Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - May 2024
Kanaiyazhi - May 2024
Kanaiyazhi - May 2024
Ebook191 pages59 minutes

Kanaiyazhi - May 2024

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

May 2024 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580109511122
Kanaiyazhi - May 2024

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - May 2024

Related ebooks

Reviews for Kanaiyazhi - May 2024

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - May 2024 - Kanaiyazhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணையாழி மே 2024

    மலர்: 59 இதழ்: 02 மே 2024

    Kanaiyazhi May 2024

    Malar: 59 Idhazh: 02 May 2024

    Author:

    ம.ரா

    Ma. Raa

    அச்சத்தில் நிறுத்தலாமா ஜனநாயகத்தை?

    மே தினம்!

    அச்சத்திலிருந்து விடுபட

    உலகத் தொழிலாளர்கள்

    ஒன்றுபட கை உயர்த்தும் நாள்!

    வெளியே வெயிலும்

    மனதில் கொதிப்புமாய்த்

    தேர்தல் களம்!

    கட்சிகளை விடவும்

    கவலையோடு இருக்கிறது

    இந்திய ஜனநாயகம்!

    எல்லோருக்கும் எல்லாம் என்பது

    திராவிட மாடல் என்று

    தமிழ்நாடு முதலமைச்சர்

    ஜனநாயகத்தின் கவலை தீர்க்கக்

    குரல் கொடுக்கிறார் இங்கே!

    ஆனால் அங்கே

    பழிவாங்கத் துடிக்கும்

    விலங்கு உணர்ச்சிகள்

    அரசியல் உபதேசத்தில்

    ததும்பி வழிகின்றன!

    சொந்த நாட்டுக் குடிமக்களை

    நாட்டுக்காக உழைத்தவர்களை

    விலக்கி வைக்கப் பேசுகிறார்கள்!

    சொந்தக்காரர்களை

    மதிப்பிற்கு உரியவர்களை

    எப்படி எதிர்ப்பேன் என்று

    மனக் கலக்கத்தில் நின்ற

    மகாபாரத அர்ஜுனன் போல்

    மனக் குழப்பத்தில் மக்கள்!

    குருசேத்திர யுத்தத்தில்

    அர்ஜுனனுக்குக் கண்ணன்

    செய்யும் கீதா உபதேசம்

    தேர்தல் கால அரசியலையும்

    நினைக்க வைக்கிறது.

    கண்ணன் சொல்கிறார்,

    "சகல தர்மங்களையும் விட்டுவிட்டு

    என்னைச் சரண் அடை.

    சகல இடையூறுகளிலிருந்தும்

    உன்னை விடுதலை செய்கிறேன்"(18- 55,66)

    அர்ஜுனன் சொல்கிறார்

    "பிணம் தின்னும் பூச்சியாய்

    எல்லோரையும் விழுங்கிவிட்டு

    இந்த இராச்சியத்தை எப்படி அனுவிப்பேன்?

    அந்த நினைவே என்னைக் கொன்றுவிடும்!

    இந்தக் களத்தில் வென்றாலும் தோற்றாலும்

    நான் இறப்பது உறுதி.

    இந்த யுத்தத்தை நிறுத்தி

    எங்கேயாவது போய்ப்

    பிச்சை எடுத்துப் பிழைப்பதே மேல்."

    பகவத் கீதையின்

    பதினெட்டாவது அத்தியாயத்தில்

    சொல்லியிருப்பது

    சமகால அரசியலுக்கும்

    பொருத்தமாக இருப்பதை

    இராமர் நெற்றியின் சூரியக் கண்ணொளி

    துணை இல்லாமலும் யோசிக்க முடிகிறது!

    மக்களைப் பிளவுபடுத்தி

    நல்லிணக்க வாழ்க்கையை

    அழித்தொழிப்பது விவேகம் இல்லை:

    அது வீரமும் இல்லை.

    அழிக்க நினைப்பது கோழைத்தனம்

    இணக்க வாழ்க்கையை

    வளர்க்க நினைப்பது வீரம்.

    மக்களை

    அறியாமையில் வைத்துத்

    தேடிக் கொள்வதில் இல்லை வெற்றி!

