Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantha Rani
Vasantha Rani
Vasantha Rani
Ebook147 pages1 hour

Vasantha Rani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஆசையா இருக்கு சித்தி. உங்களை மாதிரி, சித்தப்பா மாதிரி, கஜநீஷ் மாதிரி.. எந்தவொரு டென்ஷனும் இல்லாமல், எப்பவும் ஃப்ரீ மைண்ட்டா, ஜாலியா பேசிச் சிரிச்சிட்டு இருக்கணும் போல இருக்கு. ஆனால் எங்கே.. ஏதாவது ஒரு டென்ஷன் சிந்தையில கூடு கட்டிட்டே இருக்கு.” பெருமூச்சுடன் சொன்னாள் ஷைலு.

“இந்த வயசுல உனக்கேன் இவ்வளவு டென்ஷன் அண்ட் பெருமூச்சு? பைத்தியமே! டென்ஷன் இல்லாத மனிதன்’னு உலகத்துல யாருமே இல்ல. அந்தக் காலத்துல எங்க காதல் கல்யாணத்துல ஏற்படாத கலாட்டாவா? உங்க பாட்டி.. தி கிரேட் ஜெயசுதா அண்ட் மிஸ்டர் வேங்கடம் கொடுக்காத குடைச்சலா?”

“எந்தச் சங்கடமாக இருந்தாலும், ஸ்மைலிங் ஃபேஸோடு சமாளிப்பது எப்படின்னு உன் சித்தப்பா தான் கத்துக் கொடுத்தார். அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் வேலைக்கும் போயிட்டு, வீட்டையும் மேனேஜ் செய்ய முடியுதுன்னா, அதுக்கு முழுக்க முழுக்க காரணம் என்னவர் மட்டுமே!” மற்றவை கதையில்!

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580134510737
Vasantha Rani

Read more from Hansika Suga

Related authors

Related to Vasantha Rani

Related ebooks

Reviews for Vasantha Rani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantha Rani - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வசந்தராணி

    Vasantha Rani

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    கத்திரிக்கா... வெண்டிக்கா... தக்காளி...

    வாசலில் காய்கறிக்காரன் சத்தம் கேட்டதும் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள் மாலினி.

    கோஸ் இருக்கா நயினா?

    இல்லம்மா... காய்கறி வரத்தே கம்மி. இந்த மழையைத் தாண்டி எங்கிட்டு இருந்து? நாளிக்கு வேணா கொண்டாறேன். இன்னைக்கு இருக்கறதை வாங்கிக்கோ தாயி.

    அந்த வயதானவரின் தோற்றம் ஏற்படுத்திய கருணைக்காகவே அவரிடமே காய்கறி வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தாள் மாலினி.

    அவளுடைய இரக்க குணத்தைப் பார்த்து அவள் கணவன் செந்தில் கூட நகைப்பான்.

    இவ்வளவு பெரிய மார்க்கெட்ல தளதளன்னு காய்கறியும், பழமும் குவிச்சு வெச்சிருக்கான். எல்லாத்தையும் விட்டுட்டு அந்தக் கிழவன் கிட்ட தான் வாங்குவேன்’னா எப்படி? என்று திட்டிக்கொண்டே, அவனாகவே மார்க்கெட்டில் இருந்து சில காய்களை அள்ளிக் கொள்வான்.

    வீட்டின் ஸ்டோரேஜில் செந்தில் வாங்கிக் குவித்த காய்கறிகள் இருந்தாலும், கிழவனை நிறுத்தி, இரண்டு வார்த்தைப் பேசி, ஒரு கீரை கட்டாவது வாங்கினால் ஒழிய, மாலினியின் ஜென்மம் சாபல்யம் அடைவதில்லை.

    அவ அப்படித்தான் மாப்பிள்ளை. சின்ன வயசுல இருந்தே அவ குணம் அதுதான். ஒருத்தர் மேல பாவம் பார்த்துட்டால், கையில இருக்கற கடைசி காலணாவைக் கூட, கரைச்சு விட்டுட்டு தான் வருவா. என்று தன் மகளைப் பற்றி எடுத்துச் சொன்னார் ஜெயசுதா.

    இந்தக் குணம் தானோ என்னவோ, அந்தக் குடியிருப்பில் இருக்கும் அனைவருக்கும் மாலினியை ரொம்பவே பிடிக்கும்.

    அடுத்தவர் கைக்கு மருதாணி வைத்துவிடுவதில் இருந்து, ‘மாலினி! ஒரு கரண்டி காபித்தூள் கடனா கொடேன்.’ என்று கேட்கும் அனைவருக்கும், ‘இல்லை...’ என்று சொல்லாமல் உதவி கிடைக்கும்.

