Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thozhi Deivamagiral
Oru Thozhi Deivamagiral
Oru Thozhi Deivamagiral
Ebook264 pages1 hour

Oru Thozhi Deivamagiral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவயதிலிருந்தே 'கதை சொல்லி’யாக வளர்ந்தேன். அதற்கான களத்தை ஏற்படுத்தியது என் தாய். புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் என் தந்தை.
என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னைக் கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அதை எழுத்து வடிவமாக்கும் திறன் என்னிடம் இருப்பதை உணர்ந்த தருணம் ஒரு சுகமான மயிலிறகு வருடும் தருணம்!
நான் எழுதிய கதைகளுக்குப் பெரும் இடத்தை அளித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. பத்திரிகையில் முதல் கதை வரும் பொழுது என்ன படபடப்பு இருந்ததோ, அது இன்றுவரை தொடர்கிறது.
ஒவ்வொரு கதை மூலம் ஒரு செய்தியைக் கூற விரும்பி எழுதியுள்ளேன். அச்செய்தி இப்புத்தகம் மூலமாக உங்களை வந்தடைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் கணவர் மற்றும் மகள் ராதிகாவிற்கு என் நன்றிகள்.
- காந்தலக்ஷ்மி சந்திரமௌலி
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580125905121
Oru Thozhi Deivamagiral

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Oru Thozhi Deivamagiral

Related ebooks

Reviews for Oru Thozhi Deivamagiral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thozhi Deivamagiral - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    ஒரு தோழி தெய்வமாகிறாள்...

    Oru Thozhi Deivamagiral…

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அள்ளி அணைத்திடவே கண்ணம்மா!

    2. பேரம்

    3. எல்லோருக்கும் கிடைப்பாரா வசிஷ்டர்?

    4. உண்மை

    5. ஒரு ஜோடி செருப்பு

    6. வைராக்கிய சொத்து

    7. சுகமான சுமை

    8. சம்பந்தி சமாதானம்

    9. பைரவ வேண்டுதல்

    10. சந்நியாசத்தைத் தேடி...

    11. மாடம் தந்த பாடம்

    12. தாயினும் சாலப்பரிந்து...

    13. அன்புடன் அமெரிக்காவிலிருந்து...

    14. கட்டபொம்மன்

    15. மாநிலச் சம்பந்திகள்

    16. சிக் புக் சிக் புக் இரயிலே...

    17. ஒரு தோழி தெய்வமாகிறாள்!

    18. தாத்தாவும், கிருஹப் பிரவேசமும்

    19. அப்பா என்றொரு மனிதர்!

    20. மதராஸ் நகரத் தோழர்கள்

    21. வெள்ளை மனசு பொய்

    22. ஒரு வாய் தண்ணீர்...

    23. மீண்டும் ஒரு நளாயினி

    24. என் அருமை மகனே...

    என்னுரை

    சிறுவயதிலிருந்தே 'கதை சொல்லி’யாக வளர்ந்தேன். அதற்கான களத்தை ஏற்படுத்தியது என் தாய். புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் என் தந்தை.

    என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் என்னைக் கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அதை எழுத்து வடிவமாக்கும் திறன் என்னிடம் இருப்பதை உணர்ந்த தருணம் ஒரு சுகமான மயிலிறகு வருடும் தருணம்!

    நான் எழுதிய கதைகளுக்குப் பெரும் இடத்தை அளித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. பத்திரிகையில் முதல் கதை வரும் பொழுது என்ன படபடப்பு இருந்ததோ, அது இன்றுவரை தொடர்கிறது.

    ஒவ்வொரு கதை மூலம் ஒரு செய்தியைக் கூற விரும்பி எழுதியுள்ளேன். அச்செய்தி இப்புத்தகம் மூலமாக உங்களை வந்தடைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

    என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் என் கணவர் மற்றும் மகள் ராதிகாவிற்கு என் நன்றிகள்.

    - காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    அள்ளி அணைத்திடவே கண்ணம்மா!

    1

    ஏய் வாசு, பெண்ணை நன்றாகப் பார்த்துக்கோப்பா, அப்புறம் பிடிக்கலை, கண் சின்னதாக இருக்கு, மூக்கு கோணல் என்று சொல்லக்கூடாது என்று அந்தச் சின்ன அறையில் பெரியப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது. அடுத்த கணம் நிறைய சிரிப்பு சத்தம். அவனறியாமல் அவன் கண்கள் அபர்ணாவை நோக்கின. அவள் மிக லேசாகப் புன்னகைத்தபடி வாசுவின் பெரியப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    வாசுவுக்குச் சற்றே நிம்மதியாக இருந்தது. இந்த மாதிரி பழைய பஞ்சாங்க 'ஜோக்ஸ்'க்குக் கடுகடு' என்று முகத்தை வைப்பவளல்ல இந்தப் பெண்!

    அடுத்த ‘ஜோக் அறுப்பு'க்கு முன் வாசு, அவசரமாக, நான் கொஞ்சம் அபர்ணாவோடு தனியாகப் பேச வேண்டும் என்று சற்றே உரத்த குரலில் கூறினான்.

    அந்த அறையில் உள்ள பலர் 70 வயதைத் தாண்டியவர்கள். இதையெல்லாம் நாங்கள் நிறைய பார்த்தாச்சு என்ற பாவனையில் பேசுங்கோ, உங்களை யாரும் 'டிஸ்டர்ப்’ பண்ண மாட்டோம் என்று ஒரு தாத்தா கூறவும் மீண்டும் சிரிப்பு!

    அபர்ணா அதே புன்னகையுடன் எழுந்து வந்தாள். வாசுவின் 6 அடி, 2 அங்குலத்திற்குப் பொருத்தமான ஐந்தே முக்காலடியில் தங்கச்சிலை போன்ற அழகு. அபர்ணாவை விட வாசு சற்று நிறம் கம்மிதான் என்றாலும் வாசுவின் 'பளிச்' என்ற புன்னகையும், கம்பீரமும் அவனை மிக அழகானவனாகக் காட்டியது.

    'ஓஷனோகிராஃபி' எனும் கடல் சார்ந்த படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற அவனுக்குச் சரித்திரப் பாடத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற அபர்ணாவை மிகவும் பிடித்துவிட்டது. ‘அவனுக்கு என்னைப் பிடித்திருக்குமா?' அபர்ணாவின் மனதில் கேள்வி ஓட, வாசு நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான். நாம் இருவரும் 'சரி' என்று கூறிவிட்டால் போதும். அடுத்த பத்து நாட்களில் திருமணம் முடிந்துவிடும். ஐ ஆம் சாரி, நான் இப்படிக் கேட்பது ஓர் அவசர குடுக்கைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இந்த ‘அரேன்ஜ்டு மேரேஜில்' அழகும் இருக்கிறது. ஆபத்தும் இருக்கிறது. நம் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருப்பது தான் இத்திருமணத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். மற்ற எதையும் இங்கு எதிர்பார்க்க முடியாது. அதாவது என்னுடைய ஒரே கேள்வி உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?" என்றான் வாசு.

    ஒருவேளை நீங்கள் பேசும் பொழுது மூக்கால் பேசிக் கொண்டு, சூயிங்கம் மென்று கொண்டு அமெரிக்க மாப்பிள்ளையாகப் பேசுவீர்களோ என்று எனக்கொரு பயம் இருந்தது!

    பொதுவாகப் பெண் பார்க்கும் படலத்தில் பெரியவர்கள் அடிக்கும் 'கெக்கே பெக்கே' ஜோக்ஸுக்கு நீங்கள் கோபப்படுவீர்களோ என்று நினைத்தேன். நல்ல காலம் இப்படி நீங்கள் எதுவும் செய்யாததால் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றான் வாசு. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? தயவு செய்து நீங்கள் ரொம்ப அழகு என்று வழிந்து விடாதீர்கள். எனக்கு அது பிடிக்காது என்றாள் அபர்ணா.

