Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaar Kazhuthukku Maalai
Yaar Kazhuthukku Maalai
Yaar Kazhuthukku Maalai
Ebook148 pages1 hour

Yaar Kazhuthukku Maalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466367
Yaar Kazhuthukku Maalai

Read more from Vimala Ramani

Related to Yaar Kazhuthukku Maalai

Related ebooks

Related categories

Reviews for Yaar Kazhuthukku Maalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaar Kazhuthukku Maalai - Vimala Ramani

    25

    1

    ஏர் பிரான்ஸ் 179 பறந்து கொண்டிருந்தது.

    பம்பாயிலிருந்து சரியாக நடுநிசி 12.40 க்கு ஃப்ளைட். ஆதர்ஷ் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான்.

    இது, முதல் வெளிநாட்டுப் பயண அனுபவம். கொஞ்சம் பயம் கலந்த த்ரில் இருந்தது. இவன் பத்து மணி நேரம் பறந்த பின் பாரிஸை அடையும்போது அந்த நாட்டு மணிப்படி காலை 6.05’ க்கு இவன் பூலோக சொர்க்கத்தில் காலடி எடுத்து வைப்பான்.

    இவனது பயண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கபீல்தான் கவனித்துச் சார்ட் போட்டுத் தந்திருந்தான்.

    இவனுக்கு ‘ஸ்பெஷல் மீல்ஸ்’ என்று முத்திரை குத்தினாலும் குத்தினார்கள், அந்த பிரஞ்ச் அதி ரூபலாவண்ய அழகி, ஏர்ஹோஸ்டஸ் வெள்ளைத் தலையும், லிப்ஸ்டிக் உதடுகளுமாக இவன் அருகில் குனிந்து இவனுக்கு வேண்டாத சபலங்களை உண்டாக்கி, புரியாத பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்த பாஷையில்

    ஏதாவது வேண்டுமா? ஏதாவது வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

    ஆசை தீர ஷாம்பேன் குடித்தாகிவிட்டது. வயிறு முட்ட ஸ்பெஷல் மீல்ஸ். இன்னும் என்ன வேண்டும்?

    நீதான் வேண்டும் என்று சொன்னால் உதைக்க வருவாளோ?

    பாரிஸ் பயணமா? ஜமாய்டா ராஜா. அங்கேயெல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியா எல்லாம் கிடைக்கும். ஓபன் செக்ஸ்தான்! வாழ்த்த வந்த நண்பன் ஒருவன் வயிறெரிந்து பேசினான்.

    செக்ஸ் ஓபனா இருந்தாதான் நல்லது. இவன் சொன்னபோது நண்பர்கள் சிரித்தார்கள்.

    பிகால் ஏரியாவுக்கு ராத்திரி நேரத்துல போயிடாதே. அங்கே எல்லாம் ‘அந்த மாதிரி’ சமாசாரம் ரோம்ப ஜாஸ்தி. கற்புள்ள பையனாத் திரும்பி வா கண்ணு.

    இவனுக்கு இதுக்கு முன்னால கற்பு இருந்ததா என்ன? இப்போ என்ன புதுசா?

    ஆதர்ஷ் கேட்டான்.

    கற்பா? அப்படீன்னா என்னப்பா?

    நம்மகிட்டே இல்லாதது. ஆனா, வரப்போற நம்ம மனைவிகிட்டே இருக்கணும்னு நாம எதிர்பார்க்கிறது.

    அனைவரும் சிரித்தனர்.

    லீடோ ஷோ பார்க்கத் தவறிடாதே.

    அந்த ஷோவிலே டாப்லெஸ் எல்லாம் உண்டு, தெரியுமா?

    நானே பாக்கெட்லெஸ்ஸாத்தான் போறேன். மொத்தமே ஆயிரம் பிராங்க்ஸ்தான் செலவழிக்க முடியும். இதுலே டாப்பாவது பாட்டமாவது?

    பாரிஸ்லே எல்லாம் திங்ஸ் ரொம்ப காஸ்ட்லி. வாங்க முடியாது. பேசாம விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு வா.

    பர்ஃப்யூம் எல்லாம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும். ஏதாவது வாங்கிட்டு வா.

    நண்பர்களில் வழியனுப்புதலுக்கும், ஐஸ்வர்யாவின் வழியனுப்புதலுக்கும்தான் எத்தனை வித்தியாசம்.

    ஐஸ்வர்யா? இவன் மனைவி. இவன் சந்ததியைத் தன் வயிற்றுள் கருவாகச் சுமந்திருக்கும் இவன் மனைவி. பம்பாயில் அவளிடம் விடைபெறும் முன் என்ன சொன்னாள்?

