Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavil Kanavugal
Vanavil Kanavugal
Vanavil Kanavugal
Ebook179 pages1 hour

Vanavil Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நாங்க எதுக்கு குரலை அடக்கிப் பேசணும்? நாங்க பையனைப் பெத்தவங்க. பொண்ணைப் பெத்த உங்களுக்கே இவ்வளவு இருக்கும்போது, எங்களுக்கு அதைவிட அதிகமா இருக்கத்தான் செய்யும்.”

“எத்தனை முறை மானம், மரியாதையை விட்டுட்டு பொண்டாட்டியை வா.. வா.. ன்னு கூப்பிடுவான். இப்ப இவ அங்கே வாழப் போறாளா.. அல்லது நாங்க எங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கவா?”

“செய்துதான் பாருங்களேன். இவளா ஒண்ணும் பொட்டியைத் தூக்கிட்டு வரலியே! உங்க வீட்டை மீட்க, எங்ககிட்ட பணம் பிடுங்கச் சொல்லி அனுப்புனது யாரு?”

பாகீரதிக்குச் சரியாக, யமுனாவின் குரலும் திமிராகவே வந்தது. ஆதர்ஷ் வீட்டார் அயர்ந்து பார்த்தனர்.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580134510597
Vanavil Kanavugal

Read more from Hansika Suga

Related authors

Related to Vanavil Kanavugal

Related ebooks

Reviews for Vanavil Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavil Kanavugal - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானவில் கனவுகள்

    Vanavil Kanavugal

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    ஜாதகப் பொருத்தம் அமோகம்! ஜோடிப் பொருத்தம் அதைவிட அமோகம்! எல்லாமே ஒத்து வருது. இன்னும் எதுக்கு யோசனை? என்றார் யமுனா.

    சிந்தனையுடன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார் பாக்கியராஜ். அவருக்கும் இந்த வரனை முடிப்பது சரியென்றே பட்டது.

    இதுவரை பார்த்த சம்மந்தம் அத்தனையும் ஏதாவது ஒரு வகையில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தது.

    மணமகனுக்குப் படிப்பு இருந்தால் பணம் இல்லை... இரண்டும் இருந்தால் பர்சனாலிட்டி இல்லை... பேக்ரவுண்ட் சரியில்லை... பெரிய குடும்பம்... என்று ஏதாவது ஒரு குறை.

    தன் இளைய மகளுக்காக வரன் ஜாதகங்களைச் சலித்துப் பார்த்து பாக்கிய ராஜூக்கும் அலுத்துவிட்டது.

    மூத்தவள் அலமேலுவுக்கு திருமணம் செய்தபோது இப்படியெல்லாம் இல்லை.

    அவர் கைகாட்டிய இடத்தில் திருமணம் செய்துகொண்டு அவள் அமைதியாக வாழ்கிறாள்.

    இளையவள் ஸ்ரீ செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சம் இல்லை.

    ஏதோ ஆன்லைனில் பொருள் வாங்க பில்டர்ஸ் போட்டு தேடுவது போல, வரன் ஜாதகத்திலும் ஏகப்பட்ட பில்டர்ஸ்.

    அவளுடன் சேர்ந்து யமுனா ஆடும் ஆட்டமும் தனி.

    இப்ப என்ன? மூத்தவ அமைதியான சுபாவம். அவளால எப்படிப்பட்ட குடும்பத்திலும் அட்ஜஸ்ட் செய்து போகமுடியும். இளையவள், அதற்கு நேரமாறாச்சே! ஸ்ரீயோட மனசு மெச்சும்படி மாப்பிள்ளை பார்த்துடுவோம். நாளைக்கு அது சொத்தை... இது நொள்ளை’ன்னு கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கக்கூடாது. என்று இளையவளுக்கு ஒத்து ஊதுவார் யமுனா.

    க்கும்! இவளால அந்த மாப்பிள்ளை கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்காமல் இருந்தால் சரி. என்று பெருமூச்செறிவார் பாக்கியராஜ்.

    ஸ்ரீக்கு ஏற்ற அப்பாவி மாப்பிள்ளையாக வந்து மாட்டினான் ஆதர்ஷ் நம்பீசன்.

    பெண் பார்க்க வந்தபோதே, அவன் ஸ்ரீயிடம் விழுந்துவிட்டான் என்று நன்றாகத் தெரிந்தது.

    வெளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவில் வேலை செய்கிறானாம். வளமான ஐந்திலக்க சம்பளம்.

    ஸ்ரீ, அப்சரஸ் இல்லையென்றாலும், அழகின் முதற்படி. நிறம், உயரம், படிப்பு, தோற்றப் பொலிவு எல்லாமே அவனை நூற்றுக்கு நூறு போட வைத்தது.

    ஸ்ரீக்கும் அவனை நன்றாகவே பிடித்திருந்தது. நூற்றுக்கு நூறு இல்லை யென்றாலும், அவனை ஃபர்ஸ்ட் கிரேடில் தான் வைத்திருந்தாள்.

    இதற்கு முன்பு அவளைப் பெண் பார்க்க வந்த சைனா மூக்குப் பார்ட்டி, மூக்கு புடைப்பு மாப்பிள்ளைகளை விட, இவன் அழகனே!

    என்ன! ஹேர்ஸ்டைல் கொஞ்சம் நெற்றியை மறைக்கும்படி புசுபுசுவென்று இருந்திருக்கலாம். பிற்காலத்தில் சண்டை போடும்போது கொத்தாகப் பிடிக்க சௌகரியமாக இருக்கும். மீசை அளவாக, அடர்த்தியாக இருக்கிறது. கூடவே, சின்னதாக ஒரு தாடி இருந்தால் நன்றாக இருக்கும்.

    இட்ஸ் ஓகே! திருமணத்துக்குப் பின் அவனை வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் போகிறது.

    ‘மாப்பிள்ளை ரிஜக்டட்’ என்று சொல்லமுடியாதபடி, இந்த அளவுக்கு எல்லாம் மெச்சி வந்திருப்பதே பல ஜென்மத்துப் புண்ணியம்.

    என்ன யோசனையில இருக்கே? அவங்களுக்கு என்ன பதில் சொல்றது’ன்னு அப்பா கேட்கறார். என்று யமுனா அதட்டிய பிறகே சுய நினைவுக்கு வந்தாள் ஸ்ரீ.

    இதெல்லாம் கூடவா என்னைக் கேட்டுட்டு இருப்பாங்க. அவரைப் பிடிச்சிருக்கு’ன்னு அன்னைக்கே சொல்லிட்டேனே! என்று வெட்கப்பட்ட இளையவளை வினோதமாகப் பார்த்தார் யமுனா.

    அந்த திருச்சி மாப்பிள்ளையைக் கூடத்தான் முதல்ல பிடிச்சிருக்கு’ன்னு சொன்னே! அப்புறம் இரண்டாவது முறையாகக் கேட்டபோது பூமர் அங்கிள் மாதிரி இருக்கான்னு சொன்னே!

    இப்பவாவது ஒழுங்கா பதில் சொல்லு. கடல்லயே தண்ணி இல்லேங்கற மாதிரி, இதுக்கு மேல மாப்பிள்ளையே இல்லையாம். முகத்தை நொடித்துக் கொண்டார் யமுனா.

    ஒருவழியாக இளையவள் பச்சைக்கொடி காட்டிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசினார் பாக்கியராஜ்.

    ‘யாரோ யாரோடி...’ என்ற ரீதியில் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன.

    திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் இருக்க, ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீ கைகோர்த்து சுற்றத் தொடங்கினார்கள்.

    ஐஸ்கிரீம் என்ன ஃபிளேவர் பிடிக்கும்?

    புடவையே கட்ட மாட்டியா? எப்பவும் மாடர்ன் டிரஸ் தானா?

    சமைக்கத் தெரியுமா? அல்லது வழக்கமா டகாலடி விடுவாங்களே... ‘என் பொண்ணு சூப்பரா சமைப்பா...’ அப்படின்னு! அந்த ரகமா?

    என்ற சராசரி கேள்விகளோடு அவனும்,

    சம்பளம் தாண்டி வேறு வருமானம் இருக்கிறதா?

    பைக்... இதைவிட பெட்டர் மாடல் வாங்கலாமே!

    பிற்காலத்தில் வெளிநாடு செல்லும் எண்ணம் இருக்கிறதா? மனைவியையும் அழைத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறதா? என்ற அதிமுக்கியமான விசாரணையில் அவளும்!

