Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalaya Pookkal
Aalaya Pookkal
Aalaya Pookkal
Ebook113 pages38 minutes

Aalaya Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Aalaya Pookkal

Read more from Devibala

Related to Aalaya Pookkal

Related ebooks

Related categories

Reviews for Aalaya Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalaya Pookkal - Devibala

    1

    தியாகராய நகர்.

    நவரத்தினம் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு.

    ஒவ்வொரு பிளாட்டும் 1600 சதுர அடி பரப்பளவை கொண்டிருந்தது. மூன்று படுக்கையறைகள்- கழிவறை குளியலறை இணைப்புகளுடன் குடியிருப்புக்குள்ளேயே ஆங்கில மருந்துக்கடையம் பல்பொருள் அங்காடியும் திறக்கப்பட்டிருந்தன. டென்னில் விளையாடயும் கூடைப்பந்து விளையாடவும் மைதானங்கள் கட்டப்பட்டிருந்தன. குடியிருப்புக்குள்ளேயே பிள்ளையார் கோவில், மினி சர்ச் மினி மசூதி கட்டப்பட்டிருந்தன.

    கல்யாண்குமாருக்கு வயது 44 உயரம் 5’.9" கண்களில் பவர் கிளாஸ் ஒழுங்கினமான ஆனால் கரும்பளபளப்பான கேசம், கிருஷணகண்கள் இணைந்த அடர்ந்த புருவங்கள், அளவான கம்பீர மூக்கு, கறுப்பு செவ்வகசைஸ் பேண்டய்டு போல அகலபட்டை மீசை நிக்கோட்டின் உதடுகள் வேர்கள் கறுத்த பற்கள், ‘K’ டாலர் இணைந்த மைனர் செயின்.

    கல்யாண்குமார் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாயிருக்கும் சினிமா டைரக்டர் இதுவரை பதினெட்டு வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறான். அவனின் காதல் மனைவியின் பெயர் மரகதமணி. மரகதமணிக்கு வயது 40 நிறைந்து இருமாதங்கள் ஓடிவிட்டன. நடிகை ரம்யாகிருஷ்ணன் போல் உடல்வாகு, தினம் அதிகாலை அரைமணிநேரம் யோகாவும், தியானமும் செய்கிறாள். சாத்தப்பன் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை துணைதலைவராக பணிபுரிகிறாள்.

    கல்யாண்குமார் - மரகதமணியின் ஒரே மகள் வாடாமலர். வயது 15. உயரம்5’.5" பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.

    இரவாடையில் படுத்திருந்த கல்யாண்குமார் தனது கால்களை யாரோ ஸ்பரிசிப்பது உணர்ந்து எழுந்து அமர்ந்தான்.

    எதிரே திருமணபட்டாடை உடுத்தி நின்றிருந்தாள் மரகதமணி.

    குட்மார்னிங் கல்யாண்

    குட்மார்னிங் மணி

    இன்னைக்கு என்ன விசேச நாள்னு மறந்து போய்ட்டியா கல்யாண்?

    என்ன நாள்?

    "தினம் நைட் ட்ரிங்ஸ் சாப்பிடுறதைக் குறை. காலைல உறாங் ஓவரோட திரியுற, சின்னச்சின்ன விஷயத்லயிருந்து பெரிய பெரிய விஷயம் வரை எல்லாம் மறக்குது உனக்கு. போற போக்கை பாத்தா என்னை நீ யாருன்னு கேட்ப போலிருக்கு. இன்னைக்கு நம்ம பதினாறாவது திருமண நாளுடா டைரக்டர் பய்யா!

    குற்ற உணர்ச்சி ததும்ப சிரித்தான் கல்யாண். அட ஆமாம். திருமணநாள் வாழ்த்துக்கள் மரகதமணி. நம்ம திருமண வாழ்க்கைல ஒவ்வொரு நாளிரவும் நமக்கு முதலிரவு போலத்தானே கண்ணே? வி டிட் நாட் மிஸ் எனி திங் இன் அவர் மேரிட் லைப்!

    திருமணநாள் பரிசா என்ன தரப் போற கல்யாண்?

    உனது கன்னங்களும் உனது உதடுகளும் வீங்க திகட்டத்திகட்ட முத்தம் தரட்டுமா?

    "நாட் எ பேட் ஐடியா. ஆனா ஆல்ஹகால் வாயோட நீ முத்தம் குடுத்தா எனக்கு குமட்டுமே? எழுந்து பல் துலக்கி குளித்து நான் எடுத்து வைத்திருக்கும் புத்தாடைகளை அணிந்து வா. முத்தங்களை மொத்தமாக பெற்றுக்கொள்கிறேன்!

    நம்முடைய திருமண வாழ்க்கையை பத்தி என்ன நினைக்ற?

