Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanga Verum Manusanga Mattum Thaan
Naanga Verum Manusanga Mattum Thaan
Naanga Verum Manusanga Mattum Thaan
Ebook187 pages1 hour

Naanga Verum Manusanga Mattum Thaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் காய்-கறி, பழவகைகள் வாங்கும்போது ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை 360 டிகிரி திருப்பி அது நல்லதுதானா என்று பார்த்து வாங்குகிறோம். அதே போன்று என்னுடைய 525 சிறுகதைகளிலிருந்து சிறந்த சிறுகதைகளாக நான் கருதிய கதைகளில் 20 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கி தங்கள் கரங்களில் சமர்ப்பித்துள்ளேன். படித்து இன்புறுவதோடு மட்டுமின்றி தங்கள் மேலான கருத்துக்களையும் தெரிவித்தால் மகிழ்வேன்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580175011095
Naanga Verum Manusanga Mattum Thaan

Read more from Malarmathi

Related to Naanga Verum Manusanga Mattum Thaan

Related ebooks

Reviews for Naanga Verum Manusanga Mattum Thaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanga Verum Manusanga Mattum Thaan - Malarmathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாங்க வெறும் மனுசங்க மட்டும்தான்

    Naanga Verum Manusanga Mattum Thaan

    Author:

    மலர்மதி

    Malarmathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/malarmathi

    பொருளடக்கம்

    இயலாமையும் பேராசையும்

    கிராமத்து மாப்பிள்ளை

    தரகர் மகள்

    முள்!

    ஆட்குறைப்பு

    நிஜம்

    தாய்ப்பால்

    விளையும் பயிர்

    கல்யாணச் சந்தை

    நாங்க வெறும் மனுசங்க மட்டும்தான்

    கூடு

    உபதேசம்

    முற்பகல்

    ஜெயித்தது யார்?

    தவறான தண்டனை

    உயிர் என்பது...

    பேருந்தில் வந்த பேரழகி

    மோப்பம்

    வெறுப்பு

    மகனாக வந்தவன்

    இயலாமையும் பேராசையும்

    மொத்தம் பத்து பேர் வந்திருந்தனர்.

    முருகானந்தம் வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று ஹாலில் அமரச்செய்தார்.

    கோரப்பாய்களைப் போட்டு அதற்குமேல் பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கிய ஜமுக்காளத்தை அழகாய் விரித்து ஹாலை துப்புரவாய் வைத்திருந்தார்.

    அவர்கள் ‘ப’ வடிவத்தில் அமர்ந்ததும் முருகானந்தத்திடம் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. உள்ளறைக்குத் தாவினார்.

    ஜானு... அவங்க வந்துட்டாங்க பாரு. எல்லாம் ரெடியா? தாராவைத் தயார்படுத்திட்டியா? என பரபரத்தார்.

    இதோ ஆச்சுங்கோ. பஜ்ஜி மட்டும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. நீங்க பேச்சை ஆரம்பிங்கோ. அதுக்குள்ளே முடிச்சிடறேன். என்றாள் ஜானகி.

    சீக்கிரம் ஆகட்டும். என்றவாறு மீண்டும் ஹாலுக்கு வந்தார்.

    பயணத்தில் சிரமம் ஒண்ணுமில்லையே? – கேட்டுக்கொண்டே பையனின் தந்தை பாலகிருஷ்ணனின் அருகில் அமர்ந்தார் முருகானந்தம்

    பக்கத்து ஊருதானே? என்ன சிரமம்? என்றார் பாலகிருஷ்ணன்.

    ஒரு பத்து நிமிடம் பொதுவாகப் பேசினர்.

    சரி... பெண்ணை வரச்சொல்லுங்க. நேரமாகுது. என பையனின் தாய் பிருந்தா அவசரப்படுத்த முருகானந்தம் எழுந்துச்சென்று ஜானகியிடம் தெரிவிக்க, காப்பித்தட்டோடு வந்தாள் தாரா.

    அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் நிர்மல்.

    பொண்ணை நல்லாப் பார்த்துக்கடா. என்று அவன் காதில் கிசுகிசுத்தார்.

    சுடச்சுட பஜ்ஜியும் பரிமாறப்பட்டது.

    சாப்பிட்டு முடித்ததும் பேச ஆரம்பித்தார் பாலகிருஷ்ணன்.