    ஆதர்ஷ், பாரிஸ்லே, லண்டன்லே எல்லா இடங்களையும் சுத்திப் பார்த்துட்டு வாங்க. ஆனால் எங்கே போனாலும் நான் இங்கே இருக்கேன்னு மட்டும் மறந்துடாதீங்க.

    ஆதர்ஷ் சிரித்தான்.

    என்ன ஐஸ்வர்யா புதுசாப் பேசறே? நீ மட்டும் இப்போ பிரக்னன்ட்டா இல்லாம இருந்திருந்தா உன்னையும்தான் கூடக் கூட்டிட்டுப் போயிருப்பேன்.

    பரவாயில்லை. நான் டெலிவரி முடிஞ்சு வந்ததும் நாம ரெண்டு பேருமா துபாயிலே இருந்து அப்படியே பாரிஸ், லண்டன் போகலாம்.

    முதல்லே நான் திரும்பி வந்தவுடனே உனக்குப் பர்மனெண்ட் விசாவுக்கு ஏற்பாடு பண்ணணும். இந்த விசிடர்ஸ் விசாவிலே எத்தனை நாள்தான் நாம துபாயிலே வாழறது? மூணு மாசம். பீரியட் தீர்ந்தவுடனே உன்னை ஜட்டாவுக்கு அனுப்பறதும், மறுபடியும் விசிடர்ஸ் விசாவைப் புதுப்பிக்கறதும், திரும்பி வந்தவுடனே முதல் காரியம் உனக்கு ஒரு விசா. துபாயிலே நல்ல பெரிய வீடாப் பாக்கப் போறேன். இந்த ட்ரிப் முடிஞ்சதும் வேற இடத்துல வேலைக்குச் சேரப் போறேன். ரொம்ப நாளா ஒரு ஷேக் கூப்டுட்டே இருக்கார். ஐயாயிரம் திராம் சம்பளம் கிடைக்கும்.

    ஐஸ்வர்யா அவன் கைகளை எடுத்துத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள்.

    டையன் உதைக்கிறான்... தெரியுதா?

    தெரியலியே...

    இதோ பாருங்க. இங்கே, இங்கே...

    ஆதர்ஷின் கண்களில் குறும்பு மின்னியது. இப்படிப் புடவையைச் சுத்திட்டுப் பையன் உதைக்கறான்னா என்ன புரியும்? புடவையை...

    சீ... சீய்...

    ஐஸ்வர்யா எக்கச்சக்கமாய் வெட்கப்பட்டாள். இருவரும் சற்று நேரம் அன்பில் கட்டுண்டு அப்படியே கிடந்தார்கள்.

    ஐஸ்ஸு, பாரிஸிலே இருந்து உனக்கு என்ன வேணும்?

    ஒண்ணும் வேண்டாம். நீங்க பத்திரமாத் திரும்பி வந்தாப் போதும்.

    என் செல்லம்! அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஆதர்ஷ்.

    பிரான்சுலே எல்லாம் பிகினி டிரெஸ் ஃபேமஸ். உனக்கொண்ணு வாங்கிட்டு வரவா? அதை நீ போட்டுட்டு...

    ஐஸ்வர்யா சிரித்தாள்.

    இந்த உடம்புலே பிகினி டிரெஸ் வேறயா?

    அட, தொப்பைக்குள்ளே மகன் என்ன நிரந்தரமா குடி இருக்கவா போறான்? குழந்தை பிறந்தவுடனே நீ பழைய மாதிரி சிக்குன்னு இருப்பே! நான் கப்புன்னு...

    போதும் நிறுத்துங்க.

    ஐஸ்வர்யா, உன்னை நான் எத்தனை உசத்தியா வைச்சுக்கணும்னு ஆசைப்படறேன் தெரியுமா? பிறந்த வீட்டிலே நீ எதையும் அனுபவிக்கலை. உன்னை சந்தோஷமா வைச்சுக்கறதுதான் என் வாழ்வோட லட்சியம். அதுக்குத்தானே துபாய்க்குப் பணம் சம்பாதிக்கப் போனேன். பல்லைக் கடிச்சுட்டு அஞ்சு வருஷம் தாண்டிட்டா அப்பறமா நாம இன்னொரு ஷேக் ஆயிடலாம்,

    ஷேக் எல்லாம் வேண்டாங்க. நாம இந்தியர்களாகவே இருப்போம்.

    ஏன்?

    சின்ன வீடு, பெரிய வீடு, எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு...

