Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollamale Naan Ketkirean
Sollamale Naan Ketkirean
Sollamale Naan Ketkirean
Ebook492 pages4 hours

Sollamale Naan Ketkirean

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125904004
Sollamale Naan Ketkirean

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Sollamale Naan Ketkirean

Related ebooks

Reviews for Sollamale Naan Ketkirean

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollamale Naan Ketkirean - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    சொல்லாமலே நான் கேட்கிறேன்

    Sollamale Naan Ketkirean

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    1

    அப்பா, பால் காய்ச்சி வெச்சிருக்கிறேன். ‘லஞ்ச்' உங்க பையில் தயாராக இருக்குது. ஆபீஸிலிருந்து வந்த உடன் காபி மட்டும் கலந்துக்குங்க. இரவு சாப்பாடு நான் வந்து செய்திடுவேன் சுதந்திரா மூச்சு விடாமல் அவசர, அவசரமாக கூறுவதைக் கேட்டு புன்னகைத்தார் சண்முகம்.

    ம், சரிம்மா, நீ பதட்டப்படாம் 'இன்டர்வியூ'ல பேசு, என்னைப் பற்றி கவலைப்படாதே. இந்த சின்ன வேலையெல்லாம் நான் செய்ய மாட்டேனா? சண்முகம் கூறினார்.

    அதெல்லாம் நல்லா செய்வீங்கப்பா. ஆனால் அதுக்கு மேலே போய் எனக்கு உதவணும்னு எண்ணி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப்பீங்க. அது தான் கூடாது என்றபடி தன் நீண்ட கூந்தலை பின்னி முடித்தாள்.

    அது சரி தாயி. நீ போகிற ஆபீஸ் கொஞ்சம் கெடு பிடின்னு கேள்விப் பட்டிருக்கிறேன். நான் வேலை செய்யிற நகைக்கடையை தன் மூத்த மகன் சரவணன் கையில கொடுத்திட்டு, கட்டுமான நிறுவனத்தை இளைய மகன் கார்த்திகேயனுக்கு தந்துட்டாரு. துணி வியாபாரத்தை தன் கடைசி மகன் குமரனுக்கு தரப்போறாரு பெரியவர் வேலாயுதம் சார்னு சொல்றாங்க.

    அப்பா, மொத்தத்துல உங்க பெரிய முதலாளி வேலாயுதம் பலே கில்லாடி, மொத்த பிசினெஸ் தன் மகன்கள் கையிலே புரள வெச்சுட்டாரு. ஆமா, அவர் ரிட்டையர் ஆகிட்டாரா? என்றபடி சுதந்திரா புடவை தலைப்பை மடித்து 'பின்' போட்டாள்.

    இல்லைம்மா. இன்னும் இரண்டு புள்ளைங்களுக்கு கல்யாணம் செய்யணும். மூத்த மருமக நல்ல, பணக்கார, வியாபார குடும்பத்திலேர்ந்து எடுத்துட்டாரு, மீதி இரண்டு பசங்களுக்கு பார்க்கிறாரு. இன்னும் அமையலை.

    அப்பா எனக்கு வேலை கிடைச்சா அண்ணன் உங்களுக்கு பாஸ். தம்பி எனக்கு பாஸ்! சூப்பர்ப்பா விபூதி கீற்றை இட்டுக் கொண்டாள் சுதந்திரா.

    பார்க்கலாம். கார்த்திக் தம்பிக்கு உன் வேலை பிடிக்கணும். நீயும் இப்பொழுது தான் முதல் தடவையாக வேலைக்கு போறே. சுதந்திரா, கிளம்புவதற்கு முன்னால் உன் அம்மாவின் படத்திற்கு வணங்கிட்டு போம்மா என்றார் சண்முகம்.

    அப்பா, எனக்கு சிபாரிசு இருக்குது தெரியுமா? ஒண்ணு நீங்க. அடுத்தது குமரன்! அதாம்ப்பா, வேலாயுதம் சார் குடும்பத்து கடைசி வாரிசு. குமரனும், நானும் ஒண்ணா கல்லூரியில் படிச்சவங்க. 'என் அண்ணன் ஏதாவது மறுத்து பேசினா உடனே என்னை கூப்பிடுன்னு’ குமரன் சொல்லியிருக்கான்.

    சுதந்திரா செல்வதை பார்த்தபடி கதவை இழுத்துப் பூட்டினார் சண்முகம்.

    தாயில்லா பெண்ணை ஆளாக்கி படிக்க வைத்து விட்டேன். இனி ஒருவன் கையில் கட்டிக் கொடுத்து விட்டால் போதும். என் பொறுப்பு தீர்ந்தது.

    பெருமூச்சு விட்டபடி, குடையை பிரித்து நடக்கத் துவங்கிய சண்முகத்தின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றன.

