Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - August 2020
Kanaiyazhi - August 2020
Kanaiyazhi - August 2020
Ebook185 pages58 minutes

Kanaiyazhi - August 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

August 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109505828
Kanaiyazhi - August 2020

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - August 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - August 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - August 2020 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஆகஸ்ட் 2020

    மலர்: 55 இதழ்: 05 ஆகஸ்ட் 2020

    Kanaiyazhi August 2020

    Malar: 55 Idhazh: 05 August 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி ஆகஸ்ட் 2020

    தலையங்கம் - ம.ரா.

    எப்போது மறையும் இந்த அதிகார இடைவெளி?

    ஆகஸ்ட் 15 சுதந்திர நாள்

    இந்திய வானில் ரஃபேல்

    போர் விமான அணிவகுப்பு!

    சமூக இடைவெளியில்

    சுதந்திர நாள் கொண்டாட்டம்!

    ஒன்று கூடிப் போராடிப் பெற்ற

    சுதந்திரத்தைக் கொண்டாட

    தனிமனித இடைவெளி!

    கரோனாவின் பிடியில்

    மனிதர்களின் சுதந்திரம்!

    வாயுறையும் கையுறையுமாக

    வேற்றுக் கிரக வாசிகளைப்போல

    மக்கள் நடமாட்டம்!

    வீட்டுக்கு வந்துட்டுப் போங்க

    என்பதெல்லாம் பழங்கதையானது

    வீட்டுக்கு வந்தவர்களை

    வெளியில் நிறுத்தி

    வாயுறை முகத்தோடு

    வழியனுப்பி வைக்கும்

    காலக் கொடுமையில்

    கரோனா ஆட்சி!

    நல்லது கெட்டதுக்குத்

    தகவல் சொல்லி

    வரவேண்டாம் என்றும்

    வற்புறுத்தும் வாழ்க்கை!

    எதையும் தொடாமல்

    எல்லோரிடமும் விலகி நிற்கக்

    கட்டாயப்படுத்துகிறது

    கரோனா ஆதிக்கம்!

    யாரைப் பார்த்தாலும்

    தனிமனித உறவை மறைக்கும்

    கரோனா பேயின்

    சந்தேக வெறியாட்டம்!

    முன்பின் தெரியாதவர்

    தண்ணீர் கேட்டாலும்

    மோர் கொடுத்து மகிழ்ந்த கிராமத்தில்

    வெளியூர் சென்றவர்கள்

    சொந்த ஊருக்குள் செல்ல முடியாமல்

    வழியில் முள்மரங்கள்!

    வெளியில் முகாம்கள்!

    ஒரே குடும்பத்தில்

    அறைக்குள் ஒருவரை வைத்து

    வெளியே வராதே என்று

    வீட்டுக்குள் லட்சுமண ரேகை!

    இணையம்

    உலகத்தைக் கிராமம் ஆக்கியது!

    சாதி, மதம் நாடு கடந்து

    எல்லைகளை உடைத்தது!

    கரோனா

    ஒருவருக்கு ஒருவர்

    ஆறடி என்றும்

    ஒவ்வொரு வீடும்

    தனித்தனி நாடு என்றும்

    பக்கத்து மாவட்டம்

    வேறு கிரகமென்றும்

    புதுப்புது எல்லைகளை

    உருவாக்கி இருக்கிறது.

    வீட்டுக்கு வெளியே வந்தால்

    கடவுச் சீட்டு, நுழைவுச் சீட்டு இல்லாமல்

    வேற்று நாட்டுக்குள் செல்வதைப்போல

    காக்கிச் சட்டைகளின் கைகளில்

    கரோனாவின் குடியிருப்பு!

    சுதந்திரம் என்பது

    அச்சத்திலிருந்து விடுதலை-

    அடுத்தவரை

    அச்சுறுத்தாத மனநிலை!

    தன் பயம் மட்டுமில்லை

    அடுத்தவர் பயத்தையும் அகற்றுவது!

    ஒருவரின் சுதந்திரம் என்பது

    அடுத்தவர் கருணையால்

    அனுமதிக்கப்படுவது இல்லை

    அடுத்தவர் சுதந்திரத்தில்

    தலையிடாமல் இருப்பது!

    எதிலும் தலையிடாமல்

    இருப்பது சுதந்திரம் இல்லை

    எதிலும் தலையிடக் கூடாது என்று

    தடுப்பதிலும் சுதந்திரம் இல்லை!

    பார்வையாளனாக மட்டும்

    பயணிப்பதில் சுதந்திரமில்லை!

