Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1
Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1
Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1
Ebook179 pages47 minutes

Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மலர்மதியின் ஒருபக்கக் கதைகள் 100 – பாகம்-1’ என்ற இந்த தொகுப்பு நூலில் இடம் பெற்ற 100 கதைகளும் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகி எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பு பெற்றவை. எவ்வாறு, ‘புலவருக்கும் வெண்பா புலி'யோ, அவ்வாறே, ஒருபக்கக் கதை என்பது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். ஆழமான கருத்தையும் சுருங்கச் சொல்லி ஒரே பக்கத்தில் அடக்கும் திறமை வேண்டும். அதைத்தான் இக்கதைகளில் செய்ய முயற்சித்திருக்கிறேன். வெற்றி பெற்றேனா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580175010656
Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1

Read more from Malarmathi

Related to Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1

Related ebooks

Reviews for Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1 - Malarmathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலர்மதியின் ஒருபக்க கதைகள் 100 - பாகம் 1

    Malarmathiyin Orupakka Kathaigal 100 - Part 1

    Author:

    மலர்மதி

    Malarmathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/malarmathi

    பொருளடக்கம்

    அனுமதி!

    ஒலி

    ஃபீஸ்

    ஓடிப்போனவர்கள்!

    கடன்

    கணக்கு

    முடி

    தரகர் கமிஷன்

    காரணம்

    நோக்கம்

    அவர்கள்

    மரியாதை

    அனுபவம்

    பத்தாயிரம்வாலா

    சமயோசிதம்

    தோற்றம்

    அடிமை

    பிச்சை

    அத்தை மகள்

    குத்து

    மழை

    இல்லை

    கொடுப்பினை

    நம்பிக்கை

    ரிசல்ட்

    செல்வத்துள் செல்வம்

    சீவு!

    பொய்

    சமாளிப்பு

    விலை

    அது

    தேர்வு

    பரிசு

    வெட்டு

    பணக்காரத் திமிர்

    சோதனை

    விஷம்

    நேர்மை

    ரிலீஸ்

    வரன்

    அவன்

    கடைசி ஆசை

    ஆதாரம்

    மாற்றம்

    கல்யாணம்

    மறந்துவிடு

    சுத்தம்

    பயம்

    அன்பளிப்பு

    பாராட்டு

    உண்மை

    ஆளுக்கொரு சுவை

    காணிக்கை

    பச்சைப் பொய்

    கடத்தல்

    வழிகாட்டி

    புறக்கணிப்பு

    மாற்றம்

    டான்ஸ்...டான்ஸ்...

    போனஸ்

    நேர்முகத் தேர்வு

    யதார்த்தம்

    கவர்ச்சி

    உண்மையான சுதந்திரம்

    அலட்சியம்

    பார்வை

    வெற்றி!

    சுளுக்கு காலில் அல்ல

    எத்தன்

    செலெக்ட்

    வரவு

    உபதேசம்

    பொன் விளையும் பூமி

    பண்ணை வீட்டில்...

    நம்பிக்கை

    இரண்டு

    எந்த பெண்?

    இரவல்

    தாயின் அறிவுரை

    வாக்கு

    ஓசி

    அவள் யாரோ?

    செல்ஃபி

    ராசி

    சுளீர்...!

    குறை

    சந்தோஷம்

    பேய் பங்களா

    தெருநாய்

    பாக்கி

    முதல் நாள்

    தண்டனை

    பேரம்

    சுமை

    வேஷம்

    யோசனை

    கிளி ஜோசியம்

    விருது

    பீதி

    முடிவு

    அனுமதி!

    அம்மாவைப் பார்க்கணும் என்று அமுதா சொன்னாலே எரிந்துவிழுவான் நவனீதகிருஷ்ணன்.

    பொறந்ததிலிருந்து நீ அம்மாகூடவே இருந்திருக்கே. இப்ப உன்னை என் தலையில கட்டிக் கொடுத்தாச்சு இல்லையா? அதென்ன, ‘அம்மாவைப் பார்க்கணும், அம்மாவைப் பார்க்கணும்னு ஒரே தொல்லை? முடியாது. பேசாம வேலையைப் பாரு. என்று கறாராகச் சொல்லிவிடுவான் நவனீதகிருஷ்ணன்.