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்ததால் சுதந்திரா என்று பெயர் வைத்து மகிழ்ந்தது. நினைவில் பசுமையாக இருக்கிறது.

    காந்தீயவாதியான சண்முகம் தன் மனைவி தன்னுடைய எண்ணங்களுடன் ஒத்து செல்வதை எண்ணி மகிழ்ந்தார். காதியைத் தவிர வேறெதுவும் கட்டுவதில்லை, புன்னகை போதும், பொன் நகை எதற்கு என்று தன் மனைவி வேலம்மாள் வாழ்ந்து காட்டியதில் பெருமையடைந்தார்.

    ஆனால் சுதந்திராவிற்கு மூன்று வயதானவுடன் ஒரு மழைநாளில் ஒரு கார் இடித்து இறப்பாள் என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை.

    மனைவியை இழந்ததற்கு கதறுவதா, அல்லது 3வயது பெண் குழந்தை அநாதையாக நிற்பதை எண்ணி குமறுவதா என்று புரியவில்லை.

    மாலையுடன், கண்களில் கண்ணீருடன் நிற்கும் கடை முதலாளி வேலாயுதத்தை பார்த்தார்.

    ஐயா, என் வாழ்க்கையே போச்சுய்யா. இனி என்ன செய்வேன்? இந்த பிஞ்சு குழந்தையை எப்படி காப்பாற்றுவேன்? சண்முகம் கதறக்கதற வேலாயுதம் மற்றும் அவர் மனைவி வள்ளியம்மாவின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

    அழாதே சண்முகம். எந்த துக்கமும் நிரந்தரமல்ல. எந்த இழப்பும் இறைவனால் சரி செய்யப்படும். நீ ஒரு மாதம் லீவு எடு, உன் நெருங்கிய சொந்தத்தில் வயதில் மூத்த பெண் யாராவது இருந்தால் இங்கு வர ஏற்பாடு செய். குழந்தையை அவங்க பார்த்துப்பாங்க வேலாயுதம் ஆறுதலாகக் கூறினார்.

    வள்ளியம்மா தன் கடைசி மகன் குமரனின் வயதையொத்த சுதந்திராவை தன் மடியில் அமர்த்திக்! கொண்டாள்.

    சுதந்திரா, அம்மா திருச்செந்தூர் முருகன்கிட்டே போய் இருப்பாங்க, நீ சமர்த்துப் பெண்ணாக இருக்கணும். அப்பாவை தொந்திரவு செய்யக்கூடாது என்று மென்மையாகக் கூறினாள் வள்ளியம்மா.

    வள்ளியம்மாவின் களையான முகமும், வட்டமான பொட்டும் 'பளிச்' என்ற நிறமும் மூன்று வயது சுதந்திராவிற்கு தன் தாயை நினைவூட்ட, பெரிய கண்களில் மீண்டும் நீர் கோர்த்து, உதடு பிதுங்கியது.

    அவளை இறுகக்கட்டி, அணைத்த வள்ளியம்மாவின் கண்களிலும் கண்ணீர்.

    ஏதோ தன்னிடம் வேலை செய்பவன் தானே எனும் அலட்சியமில்லாமல், சுதந்திராவிற்கு ஏற்றவாறு வீட்டில் எல்லாம் உள்ளதா என்று வேலாயுதமும் வள்ளியம்மாளும் கவனித்தது. சண்முகத்திற்கு பெருத்த ஆறுதலளித்தது.

    முதலாளி கூறியது நிஜம் தான் காலம் எப்பேற்பட்ட சோகத்தையும் மறைத்து விடுகிறது ஆனால் சம்சார அலை ஓய்வதில்லை என்பது போல் சுதந்திரா வளர, வளர கவலைக்கூடியது என்பதும் உண்மைதான்.

    சுதந்திராவின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக தன் சிறிய வீட்டின் ஹாலில் முதலாளியும் அவர் மனைவி வள்ளியம்மாவும் சீர் வைத்து நிறைத்ததை இப்பொழுது நினைத்தாலும் அவர் மனம் திருப்தி அடையும்.

    ஆயிற்று சுதந்திரா பட்டப்படிப்பு முடித்தாயிற்று. சென்ற வருடம் வரை துணைக்கு இருந்த தன் அத்தை செளந்தரம்மா இறந்து விட, சுதந்திராவின் திருமணம் பற்றிய வேலைக் கூடியது.

    அப்பா, நான் ஒரு வருடம் வேலை செய்யணும், அப்புறம் தான் திருமணம் என்று சுதந்திரா கட்டளையிட சண்முகம் திகைத்தார்.