    இறக்கைகள் இருப்பதாலேயே

    பறவைகள்

    சுதந்திரமானவையாக இருப்பதில்லையே!

    இரைதேட பறப்பதைவிட

    பயத்தில் பறக்கவே

    இறக்கைகள் பயன்படுகின்றன!

    உழைக்கும் கைகளில்

    வெளிப்படும் சுதந்திரம்

    அதிகாரத்திற்குப் பயந்தும்

    அதிகாரத்தைக் கைப்பற்றவும்

    கும்பிடு போடுவதில்

    தலைகாட்டல் இல்லையே!

    மனதில் பட்டதைச் சொல்ல விடாமல்

    சிறைப்பட்டுக் கிடக்கிறதே.

    பேச்சு சுதந்திரம்!

    ஊரடங்கு முடக்கத்தில்

    மக்கள் கிடக்க

    அவசரம் அவசரமாக

    அயோத்தி கோயிலுக்கு

    அடிக்கல் நாட்ட

    சுற்றுச் சூழல் சுதந்திரம் பறிக்க

    எட்டுவழிச் சாலைக்கு இடம்பிடிக்க

    மும்மொழிக் கொள்கையைப்

    பள்ளியில் திணிக்க

    பொதுமக்கள் நலன் என்று

    காரணம் சொல்லி,

    கருத்துச் சுதந்திரத்தைக்

    காவு கேட்கிறார்கள்!

    ஊடக வாய்களில்

    உண்மையை மறைக்கக்

    காவிக் கவசம்!

    கரோனா

    கை வாய் கண் மூக்கு

    உறுப்புகளைப் பாதுகாக்க

    மறைக்கச் சொல்கிறது!

    உயிரைப் பாதுகாக்க

    உறுப்புகளை மறைப்பதில்

    சுதந்திரம் இழக்க வாய்ப்பில்லை!

    அடக்குமுறை என்பது

    உறுப்புகள் சிறைப்படுவதில்

    மட்டும் இல்லை

    கூண்டுப் பறவைகளின்

    இறக்கைகள் கம்பிகளுக்குள்

    இருந்த போதிலும்

    பறந்து கொண்டே இருக்கும்

    மனவெளி வானில்!

    கரோனா

    உறுப்புகளை – உடலை

    முடக்கிப் போட்டிருக்கிறது!

    ஆனாலும்

    இடைவெளி கடக்கவே

    மனிதர்கள் எப்போதும் விரும்புகிறார்கள்!

    கரோனா இருக்கும்வரை

    உடல் இடைவெளி தொடரக் கூடும்!

    ஆனால்

    மக்களுக்கும் சுதந்திரத்துக்கும்

    இடையில் நிற்கிற

    இந்த அதிகார இடைவெளி

    எப்போது மறையும்?

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - ஆங்கிலம் வழிக் கன்னடத்தில்: கே.இ. இராதாகிருஷ்ணன்

    கவிதை - சசிகலா திருமால்

    கட்டுரை - இரா. காமராசு

    சிறுகதை - க.முஜ்ஜம்மில்

    கட்டுரை - ஓவியர் சந்ரு

    சிறுகதை - சீராளன் ஜெயந்தன்

    கவிதை - காசாவயல்கண்ணன்

    கட்டுரை - ச. விஜயகுமார்

    சிறுகதை - தேவகி கருணாகரன்

    கவிதை - ஈசு

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - இரா.பூபாலன்

    கவிதை - கவிஜி

    சிறுகதை - அமரந்த்தா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    03.jpg

    தயவுசெய்து போய்விடு!

    இதயமில்லையா

    உனக்கு

    இதயமில்லையா?

    இரக்கமில்லையா

    உனக்கு

    இரக்கமில்லையா?

    முத்து முத்தான

    உயிர்களை எல்லாம்

    கொத்து கொத்தாகக்

    கொன்று குவிக்கிறாயே.....

    நோய் எதிர்ப்புச்

    சத்தில்லா உடம்புக்குள் பாய்ந்து

    அவர்களின் நுரையீரல்களைத்

    தின்று ருசிக்கிறாயே....

    உலகெங்கும் மனித நடமாட்டத்தை

    வீட்டுக்குள் போட்டு அடைக்கிறாயே.....

    உனக்கஞ்சாமல்

    உலாவரும் மனிதர்களை

    எமனுக்கு விருந்தாகப் படைக்கிறாயே....

