Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனவு மெய்ப்பட வேண்டும்...
கனவு மெய்ப்பட வேண்டும்...
கனவு மெய்ப்பட வேண்டும்...
Ebook97 pages32 minutes

கனவு மெய்ப்பட வேண்டும்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாதாரணமாய் வீட்டிற்கு வந்ததும் தையல் மிஷினைப் பிரித்து எதையாவது தைத்துக் கொண்டிருக்கும் மகள், இன்று உடையைக்கூட மாற்றாமல், வெறித்துப் போன பார்வையுடன் தந்தையின் போட்டோ எதிரில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு மீனாட்சி பதறிப் போனாள்
 "மிதிலா... ஒடம்புக்கு ஏதாச்சுமா? மொகம்கூட அலம்பிக்காம ஒக்காந்திருக்கியே!"
 பதில் வரவில்லை.
 மகளின் கூந்தலை மெல்ல வருடுகையில் அவள் விழிகளில் மெல்லிய ஈரம் படிந்தது.
 குட்டி இளவரசியாய் வேளைக்கு ஒரு டிரஸ், நாளைக்கு ஒரு நகை என்று புள்ளிமானாய்த் திரிந்த என் மகள்...
 சிரிப்பும் குறுகுறுப்புமாய்த் தந்தையின் செல்லக் குட்டியாய் மடியில் உட்கார்ந்து கதைகளாய்க் கேட்ட என் மகள் -
 அழகுப் பெட்டகமாய்ப் பட்டுப் பாவாடை தாவணியில் பருவக் குயிலாய்ப் பாடித் திரிந்த என் மகள்...
 மணல் வீடு சரேலெனச் சரிகிற வேகத்தில், அத்தனை ராஜவசதிகளும் தொப்பென விழுந்து சாம்ராஜ்யமே பூமிக்குள் அமிழ்ந்து போன கொடுமை!
 மாதச் சம்பளத்திற்கு வேலைக்குப் போனால்தான் இரண்டு வயிறும் நிறையும் என்கிற இன்றைய நிலைமையை நினைக்கையில் வயிறு குப்பென்று சுருங்க, மீனாட்சி மகளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
 "அப்பா ஞாபகம் வந்திடுச்சா, மிதிலா?"
 அதற்கும் பதிலில்லை"போனதெல்லாம் போகட்டும்டி, குழந்தே... பழசை எல்லாம் குழி தோண்டிப் புதைச்சுட்டேன்... நீயும் எல்லாத்தையும் மறந்துடு."
 மிதிலா மெல்லத் தலையை உயர்த்தித் தாயைப் பார்த்தாள்.
 அம்மா!
 என் இனிய அம்மா!
 எப்போதும் பட்டுப் புடவையும், இரட்டை வடமும், இடுப்பில் வெள்ளிச் சாவிக் கொத்துமாய் வளைய வந்த அம்மா.
 அழகிய வட்ட முகத்தில் திலகமாய்க் குங்குமம் மின்ன, ரவிவர்மா ஓவியத்தில் வரும் பெண் தெய்வம் மாதிரி எழிலும் கனிவும் நிறைந்த அம்மா.
 இதழ்களில் மிருதுப் பேச்சும் நளினப் புன்னகையுமாய் வீட்டை ஆட்சி செய்த அம்மா.
 பெண்டாட்டி தாசன் என்று உலகமே சொல்கிற அளவுக்கு அப்பாவைத் தன் அன்பாலும் அழகாலும் கட்டிப் போட்ட அம்மா...
 இன்றைக்கு வெள்ளைப் புடவையும் விபூதிக் கீற்றும் ஒட்டிப்போன முகமும் வறண்டு போன தேகமும் பலவீனப்பட்டுப் போன இருதயத்துடனும் நலிந்து நிற்கும் கொடுமை!
 "அம்மா..." அடி வயிற்றிலிருந்து புறப்பட்ட ஒரு விம்மல் தொண்டை வழியே வெடித்துச் சிதற, அவள் தாயை இறுக அணைத்துக் கொண்டாள்.
 விழிகள் நீரைப் பெருக்கின.
 மீனாட்சி உணர்ச்சி வசப்பட்டவளாய் மகளின் கண்ணீரைத் துடைத்துச் சொன்னாள்.
 "ஏம்மா அழறே? என் ராஜாத்தி. நீ ஏன் அழறே...? நம்மையெல்லாம் இந்த நெலைமைக்குக் கொண்டு வந்தானே சங்கரலிங்கம், அவன் அழணும். கதறணும்... அப்பாவைப் படுக்கைல தள்ளிச் சிறுகச் சிறுகச்சாகடிச்சானே, அவன் அழணும்டி மிதிலா... ஆனா... ஆனா... அவன் செழிச்சிட்டிருக்கானே... காரும் பங்களாவுமா கொழிச்சிட்டிருக்கானே!"
 அவள் சரேலெனத் தாயின் பிடியிலிருந்து விலகினாள்.
 தாயின் தோள்களில் கைகளைப் பதித்தாள்.
 அழுத்தினாள்.
 "அம்மா... உன் மேல சத்தியம்... அவனை என்ன பண்ணப் போறேன் பாரு... கதறக் கதற அவனை நடுரோட்டுல நிறுத்தி வெக்கலே, என் பேர் மிதிலா இல்லேம்மா..."
 விழிகளில் ரத்தச் சிவப்பு, வார்த்தைகளுக்கு இடையில் வெளிப்பட்ட பற்களின் நறநறப்பு கண்டு மீனாட்சி மருண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223463399
கனவு மெய்ப்பட வேண்டும்...