    பயங்கர ப்ளானிங்கோட வாழுற மாதிரி தெரியுது. என்று சிரித்துக்கொண்டே அவளிடம் வழிவான், ஆதர்ஷ் நம்பீசன்.

    ஜோடி போட்டு படத்துக்குச் சென்றார்கள்... ஷாப்பிங் சென்றார்கள்... கோவிலுக்குச் சென்றார்கள்... ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சினார்கள்.

    இவள் வீட்டுக்கு அவனும், அவன் அழைத்த டின்னருக்கு இவளும் என்று நாட்கள் மிக வேகமாகவும், சந்தோஷமாகவும் கழிந்தன.

    இருவரும் உள்ளத்து அளவில் மிகவும் நெருங்கிவிட்ட நேரம், திருமணப் பத்திரிக்கையும் அச்சடித்து வந்துவிட்டது.

    இந்த நேரத்தில் தான், பாக்கியராஜின் உறவினர் கனகசபை வெளியூரிலிருந்து வந்து சேர்ந்தார்.

    திருமணத் தகவல் அறிந்து மகிழ்ச்சியுற்றவர், சில விவரங்களைக் கேட்ட பின் ஆடிப் போனார்.

    எந்த குடும்பத்தைச் சொல்றே? நான் வெளியூர் போய் ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. இப்பதான் திரும்பி வந்திருக்கேன். அதுக்குள்ள பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணமும் நிச்சயம் பண்ணிட்டே! நல்ல இடம் தானா’ன்னு ஒரு வார்த்தை யாரையும் விசாரிச்சு செய்ய வேண்டாமா? என்றார் கனகசபை.

    ஏன்? நாங்க பார்த்த வரனுக்கு என்ன குறைச்சல்? ஊருக்கு நடுவுல, மெயின் ஏரியாவுல அவங்களுக்கு சொந்த வீடு இருக்கு. பெரியவன் குடும்ப வியாபாரத்தைப் பார்த்துக்கறான். சின்னவரை நம்ம ஸ்ரீக்கு பார்த்துப் பேசியிருக்கு. புருஷனும், பொண்டாட்டியும் வெளியூர்ல இருக்கப் போறாங்க. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை. என்ன குறையைக் கண்டீர்? என்று நெற்றியைச் சுருக்கினார் பாக்கியராஜ்.

    என்ன குறையைக் கண்டீறா? மெயின் ஏரியாவுல இருக்கற வீடு அந்த மூத்த பையனோட வியாபாரத்துக்கு பணம் பொரட்ட கொலேடரல் வெச்சிருக்கறதா கேள்வி. இந்த விஷயத்தை உம்மகிட்ட உடைச்சுப் பேசுனாங்களா?

    அந்த மூத்தவரோட வியாபாரம் அப்படியொண்ணும் பிரமாதமா இல்ல. அது போகட்டும். வெளியூர்ல அந்த மாப்பிள்ளைப் பையன் தங்கியிருக்கறதா சொல்றீங்க? அந்த வீடாவது சொந்தமா? அல்லது... என்று இழுத்தார் கனகசபை.

    இல்ல... அது வாடகைக்கு எடுத்து வசிக்கற பிளாட்டுன்னு அவரே சொல்லிட்டார். பிற்காலத்துல சொந்தமா வீடு வாங்கற ஐடியா இருக்கு. அதுக்கேற்ற வருமானமும் இருக்குன்னு சொன்னதால, எனக்குப் பெருசா எதுவும் தப்பா தோணல கனகு. நம்ம பொண்ணு வெளியூர்ல தானே வாழப் போகுது... எல்லாம் தானா நடக்கும்’னு விட்டுட்டேன். மெல்லிய குரலில் முணுமுணுத்தார் பாக்கியராஜ்.

    என்ன ஆளுப்பா நீ! அவனவன் நாலஞ்சு சொத்துக்களை வெச்சிருந்தாலும், இன்னும் ஏதாவது சொத்துபத்து இருக்கான்னு துருவித்துருவி விசாரிக்கற காலத்துல, இப்படியா அலட்சியமா இருப்பே! பொண்ணோட வாழ்க்கை ஐயா!

    நாளைக்கு அந்த பொது வீட்டுக்கு ஏதாவது ஆபத்துன்னா, நம்ம பொண்ணு மாப்பிள்ளைக்கு என்ன மிஞ்சும்’ன்னு யோசிக்க வேண்டாமா? இப்படியா செய்வீரு! தாடையைத் தடவிக் கொண்டார் கனகசபை.