    இதோ பாருங்கோ... எங்க பையன் பி.இ. படிச்சு ஈ.பி.ல இஞ்சீனியரா இருக்கான். அரசு உத்தியோகம். கைநிறைய சம்பளம். உங்கப் பொண்ணும் கம்ப்யூட்டர் சைன்ஸ்ல டிகிரி வாங்கியிருக்கா. நாங்க மறுக்கலை. ‘வேலைக்குப் போகாத பொண்ணுதான் வேணும்னு எங்க பையன் ஒத்தைக்கால்ல நின்னதால்தான் உங்கப் பொண்ணைப் பார்க்க வந்திருக்கோம்.

    ஏதோ என்னால் முடிஞ்ச அளவுக்குப் பொண்ணைப் படிக்கவெச்சுட்டேன். அவளை வேலைக்கு அனுப்புவதோ அனுப்பாததோ உங்க விருப்பம். என்றார் முருகானந்தம் பவ்யமாய்.

    நிர்மல் காதில் ஏதோ ரகசியம் பேசிய பிறகு நிமிர்ந்து உட்கார்ந்தார் பாலகிருஷ்ணன்.

    தொண்டையைச் செருமிக்கொண்டே கேட்டார்:

    பையனுக்கு உங்கப் பொண்ணைப் பிடிச்சிருக்காம். அப்ப மேற்கொண்டு பேசலாமா?

    ஓ... தாராளமா. என்றார் முருகானந்தம்.

    அம்பது பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், ஒரு ஸ்கூட்டர் கொடுத்திடுங்கோ. அதுபோக, சீர்வரிசைக்கான பட்டியல் தனியா வரும். அதுல எந்தக் குறையும் வராமப் பார்த்துக்கணும்.

    ‘பகீர்’ என்றது முருகானந்தத்துக்கு.

    அவர் மவுனமாய் அமர்ந்திருப்பதைக் கண்ட பாலகிருஷ்ணன், என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க? என உலுக்கினார்.

    அது வந்துங்க... நீங்க கேக்கற அளவுக்கெல்லாம் எங்களால செய்யமுடியாதுங்களே... என இழுத்தார்.

    "அப்ப உங்களால எவ்வளவு முடியும்கறதைச் சொல்லுங்கோ?

    இருபத்தஞ்சு பவுன் நகை, அம்பது ஆயிரம் ரொக்கம், சீர்வரிசை செய்யறோம். ஸ்கூட்டரெல்லாம் தரமுடியாது. - சிரமத்துடன் சொல்லி முடித்தார் முருகானந்தம்.

    இப்போது தரகர் காதைக் கடித்தார் பாலகிருஷ்ணன்.

    யோவ்... என்னய்யா இது? நாங்க கேக்கறதை எல்லாம் செய்வாங்கன்னுச் சொல்லித்தானே எங்களைக் கூட்டிண்டு வந்தே? இவங்க என்னடான்னா முடியாதுன்னு சொல்றாங்க?

    அவசரப்படாதீங்க. சித்தப் பொறுங்கோ. நான் பேசிப் பாக்கறேன். என்று சொன்ன தரகர் எழுந்து முருகானந்தனைத் தனியாகத் தள்ளிக்கொண்டுப் போனார்.

    பின் கட்டிற்குப்போனவர், இதோ பாருங்கோ. இப்படிப்பட்ட வரன் அமைய நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். கொஞ்சத்துல கைநழுவிப்போயிடக் கூடாது. உங்கப் பொண்ணோட வாழ்க்கை ஓஹோன்னு இருக்கவேணாமா? எப்பாடு பட்டாவது நீங்க இதுக்கு ஒப்புக்கிட்டா பிற்காலத்துல நீங்க நிம்மதியா இருக்கலாம். சரின்னு சொல்லிடுங்கோ. என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார் தரகர்.

    முருகானந்தம் யோசித்தார்.

    என்ன யோசனை? ஓ.கே.ன்னு சொல்லிடுங்கோ.

    எதுக்கும் என் வீட்டுக்காரிகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுடறேனே...

    சீக்கிரமா கேட்டுண்டு வாங்கோ. அதுவரை நான் அவங்களைச் சமாளிக்கறேன். என்றுவிட்டு தரகர் ஹாலுக்குப் போய்விட, பரிதாபமாக உள்ளறைக்குள் நுழைந்தார் முருகானந்தம்.

    ஜானூ...

    தரகர் சொன்னதைக் கேட்டுண்டுத்தான் இருந்தேன். அவ்வள வெல்லாம் நம்மால முடியுமாங்கோ? இந்த வரன் வேணாங்கோ. நம்ம சக்திக்கு ஏத்தாப்ல வேறு இடம் பார்க்கலாமுங்கோ.

    ஜானகி சொல்வதில் நியாயம் இருந்தது.