Read more from V.Usha

Related to கனவு மெய்ப்பட வேண்டும்...

Related ebooks

Reviews for கனவு மெய்ப்பட வேண்டும்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனவு மெய்ப்பட வேண்டும்... - V.Usha

    1

    தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கியின் மெயின் பிராஞ்ச் மிகச் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

    சேவிங்ஸ், பில்ஸ், கேஷ் கிரெடிட், கரன்ட் என்று அத்தனை கவுன்ட்டர்களிலும் ஆட்கள் நின்றிருந்தார்கள்.

    சேவிங்ஸ் கவுன்ட்டரில் அமர்ந்து சுறுசுறுப்பாய் மிதிலா இயங்கிக் கொண்டிருந்தாள்.

    பாஸ் புக் என்ட்ரிகளை வேகமாய் எழுதி, நின்றவர்களிடம் நீட்டினாள். பென்ஷன் பற்றி விசாரிக்க வந்திருந்த மூதாட்டி ஒருத்தியைக் காக்க வைக்காமல் லெட்ஜர் பார்த்து உடனே பதில் சொல்லி அனுப்பினாள். டிராஃப்ட் கமிஷன் எவ்வளவு என்று கேட்ட ஸ்லீவ்லெஸ் நங்கைக்குப் புன்னகையுடன் பதில் சொன்னாள். நல்ல உயரமும் ஆகிருதியுமாய் வந்த பஞ்சாபி தம்பதிகளுக்கு ட்ராவலர்ஸ் செக்குகளை எப்படி கேஷாக மாற்றுவது என்று கூறினாள்.

    புன்முறுவல் மாறாது வாடிக்கையாளர்களை இனிமையாய்க் கவனித்துக் கொண்டிருந்த மிதிலாவுக்கு முதுகில் மெல்லிய குறுகுறுப்பு ஏற்பட்டது. சட்டென்று திரும்பினாள்.

    எதிர்பார்த்த மாதிரியே ஆனந்த் அவளையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    திடீரென்று அவள் திரும்பிப் பார்த்ததும் வேகமாய்த் தலையைக் குனிந்து கொண்டு லெட்ஜரில் பார்வையைப் பதித்துக் கொண்டான்.

    ஆனந்த்!

    என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் நீ?

    மிதிலா வழக்கம்போல விரைவாய் மனதை மீட்டுக்கொண்டு வேலைகளில் சுறுசுறுப்பானாள்.