    சீ... சீ... கழுதை. புத்தி போகுது பார். நான் இந்திரனா மாறினாக்கூட என் பக்கத்துல ஒரே ஒரு அரியாசனம்தான். அதில் இந்திராணி மட்டும்தான் அமரலாம். அதாவது நீ மட்டும்தான். என் சபையில் ரம்பை, ஊர்வசி, மேனகா எல்லாம் நடனம் ஆடவே மாட்டார்கள்.

    ஏன், அவங்களுக்குக் கால் சுளுக்கா?

    சீ... சீ... அவ்வளவு யோக்கியன் நான்னு சொன்னேன்.

    இருவரும் சிரித்தனர்.

    பாரிஸ் லண்டனிலிருந்து நேரே துபாய் போய் என்னிடம் ஒப்படைத்த வேலைகளை முடித்துவிட்டு நேரே பம்பாய்தான் வருவேன். உன்னைப் பார்க்க வருவேன். அதுக்குள்ளே எனக்கு மகன் பொறந்த செய்தியோட காத்திருப்பாயா?

    காத்திருப்பேன், கண்டிப்பாய்க் காத்திருப்பேன், என்ற ஐஸ்வர்யா கேட்டாள். ஏங்க என்ன வேலையா இப்போ திடீர்னு பாரிஸ் கிளம்பறீங்க?

    ஆபீஸ் வேலையாக் கிளம்பறேன், என்ற ஆதர்ஷ் திடீரென்று மௌனமானான்.

    ஆபீஸ் வேலை!

    யாரோ தன்னை தொட்ட மாதிரி ஆதர்ஷ் தன் நினைவிலிருந்து திரும்பினான். ஏர்ஹோஸ்டஸ் இவன் மேல் போர்த்தி இருந்த கம்பளிப் போர்வையைக் கர்மசிரத்தையுடன் சரி செய்து கொண்டிருந்தாள். அந்த ஃப்ளைட்டே தூங்கிக் கொண்டிருந்தது.

    இவன்தான் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். ஃபிளைட்டில் டி.வி.கூடத் தூங்கி விட்டது. இவன் சானல் மாற்றி சங்கீதம் கேட்டுச் சோர்ந்து போனான். ஆனால் உறக்கம்தான் வரவில்லை. யாராவது இந்த இனிமையான இரவிலே தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க மாட்டார்களா? ஆதர்ஷ் மீண்டும் மனத்தளவில் மனைவியுடன் வாழ்ந்தான்.

    2

    முதன் முதலில்

    பம்பாயில்தான் ஆதர்ஷ் ஐஸ்வர்யாவைச் சந்தித்தான். நண்பன் வீட்டுக்குப் போனபோது எதிர் ‘பில்டிங்கில்’ தற்செயலாய் ஐஸ்வர்யா ஐஸ்வர்யமாய்க் கிடைக்க...

    நண்பன் மூலம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொண்டான் ஆதர்ஷ். ஐஸ்வர்யாவின் தந்தை பம்பாயின் பரபரப்பில் காலை ஏழு மணிக்கு எலெக்ட்ரிக் ரயிலில் காணாமல் போய், இரவு எட்டு மணிக்கு வீட்டில் உதயமாகிற ஓர் இயந்திரத் தந்தை என்பதைப் புரிந்து கொண்டான். இந்த இயந்திரத் தனத்தில் ஐஸ்வர்யா தன் அப்பாவின் மூன்றாவது கடைக்குட்டி என்பது புரிந்தது.

    ஐஸ்வர்யாவின் இரண்டு அக்காமார்களும் அப்படி இப்படி ஆபீசில் வேலை பார்த்து அங்கேயே பெரிய ஆபீசர்களைக் காதலித்து வாழ்வில் செட்டில் ஆனவர்கள். இதனால் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்கிற பிரக்ஞையே பெற்றோர்களுக்கு மறந்து போயிற்று.

    ஆனால் ஐஸ்வர்யா அப்படிப்பட்டவள் அல்ல. அவளால் இந்தப் பம்பாய் நெரிசலில் எலெக்டிரிக் ரயில் பிடித்து வேலைக்கும் போக முடியவில்லை, வீட்டில் வீணாகவும் உட்காரப் பிடிக்கவில்லை.

    உடம்பு அத்தனை திடம் போதாது. பம்பாயில் ஒவ்வொரு பெண்கள் ஜங் ஜங்கென்று என்னமாய் கூட்டத்தில் ரயிலில், பஸ்ஸில் இடம் பிடித்து. ஆண்களை நொறுக்கித் தள்ளி முன்னேறி.

    Enjoying the preview?
    Page 1 of 1