    உழைப்பில், உண்மையில்

    சுடர் விட வேண்டும் வெற்றி!

    "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான்

    மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது" என்று கலைஞர் சொன்னார்.

    ஆனால் இப்போது

    ஊர் சுற்றும் சிலருக்கு

    மனசாட்சியே குரங்காக இருக்கிறது!

    ஜனநாயகம்

    பெரும்பான்மை மக்களால்

    தேர்ந்தெடுக்கப்பட்டுச்

    சிறுபான்மை மக்களுக்கும்

    பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    அமெரிக்க வெள்ளை மாளிகையில்

    அதிபர் ஜோ பைடனை

    மோடி சந்தித்து (செப்.24, 2021)

    பைடன் முன்னோர்க்கும்

    இந்தியாவுக்குமான

    தொடர்பை உறுதிப்படுத்தும்

    ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்.

    நாம் உறவினர்களா என்று

    பைடன் கேட்கிறார்.

    ஆம் என்று ஆமோதிக்கிறார்

    பிரதமர் மோடி.(பி.பி.சி. அக்டோபர் 5)

    வெள்ளை மாளிகையுடன் கைகுலுக்கும் பிரதமர்

    உள்ளூர் மக்களை ஊடுருவியவர்கள்

    என்று விலக்கி வைக்கிறார்.

    மோடி, பிரதமர் ஆனதும்

    ஜூன்11, 2014 இல்

    நாடாளுமன்ற முதல் உரையில்

    "1200 ஆண்டுகால அடிமை மனநிலை

    கவலைக்கு உரியது" என்று பேசியிருக்கிறார்.

    ஆங்கிலேயர் ஆட்சி மட்டுமில்லை

    முகமதியர் ஆட்சியிலும்

    இந்தியா அடிமையாகத்தான் இருந்தது

    ஆகவே காலனி ஆட்சி என்பதும் -

    அந்நியர் ஆட்சி என்பதும்

    ஆங்கிலேயர் ஆட்சி மட்டுமில்லை

    முகமதியர் ஆட்சியும் தான் என்பதாக

    வரலாற்றைப் பார்க்கச் சொல்லிக்

    கட்டாயப்படுத்துகிறார்கள்.

    அந்நியர் என்றால் ஆட்சி முடிந்ததும்

    ஆங்கிலேயர் போல முகமதியர்கள்

    வெளியே போகவில்லையே

    இங்கேதானே இருக்கிறார்கள் என்றால்

    அவர்களுக்குப் புனித பூமி

    இந்தியா இல்லை.

    ஏனெனில் அவர்கள் இப்போதும்

    மெக்காவை நோக்கித்தானே

    தொழுகை நடத்துகிறார்கள் என்கிறார்கள்!

    இந்துஸ்தான் ஹமாரா என்ற

    பாகிஸ்தானின் தேசியத் தத்துவ ஞானி

    இக்பால்

    சீனாவும் அரேபியாவும்

    முகமதியருக்கானது என்பதோடு

    இந்தியா உலகின் மிகப்பெரிய

    முஸ்லீம் நாடு என்றார்

    சாவர்க்கர் இது இந்து தேசம் என்றார்.

    இப்படி இந்தியாவை

    மதத்தின் பேரால் கூறு போடத் தொடங்கினார்கள்!

    அதனால் அக்பரின் அலகாபாத்

    2018 இல் பிரயாக்ராஜ் ஆனது.

    கடந்த காலப் படிப்பினை

    நிகழ்காலத்தைச் சீர் செய்யவேண்டும்!.

    வரலாற்றில் பழிவாங்க வழி தேடாமல்

    இணக்கமாக வாழ்வதற்குப்

    படிப்பினையைக் கற்றுக் கொள்ளவேண்டும்!

    ஏனெனில் நிகழ்கால அதிகாரத்தைக்கொண்டு

    வரும் காலத்தைத் தீர்மானிக்கலாம்

    ஆனால் யாரும்

    கடந்த காலத்தைத் திருத்த முடியாது!