    2

    சா.ட்டைப் போன்ற பின்னல் சதிராட, வெள்ளை நிற பருத்தி புடவையில் சிவப்பு கரைக்கு ஏற்ற ரவிக்கை, காதில் காதுகளில் சிவப்பு தொங்கட்டான். ரோஜா கன்னங்களில் இடிக்க சுதந்திரா தெருவில் நடந்து செல்கையில் பல கண்கள் அவளை மொய்த்தன.

    அவளுக்குள் ஓர் உற்சாகம் ஊற்று இன்று இருந்தது உண்மை தான். படித்து முடித்து வேலைக்கு சென்று, அப்பாவிடம் சம்பள பணத்தை தர வேண்டும்.

    அவளுக்கென்று தன் வாழ்வை தியாகம் செய்த தன் தந்தைக்கு அவள் செய்ய வேண்டிய முதல் கடமையல்லவா?

    சௌந்தரவல்லி பாட்டி பெண்ணுக்கு அழகு திருமணம் தான், வேலைக்கு போக வேணும்னு நீ பிடிவாதம் பிடிப்பது நல்லாவா இருக்குது? என்றாள்.

    ஆம்! பாட்டி! என் மேல் உள்ள கோபத்தை என் பின்னலின் மேல் காட்டாதீங்க! வலிக்குது.

    கண்ணா, வலிக்குதா? இப்ப நீ கல்யாணம் வேணாங்கறது என் மனசு வலிக்கச் செய்யுது? என்றபடி பாட்டி சுதந்திராவின் முடியை மென்மையாக பின்னலிட்டாள்.

    பாட்டி, திருமணம் மட்டும் தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை என்பது அந்த காலம். நாலு சுவர்களை விட்டு வெளியில் வாங்க பாட்டி, என்னையும் போகவிடுங்க. உலகமே அறியாம, எதுவும் புரியாம அப்பாவின் பாதுகாப்பிலிருந்து கணவனோட பாதுகாப்பிற்கு போறது தப்புப்பாட்டி. இன்று வெளி உலகம் ரொம்ப விரிந்திருக்குது. ரொம்ப பெரியது. அதில் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தைரியமாக இந்த உலகை ஜெயிக்க முடியும் சுதந்திராவின் குரலில் அழுத்தம் கூடியது.

    சரிம்மா கண்ணா. நீ கத்துக்க வெளியில பறந்துபோ. ஆனால் சுதந்திரமாக பறக்கும் பறவை கூட ஒவ்வொரு மாலையும் தன் கூட்டைத் தேடித்தானே வருது.

    பாட்டியின் பேச்சு சுதந்திராவுக்கு ஆச்சரியம் அளித்தது.

    என்னம்மா, பேச்சே காணோம்! அசடு. அசடு, நாங்களும் அந்த காலத்துல பறக்க ஆசைப்பட்ட வங்கதான், ஆனால் கட்டிக்கப் போகிற ஆண்பிள்ளை எதிரில் வந்தவுடனே எல்லாம் மறந்து போயிடும் என்று சிரித்தாள் பாட்டி.

    ஓஹோ, இது தான் உங்க காதல் கதையா? பாவம், பாட்டி நீங்க. ஒரு ஆண் மகனுக்கு அடிமையாக வாழ்ந்து பழகிட்டீங்க சுதந்திரா கிண்டல் செய்தாள்.

    உங்க தாத்தா தான் பாவம்! என்னைப் பார்த்த உடனே ஆளு 'அவுட்' என்னையே சுத்தி, சுத்தி வருவாரு. என் துரதிர்ஷ்ட ம் அவரை சீக்கிரம் இழந்துட்டேன். உங்கம்மாவை நினைச்சு உங்கப்பா தவிக்கிற மாதிரி நானும் தவிச்சிக்கிட்டேதான் சாவணும்னு விதிச்சிருக்கு.

    பாட்டியின் சோகத்துடன் தன் தாயைப் பற்றிய நினைவும் தாக்க எதுவும் பேசாமல், முகம் வாட இருந்தாள் சுதந்திரா.

    கண்ணு, என் மேலே கோபமா? என்றபடி அவள் முகத்தை திருப்பினாள் பாட்டி.

    சொர - சொரப்பான் அந்த கைகளில் இருந்த சமையலறை வாசனை இப்பொழுதும் அவளை தாக்கியது.

    ஏன் பாட்டி அம்மா என்னை விட்டு போயிட்டாங்க? பாட்டியின் மடியில் தலையை புதைத்தாள்.

    நம்மைவிட மேலே இருக்குற சாமிக்கு அவள் மீது ரொம்ப பிரியம் அதான் கூட்டிக்கிட்டாரு.

    பாட்டி நீங்க என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது.

    ம்.

    பாட்டி பெருமூச்சு செறிந்தாள்!

    யாரும் நிரந்தமில்லை கண்ணு. எனக்கும் வயசாகுது அழைப்பு வந்தா கிளம்ப வேண்டியது தானே.

