Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellam Income Mayam
Ellam Income Mayam
Ellam Income Mayam
Ebook184 pages1 hour

Ellam Income Mayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580124104882
Ellam Income Mayam

Read more from Ja. Ra. Sundaresan

Related to Ellam Income Mayam

Related ebooks

Related categories

Reviews for Ellam Income Mayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellam Income Mayam - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    எல்லாம் 'இன்கம்' மயம்

    Ellam 'Income' Mayam

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுந்தரி, சௌந்தரி, நிரந்தரியே?

    2. எல்லாம் 'இன்கம்' மயம்

    3. 'இன்னிக்கு என்ன சமையல்?'

    4. கீப் லெஃப்ட்!

    5.தங்கச்சங்கிலி

    6. பேய்க்கு இடங்கொடேல்!

    7. கல்யாண ரிசப்ஷன்கள்

    8. மனிதாபிமான வெள்ளம்

    8.சபா காலி! கேண்டீன் ஜாலி!

    10. இசைவிழா ராசிபலன்கள்

    11. பூட்டுக்குடும்பம்!

    12. காலிமாஃப்ரி

    13. ஜாடியில் ஊறும் ஊறுகாய்கள்

    14. செய்தித்தாள்களின் வாசனை

    15. மோகம், மகா-மோகம், மகாமக-மோகம்

    16. அதில்லீங்க!

    17. 'ஒரு ஊர்லே ஒரு ராஜா...'

    18. சின்னஞ்சிறு வயதினிலே!

    19. ஓட்டலும் ஒட்டலும்!

    20. எக்ஸ்பயரி டேட்

    21. சிந்தாமல், சிதறாமல், உறியாமல்.....

    22. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு

    23. "ஹலோ மைடியர் ராங் நம்பர்!'

    24. யோகாசனத்துக்கு சிம்மாசனம்!

    25.மௌனி!

    26. கோபுரவஸ்து!

    27. 'ஆவிகள்' ஜாக்கிரதை!

    28. வலிகளின் அட்டவணை!

    29. காத்திரு! விழித்திரு! சிரித்திரு!

    30. 'பளிச் பளிச்' லோசினி!

    31.கண்டிஷன்ஸ் அப்ளை!

    32. 'அண்ணா, சீக்கிரம் போங்க!'

    33. கொர்கொரோமேனியா!

    34. (அரைக்)கல்லானாலும் கணவன்!

    35. மாடிப்படிகள்

    36. ரிஷ்யசிருங்கர்!

    37. சின்னபூரணி

    38. சப்பாத்தி ஷாட்!

    1. சுந்தரி, சௌந்தரி, நிரந்தரியே?

    'சுந்தரி, இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கேடி அதுவும் இந்தப் புடைவையிலே!'

    இதைச் சொன்ன முகூர்த்தத்தில், காகத்தை வாகனமாகக் கொண்ட சனீஸ்வரன், சீனுவின் நாக்கில் இறங்கி இருந்திருக்க வேண்டும். விளைவு? பெண்ணாக இருந்தாலும், வாடி வாசலிலிருந்து விரட்டி விடப்பட்ட காளையின் மூர்க்கத்துடன் சுந்தரி சிலிர்த்து எழுந்தாள்.

    'என்னது? என்னது? நான் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கேனா? அப்படியா சங்கதி? கல்யாணம் ஆனதிலேருந்து இதுவரை என்னை சுந்தரின்னு வாய் நிறைய பேர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை. இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? ஆனா தப்பு, தப்பு. கன்னத்திலே போட்டுக்கறேன். உங்க குலத்திலேயே யாருமே பெண்டாட்டி பேரைச் சொல்லிக் கூப்பிடறதில்லையே? உங்க அருமை அப்பா, உங்க அருமை அம்மாவை, 'யார்ரீ உள்ளே?'ன்னு ஏதோ அவருக்குத் தெரியாமலேயே, ஒரு பொம்மனாட்டி சமையல்கட்டிலே இருக்கா மாதிரிதானே கூப்பிடுவார். உங்க துர்வாச தாத்தா, பரம மோசம். 'ஹேய்னு' கனத்த இடிக் குரலிலே ஒத்தை மாட்டு வண்டிக்காரர் மாதிரி கூப்பிட்டு, ஊரையே அதிர வைப்பாரே.'