    அதனால் என்றும் இருக்கப் போகிற

    நிகழ்காலத்தையும் சிதைக்கக் கூடாது

    ஆம்! என்றும் இருக்க வேண்டிய

    நிகழ்காலம் ஜனநாயகம்!

    ஆகவே

    தேர்தலில் வெற்றிபெற

    அச்சத்தில் நிறுத்தலாமா

    ஜனநாயகத்தை?

    பொருளடக்கம்

    கட்டுரை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - கருமலைப் பழம்நீ

    சிறுகதை - காரைக்குடி சாதிக்

    கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்

    கட்டுரை - சோமலெ சோமசுந்தரம்

    சிறுகதை -ம.ரா.

    கவிதை - சன்மது

    கட்டுரை - மு.இராமசுவாமி

    கவிதை - ச.ஆனந்தகுமார்

    சிறுகதை - ஆ.கிருஷ்ணதாஸ்

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை - நாகரத்தினம் கிருஷ்ணா

    கவிதை - கவிஜி

    சிறுகதை - ஊத்தங்கால் ப. கோவிந்தராசு

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    சிறுகதை -ஆவூரான்

    கவிதை - சூர்யமித்திரன்

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    கவிதை - ஈழபாரதி

    கவிதை - மணி அமரன்

    கடைசிப் பக்கம் – இ.பா

    கட்டுரை - வாசுதேவன் அருணாசலம்

    கனவுகள் மெய்ப்படட்டுமே!

    ஆழ்மனதின் அழகிய மொழி கனவு. கனவு மொழியின் எழுத்துக்கள் வடிவங்களும், பிம்பங்களும், மற்றும் படிமங்களும்தான். ஆழ்மனதிற்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையின் உருவத்தைக் கனவு என்ற மொழியில் வெளிப்படுத்தும். அது புனையும் அளவற்ற குறியீடுகள் நிறைந்த கனவுகள் அனைத்திற்கும் உலகிலேயே உயரிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கனவும் பல அர்த்தங்கள் பொதிந்த அருமையான கவிதை; சிறுகதை. மிகச்சிறந்த கவிஞர்; கதாசிரியர். இந்த ஆழ்மனம். பயிற்சியற்ற, ஆழமற்ற போக்கை அளவில்லாமல் தன்னகத்தே தேக்கிவைத்திருக்கும் வெளிமனதிற்கு, ஆழ்மனதின் உண்மைகளை அது உருவாக்கும் கனவுகள் மூலம் அறியும் திறமை அறவே கிடையாது. ஆழ்மனதின் வடிவங்களையும், பிம்பங்களையும், மற்றும் படிமங்களையும், சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றும் காட்சிக் கோர்வைகளையும், அவை சொல்ல முற்படும் ஆழமான விசயங்களையும், அர்த்தங்களையும், நினைவுப்பரப்பிலிருந்து சுவடுகளேயில்லாமல் அகற்றும் ஆழ்மனதின் உத்திகளையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் வெளிமனதிற்கு என்றுமே முழுமையாக நிறைவேற்றப்பட முடியாத சவால்தான். ஆழ்மனதினுடைய பரப்பளவு பல பிரபஞ்சங்களையும் மிஞ்சம். சமயத்தின் சடங்குகளையும், சமூகத்தின் சம்பிரதாயங்களையும், சட்டங்கள் விதிக்கும் விலங்குகளையும், ஆழ்மனம் பொருட்படுத்தாது. தன்னுடைய அராஜகப் போக்கை, அடாவடித்தனத்தை வெளிமனதிற்கு மங்கிய வெளிச்சத்தில் ஆழ்மனம் நாடகமேற்றி புரிந்துபார் என்ற நக்கலோடும், புன்முறுவலோடும் மெல்ல நகர்ந்து சென்றுகொண்டேயிருக்கும்.