    போங்க பாட்டி, இப்படி எதையாவது சொல்லி என்னை விட்டு போகப் பார்த்தீங்க. நடக்கறதே வேறு என்று பாட்டியை அணைத்துக் கொண்டாள்.

    உண்மை தான் பாட்டி போய் ஒரு வருடம் ஓடி விட்டது. 'வெறி’ச் சென்று, தனிமை, பாட்டியின் அன்பு, கவனிப்பு அனைத்தையும் தொலைத்த மாதிரியான வெறுமை என்று அந்த வீட்டை சூழ்ந்தது.

    காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. கடைசி வருடம் படிப்பை முடித்து, எப்படியாவது வேலையில் சேர வேண்டும் எனும் சுதந்திராவின் எண்ணம், அனைத்தும் சுதந்திராவை ஊக்குவித்தது.

    பாட்டி இல்லாதது வெறுமையாக இருந்தாலும், சுதந்திரா வீட்டுப் பொறுப்பை ஏற்றாள். அப்பா ஆபீசுக்கும், தான் கல்லூரிக்கும் செல்வதும், இரவு சமையல் செய்வதும், படிப்பதுமாக ஒரு வருடம் ஓடியது தெரியவில்லை.

    ஜெமினி ஸ்டாப்பிங் இறங்குங்க. சீக்கிரம், சீக்கிரம் என்று கண்டக்டர் அவசரப்படுத்த 'சட்' என்று நினைவிற்கு வந்தாள் சுதந்திரா.

    நெரிசலும், வியர்வையும், லேசாக 'கசகச' என்று இருந்த பஸ் ஸ்டாப் ஓரத்தில் நின்று கசங்கிய நூல் புடவையை சரி செய்தாள். படபடப்பாக இருந்தது போல் தோன்றியது.

    இதோ பார் சுதந்திரா, எங்கண்ணன் கார்த்தி கேயன் கொஞ்சம் அழுத்தமான ஆளு, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் புரியாது. கோபமா, ஏக்கமா, வருத்தமா, சந்தோஷமா எல்லா உணர்ச்சியும் அவர் முகத்துல ஒரே மாதிரி இருக்கும். ஆனால் எங்க பெரியண்ணன் சரவணன் நேரெதிராக இருப்பாரு. உணர்ச்சி வசப்படுகிற ஆளு. கோபம் வந்தா 'டாப்’ எகிறிடும், சந்தோஷமாக இருந்தாருன்னா பரிசுப் பொருள்களை அள்ளித் தருவாரு. முதலில் நீ எங்க பெரியண்ணனை தான் பார்க்கணும். அவரு தான் உன்னை சின்னண்ணன்கிட்டே அனுப்புவாரு குமரன் விவரமாக கூறினான்.

    அதை நினைவுக்கூர்ந்து யோசிக்கும் பொழுது மனதில் லேசான கலக்கம் தோன்றியது உண்மை தான். அப்பாவிடம் கற்ற பிராணாயாமம் நினைவில் தோன்றியது. செய்துப் பார்த்து விட்டுதான் முதலாளியை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது.

    மிகப் பெரிய ஆபீஸ். முன்புறம் பச்சை பசேலெனத் தோட்டம். கார்கள் எங்கு வைக்கப்படுகின்றன? சுதந்திராவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தோட்டத்தின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான வேல், அதன் மீது நீரூற்றில் நீர் தொடர்ந்து விழுந்துக் கொண்டிருந்தது.

    'வேலாயுதம் எண்டர்பிரைசஸ்' எனும் 'போர்டு' அவளை வரவேற்றது. உள்ளிருந்து 'சில்' என குளிரூட்டப்பட்ட காற்று. அவள் முகத்தில் வீச, கண் இமைகள் படபடத்தவாறு உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.

    கண்களுக்கு நேரெதிரில் திருச்செந்தூர் முருகனின் பிரம்மாண்டமான படம் அவளை வரவேற்றது.

    3

    அடர்ந்த சிவப்பு வர்ண சோபாவில் பட்டும் படாமலும் அமர்ந்திருந்தாள் சுதந்திரா. பிராணாயாம மூச்சுப்பயிற்சியினால் படபடப்பு குறைந்து சாதாரண நிலைமைக்கு வந்திருந்தாள்.

    உள்ளே அழைக்கப்பட்டால் என்ன பேச வேண் டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள்.

    சிவப்பு நிற 'மெத்' என்ற கம்பளத்தில் அவளுடைய கால்கள் பதிந்து இருந்தன. லேசான பன்னீர் ரோஸ் நிற சுவர்களில் அடர்த்தியான அரக்கு நிறவர்ண பெயின்டிங்குகள் மிளிர்ந்தன.