    'என்ன சொன்னேள்? 'சுந்தரி, இன்னிக்கு அழகா இருக்கேடிதானே? வரேன் வரேன். அதென்ன இன்னிக்கு? இன்னிக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்? இன்னிக்குத்தான் அழகா இருக்கேனா? அப்போ நேத்திக்கு இல்லையா? முந்தா நாள் இல்லையா? போன வாரம் இல்லையா? போன மாசம்? போன சுக்ல பட்சம்? கிருஷ்ண பட்சம்? போன வருஷமெல்லாம் இல்லையா? அழகில்லாம, விகாரமா, சூர்ப்பணகையா, கூனியா, ராட்சஸியா, பேயா, பிசாசா பார்க்க சகிக்காம, பத்ரகாளியா இருந்தேனான?'

    'சு... சு... ந்தரி. அது வந்து... அது வந்து..."

    'வந்தாவது? போயாவது? வாயை மூடுங்கோ. என் அழகு இன்னிக்குத்தான் உங்க கண்ணுக்குத் தோணித்தோ? அட பரவாயில்லையே? எனக்கு ஏதான ஆகி ஆஸ்பத்திரியிலே நான் பாடியாகிடந்தா, அடையாளம் கண்டுபிடிச்சு, அது என்னுடையதுதான்னு உறுதி செஞ்சு, போலீஸுக்கு உதவணும்னு ஒரு நிலை ஏற்பட்டா, என்னை அடையாளமே தெரியாம நீங்க 'பேபேபேபேன்னு பேந்தப் பேந்த முழிச்சிண்டுனா இருப்பேள். ஆசைமுகம் மறந்து போச்சே. இதை யாரிடம் சொல்வேனடி தோழிங்'கிற பாட்டு ஒண்ணு உண்டு தெரியுமா? பாரதியாரோட பாட்டுங்கிறது தெரியுமான? சான்ஸே இல்லே.'

    *சுந்தரி நான் என்ன சொல்ல வரேன்னா...'

    "வாயை மூடுங்கோ! அதன்ன, ரொம்ப அழகா இருக்கேன்னு, 'ரொம்பவை அழுத்திச் சொன்னது? அதுக்குன்னு ஏதான அழகை அளந்து காட்டற மெஷினை அமேஸான்லேர்ந்து வாங்கி வெச்சிருக்கேளான? அவ்வளவு சாமர்த்தியமெல்லாம் உங்களுக்குக் கிடையாதே. ஸ்டேப்ளரில் பின் போடத் தெரியாது. கேஸ் சிலிண்டரை மாத்தத் தெரியாது. ஓலாவிலே ஆட்டோ, டாக்ஸி புக் பண்ணத் தெரியாது. இடது கையால வலது விரல் நகங்களை வெட்ட வராது. சூரதேங்காய் போடத் தெரியாது?'

    *ஸ்டாப் இட்! இதெல்லாம் ஏன் சொல்றே?'

    *சும்மா இருங்கோ. அப்புறம், அது என்ன? இந்தப் புடைவையிலே அழகா இருக்கேன்னு ஏன் சொல்ல வந்துது? நான் எந்த புடைவை கட்டறேன்னு உங்களுக்குத் தெரியுமான? ஆச்சரியமா இருக்கே! பண்டிகைகளுக்கு, எங்க சைடு கல்யாண கார்த்திகைகளிலே என்னோட அப்பா அம்மா, அண்ணா, அக்கா, மாமா இவங்க ஆசைஆசையா வாங்கிக்கொடுத்த சூப்பர் புடைவைகளை நான் பண்டிகைகளுக்கோ, ஊருக்குப் போகும்போதோ கட்டினா, அது உங்க கண்ணிலே படாது. ஆனா, மூணு வருஷத்துக்கு முன்னே உங்க அருமை அக்கா, ஊரு பூரா தேடி வாங்கிக் கொடுத்த இந்தப் பாடாவதியான புடைவையை, வீட்டு வேலை செய்யற ராஜாத்திக்கு குடுக்கணும்னு நான் முடிவு பண்ணி, ஆனா அதை ஒரு தடவையான கட்டிக்கணும்னு இன்னிக்குக் கட்டிண்டேன். அது எப்படி உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சது. இந்தப் புடைவையில் சூப்பரா இருக்கேனாம். என்ன திரிசமம் இது? நான் தெரியாமத் தான் கேக்கறேன். நான் என்ன இளிச்வாயியா? எதைச் சொன்னாலும், அருந்ததி ' சீரியலிலே வர அடங்கின சரக்கு மருமகள் மாதிரி, கேட்டுண்டு அமைதியா இருக்கணுமான?'