    வொண்டர்புல், நீங்கள் ஒரு வித்தியாசமான இந்தியப் பெண் என்பதாலேயே எனக்கு உங்களைப் பிடித்துவிட்டது போதுமா? என்று கூறிய வாசு, அபர்ணாவின் புன்னகையை ரசித்தான்.

    பதினைந்து நாட்கள் கழித்துத் தன் அறையின் கண்ணாடி முன்நின்று கொண்டிருந்தாள் அபர்ணா. 'நான் இப்பொழுது திருமதி அபர்ணா வாசுதேவன்' என்று கூறிக் கொண்டாள்.

    உனக்கென்னம்மா மாமியார், நாத்தனார் பிடுங்கல் கிடையாது, கொடுத்து வைத்தவள்! அமெரிக்க மாப்பிள்ளை, தனிக் குடித்தனம் என்று உதவிக்கு வந்த அனைத்து உறவினர்களும் லேசான பொறாமையுடன் கூறுவதைச் சிரித்தபடி ஏற்றுக் கொண்டாள்.

    நாளை அதிகாலை 3.00 மணிக்கு அமெரிக்காவிற்குக் கிளம்பப் போகிறேன் நான். அம்மா, அப்பா, தம்பி ரகு இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஓர் அந்நிய நாட்டில் மகிழ்ச்சியுடன் இருப்பது சாத்தியமா?

    பிடித்துவிட்டது என்று நினைத்த கணவன் நெருங்கிய நண்பனாகி விட்டான். இந்த நண்பனோடு வாழ்க்கை நடத்திக் கணவன் மனைவியாக மாறி ஒரு குடும்பப் பெண்ணாக வாழ்க்கை நடத்த வேண்டுமா? என்று சற்றே யோசித்தாள் அபர்ணா. உறவினர்கள் வீட்டிற்கெல்லாம் அவளோடு வாசு தயங்காமல் வந்ததும், புகுந்த வீட்டு உறவினர்களின் வீட்டிற்கு ஜோடியாகச் சென்றதையும் எண்ணி மகிழ்ந்தாள். மீண்டும் இவர்களையெல்லாம் காண இரண்டு வருடங்கள் ஆகுமோ? மனம் கனத்தது.

    தன்னுடன் படித்த நண்பர்களை சந்திக்கச் சென்றிருந்தான் வாசு. சாப்பிடுவதற்கு வரமாட்டேன் என்று மாமியாரிடம் கூறி விட்டுத்தான் சென்றிருந்தான்.

    சாப்பிடும்பொழுது அப்பா மெதுவாகப் பேச்சைத் துவங்கினார். ஏம்மா புது நாடு, புது வாழ்க்கைன்னு உனக்கு எல்லாம் மாறுது திடீரென்று உனக்கு நிறைய பொறுப்புகளைத் தந்துவிட்டோமோ என்று என் மனம் தவிக்கிறது. நீ படித்த படிப்பையும் வீணாக்காமல், உன் நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை தேடித் தரும் சக்தி உன்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். வாசு மிக நல்லவர், உண்மையானவர். எந்தவிதத் தீய குணங்களும் இல்லாதவர். மகிழ்ச்சியாக வாழ்வது என்பது உன் கையில்தான் இருக்கின்றது. மற்றவர்கள் உனக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியாது. ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் நன்கு யோசித்துச் செய் என்று அப்பா மென்மையாகக் கூற, அபர்ணாவின் கண்களில் நீர் திரண்டது.

    மறுநாளுக்கு மறுநாள் அமெரிக்க மண்ணில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைக்கையில் அம்மாவின் ஞாபகம் வந்தது. புது மணப்பெண்ணாக அம்மாவும் இப்படித்தான் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும்பொழுது இருந்திருப்பாளோ?