    தொலைபேசி சிணுங்கியது. ரிசெப்ஷனில் அமர்ந்திருந்த பெண் 'யெஸ் சார்’ என்று முணுமுணுத்தாள். பிறகு சுதந்திராவைப் பார்த்து 'யூ மே கோ இன்' என்று புன்னகைத்தாள்.

    சுதந்திரா, தலை முடியை கோதி சரி செய்தாள்! நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை என்று அப்பா அடிக்கடி கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

    பாரதியார் கூறியதின் அர்த்தம் இன்று வேறு விதமாக புரிஞ்சுக்கிட்டு ஒரு பெண், பெண்ணாக இருப்பதில்லை. உண்மை, சத்தியம், நியாயம், தர்மம் இந்த நாலு கைத்தடிகள் இருந்தால் போதும், பெண் நிமிர்ந்து நிற்கலாம். அன்பு, பாசம், எனும் கண்ணாடி போதும், பெண் நேர் கொண்ட பார்வை கொள்வாள் அப்பா மென்மையாக கூறியது இப்பொழுது தைரியம் அளித்தது.

    கதவைத் திறந்த உடனே, அந்த அறையின் ஏ.சி காற்று வேகமாக முகத்தில் வீசியது. அந்த பெரிய அறையின் மூலையில் பெரிய மேஜை, அதில் அமர்ந்தபடி எழுதிக் கொண்டிருக்கும் சரவணனைப் பார்த்தாள்.

    அவராக பேசும் வரை எதையும் பேச வேண்டாம் என்று காத்திருந்தாள்.

    சிட்டவுன் என்று அவர் கூற, மேஜையருகில் சென்று நாற்காலியில் அமர்ந்தாள்

    பேனாவை மூடி வைத்து, கண்ணாடியை கழற்றி வைத்து அவளை ஏறிட்டுப் பார்த்தார் சரவணன்.

    என்னம்மா நல்லா இருக்கியா? அப்பா எப்படி யிருக்காரு? என்று அவர் கேட்க,

    நல்லாயிருக்கேன் அங்கிள் என்றவள் 'சட்' என்று நாக்கைக் கடித்தபடி சார் என்றாள்.

    மெதுவாக சிரித்தபடி பரவாயில்லைம்மா, என்னை 'அங்கிள்'னு கூப்பிடும்மா, உனக்கு முதலாளி கார்த்திகேயன். சரி, இன்டர்வ்யூவை ஆரம்பிக்கலாமா? என்றார்.

    நிமிர்ந்து அமர்ந்து அழகாக தலையசைத்தாள். சரவணன் கேட்கும் கேள்விகளுக்கு மென்மையாக ஆனால் தீர்க்கமாக பதிலளித்தாள்.

    உனக்கு புது இடம், புது விஷயம் என்றாலும் கற்றுக் கொண்டு உழைக்க தயாராக இருக்கிறே. அது போதும்மா இன்னும் இரண்டு நாட்களில் ‘ஆர்டர்' வீடு தேடி வரும். நான் கார்த்திக்கிட்டே பேசறேன். அடுத்த ஒன்றாம் தேதியிலிருந்து வேலைக்கு போகலாம். அவன் ஆபீஸ் நுங்கம்பாக்கத்தில இருக்குது. இந்த 15 நாட்களில் நீ கணினியில் மேலும் கற்றுக் கொள்ள சில விஷயங்கள் இருக்குது. அதை கற்று கிட்டா நீ நேரடியாக வேலைக்கு செல்லலாம் என்றார்.

    நான் கற்றுக் கொள்கிறேன் அங்கிள். ரொம்ப நன்றி என்றபடி எழுந்தாள் சுதந்திரா.

    இதோ பாரும்மா சுதந்திரா, உங்க அப்பாயின் நேர்மை, நியாயம், உழைப்பு எங்களுக்கு பெரிய மூலதனம். அது போல் எங்கள் கார்த்திக்கோட கம்பெனிக்கு நீயும் நியாயமா, உண்மையாக நடந்துக் கொள்வாய் என்று நம்புகிறேன் சரவணன் குரலில் சற்றே அழுத்தம் கூடியது.

    நிச்சயமாக, என் அப்பாவின் மகள் என்பதை உறுதிப் படுத்துகிறேன். ரொம்ப ‘தேங்க்ஸ்' அங்கிள் சுதந்திராவின் கண்களில் தெரியும் உண்மையை கூர்ந்து கவனித்தார் சரவணன்.

    சுதந்திரா சென்ற உடனே கைப்பேசியை எடுத்து பேசிய சரவணன் "நந்தகுமார், புது செகரெட்டரி ஏற்பாடு செய்து விட்டேன். நம்ப சண்முகத்தோட மகள் தான், கார்த்திக்கிடம் சொல்லிடுங்க, நாளையிலிருந்து இந்த மாதம் கடைசி வரை ‘டிரெயினிங்' கொடுத்திடுங்க. வர்ற ஒன்றாம் தேதியிலிருந்து வேலைக்கு சேர்த்துடுங்க என்றார்.