    ஆனால், வீடு தேடி வந்த இவ்வளவு நல்ல வரனை சடுதியில் நிராகரிக்க மனம் வரவில்லை முருகானந்தத்துக்கு.

    ஜானு... அவங்க கேக்கற அளவுக்கு இல்லைன்னாலும் இன்னும் கொஞ்சம் கொறைச்சுப் பார்ப்போமே...

    தரகர் போட்ட தூபத்தில் முருகானந்தம் மயங்கிப்போயிருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

    எப்படிங்க முடியும்? நீங்க சொன்னதே அதிகம். அதைச் செய்யவே நம்மால முடியுமாங்கறது சந்தேகம். இந்த நிலைமைல இன்னும் அதிகமா உங்களால எப்படித் தரமுடியும் சொல்லுங்கோ?

    எப்பாடுப் பட்டாவது இந்த வரனை பேசி முடிச்சிடலாமுன்னு முடிவு செஞ்சிட்டேன். நீ கவலைப்படாதே ஜானு. என்றுவிட்டு அவளுடைய பதிலுக் கும் காத்திராமல் ஹாலுக்குள் பிரவேசித்தார் முருகானந்தம்.

    அதற்குள் பாலகிருஷ்ணனை வேறு சில வார்த்தைகளால் மயக்கி வைத்திருந்தார் தரகர்.

    மீண்டும் அவரெதிரில் அமர்ந்தார் முருகானந்தம்.

    சொல்லுங்கோ, என்ன முடிவு எடுத்திருக்கீங்கோ?

    நீங்க கேட்டதும் வேணாம். நான் சொன்னதும் வேணாம். முப்பது பவுன் நகை போட்டுடறேன். எழுபத்தையாயிரம் ரொக்கமா கொடுத்திடறேன். என்றார் முருகானந்தம்.

    ‘சடா’ரென தரகரை அழைத்துக்கொண்டு வெளியேறினார் பாலகிருஷ்ணன்.

    ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

    சரி. ஏதோ தரகர் இவ்வளவுத் தூரத்துக்குச் சொல்றதனால ஒப்புக்கறேன். இப்போதைக்கு நாங்க கிளம்பறோம். கூடியசீக்கிரத்துல ஒரு நல்ல நாளாப் பார்த்து தட்டை மாத்திக்கலாம். என்றவாறு பாலகிருஷ்ணன் எழுந்துக் கொள்ள, அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் வெளியேறினர்.

    அவர்கள் போனதும் கணவனைப் பிடித்து உலுக்கினாள் ஜானகி.

    நீங்க பாட்டுக்கு சொல்லிட்டீங்க. எப்படி சமாளிக்கப்போறீங்கோ?

    ஜானு... என்னோட பி.எஃப்., கிராஜுவிட்டி பணம் எல்லாம் அப்படியே பேங்க்ல பத்திரமா இருக்கு. அதோடு இந்த வீட்டில பாதிய வித்துடலாமுன்னு தீர்மானிச்சுட்டேன்.

    ‘திக்’கென அதிர்ந்தாள் ஜானகி.

    நீங்க என்ன சொல்றீங்கோ? வீட்டை விக்கப்போறீங்களா?

    பதறாதே ஜானு. முழு வீட்டையுமா விக்கப்போறேன்? பின்கட்டில பாதி கிரவுண்டு சும்மாத்தானே கிடக்கு? இப்ப இருக்கிற விலைவாசில எக்கச்சக்கமா விலை போகும். அதை வித்தா தாராவோட கல்யாணத்த ‘ஜாம், ஜாம்’னு நடத்தலாமே.

    ஜானகிக்கு என்னவோ வீட்டைத் துண்டுபோட மனமே இல்லை. இருந்தாலும் மகளோட வாழ்க்கை நல்லவிதமா அமையணுமே என்கிற ஒரே காரணத்துக்காகச் சம்மதித்தாள்.

    ***

    இரண்டு வாரங்கள் ஓடிய நிலையில் வேறு ஓரிடம் நிர்மலைத் தேடி வந்தது.

    இந்தப் பார்ட்டி மிகவும் பசையுள்ளதாய் இருந்தது.

    பாலகிருஷ்ணன் கேட்டதைவிட அதிகமாகவே செய்ய அவர்கள் தயாராக இருந்தனர்.

    ஆகா... இப்படியல்லவா இருக்கணும் இடம்? இவங்க ஏன் கொஞ்சம் முன்கூட்டி வந்திருக்கக்கூடாது? என ஆதங்கப்பட்டார் பாலகிருஷ்னன்.

    இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலை. நாமத்தான் இன்னமும் தட்டை மாத்திக்கலையே. பேசாம நாம பார்த்திருக்கிற பெண்ணை நிராகரிச்சுட்டு இப்ப வந்திருக்கிற இந்த இடத்தைப் பேசி முடிச்சிடலாமுங்கோ. என்றாள் பிருந்தா.

    எனக்கும் அதுதான் தோணுது. ஆனா... அவங்க என்ன நினைப்பாங்க? என தயங்கினார் பாலகிருஷ்ணன்.

    அவங்க என்ன வேணுமானாலும் நினைச்சுண்டுப்போகட்டும். நம்மப் புள்ளையோட வருங்காலம்தானே நமக்கு முக்கியம்?

    அது சரி பிருந்தா. இவ்வளவு தூரத்துக்குப் பேசி முடிச்சிட்ட பிறகு இப்ப வேண்டாம்னு சொன்னா தரகர்கூட எகிறுவாரே?

    அட, என்னங்க நீங்க? ஒரு ஆயிரம், ரெண்டாயிரம்னு தூக்கிப் போட்டா வாங்கிட்டு விலகிடப்போறார் தரகர். அதுக்குப் போய் இப்படிப் பயந்துக் கிட்டிருந்தா எப்படி?

    சரி.

    அப்ப மொதல் காரியமா இப்பவே போய் அந்தப் பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு வந்திடுங்கோ.

    ***

    அழைப்பு மணி அடித்துவிட்டுக் காத்திருந்தார் பாலகிருஷ்ணன்.

    கதவைத் திறந்த முருகானந்தம், அடடா... வாங்கோ, வாங்கோ... என்றவாறு கதவை அகலத் திறந்து வரவேற்றார்.

    உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்தார்.

    அதற்குள் காபி போட அடுக்களைக்குள் நுழைந்தாள் ஜானகி.

    எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்கிற யோசனையில் ஆழ்ந்திருந்தார் பாலகிருஷ்ணன்.

    சொல்லுங்கோ... என்று அவரை சுயநினைவுக்குக் கொண்டு வந்தார் முருகானந்தம்.

    வந்து... அதை எப்படி சொல்றதுன்னு தெரியல...

    அட, சும்மா சொல்லுங்க...

    அதாவது நாங்க எத்தனையோ பொண்ணுங்களைப் பார்க்கிறோம். அதே மாதிரி நீங்க எத்தனையோ வரன்களைத் தேடறீங்க. எது, எப்ப, எங்கே பொருந்தும்கறது அவன் கையில்தான் உள்ளது. என்று இருகரம் உயர்த்தி வானத்தைக் காட்டினார் பாலகிருஷ்ணன்.

    ரொம்ப சரியாச் சொன்னீங்கோ.

    இப்பப் பாருங்கோ, உங்கப் பொண்ணைப் பார்த்துண்டுப் போனோம். ஆனா, வேறு ஓரிடத்திலிருந்து என் பையனுக்குப் பொண்ணு கொடுக்க ஒத்தைக்கால்ல நிக்கறாங்க.

    சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தார் பாலகிருஷ்ணன்.

    ஆனால், என்ன ஆச்சரியம்? முருகானந்தத்தின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    அவர் கோபப்படுவார், கத்துவார் என்றெல்லாம் எதிர்பார்த்து வந்தவருக்கு ஏமாற்றம்.

    ஆவி பறக்கும் காபியோடு வந்தாள் ஜானகி.

    எவ்வித சலனமுமின்றி, காபி எடுத்துக்குங்கோ... என்றார் முருகானந்தம்.

    ஒரே குழப்பமாக இருந்தது பாலகிருஷ்ணனுக்கு.

    என்னங்க, நான் சொன்னது உங்களுக்கு அதிர்ச்சியா இல்லையா?

    மொதல்ல காபியை குடிங்க. மத்ததை நிதானமா பேசிக்கலாம்.

    காபியைக் குடித்துவிட்டுக் காலி டபராவை ஸ்டூல் மீது வைத்த பாலகிருஷ்ணன் மேல்துண்டால் வாய்த் துடைத்துக்கொண்டார்.

    நீங்க சொன்னீங்களே எல்லாம் ஆண்டவன் கையில் இருக் குன்னு, அது நூத்துக்கு நூறு உண்மைங்கோ.

    என்ன சொல்றீங்கோ...?

    "நான்கூட அதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தயங்கிண்டி ருந்தேன். நீங்களே வந்து சொன்னப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கறது

    Enjoying the preview?
    Page 1 of 1