    'அம்மாடி! போறும்...'

    'என்னது போறுமா? என்ன போறும்? ஏன் போறும்? எது போறும்? எதுக்குப் போறும்? நீங்க போறும்னா, 'தொட்டுத் தாலி கட்டினவர் போறும்னு ஆர்டர் போட்டுட்டார். அதனாலே ரிமோட்டால ஆஃப் பண்ணின டிவி மாதிரி பொசுக்குன்னு சைலன்ட ஆயிடணுமா? என் பேச்சைக் கேக்கிறது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கான? டிவியிலே லொடலொடன்னு மூச்சுவிடாம ஒருத்தர் ஒருத்தராடர்ன் போட்டு பேசாம, காச்மூச்சுன்னு காட்டுக் கூச்சல் போட்டு நாலஞ்சு பேரா கூவறதைக் கேக்க மாத்திரம் பொறுமை இருக்கு. நேரம் இருக்கு. ஆசை இருக்கு. ஆனா துணிமணிகளைச் தோச்சு, வீட்டைப் பெருக்கி, பொங்கிப் போட்டு, பத்துப் பாத்திரங்களைத தேச்சு, ஓடா உழைக்கிற ஒரு மனுஷிக்கு, 'லலிதா ஜுவல்லரி' எஸ்டிமேட் ஸ்லிப்பை வாங்கி எடுத்திண்டு, ஜிஆர்டி, வீகம்ஸி, உம்முடி, ஜாய் அலுக்காஸ்னு சளைக்காம ஏறி இறங்கி சாவகாசமா உக்காந்து விலையை சீர்தூக்கிப் பாத்து, லோயஸ்ட் கொடேஷன்காரர்கிட்டேந்து ஒரு ஜோடி கம்மலோ, மோதிரமோ வாங்கித் தர வேணாம். நல்லி, ராசி, சுந்தரி, போத்தீஸ்லேந்து புடைவை வாங்கித்தர வேணாம். கல்யாண் ஜுவல்லரி ஏரியாலே, பிரபுகிட்டே மாட்டிண்டு ஒரு மாட்டல் வாங்கித் தர வேணாம். கிருஷ்ணா ஸ்வீட், கிராண்ட் ஸ்வீட், ஸ்ரீமிட்டாய்க்கெல்லாம் போய் மில்க் ஸ்வீட், பெங்காலி ஸ்வீட்டல்லாம் வாங்கித்தர வேணாம். ஆனா, ஆசையா, வாய் வார்த்தையா, 'சுந்திரி, நீ எந்தப் புடைவையிலும் ரொம்ப அழகா இருக்கேடி'ன்னு ஒரு வாய் வார்த்தை, ஒரே வார்த்தை சொன்னா குறைஞ்சு போயிடுமான? அதுக்கு காசு செலவான? வாயிலே இருக்கிற நல்முத்துக்கள் உதிர்ந்துபோயிடுமான? ஈஸ்வரா! நாளுங்கிழமையுமா, காலங்கார்த்தாலே என் மூடையே மாத்திட்டேளே. ச்சே!'