    கோடி எமன்களோடு நீ

    கூட்டணியமைத்து வந்திருக்கிறாயா?

    குவலயம் முழுவதையும் கொன்று

    நரபலி கொடுத்திடும் முடிவு கண்டிருக்கிறாயா?

    மைக்ரோ மில்லிகளுக்கும் குறைவாய் இருந்து கொண்டு

    மண்ணுக்கும் விண்ணுக்கும் வாமனரூபம் எடுக்கிறாயே!

    சிற்றரசு பேரரசு சிறியோர் பெரியோரென்று

    சிறிது கூடப் பேதங்கள் பார்க்காமல்

    உலக நாடுகள் முழுவதற்கும்

    மரண பயம் ஒவ்வொரு நாளும் விடுக்கிறாயே!

    திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்றால்

    இராமரையும் இயேசுவையும் அல்லாவையும்

    இறுகப் பூட்டிக் கதவுகளை அடைக்கிறாயே!

    எந்த மருந்தும் உன்னைக் கொல்வதற்கு

    இதுவரை வந்து விடாமல்

    இதுவும் கடந்து போகுமென்ற

    எங்கள் நம்பிக்கையை உடைக்கிறாயே!

    சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட

    சண்டைக்காரனிடம் சமாதானமாவது மேலல்லவா!

    சண்டாளக் கொரோனா வைரஸ் தொற்றே

    சரணடைந்து உன்னிடம் வேண்டுகிறோம்

    தயவு செய்து போய்விடு இந்த உலகை விட்டே......

    kavingnarnatarajan@gmail.com

    ***

    கட்டுரை - மு. இராமசுவாமி

    மு ராமசாமி.jpg

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும் சில கேள்விகள், சில விவாதங்கள்

    என் நினைவு சரியாயிருந்தால், அது மே மாதம் 1985 ஆம் ஆண்டு - இன்றைக்குச் சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் அப்பொழுது, தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், நாடகத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்கள் நாடகத்துறையின் அப்போதைய துறைத்தலைவர்! பல்கலைக்கழக மானிய குழுவின் நிதி உதவியில், நாடகத்துறையின் சார்பில், கல்லூரி ஆசிரியர்களுக்கான நாடகப் பயிலரங்கு ஒன்றைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்த, துறையினர் நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த நேரமது! அப்போது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராயிருந்தவர் முனைவர் வ. அய்.சுப்பிரமணியன் அவர்கள்! உலக அரங்கில் மொழியியல் பேராசிரியராக அறியப்பட்டவரான அவர், ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் கொங்கு வட்டாரத் தமிழ் பேசி நடித்திருந்த நடிகர் சிவாஜி, அநேகப் படங்களில் பல வட்டார வழக்குகளில் பேசி நடித்திருந்த நடிகை மனோரமா, இருவருக்கும், பல்கலைக்கழகத்தின் சார்பில் தகுந்ததொரு மரியாதை செய்ய வேண்டும் என்கிற அவர் ஆசையை, நாடகத்துறை சார்ந்த எங்களிடம் பேச்சுவாக்கில் சொல்லிக் கொண்டிருப்பது அவருக்குப் பிடித்தமானது! அதற்குத் தோதான நேரமாக அமைந்து போயிருந்தது அந்தப் பயிலரங்கு! சிவாஜி அவர்கள், தன் 33 ஆவது திருமண நாளைக் காரணமாக வைத்து, தஞ்சைக்கு அருகிலுள்ள அவரின் சூரக்கோட்டைத் தோட்டத்தில், அப்பொழுது குடும்பத்துடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால், அழைத்தால், அவருக்கு வருவது எளிதென்பதால், நாடகப் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்ற, அவரை அழைக்கிற யோசனையை எங்களிடம் ஒப்படைத்திருந்தார் துணை வேந்தர்! பேராசிரியருடன் நான், என்னுடன் அப்பொழுது துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு ராஜு, முனைவர்கள் கு. முருகேசன், சீ.மா. இரவிச்சந்திரன் ஆகியோர், துறையின் சார்பில் அவரை அழைக்க, சூரக்கோட்டைத் தோட்டத்திற்குச் சென்றிருந்தோம். தோட்டத்தில், ஒரு நாற்காலியில் அமர்ந்து, நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் சிவாஜி! எங்களுக்கும், அவரெதிரே மேஜையின் அந்தப் பக்கம் நாற்காலிகள் போடப்பட்டன. ‘யாரடா மனிதன் இங்கே’

    Enjoying the preview?
    Page 1 of 1