிரிப் புலியூர் இறைவன்

    தோன்றாத் துணை நாதர்!

    மத வெறுப்புக் கடலில்

    மூழ்கடிக்கப்படும் ஜனநாயகத்தை

    வருகிற தேர்தலில் கரையேற்றத்

    தோன்ற வேண்டும் மக்கள்

    தோன்றாத் துணை நாதராக!

    கவிதை - எல்லென் பிரென்மேன் (Ellen Brenneman) - தமிழில்: வ. ஜெயதேவன்

    அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது

    அவர் போய்விட்டதாக நினைக்காதீர்கள்

    அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது

    வாழ்க்கை எத்தனையோ கூறுகளைக் கொண்டுள்ளது

    இந்த பூமி அவற்றுள் ஒன்று மட்டுமே.

    நாட்களும் ஆண்டுகளும் இல்லாததும்

    அன்பும் ஆறுதலும் உள்ளதுமான ஓரிடத்தில்

    துயரங்களிலிருந்தும் கண்ணீரிலிருந்தும் விடுபட்டு

    அவர் ஓய்வெடுப்பதாக நினையுங்கள்.

    நமது துயரம் தவிர வேறெதுவும்

    உண்மையில் கடந்துபோகும் என்று

    நாம் இன்று அறிந்துகொண்டதை

    அவர் எப்படி விரும்பியிருப்பார் என நினையுங்கள்.

    அவர் வாழ்வதாக நினையுங்கள்,

    அவர் ஈர்த்தவர்களின் இதயங்களில்...

    ஏனெனில் நேசித்த எதுவும் இழக்கப்படுவதில்லை

    அவர் மிகவும் நேசிக்கப்பட்டார்.

    - vjdeva@gmail.com

    நாடகம் - கலைஞர் மு. கருணாநிதி

    சாக்ரடீஸ்

    சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்! உன்னையே நீ அறிவாய்! கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல. அதற்காக அங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையைப் போன்றது. அதனால்தான் தோழர்களே! சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்.

    அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்.

    உன்னையே நீ அறிவாய்! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதற்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே! உங்களையெல்லாம் அழைக்கிறேன். ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில் மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன். ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது; விவேகம் துணைக்கு வராவிட்டால். ஈட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டி மாத்திரம் போதாது வீரர்களே! இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தில் அணையாத ஜோதி….

    மெலிட்டஸ்: அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்! குமுறும் எரிமலை, கொந்தளிக்கும் கடல் அவைகளைவிடப் பயங்கரமானவன் சாக்ரடீஸ். அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாராகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது அனிட்டஸ் என்ன சொல்கிறீர்?

    அனிட்டஸ்: நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்கள் காணும்முன் அந்தக் கிழவன் அறிவுக் கண் மறைந்துவிடட்டும். அவனை நாம் அழித்துவிட வேண்டும்.

    மெலிட்டஸ்: ஆமாம் அதுதான் சரி. சாக்ரடீஸ்! நீ கைது செய்யப்படுகிறாய்.

    நீதிமன்றத்தில் அனிட்டஸ் & மெலிட்டஸ்: சாக்ரடீஸ், நாட்டிலே நடமாடக் கூடாத ஒரு ஆத்மா! ஜனநாயக அரசாங்கத்தைக் குறை கூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது. கேட்டார்ப் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்ப மொழியும் வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துகளை அள்ளிவழங்கி அரசங்கத்துக்கு விரோதமாக, ஆண்டவருக்கு விரோதமாக, சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுலக் கிழவன்!

    சாக்ரடீஸ்: சிரிப்பு!

    நீதிபதி: என்ன சிரிப்பு? என்ன காரணம்?

    சாக்ரடீஸ்: ஒன்றும் இல்லை தலைவா! ஒன்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1