    ஓ.கே சார். சொல்லிடறேன். பேர் சொல்லுங்க என்றார் நந்தகுமார்.

    சுதந்திரா.

    'புதுமையாக இருக்கிறதே' என்று எண்ணியபடியே தொலைபேசியை கீழே வைத்தான் நந்தகுமார்.

    என்ன சுதந்திரா, இன்டர்வ்யூ வெற்றி தானே? என்றார் குமரன்.

    பஸ் நிறுத்தத்திலிருந்து கைப்பேசியில் பேசியபடி நடந்தாள் சுதந்திரா.

    நான் சரியாகத்தான் செய்தேன் என்று நினைக்கிறேன். சரவணன் அங்கிள் சரின்னுட்டாரு. இனி கார்த்திகேயன் சார் என்ன சொல்லப் போறாரோ அதான் கொஞ்சம் கவலையாக இருக்குது.

    அம்மா, தாயீ எங்க சின்னண்ணன்கிட்டே மட்டும் என் பெயரை கெடுத்திடாதே என்றான் குமரன்.

    ஏய் குமரா, என்னை கிண்டல் செய்யறியா? இரு இரு, முதலில் வேலைக் கிடைக்கட்டும் அப்புறம் வெச்சிருக்கேன் என்றபடி, சிரித்துக் கொண்டே 'கேட்' திறந்து, தன் கைபையில் சாவியைத் தேடினாள் சுதந்திரா.

    வராண்டாவின் ஓரத்திலிருந்து எழுந்து வரும் ஒரு ஆளைக்கண்டு சற்றே திகைத்தாள்.

    அப்புறம் பேசறேன் என்றபடி கைப்பேசியை அணைத்த சுதந்திரா.

    யார் நீங்க? எப்படி உள்ளே வந்தீங்க

    'கேட்' பூட்டியிருக்குது என்று குரலை உயர்த்தினாள்.

    ஹலோ என் பெயர் விக்னேஷ். இந்த குட்டையான கேட்டை ஏன் பூட்டி கஷ்டப்படறீங்க? இதை தாண்டி குதிச்சு உள்ளே வரது ஒன்றும் பெரிய வித்தையில்லை என்றான்.

    கைகளை கட்டியபடி வந்திருக்கும் புதியவனை உற்றுப் பார்த்தாள் சுதந்திரா.

    பயப்படாதீங்க மேடம், உள்ளே போய் பேசலாமா? என்றான் விக்னேஷ்.

    புதியவர்களை நான் வீட்டிற்குள் கூப்பிடுவதில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்? சுதந்திரா வின் குரலில் கடமை கூடியது.

    ஓ.கே மேடம், நோ பிராப்ளம். இங்கேயே பேசலாமா? என்று வராண்டா படிகளில் உட்கார்ந்தான் விக்னேஷ்.

    4

    மேடம், நான் ஒரு பத்திரிகையாளன், ‘நேர்மை' ஒரு பத்திரிகையில் வேலை. உங்களை நேர்காணல், செய்ய வந்தேன் என்றான் விக்னேஷ்.

    மிஸ்டர், எழுந்திருங்க. பத்திரிகை நேர்காணல் செய்யற அளவு நான் புகழ் பெற்றவளில்லைன்னு எனக்கு நல்லா தெரியும். அதனால் பொய் சொல்றது போதும்னு கிளம்புங்க என்றாள் சுதந்திரா.

    23 வயது வாலிபனாகத் தோன்றினான். முகத்தில தாடி, கலைந்த நீளமான தலைமுடி காற்றில் பறந்தது. சற்றே அழுக்கான ஜீன்ஸ் பேண்டு, மேலே சிவப்பு காதி குர்தா, ஒரு காதில் சிறிய கடுக்கனுடன் இருக்கும் அவனைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

    என்ன பிரச்சனை எதற்காக என்னை பேட்டி காணப் போறீங்கன்னு கேட்கணும் மேடம், இப்படி நீங்களே முடிவு செய்து பேசக்கூடாது என்றான் விக்னேஷ்.

    வராண்டா சுவரில் அமர்ந்தபடி சரி, பேசலாம் சொல்லுங்க, விக்னேஷ் என்றாள் சுதந்திரா.

    கேளுங்க. விக்னேஷ்னு சொன்னால் அது தான் சரி.

    சரி, கேளுங்க விக்னேஷ்!

    உங்கள் வீடும் பக்கத்தில் இருக்கும் காலிமனையும் இணைத்து மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுன்னு சொல்றாங்க சரியா?