    2

    அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற நியூயார்க் நகரத்திலிருந்து வெகு தூரம் சென்ற அவர்களது வண்டி ஒரு வீட்டின் வாசலில் நிற்கும் பொழுது இதுதான் நம் வீடு என்றான் வாசு.

    அவள் கண்களுக்கு அது ஒரு பெரிய பங்களாபோல் தோன்றியது. இவர்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மற்றொரு வீடு இருந்தது. ஐந்தாறு சூட்கேஸ்களுடன் வாசுவின் கைகளைப் பற்றியபடி, அம்மா கூறியபடி வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் அபர்ணா.

    ஒரு டிராயிங் ரூம், ஒரு லிவிங் ரூம், ஒரு சாப்பாடு அறை, இரண்டு பெரிய படுக்கை அறை, ஒரு சிறிய படுக்கை அறை என்று அவ்வளவு பெரிய வீட்டில் எப்படித் தனியாக இருக்கப் போகிறோம் என்று யோசித்தாள் அபர்ணா.

    நல்ல மஞ்சள் நிறத்தில் திரைச் சீலைகளும், மஞ்சளும், சிவப்பும் கலந்த தரை விரிப்புகளுமாக வாசு மிக அழகாக அந்த வீட்டை வைத்திருந்தான்.

    பத்து நாட்களுக்குள் அமெரிக்கா வாழ்க்கை பிடிப்பட்டு விட்டது. டிஷ் வாஷர், வாஷிங் மெஷின், இந்தியாவிலிருந்து கொண்டு வந்த அத்தனை தின்பண்டங்களையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் டீப்ஃப்ரீசர்கள் என்று எதுவும் அவளுக்குப் புதிதாக தோன்றாவிட்டாலும் அனைத்தையும் இந்தியாவில் ஏற்கனவே பார்த்திருந்தாலும், மனிதவாடையே இல்லாமல் இருப்பது மட்டும் ‘இது அமெரிக்கா' என்று அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

    நண்பனாக இருந்த கணவன் அன்பும், பாசமும், காதலும் கொண்ட கணவனாக மாற அதிக நாட்கள் பிடிக்கவில்லை.

    அடுத்த மாதமே, நீ என்ன குடும்பத் தலைவியாக இருக்க ஆசைப்படுகிறாயா அல்லது வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறாயா? என்று கேட்டான் வாசு. எனக்கு மேற்கொண்டு படிக்க, அதுவும் சரித்திரப் பாடத்தில் முனைவர் பட்டம் வாங்க ஆசையாக இருக்கு என்று சிறிதும் தயக்கமின்றிக் கூறினாள் அபர்ணா.

    வாரத்தில் இரண்டு நாட்கள் அம்மா, அப்பா தம்பியுடன் பேசுவதும், வாசு வந்தவுடன் அவனுடைய குடும்பத்தாருடன் பேசுவதுமாக, உறவினர்களுடனும் தொடர்பு விட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டாள் அபர்ணா.

    கூகுள் தேடல்களில் தன் படிப்பிற்குத் தேவையான பல்கலைக் கழகங்களோடு தொடர்பு கொண்டாள் அபர்ணா. எந்தப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று நீ பார்க்க வேண்டும் என்று கூறினால் நான் அழைத்துச் செல்கிறேன் என்று கூறிய கணவனிடம், நீங்கள் இப்படித்தான் எல்லோரிடமும் சுமுகமாகத் தான் பழகுவீர்களா? உங்களுக்குக் கோபம் வராதா? என்று கேட்டாள் அபர்ணா.

    சிறு வயதிலேயே தந்தையையும், வளரும் பொழுது தாயையும் இழந்துவிட்ட நான், யாரிடம் என் கோபத்தையும் துக்கத்தையும் காண்பிப்பது? அதனால் என்னைச் சுற்றி இருப்பவர்களின் அன்பை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன் எனப் புன்னகையுடன் கூறினான் வாசு.