    பரிதாபம் என்னவென்றால், ஆழ்மனதின் உண்மைகளை அறிய கனவு மட்டும்தான் ஒரே வழி. கனவின் வழிதான் ஆழ்மனதின் நாடகங்களை வெளிமனதால் அறியமுடியும். அதனால்தான், ஆழ்மனதின் கனவு நாடகங்கள் வெளிமனதின் நினைப்புப்பரப்பில் நிகழ்ந்ததற்கான சுவடுகளை ஆழ்மனம் அழித்துக் கொண்டேயிருக்கும். ஆனால், அது ஏதோ வெளிமனதோடு பேசுவதற்கு முழுமையாக முயற்சிப்பதுபோலும், போராடுவதுபோலும், தோற்றுப்போய் வருந்துவதுபோலும், வெளிமனதை உணரவைக்கத் தொடர்ந்து முயற்சி செய்வதுபோன்ற மாயையைத் தந்துகொண்டேயிருக்கும். முக்கியமாக, ஆழ்மனம் கற்கும் வேகத்திற்கு இணையாக இந்த உலகில் எதுவும் இல்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அது ஒரு மிகச்சிறந்த மாணவர். ஆழ்மனதின் பெருமைகளெல்லாம் போதும்! கட்டுரையின் நோக்கத்தை அறிவோம்!

    அரிஸ்டேண்டர் (மாவீரன் அலெக்ஸாண்டரின் அவையில் இருந்த அறிஞர்) மற்றும் ஆர்டிமிடோரஸ் போன்ற கிரேக்கர்கள் எதிர்காலத்தைக் கணிக்கும் கனவுகளின் அர்த்தங்களை விவரிக்க முயற்சித்திருக்கிறார்கள். (இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன், கோப்பெருந்தேவி ஆகியோருடைய கனவுகள் எதிர்காலத் தீயசகுனங்களைக் கணிப்பவை. கம்பனின் இராமாயணத்தில் சீதை திரிசடையிடம் விவரிக்கும் கனவும் இதே தன்மையைக் கொண்டது.) முக்கியமாக, கி.பி. 180 – 210 காலகட்டத்தில் ஆர்டிமிடோரஸால் எழுதப்பட்டதாக நம்பப்படும் கனவுகளின் விளக்கங்கள் (ஒனைரோகிரிட்டிகா – Interpretation of Dreams) ஒரு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது. இந்நூலைப்பற்றி ஸிக்மண்ட் ஃப்ராய்ட் தன்னுடைய The Interpretation of Dreams (1900) நூலில் குறிப்பிட்டிருக்கிறார். [ரிச்சார்ட் வொன் கிராஃப்ட்-இப்பிங் 1886 இல் எழுதிய Psychopathia Sexualis என்ற நுாலிலிருந்து பல வார்த்தைகளை ஃப்ராய்ட் பயன்படுத்தியுள்ளார்.] ஃப்ராய்ட் கனவுகளைப் பயன்படுத்தி ஆழ்மனதை அறிந்து, மனப்பிறழ்வுகளால் அவதியுற்ற பல மனநோயாளிகளைக் குணப்படுத்த முயற்சித்ததை தன்னுடைய நூலில் ஆழமாக ஆராய்ந்து விவரித்துள்ளார். சராசரியான மனிதர்களின் கனவுகள் வேறு, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கனவுகள் வேறு என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். கனவுகளின் அர்த்தங்களை அறிந்துகொள்ள அவருடைய காலகட்டத்தில் பழக்கத்திலிருந்த இரண்டு முறைகளின் (ஒவ்வொரு கனவையும் ஒரு நுதல்பொருள் அடங்கிய ஓர் உருவகக் கதையாக அறிதல் மற்றும் ஒரு கனவின் குறியீடுகளுக்கான அர்த்தங்களை ஒரு கனவு-அகராதியில் தேடுதல் (இந்தக் குறியீட்டிற்கு இதுதான் அர்த்தம் என்பதுபோல்) குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, தன்னுடைய அறிவியல்பூர்வமான, எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி வெளிப்படுத்தப்படும் எண்ணங்களைக்கொண்டு, கனவுகளை ஆராய்ந்து, அவற்றின் அர்த்தங்களைக் கண்டறிந்து, மனநோயாளிகளைக் குணப்படுத்தியதை விளக்குகிறார். இந்த இரண்டு முறைகளில் இரண்டாவது முறையோடு ஆர்டிமிடோரஸின் முறையும் ஃப்ராய்ட் கனவுகளை

    Enjoying the preview?
    Page 1 of 1