    ***

    2. எல்லாம் 'இன்கம்' மயம்

    விம்மி விம்மி, விக்கி விக்கி, விட்டு விட்டு, விசும்பி விசும்பி, குமுறிக் குமுறி, கேவிக் கேவி, பிழியப் பிழிய அழப்படும் வெரைட்டிகளில் ஒன்றை, அன்றைய மெகா சீரியல் எபிசோடின் எல்லாம்வல்ல டைரக்டர் பிரான் ஆக்ஷன்னு குரல் கொடுத்தவுடன், டைட் குளோசப்பில், முகம் கோணாமல், மூக்கு நுனி பெங்களூரு தக்காளியா சிவக்காம, மேக்கப் கலையாம, கிளசரின் கிரியா ஊக்கியின் உபயோகம் இல்லாம அழ ஆரம்பித்து, அதை அடுக்கு அடுக்காக, ஏறுமுகமாகப் பெருக்கி, இலவம் பஞ்சைப் போல லேசான இதயத்துடன் சீரியலைப் பார்க்க உட்காருபவர்களின் இதயத்தை கனத்த ஆட்டுக்கல்லாக மாற்றிவிடுவது தெஸ்பியன் ராஜப்பாவின் ஒட்டுமொத்த குடும்பத்திறமை.

    மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் நடிப்பு வித்தான ராஜப்பாவின் தகப்பனார், அயன் ஸ்திரீபார்ட் அழகப்பா, அரிச்சந்திரா நாடகத்தின் மயானக் காட்சியில் சந்திரமதியாக புலம்புவதைப் பார்த்து, நாடகத்துக்கு வந்திருந்த சிம்மபுரம் ஜமீன்தார் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, நெஞ்சு இளக, கண்ணீர் பெருக, நாசி மலர, உதடுகள் துடிக்க மேடை ஏறி, விசிறி மடிப்பு சரிகை அங்கவஸ்திரத்தால் சந்திரமதியின் கண்களைத் துடைத்துவிட்டு, அவரும் ஜோடியாக விக்கி விக்கி அழ, ஆஜானுபாகுவான ஜமீந்தாரே மேடையில் கடேரென்று நிற்பதைக் கண்ட திகைப்பால், உயிரற்ற நிலையிலிருக்க வேண்டிய பாலகன் லோகிதாசனும் துள்ளி எழுந்து கைகூப்பி அழ, அன்றைய நாடகம் களேபரத்தில் முடிந்தது.

    ராஜப்பாவின் மனைவி திலகவதி ('கண்ணாடி வளை'), மகள் துளசி ('மல்லி', 'நீலி, சூலி'), மருமகப் பிள்ளை தியாகு ( 'நங்கூரம்'), மகன் நேதாஜி ('மகுடி'), மருமகள் மந்திரா ('கொலுசு', 'நாகம்மா') மற்றும் பேத்திகளான இந்திரா, சந்திரா ('பம்பரம்') உள்பட, அவர் வீட்டு வளர்ப்பு நாய்குட்டி ஜிம்மி நீங்கலாக, சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்காதவர்களே கிடையாது. குடும்பத்தில் பொங்கும் மங்களம் நிரந்தரமாகத் தங்குவதே சிரிப்பால் அல்ல. ஏந்தும் பாத்திரங்களின் சகுனி, மந்திரையின் டிரேட் மார்க் கயமை, கல்மிஷம் மற்றும் கள்ளத்தனத்தின் விளைவால்தான் என்றாலும் என்ன? நாய் விற்ற காசு குரைக்காதே!

    குழந்தை பிறந்தவுடன் வீறி அழும். அழ வேண்டும். அழுது எல்லோரையும் மகிழ்ச்சி பொங்க சிரிக்க வைக்க வேணும். ஆனால், ராஜப்பாவின் பேத்தி இந்திரா அழவில்லையாம். அமுக்கமாக இருந்ததாம். அதைப் பார்த்த சந்தேகப் பிராணியான மகன் நேதாஜி, தன் குடும்பத்தில் பிறந்த குழந்தை எப்படி அழாது இருக்க முடியும், சம்திங் ராங் என்று சீரியலின் சம்பிரதாயத்துடன் 'யாரோ? அது யாரோ? என்கிற கிலேசத்துடன் மந்திராவை சந்தேகித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1