    பிறகு தயங்கியபடி, அபர்ணா, நமக்குக் குழந்தை பிறந்தால் உன் படிப்பு தடைபட்டுவிடும். அதனால் யோசித்து முடிவு செய் என்றான். முதலில் குழந்தை பிறகுதான் படிப்பு என்று எனக்குத் தோன்றுகிறது, இது சரியா என்று கணவனின் மடியில் தலையை வைத்துக் குழந்தைபோல் பேசும் மனைவியைப் பார்த்தான் வாசு.

    இல்லம்மா, குழந்தை பிறந்தால் ஒரு ஆறு வருடம் அக்குழந்தையுடன் தான் நீ செலவிட வேண்டும். பெற்ற குழந்தைக்கு ஒரு தாயின் அவசியம் மிகவும் தேவை என்று எனக்குப் புரிகிறது. ஆனால், இங்கு குழந்தை வளர்ப்பு என்பது இந்தியா மாதிரி அல்ல. பல விஷயங்களை நீ தனியாகக் கையாள வேண்டி இருக்கும். குழந்தை மிக அதிகமாக அழுதால் கூட அது சட்டப்படி குற்றம். அதுதான் இன்னும் ஒரு இரண்டு வருடங்கள் தாண்டிய பிறகு நமக்கென்று ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டால் உனக்கும் வளர்ப்பதில் கஷ்டம் இருக்காது என்றான் வாசு.

    விவரமாக, அமைதியாகப் பேசும் கணவனின் தொலைதூர நோக்கு அவளை நெகிழ்த்தியது.

    சரி வாசு, நான் படிப்பை முடிப்பதற்கும், நமக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த யோசனைதான் சரி என்று கூறிய அபர்ணா, அடுத்த சில நாட்களிலேயே கணினி மூலமாக தன் படிப்பைத் தொடரக்கூடிய விஷயத்தை நன்கு புரிந்து வாசுவின் உதவியோடு தன்னுடைய முதல் ஆசையின் பாதையில் நடக்கத் துவங்கினாள்.

    இரண்டு வருடங்களுக்குள் ஒரு முறை அம்மா, அப்பா ரகு வந்து மூன்று மாதம் தங்கியதில் மனம் பெறும் நிறைவு கொண்டது. கார் ஓட்டப் பழகி லைசென்ஸ் வாங்கிக் கொண்டாள். கணினியில் பல புது விஷயங்களைக் கற்றுக் கொண்டாள். காலை ஆபீஸ் செல்வதற்கு முன்பே அவளைக் கல்லூரியில் விட்டுவிடும் வாசு வீடு திரும்புவதற்குள், அபர்ணா வீட்டில் சூடாகச் சமைத்துக் கணவனின் வருகைக்காகக் காத்திருப்பாள்.

    இரண்டு வருடங்களில் எம்.பில் முடித்த அபர்ணா, மூன்றாவது வருடம் படிப்பைத் தொடர்ந்தாள். அவளுக்குப் பிடித்த பாடமான உலக சரித்திரம், அதன் மூலமாக அவள் தெரிந்து கொண்ட விஷயங்கள், அதற்கென்று அவள் எழுதிய கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என்று அவள் உடலும், மனமும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்தது. அமெரிக்காவின் சுதந்திரம் அவளுக்குப் பிடித்து விட்டது. தனிமையும் பழகிவிட்டது. அதனால் தானோ என்னவோ வெறுமை எட்டிப் பார்க்கையில் அவளால் அதை உணர முடியாமல் போனது.

    வாசு லண்டனுக்கு அலுவலக விஷயமாகச் சென்றிருந்தான். 10 மைல் தள்ளி இருக்கும் டிபார்ட்மெண்ட் கடைக்குத் தன் வண்டியை அனாயாசமாக ஓட்டிச் சென்றாள் அபர்ணா. வண்டியை நிறுத்திவிட்டுக் கடைக்குள் சென்று சாமான்களை டிராலியில் எடுத்துப் போட்டுக் கொண்டே செல்கையில் அவளுக்கு எதிரே ஒரு கணவனும் மனைவியும் வந்து, கொண்டிருந்தனர். ஆஜானுபாகுவான அவருடைய கழுத்தில் ஒரு பை, அந்தப் பையில் அழகாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை!