    தப்பு. எங்க வீடு கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பழசு. நாங்க எதற்காகவும், விற்கமாட்டோம். அடுத்து இருக்கும் காலி மனையிலயும் அடுக்குமாடி கட்டிடம் வரவும் விடமாட்டோம்.

    ஏங்க, அடுக்கு மாடி கட்டிடம் வந்தால் என்ன தப்பு? சென்னையில் இருக்கும் கூட்டத்திற்கு பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தேவை தானே விக்னேஷின் கேள்வியில் யதார்த்தம் தெரிந்தது.

    இந்தத் தெருவில் ஏற்கனவே ஏழு அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்து விட்டது. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம். இதில் அடுக்குமாடி கட்டறவங்க போடற ஆழமான போர்வெல் அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் கிணற்றுத் தண்ணீரை உறிஞ்சு விடுகிறது. கொஞ்சம் யோசித்து, மற்றவர்களுக்கு கஷ்டம் அளிக்காத கட்டுமான பணிகள் செய்ய பெரிய நிறுவனங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" சுதந்திராவின் குரலில் அழுத்தம் கூடியது.

    தெரு என்பது அனைவருக்கும் பொது. யார் வேண்டுமானாலும் கட்டலாமே. அதில் தவறு என்ன இருக்கிறது?

    விக்னேஷ் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளன். பல கேள்விகளை யதார்த்தமாக கேட்பது போன்று இருந்தாலும், எதிரில் இருப்பவர் வாயிலிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகளை வர வழைக்க வேண்டும் என்று நன்கறிந்தவன்.

    நீங்க சொல்றது சரி தான். ஆனால் அதே உண்மை எங்களுக்கும் பொருந்தும். அதாவது இந்த தெரு பொது சொத்து. அதனால் தான் அடுத்து இருக்கும் காலிமனையை ஓர் அழகான பூங்காவாக மாற்ற பெரிய நிறுவனங்கள் ஏன் முன் வரக்கூடாது?

    இருக்கிற கொஞ்ச நஞ்ச மரங்களையும், வேரோடு அறுத்து வெட்டி சாய்த்து சிமெண்ட் தூண்களை உருவாக்குவது தான் கட்டிடக்கலையா? இயற்கை யோடு ஒன்றி, மக்களுக்கும் கேடு வராமல் கட்டுவது தானே கட்டிடக்கலை?

    விக்னேஷ் நிமிர்ந்து சுதந்திராவைக் கூர்ந்து கவனித்தான். அது மிகச்சாதாரண நடுத்தரவர்க்கப் பெண், பட்டப் படிப்பு, திருமணம், குடும்பம், குழந்தை குட்டி என்று வாழப் போகிறாள் என்று அவன் எடைப் போட்டது தவறு தான். விஷயமறிந்தவள். புத்திசாலி, சரியான வழிகாட்டுதல் இருந்தால் உயரத்திற்கு செல்லக் கூடியவள் தான்.

    என்ன விக்னேஷ், கேள்விகள் மறந்து விட்டதா? என்று புன்னகைத்தாள் சுதந்திரா.

    அது இல்லீங்க பொதுவாக ஐந்து கேள்விகளுக்கு ஒரு முறை ஒரு கப் காபி எனக்குத் தேவை. அதான்.

    ம், ஏங்க இது உங்களுக்கே அநியாயமாகயில்லை, இப்படி காபி குடித்தால், எப்படிங்க உடம்பு நலமாக இருக்கும்?

    அடே போங்க. எதிரில் இருக்கறவங்க சொல்ற பதிலில் என் மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை சுத்தமாக காய்ந்து விடும். அதான் காபி தேவைங்க.

    விக்னேஷின் பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்தாள் சுதந்திரா.

    அவள் கன்னத்தில் மின்னலென தோன்றி மறையும் அழகான குழியையும், முல்லைப்பூவென மின்னும் பல் வரிசையையும் கண்டு வியந்தான் விக்னேஷ்.

    சரி, சரி வாங்க. இப்படி சுத்தி வளைச்சு காபி போட்டு குடிக்கும் முதல் ஆள் நீங்க தான் என்றபடி கதவைத் திறந்தாள் சுதந்திரா.

    என்னங்க பண்றது? எங்கத் தொழிலில் இப்படி கேள்விகள் கேட்டுக் கேட்டுப் பழகி, எங்க சொந்த வாழ்க்கையிலும் ஒரு காபி கூட இப்படி கேட்டால் தான் கிடைக்கும் என்றபடி பளுவான பையை தூக்கி உள்ளே வந்தான் விக்னேஷ்.

    பால் காய்ச்சி பிரிட்ஜில் வைத்திருக்கும் அப்பாவின் கரிசனத்தை எண்ணி புன்னகைத்தபடி காபி கலந்து எடுத்து வந்தாள்.

    ஏங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க? விக்னேஷ் காபியை ருசித்தான்.