    அவனிடமிருந்து தாய் வீட்டுக்குப் போக அனுமதி பெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அமுதாவும் பல விதத்தில் முயற்ச்சி செய்து பார்த்துவிட்டாள். முடியவில்லை.

    பெற்றத் தாயைப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

    அதே நேரத்தில் கணவனின் சொல்லை மீறி போகவும் முடியாதே.

    வேறு வழியில்லை. ஆசைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு வேலைகளில் மூழ்கினாள் அமுதா.

    அம்மாவுக்குக் காய்ச்சல் என்று தகவல் வந்தது.

    துடித்துப் போனாள்.

    கணவனிடம் தெரிவித்தாள்.

    நவனீதகிருஷ்ணன் யோசித்தான்.

    காரணம் வலுவாக உள்ளது. இப்ப அனுப்பவில்லையென்றால் குற்றமாகி விடும்.

    சரி, போய் உன் அம்மாவைப் பார்த்துவிட்டு வா. ஆனா, ரெண்டே நாள்தான். போனோமா, பார்த்தோமா, வந்தோமான்னு இருக்கணும். சரியா?

    தலையாட்டினாள்.

    பேருந்து நிலையத்திற்க்குச் சென்று அவளை வழியனுப்பிவிட்டு வந்தான்.

    இரண்டு நாட்கள் ஓடிவிட்டன.

    மூன்றாவது நாள்.

    அந்த அறிவிப்பு வந்தது.

    ‘கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் கால வரையற்ற ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. ரெயில்கள், பேருந்துகள் இனி ஒரு மாதத்துக்கு ஓடாது!’

    தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் நவனீதகிருஷ்ணன்.

    ஒலி

    பீம்... பீம், பீம், பீம்...

    எதிர் வீட்டு வாசலில் நின்றிருந்த பைக்கிலிருந்து கிளம்பிய ஹார்ன் ஒலி ஆறுமுகத்தை எரிச்சலடையச் செய்தது.

    சை, சனியன்... கொஞ்சமாவது அறிவிருக்கா பார்? குழந்தைக் குத்தான் ஒண்ணும் தெரியாது. பெத்தவனுக்காவது புத்தி வேணாம்? விளையாட்டு காட்டணும்னா, வேறு ஏதாவது வாங்கிக் கொடுத்துத் தொலைப்பது. இப்படி தினமும் ஒலியெழுப்பி எங்க உயிரை எடுக்க ணுமா? என முணுமுணுத்தான்.

    இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு மீண்டும் காம்பௌண்டில் வந்து நின்றான் ஆறுமுகம்.

    எதிர்வீட்டுக்காரர் வெளிப்பட்டார்.

    ‘இவரிடம் சொல்லிவிடவேண்டியதுதான். பையனை கொஞ்சம் அடக்கி வைக்கட்டும்.’

    தீர்மானித்தவனாய் தெருவில் இறங்கினான் ஆறுமுகம்.

    இவன் வாயைத் திறப்பதற்குள் அவரே அழைத்தார்:

    மிஸ்டர் ஆறுமுகம்... இப்படி கொஞ்சம் வர்றீங்களா...?

    என்ன சார்...?

    சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. மத்தியான நேரத்துல சாப்பிட்ட பிறகு நான் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கறது வழக்கம். அந்த நேரத்துல உங்க பையன் தெருப்பசங்களைக் கூட்டிக்கிட்டு கிரிக்கெட் விளையாடறான். அமைதியா விளையாடினா பரவாயில்லை. ஒரே இரைச்சல். காட்டுக் கத்தல். தாங்கமுடியலை. ஏதாவது மைதானத்துக் குப்போய் விளையாடச்சொல்லுங்க. இப்படி தெருவே அதிர்ந்துபோறாப்ல சத்தம் போட்டா எப்படி...?

    ஆடிப்போனான் ஆறுமுகம்.

    ஃபீஸ்

    டாக்டர் சீதாராம் க்ளினிக்.