    3

    'கொழு கொழு' என்று ரோஸ்நிறக் கன்னங்களும், நீல விழிகளோடு தந்தையின் கழுத்திலிருந்து லகுவாக தொங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அபர்ணாவைப் பார்த்துச் சிரித்தது.

    அமெரிக்காவில் பார்த்த உடனே மற்றவர்களின் குழந்தைகளைக் கொஞ்ச முடியாது என்று உணர்ந்த அபர்ணா, அந்தக் குழந்தையைப் பார்த்துச் சிரித்து விட்டுத் திரும்பிக் கொண்டாள். அதன் ரோஜா நிறக் கன்னங்களைப் பிடித்து இழுத்து முத்தமிட பரபரத்த கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஒரு வாரத்திற்கான சாமான்களையும், காய்கறிகளையும் டீப் ஃப்ரீசருக்குள் அடுக்கிக் கொண்டிருக்கையில் ‘நமக்கென்று ஒரு குழந்தை வேண்டும்' என்று சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. வாசுவிடம் ஆராய்ந்து அலசி பேசியதெல்லாம் மறந்து போயிற்று.

    படாதபாடுபட்டு கடும் உழைப்போடு செய்யும் உலகச் சரித்திர ஆராய்ச்சி அவள் மனதை விட்டு அகன்றுவிட்டது.

    உடனே வாசுவிடம் கைப்பேசியில் பேசினாள். கமான் அபர்ணா, நீ முனைவர் பட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். நான் என் நிறுவனத்தின் தலைவராக இருப்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன், என்ற வாசு நாளை நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டுக் கைப்பேசியை அணைத்து விட்டான்.

    லேசாக மனம் தளர்ந்துவிட, அன்றிரவு தூங்க முடியாமல் தவித்தாள் அபர்ணா.

    மறுநாள் காலை வாசு வருவதற்குள் அபர்ணா கிளம்பி விட்டாள். திரும்பி வீட்டிற்கு வரும்பொழுது கல்லூரியில் தன் சினேகிதி ஜுலியாவின் கணவனான கைனகாலஜிஸ்ட் ராபர்ட்சனின் தொலைபேசி எண் அவள் கைகளில் இருந்தது. ஒரு வாரம் கழித்துத்தான் டாக்டரின் அப்பாயின்மென்ட் கிடைக்க, வாசு எவ்விதத் தயக்கமுமின்றி அவளோடு மருத்துமனைக்குச் சென்றான்.

    திருமணமாகி 3 வருடங்கள், கர்ப்பத்தடை மாத்திரைகள், ஸோ, யூ ஆர் பிளானிங்க் ஃபார் எ சைல்ட். டாக்டர் ராபர்ட்ஸன் கைகளைக் கழுவிக் கொண்டே பேசினார். உடைகளை மாற்றிக் கொண்டு வந்த அபர்ணாவை சிட் டவுன் என்றார்.

    உங்கள் இருவருக்கும் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. ஐ டோன்ட் ஃபைன்ட் எனி பிராப்ளம்! இருந்தாலும் அபர்ணாவுக்கு ஒரு ஸ்கேன் மற்றும் உங்களுக்கு சில டெஸ்டுகள் தென் யூ கேன் கோ அஹெட். டாக்டரின் வார்த்தைகள் பெருத்த நிம்மதி தர அபர்ணாவின் முகம் தெளிவுபெற்றது.

    "நாம் பெரிய வீட்டுக்கு மாறணுமா? குழந்தை பிறந்து விட்டால்

    Enjoying the preview?
    Page 1 of 1