    உன்னுடைய உபகார மனப்பான்மைக்காகவே நான் இன்னும் ஒரு பிடி சேர்த்துச் சம்பாதிக்கணும் போல! இந்த தர்ம சிந்தனையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோ! விலைவாசி போற வேகம் என்னன்னு தெரியுமா? சில நேரங்களில் இப்படிக் கேட்டு அவளைக் கடுப்படிப்பான் செந்தில்.

    யாருக்காகவும் மாலினி தன்னை மாற்றிக் கொண்டதில்லை. கணவன் கடிந்து கொள்ளும்போது புன்னகை மட்டுமே பதில்.

    சண்டை போடும் மனைவியிடம் பதிலுக்குப் பதில் சண்டை போடலாம். சாந்த சொரூபியை மனைவியாக வைத்துக்கொண்டு என்ன செய்வது?

    மாலினியின் இந்த இரக்க சிந்தனையே அவளை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்று யாருமே கணித்திருக்க முடியாது.

    திடீரென்று ஒரு நாள்.

    இரண்டு லட்ச ரூபாய் கிடைச்சா போதும். மற்ற தொகையை நான் அரெஞ்ச் செய்துடுவேன். யார்கிட்ட உதவி கேட்கறது’ன்னு தெரியல. கண்ணீர் வடித்தாள், மாலினியின் தோழி நித்யா.

    பள்ளிப்பருவம் தொட்டு, ஒன்றாகப் படித்தவர்கள், தங்கள் திருமணத்துக்குப் பின், ஒரே ஊரில் வசிக்கவும் செய்கிறார்கள். அடிக்கடி நித்யா அவள் வீடு தேடி வரவும் செய்வாள்.

    அவசரஉதவி என்று நித்யா கேட்டதில், மாலினிக்கு மனம் உருகத்தான் செய்தது. ஆனால், உடனே எடுத்துக் கொடுக்க, இது காபிப்பொடி உதவியோ, காய்கறி உதவியோ இல்லையே!

    முழுதாக இரண்டு லட்சம். கணவனிடம் அனுமதி கேட்டுக் கொடுக்கலாம் என்றால், நிச்சயமாகச் சம்மதிக்க மாட்டான்.

    ‘லூசாடி நீ!’ என்ற வார்த்தை, அவன் வாயிலிருந்து அட்சர சுத்தமாக வந்து விழும். கூடவே அறைவதற்கு கை ஓங்கினாலும் ஓங்குவான்.

    அறையமாட்டான்... ஆனாலும் ஒரு பாவ்லா! புருஷன் ஆகிற்றே!

    தன்னிடம் உதவி கேட்ட தோழிக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! என்ன செய்வது என்று பலவாறாக சிந்தனை.

    பழைய தங்கத்தை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்று ஒரு ஜோடி சன்னமான வளையலையும், இரண்டு மோதிரங்களையும் சேகரித்து வைத்திருந்தாள்.

    இப்போது அவை பணமாக மாறி, நித்யாவின் கரத்தைச் சென்றடைந்தன. ‘தாங்க்ஸ்... டி...’ என்று நன்றி பொங்கச் சொன்னாள் நித்யா.

    பொங்குனது போதும். நல்லா திக்கா ஒரு காபி போட்டுக் கொடு. அப்புறம் சொன்ன மாதிரி மூணு தவணையில பணத்தைத் திருப்பிக் கொடுக்கணும். என் புருஷனுக்குத் தெரியாமல் கொடுத்திருக்கேன்.

    அடுத்து நடக்கப்போவது தெரியாமல், நட்பு, அன்பு இரண்டையும் கலந்து பாராட்டினாள் மாலினி.

    நம்ம ஃபிரண்ட்ஷிப்பை நீ சந்தேகப்படலாமா மாலு! அதெல்லாம் உனக்கு ஒரு பிரச்சனையும் வராமல் திருப்பிக் கொடுத்துடுவேன். என்று சிரித்துக்கொண்டே ஒரு சிறிய தட்டில் டிபனும், திக்கான காபியும் கொண்டு வந்து கொடுத்தாள் நித்யா.

    சிறிது நேர அளவளாவலுக்குப் பின், தோழியிடம் விடைபெற்றாள் மாலினி. எதற்காக பணம் கடனாகக் கேட்டாய் என்றுகூட விசாரிக்கவில்லை.

    தோழியின் மீதிருந்த நம்பிக்கை! பர்சனல் காரணமாக இருக்கலாம் என்ற நாகரீகம்! சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால், அவளே சொல்லியிருப்பாள் அல்லவா!

    கணவனுக்குத் தெரியாமல் செய்தது மட்டும் இதயத்தின் ஓரத்தில் உறுத்தல்.

    அது சரி... எத்தனையோ பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் சீட்டு பிடிக்கிறார்கள்... ஃபைனான்ஸ் கம்பெனியில் போடுகிறார்கள்.

    இதையும் அதுபோல நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்... என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் மாலினி.

    மாதங்கள் உருண்டன.