    என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தார் பாக்கியராஜ். திருமணம் நெருங்கி வந்துவிட்டது. இந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பது?

    சரி! நான் சொன்னதுக்காக நம்ப வேண்டாம் ராஜு. அவங்களைப் பற்றி நீயே நல்லபடியா விசாரிச்சு ஒரு முடிவுக்கு வா. என்றுவிட்டு டீ கிளாசை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு எழுந்து சென்றார் கனகசபை.

    பாக்கியராஜுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது.

    ஒருமுறைக்கு நான்கு முறை அந்தக் குடும்பத்தைப் பற்றி விசாரித்துத் தானே, பெண் பார்க்க வரச் சொன்னார்.

    இப்போது பத்திரிக்கை அச்சடித்து வந்துவிட்ட நேரத்தில் இது என்ன புதுக் குழப்பம்?

    இந்தச் செய்தி ஸ்ரீ காதுக்குப் போனால் என்னாகும்?

    இந்தத் திருமணமே வேண்டாம் என்பாளா? அவளுக்குப் பட்... பட்டென்று முடிவெடுக்கும் குணம். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டாள். எதிர்காலம் பற்றியும் பயமில்லை.

    அவள் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். ஆனால், பாக்கியராஜ் அப்படி முடிவெடுக்க முடியுமா?

    ஊரே அறிந்த திருமணச் செய்தியை, இப்போது எப்படி இல்லையென்று மறுப்பது?

    திருமணத்தை நிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினால் அவருடைய பெண்ணின் பெயரல்லவா பாதிக்கப்படும்.

    மீண்டும் ஒரு வரன் பார்த்து... ஆரம்பத்தில் இருந்தா?

    நினைக்கும்போதே பாக்கியராஜுக்கு மார் வலிக்கும் போல இருந்தது.

    மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தவர், களைப்பு மேலிட, அருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களின் மீது அமர்ந்து கொண்டார்.

    ‘கொலேட்டரல் வைப்பதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயமே இல்லை. யார்தான் சொத்துக்களை அடமானம் வைத்துக் கடன் வாங்காமல் இருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மாப்பிள்ளைக்காக வைத்திருந்தால் சரி. மூத்தவருக்காக அல்லவா வைத்திருக்கிறார்கள். பிற்காலத்தில் கனகு சொன்னது போல் ஏதாவது விபரீதமாக நடந்தால்?’

    பாக்கியராஜின் மனம் ஏதேதோ விஷயங்களை நினைத்துக் கவலைப்பட, மீண்டும் மாரை வலிக்கும் போல இருந்தது.

    வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டார்.

    என்ன பெரியவரே! உடம்பு சுகமில்லையா? ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகவா? என்று கேட்டுக்கொண்டே அவரைத் தன் வண்டியில் அழைத்துச் சென்றார், அந்த டிரைவர்.

    என்னாச்சுங்க... என்று அலறிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் யமுனா.

    செய்தியறிந்து இளையவள் கதறினாள். வருங்கால மாப்பிள்ளை செய்வதறியாது நின்றான்.

    மாப்பிள்ளை... இந்த முறை பிழைச்சுட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பேன்’ன்னு சொல்றதுக்கு இல்ல. அதுக்குள்ள உங்க அப்பா, அம்மா கிட்ட பேசி, கல்யாணத்தைச் சீக்கிரமே நடத்தச் சொல்லுங்க. தீனமான குரலில் சொன்னார் பாக்கியராஜ்.

    அப்படியெல்லாம் எதுவும் ஆகாது மாமா! நான் இப்பவே அப்பா, அம்மாவைக் கையோட கூட்டிட்டு வர்றேன். நீங்களே பேசுங்க. என்று தன் வீட்டைத் தேடி விரைந்தான் ஆதர்ஷ் நம்பீசன்.

    யமுனா தன் கணவருக்கு ஆனதை நினைத்து, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதற, இளையவள் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி யிருந்தாள்.

    மூத்தவள் அலமேலுவுக்கு செய்தி பறந்திருக்க, அவளும் பதறியபடி தன் குடும்பத்தோடு புறப்பட்டு வருவதாகச் சொல்ல,

    கனகசபைக்கும் செய்தி சென்று சேர்ந்தது. அடித்துப்பிடித்து வந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1