    பிஎஸ்சி பாட்டனி. அதான் தாவரவியல்.

    நினைச்சேங்க. நிலம், நீர், மரம், செடி, கொடின்னு நீங்க பேசும் பொழுதே நீங்க தாவர ஜாதின்னு புரிஞ்சுக்கிட்டேன்.

    ஏங்க நம்ம முன்னோர் நமக்காக விட்டுப் போன சொத்து வெறும் வீடும், பணமும், நகை மட்டும் தானா? மாசுப்படுத்தப்படாத ஆகாயம், நீர், நிலம் எனும் மிகப் பெரிய மூன்று சொத்துக்களை நமக்காக தந்தாங்க. ஆனால் இன்று நாம், அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வது மாசு, தூசு அழுக்கு தானே. இதை மாற்றணும் என்னால் இயன்றது செய்யறேன். அது தவறா? இயற்கையோடு ஓட்டி வாழும் முறையை மீண்டும் பின்பற்றினால் தவறா? மண்ணாசைக்கும் அளவு உண்டு. கடைசியில் ஆறடி மண் அல்லது ஒரு பிடி சாம்பலுக்குள் அடங்கப் போகும் வாழ்க்கை. அதை சரியாக, உண்மையாக வாழ்வதில் என்ன தவறு?

    சுதந்திரா பேசிக் கொண்டே போனாள். அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

    5

    அன்றிரவு சப்பாத்தி, தால் என எளிமையான உணவை உண்டு ஈசி சேரில் சாய்ந்தார் சண்முகம்.

    என்னப்பா டி.வி போடட்டுமா? என்றபடி சமையலறையை இழுத்து மூடி விட்டு ஹாலுக்கு வந்தாள் சுதந்திரா.

    இல்லைம்மா. இன்டர்வ்யூவில் என்ன நடந்ததுன்னு சொல்லு என்றார் சண்முகம்.

    சரவணன் அங்கிள் நல்லா மரியாதையாக பேசினாரப்பா. அப்புறம் நாளை முதல் மாடி ஆபீஸில் நந்தகுமாரைப் பார்க்கும்படி சொன்னாரு. 15 நாட்கள் ட்ரெயினிங். அப்புறம் ஒன்றாம் தேதியிலிருந்து வேலை என்று புன்னகைத்தாள்.

    ம். நந்தகுமாரா? கார்த்திகேயன் தம்பிக்கு கிட்டத்தட்ட வலதுகை நான் தான் அப்படீன்னு அவனிடம் கொஞ்சம் பெருமையிருக்கும், ஆனால் கார்த்திக் தம்பி கெட்டிக்காரன். 'சட்' என்று யாரையும் நம்ப மாட்டான். எதற்கும் நந்தகுமாரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா.

    என்னப்பா பயமுறுத்தறீங்க? நந்தகுமார் சார் தான் எனக்கு டிரெயினிங் அளிக்கப் போறாரு.

    அதில்லைம்மா. இது நாள் வரை நான்கு சுவர்களுக்குள் பொத்திவெச்சு வளர்ந்தவர். இப்பொழுது சிறிய வேலை தான் என்றாலும் பெரிய நிறுவனம் கட்டுமானப் பணியில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து நிற்கிறாரு கார்த்திக் தம்பி அதான் எச்சரிக்கை செய்தேன்.

    ஏம்ப்பா, எனக்கு சரவணன் அங்கிள் கிட்டேயே வேலை போட்டுத் தந்திருக்கலாம். என்னவோ, கார்த்திகேயன் சார் என்றாலே எல்லோருமே பயப் படற மாதிரி தெரியுது சுதந்திரா கவலையுடன் பேசினாள்.

    சரவணன் தம்பி நகைக் கடையிலும், ஆபீஸிலும் பெண்களுக்கு வேலை தரக்கூடாதுன்னு உள்ளே ஒரு சட்டமே இருக்குது.

    என்னப்பா அநியாயமாக இருக்குது? நகைக் கடையில் பெண்களுக்கு வேலையில்லைங்கறது சுத்த அபத்தம்ப்பா!

    வாய் விட்டுச் சிரித்த சண்முகம் பெரியய்யா வேலாயுதம் பெண்கள் வேலைக்கு போவதை விரும்பாதவரு. அதை அப்படியே சரவணன் பின்பற்று வாரு என்றார்.

    ஏம்பா, இந்த சட்டத்திட்டமெல்லாம் பெரியண்ணனுக்கு மட்டும் தானா? கார்த்திக் சார், குமரன் எல்லாம் இதற்கு கட்டுப்படமாட்டாங்களா?

    சுதந்திராவின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் சற்றே தலையை சாய்த்து கண்களை மூடினார் சண்முகம்.

    Enjoying the preview?
    Page 1 of 1