Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vennilaave Vennilaave
Vennilaave Vennilaave
Vennilaave Vennilaave
Ebook87 pages1 hour

Vennilaave Vennilaave

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466367
Vennilaave Vennilaave

Read more from Vimala Ramani

Related to Vennilaave Vennilaave

Related ebooks

Related categories

Reviews for Vennilaave Vennilaave

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vennilaave Vennilaave - Vimala Ramani

    19

    1

    என் பெயர் வெண்ணிலா.

    அந்த நிலா சிரித்தது.

    இவன் - தருண் - இங்கு மாற்றலாகி வந்து ஒரு வாரம்தான் ஆயிற்று. கம்பெனி குவார்ட்டர்ஸ் இன்னும் ‘அலாட்’ ஆகவில்லை. இப்போதைக்கு நல்ல ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்துத் தங்கி இருக்கிறான். அலுவலகக் ‘கார்’ இவனை ஆபீஸ் அழைத்துப்போக, திருப்பிக் கொண்டு வந்துவிட ஹோட்டல் வாசலில் காத்திருக்கிறது.

    இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகத்தில் ஒவ்வொருவராகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.

    இந்நிலையில்தான் அந்த நிலா சிரித்தது.

    என் பெயர் வெண்ணிலா - என்றது.

    தொடர்ந்து வெண்ணிலா சொன்னாள்.

    உங்கள் பர்சனல் அஸிஸ்டண்ட். இன்னிக்குதான் நானும் ட்யூட்டி ஜாயின் பண்றேன்!

    வாவ்! இவ்வளவு அழகான பர்சனல் அஸிஸ்டண்ட்டா? இத்தனை நாளாக இவனுக்கு அஸிஸ்டண்ட் மானேஜர் உத்தியோகம்தான். இவனுடைய ஜி.எம்.மின் பி.ஏவைப் பார்த்து இவன் ‘ஜொள்ளு’ விட்ட கதை பழங்கதை!

    இப்போது இவன் கனவு நனவாகி இருக்கிறது. எம்.பி.ஏ. முடித்து உழைத்து - கம்பெனியின் நல்மதிப்பைப் பெற்று இன்று கம்பெனி செக்ரட்டரியாக உயர்பதவிக்கு வந்திருக்கிறான். பெரிய ரிப்யூடட் கம்பெனி. இந்தக் கம்பெனியின் ‘ப்ராடக்ட்களுக்கு’ உலகச் சந்தையில் ஏக வரவேற்பு. ‘கம்பெனி ஷேர்ஸ்’ ஏகப்பட்ட விலைக்குப் போகிறது. கோடிக் கணக்கான முதல் போட்டு நடத்தப்படும் கம்பெனி. மெஷினரிகள் எல்லாம் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. விலை உயர்ந்த மிஷின்கள் என்பதால் அவைகள் ஏஸி ரூமில்தான் இயங்கும். மனிதனுக்கு ஏஸி தேவைப்படுகிறதோ இல்லையோ, இந்த மிஷின்களுக்கு கண்டிப்பாக ஏஸி தேவை.

    ‘பைப்ராக்ட்டாக’ சூர்யகாந்தி எண்ணெய் தயாரித்தல், ஆட்டா மாவு தயாரித்தல் போன்ற பல தொழில்கள் வேறு. இதைத் தவிர கழிவுப் பொருட்களை ‘ரீசைக்கினிளிங்’ செய்வதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள்.

    சுற்றுப்புறச் சூழல் பற்றியும், சுகாதாரம் பற்றியும், சமூக அமைப்புகள் கரடியாகக் கத்தி என்ன பயன்? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவர்களுக்கு ஒரு தூசு. இந்த உயர்தர அதிகாரிகள் ஏஸி ரூமில் அமர்ந்தபடி அடுத்த ‘ப்ராஜக்ட்டுக்கு’ திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதாவது கோர்ட், கேஸ் என்றால் தருண் சூட்கேஸுடன் டெல்லி பறப்பான். கேஸும் பஞ்சாய்ப் பறந்துவிடும்! இந்த ‘மாமூல்’ வாழ்க்கை பழகிவிட்டது.

    இவர்களது பாக்டரி மேட்டுப்பாளையத்தின் அருகே இருக்கிறது. இவனுக்கு ஆபீஸ் அட்மினிஸ்டிரேஷன்தான்! ஆபீஸ் ரேஸ் கோர்ஸில்!

    இவன் கூட இப்படியும் அப்படியுமாக முன்னேறியவன்தான்! படிப்பும், தகுதியும், மட்டும் இருந்தால் போதுமா? கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெற வேண்டியதைப் பெறத்தானே வேண்டி இருக்கிறது,

    கம்பெனிச் சலுகைகள். பெரிய பெரிய ஊர்களில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஏஸி ரூம்கள். விமானத்தில் பறக்க பயண வசதிகள். எக்ஸிக்யூடிவ் வகுப்பு வசதிகள் - தருண் பழக்கப்பட்டு விட்டான்!

    இதற்கு முன் இருந்த ஜி. எம்மை ஓரம்கட்டி இவன் இந்தப் பதவிக்கு வருவதற்குள் - இவன் பட்ட பாடு இவனுக்குத்தான் தெரியும்!

    குட்மார்னிங் ஸார் - ஐயேம் வெண்ணிலா...

    மறுபடியும் அந்த நிலவு நினைவுபடுத்தியது.

    வெல்கம் - ப்ளீஸ் பீ சீடட்...

    என்றான் அவன்.

    சூரிதாரும், ஹை ஹீல்ஸ் சப்பலுமாக தன் எதிரில் அமர்ந்த அந்த நிலாவையே பார்த்தான் தருண்.

    துப்பட்டா எங்கோ கழுத்தைச் சுற்றி பரமசிவனின் நாகம் மாதிரி ‘சிவனே’ என்று இருந்தது.

    இவன் நிலவை ரஸித்துப் பார்த்தான்.

    2

    "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?"

    - தருண் மெல்லப் பாடியபடி டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டான். ‘விளையாட’ ஜோடி இப்போது வெண்ணிலாதான்!

    இப்போதெல்லாம் ஆண்கள் கூட ப்யூட்டி பார்லர் போகிறார்கள்... ப்ளீச்சிங்...

    பேஷியல் என்று பண்ணிக் கொள்கிறார்கள். ‘ஜிம்முக்கு’ போய் உடம்பை ‘ஜிம்’ மென்று வைத்துக் கொள்கிறார்கள்! ஸ்விம்மிங் கிளாஸ், கராத்தே என்று விடுவதில்லை. இப்போதெல்லாம் அழகு பற்றி எச்சரிக்கை உணர்வு அதிகம் வந்துவிட்டது. ஐம்பது வயதுக்காரன் கூட ‘டை’ அடித்து இளைஞனாகக் காட்சி தருகிறான்.

    ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’! உமாவுடன் பேசத் துடிக்கிறான். தனக்குப் பிடித்த பாட்டு என்று இரட்டை அர்த்தமுள்ள பாட்டை விரும்பிக் கேட்கிறான்.

    தருணுக்கு என்ன அப்படி வயதா ஆகிவிட்டது, கிட்டத்தட்ட முப்பது முப்பத்தி ஐந்து வயதிருக்கும். ஆனால் இவனுக்கு இந்த அழகு பற்றிய ஞானோதயம் கொஞ்சம் தாமதமாக

    Enjoying the preview?
    Page 1 of 1