    இன்னமும் நித்யாவிடமிருந்து வரவேண்டிய முதல் தவணை வரவில்லை. போன் செய்தாலும் எடுக்காமல் போகவே, இலேசாக கிலி ஆரம்பித்தது.

    இந்த நேரத்தில், செந்தில் அந்த பழைய வளையலைக் கேட்பான் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை.

    உன்னைத்தான்! அந்த வீடு இரண்டரை சென்ட் இடம். என்னால முடிஞ்ச அளவு தொகையைப் பிரட்டிட்டேன். இன்னொரு அஞ்சு லட்சம் முடக்கடியா இருக்கு. உன் பீரோவுல விலைக்கு விற்கணும்’னு அந்தப் பழைய வளையலு, மோதிரமெல்லாம் வெச்சிருந்தே இல்ல. எடுத்துக்கொடு மாலு! என்றான் கணவன்.

    பயப்பாறைகள் மனத்துக்குள் பனிப்பாறைகளாய் நொறுங்கிச் சிலீரிட, என்ன சொல்வதென்று தெரியாமல், அவனையே பார்த்தாள் மாலினி.

    என்னடி? நான் சொல்றது புரியாதவ மாதிரியே பார்க்கறே? பீரோவுல தான வெச்சே! நானே தேடி எடுத்துக்கறேன். சாவியை எடுக்கப் போனான் செந்தில்.

    அ... அது பீரோவுல இல்ல. திணறலாய் வந்தது குரல்.

    பின்ன?

    வித்துட்டேன்.

    ஏது? எப்ப? நீ தனியாகப் போய் வித்தியா? என்கிட்ட சொல்லாமலா? நல்ல விலைக்குத்தான் வித்தியா?

    செந்தில் அதிர்ச்சியின் உச்சத்தில் கேட்க, மாலினிக்குள் கலவரம் விஸ்வரூபம் எடுத்தது. நடந்ததைத் திக்கித் திணறி அவள் சொல்லி முடிக்க,

    நினைச்சேன். இந்த மாதிரி ஏதாவது ஒரு கிறுக்குத்தனம் என்னைக்காவது ஒரு நாள் நடக்கும்’னு நினைச்சேன். என்று தலையில் அடித்துக் கொண்டவன்,

    சரி... வா... அந்த நித்யா வீட்டுக்குக் கிளம்பு. அடிச்சுப் பேசி இன்னைக்கு மொத்த அமெளண்டும் வாங்கிட்டு வரணும். இல்ல... நொள்ளன்னு ஏதாவது பதில் வரட்டும்... உங்க இரண்டு பேரையும் மிதிச்சே கொல்றேன். கடுமையான ஆத்திரத்துடன் மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் செந்தில்.

    வாங்க... வாங்க... இன்னும் உங்களை மாதிரி எத்தனை பேர் வந்து விசாரிப்பீங்க? அக்கம்பக்கத்தினர் கோபமாகக் கேட்டார்கள்.

    அந்த நித்யாவும், அவ புருஷனும் சத்தமில்லாமல் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. எங்க போனாங்கன்னு கூடத் தெரியாது. அவ பிள்ளைங்க பாட்டி வீட்டுல தங்கிப் படிச்சிட்டு இருந்ததால, எப்பவும் போல பிள்ளைகளைப் பார்க்க, ஊருக்குப் போயிருக்காங்கன்னு நினைச்சோம்.

    நீங்க பணம் கொடுத்த மாதிரி, ஏகப்பட்ட பேர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பாங்க போல! தினமும் இப்படி யாராவது தேடி வந்து எங்களைக் கேட்க, பதில் சொல்லித் தீரல.

    யாரோ யாரையோ ஏமாத்திட்டு போனதுக்கு, எங்க வாய் இல்ல வர்றவங்க... போறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு. எங்களுக்கு வேற பொழப்பு இல்லையா என்ன?

    எத்தினி பட்டாலும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு புத்தி வராது.

    கொடுத்த பணத்துக்கு காயிதம் ஏதாவது எழுதி வாங்கியிருந்தா, போலீசுல புகார் கொடுங்க. அக்கம்பக்கத்துல குடியிருந்த பாவத்துக்கு நாங்க அல்லாடிட்டு இருக்கோம்.

    அருகிலிருந்தவர்கள் மிகுந்த சினம் காட்டினார்கள். அலுத்துக் கொண்டார்கள். போம்மா... போ... என்றது பார்வைகள்.

    தன் மனைவியை கிழித்து நார்நாராய் தொங்கவிடும் கோபத்தோடு பார்த்தான் செந்தில்.

    முழுதாக இரண்டு லட்சம். அந்த இரண்டு லட்சம் சம்பாதிக்க எவ்வளவு பாடுபட வேண்டும் என்று இந்த முட்டாள் பெண்ணுக்குத் தெரியுமா? ஐயோ... இவளுக்கு இன்னும் என்ன சொல்லி புரிய

    Enjoying the preview?
    Page 1 of 1