    ஒவ்வொரு பேஷண்ட்டாக உள்ளே அழைத்துக்கொண்டிருந்தாள் நர்ஸ் நளினா.

    தொழிலதிபர் ஒருவர் கழுத்தில் தங்கச் செயின் மின்ன டாக்டர் முன் அமர்ந்தார்.

    அவரைப் பரிசோதித்த டாக்டர் சீதாராம் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.

    ஃபீஸ் எவ்வளவு சார்? என்று தொழிலதிபர் கேட்க, இரு நூறு. என்றார் டாக்டர்.

    அவர் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

    புதிதாய் வேலைக்குச் சேர்ந்த நர்ஸ் நளினாவுக்கு ஒரே குழப்பம்.

    ‘இந்த ஏரியாவிலே எந்த டாக்டரும் நூறு ரூபாய்க்கு மேல் ஃபீஸ் வாங்குவதில்லை. அப்படி இருக்க, இவர் மட்டும் ஏன் இப்படி கொள்ளை அடிக்கிறார்?’

    அவளுடைய கேள்விக்கு வெகு சீக்கிரமே பதில் கிடைத்தது.

    அடுத்து வந்த நடுத்தர ஆசாமியிடம் நூறு ரூபாயும், அவரைவிட வசதி குறைவான நோயாளியிடம் ஐம்பது ரூபாயும் வாங்கியவர், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவருக்கு இலவச சிகிச்சையும் அளித்து அனுப்பியபோது டாக்டர் சீதாராம் மீது இருந்த கடுப்பு குறைந்து மதிப்பும், மரியாதையும் பிறந்தது நர்ஸ் நளினாவுக்கு.

    ஓடிப்போனவர்கள்!

    விடியற் காலை 3 மணி.

    ஊரே உறங்கிக் கிடந்தது.

    வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருக்க, மெல்ல எழுந்தாள் மௌனிகா.

    ஓசை படாமல், பூனையாய்ப் பதுங்கி, அடி மேல் அடி வைத்து நடந்தாள்.

    ஜாக்கிரதையாய் வாசல் கதவைத் திறந்து வெளியேறினாள்.

    தெருவில் இறங்கி வேக நடைப் போட்டாள்.

    அவளுக்காக தெரு முனை விளக்குக் கம்பத்தின் அடியில் நின்று காத்திருந்தான் ஷிவா.

    மௌனிகாவைக் கண்டதும், ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டான்.

    "எல்லோரும் தூங்கணுமில்ல? சரியான நேரத்துக்காகக் காத்திருந்தேன்.

    சரி, சீக்கிரம் வா, நேரமாகுது என்று பைக்கை உசுப்பினான்.

    சொல்லிவைத்தாற்போல் சென்னைக்குப் புறப்படும் முதல் பேருந்து புறப்படத் தயாராக நின்றிருந்தது.

    பைக்கை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தை நோக்கி நடந்தான் ஷிவா.

    மௌனிகாவும் அவனைப் பின் தொடர்ந்து வேக நடை போட்டாள்.

    பேருந்துக்கு அருகில் கொட்ட, கொட்ட முழித்துக்கொண்டிருந்த அந்த இளம் காதல் ஜோடியை நெருங்கியவர்கள், அவர்களுக்குத் தேவையான பணத்தை செலவுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களை பஸ் ஏற்றிவிட்டு இறங்கி நிம்மதியுடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர் ஷிவாவும், மௌனிகாவும்.

    கடன்

    கௌதமுக்கு அவசரமாகப் பத்தாயிரம் ரூபாய் தேவைப் பட்டது. வங்கியில் இருப்பு இல்லை. கைவசமும் பணமில்லை.

    என்ன செய்வது? யாரிடம் கேட்பது?

    யோசனையில் ஆழ்ந்தவன் மூளையில் ‘சடா’ரென நுழைந்தான் நாகராஜன். அட, அவன்தான் இப்போதைக்குச் சரியான ஆள். அவனிடம்தான் கேட்க வேண்டும். அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான்.

    கதவைத் திறந்த நாகராஜன், அடடா... வா, கௌதம். என வரவேற் றான்.

    அவசரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1