    சுகமான சுமை. எழுபது சதவீதம் மகிழ்ச்சி. முப்பது சதவீதம் பிரச்சனைகள். நீ குடிக்காம மட்டும் இருந்தா குடும்பத்தோட மகிழ்ச்சி நூறு சதவீதமாகிவிடும் கல்யாண்.

    நான் நல்ல கணவனா, கெட்ட கணவனா?

    "கெட்ட கணவனாக முயற்சிக்கும் நல்லகணவன்!

    உண்மைதான் மணி. சினிமால நுழையும் போதும் சரி- உன்னை கல்யாணம் பண்ணின போதும் சரி நான் நல்லவனாத்தான் இருந்தேன். சினிமால ஜெயிக்க கொஞ்சம் கொஞ்சமா என் மனசாட்சியை கைகழுவி விட்டேன் மணி. உன்கிட்ட செக்ஸ் திகட்ட திகட்ட கிடைக்குது. திகட்டதிகட்ட கிடைச்சபிறகும் மனசு நிம்மதியடையல. புதுசுபுதுசா பெண்களை பாக்க மனம் ஏங்குது. சமுகத்ல எனக்கு இருக்கிற மரியாதையை இழந்திடக்கூடாதுன்னு உணர்ச்சிகளை கட்டுபடுத்தி நடிக்றேன். சினிமா சான்ஸ் கேட்டு வர்ற பெண்கள் கிட்ட படுக்க மனம் துடிக்குது. அப்றம் அவள்களை கம்பீரமா குரு ஸ்தானத்ல நின்று டைரக்ட் பண்ணமுடியாதேன்னு நினைச்சு அவங்ககிட்ட பாராமுகம் காட்றேன். கண்களை அகலம் குறைத்து சிரித்தாள்.

    மனசில் இருக்றதையெல்லாம் மனைவிக்கிட்டே கொட்டிராதே கல்யாண். கொஞ்சம் அந்தரங்கங்களை மனவங்கியில் பதுக்கிவை. கொஞ்சம் அந்தரங்கங்களை தணிக்கை பண்ணிச்சொல்.

    முயற்சி பண்ணுகிறன் மணி!

    இப்ப போய் குளி!

    குளித்து திரும்பினான். பீட்டர் இங்கிலாந்து ரெடிமேட் சட்டையும் பச்சைநிற கார்ட்ராய்ட் பேன்ட்டும் எடுத்து நீட்டினாள் மரகதமணி.

    மணி! மங்களகரமான நாள்ல அமங்களகரமா கேக்றேன்னு தப்பா நினைச்சிக்காதே, திடீர்னு நான் செத்துப் போய்ட்டா என்ன பண்ணுவ?

    முறைத்தாள். கல்யாண்! எனக்கு மெனோபாஸ் பீரியடு வர நாலஞ்சு வருசம்தான் இருக்கு. செக்ஸ் இல்லாம பல்லைக் கடிச்சிக்கிட்டு இருந்திடுவேன். மக படிப்பு மக வேலை- மக கல்யாணம்னு வாழ்க்கையை ஓட்டிர்ருவேன். என்னை கேக்றியே நீ, நான் திடீர்னு செத்துட்டா நீ என்ன பண்ணுவ?

    என்ன கேட்க வர்ற?

    நான் செத்துட்டா மறுகல்யாணம் பண்ணிப்பாயா கல்யாண்?

    நோநோ. படங்கள் டைரக்ட் பண்ணாம இன்னும் அதிகமா குடிச்சிட்டு ஒழுங்கீனமா தாடி வளர்த்துக்கிட்டு பாண்டி பஜார் பக்கம் பைத்யமா திரிவேன் மணி. நீ சொல்ற மாதிரி ஒரு நிலையை கடவுள் எனது கனவிலும் குடுத்திரக்கூடாது மணி. இன் பிராக்டிகல் மேல்தட்டு ஆண்களுக்கு மென்டல் ஸ்ட்ரஸ் அதிகம். வெளிய தெருவ சுத்துற எங்களுக்கு ஆபத்துகள் அதிகம். எங்களது சிகரட் பழக்கமும் குடிப்பழக்கமும் எங்களின் ஆயுளை வெகுவாய் குறைத்து விடுகின்றன. நீ திடீர்னு செத்துப்போக சான்ஸே இல்லை. உங்க பரம்பரைல எந்த பெண் எண்பது வயசுக்கு குறைஞ்சு செத்திருக்காங்க சொல்லு மணி

    சிரித்தனர்.

    இரு பல்வர்ண காதல்பறவைகள் கீச்கீச்சும் கூண்டுடன் உள்ளே நுழைந்தாள் வாடாமலர்.

    மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே மை டியர் பேரன்ட்ஸ்!

    தந்தையின் நெற்றியிலும் தாயின் கன்னத்திலும் முத்தமிட்டாள் வாடாமலர். அம்மாவை பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு டாடி!

    ஏன்?

    Enjoying the preview?
    Page 1 of 1