    மூன்று நாள் விடுமுறைக்குப் பின் வங்கி அன்று திறந்திருந்ததால் ஏகப்பட்ட கூட்டம். ஏராளமான வேலை.

    ஒரு வழியாய் எல்லாவற்றையும் செய்து முடித்தபோது பூர்ணிமா வந்து நின்றாள்.

    கான்ட்டீன் வரைக்கும் போயிட்டு வரலாமா, மிதிலா?

    புன்னகை செய்தாள் மிதிலா.

    ஸாரி பூர்ணிமா... இன்னும் அரைமணி நேரம் வாடிக்கையாளர் நேரம் இருக்கே...

    பூர்ணிமா உதட்டைப் பிதுக்கினாள்.

    அதுக்காகத் தலைவலியோட கஸ்டமர் சர்வீஸ் செய்யணும்னு. அவசியமில்லே!

    தப்பா நெனைக்காதே, பூர்ணிமா... நான் வரலே.

    அவள் நகர்ந்தாள்.

    பெரிய காந்தின்னு நெனைப்பு... புதுசாதானே வந்திருக்கா... போகப் போகச் சரியாயிடும்... என்ற அவளின் முணுமுணுப்பு மெல்லக் காதில் விழுந்தது.

    மிதிலாவுக்கு வருத்தமாயிருந்தது.

    காந்தி எவ்வளவு பெரிய உத்தமர்! எவ்வளவு சுலபமாய் அவரைத் தன்னுடன் ஒப்பிட இழுத்து விட்டாள்? எனக்குச் சம்பளம் தரும் வங்கிக்கு நேர்மையாய் நடக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையான விஷயமல்லவா? ஒரு பெண்ணாக இருந்து கொண்டே கடமை தவறி நடக்கலாமா?

    பழைய பாஸ் புக் முடிஞ்சிருச்சு... புது பாஸ் புக் போட்டுத் தரீங்களா, மேடம்?

    ஒரு கஸ்டமர் எதிரில் வந்து நிற்க, அவள் புன்னகையுடன் புது பாஸ் புக்கை எடுத்து நிரப்பிக் கொடுத்தாள்.

    ரொம்ப தாங்க்ஸ் மேடம்... நீங்க இந்த சீட்டுக்கு வந்ததுல இருந்து இங்க காத்துக்கிட்டிருக்கிற நேரம் ரொம்பவுமே கொறைஞ்சிட்டது... இதுக்கு முன்னாடி இருந்தவங்க குறைஞ்சது இருபது நிமிஷமாவது நிற்க வைப்பாங்க...

    அப்படியில்லே ஸார்...! வேலையில தப்பு வரக்கூடாதுன்னு சில பேர் நிதானமா இருப்பாங்க...

    எது எப்படியோ, உங்க சுறுசுறுப்பு கொஞ்சம் அதிகமாகவே தோணுது எனக்கு... வரேம்மா... அவர் போய்விட்டார்.

    டிரான்ஸ்பர் செக்குகளை ஜர்னலில் எழுதுவதற்காக ரிஜிஸ்டரை எடுக்க எழுந்தபோது, சப்-ஸ்டாஃப் செல்வம் வந்து நின்றான்.

    ஒங்களை மானேஜர் கூப்பிடுறார்ம்மா...

    அவள் ஆச்சரியமாய்த் திரும்பினாள்.

    போன் ஏதாவது வந்திருக்கா எனக்கு?

    இல்லேம்மா...

    ஆச்சரியம் கூடிற்று.

    வேலைக்குச் சேர்ந்த அன்று மானேஜரின் அறைக்குப் போய்ப் பேசியதோடு சரி. கருகருவென்று தலையும், ஜீன்ஸ் பேண்ட்டும், தொள தொள பனியனும், கம்பீரமான மீசையும், களையான முகமுமாய் முப்பத்து மூன்றே வயதான மானேஜர் அசோக்கைப் பார்க்கையில் பிரமித்தாள். இவ்வளவு சிறிய வயதில் பொறுப்பான பதவியில் உட்கார்ந்திருக்கும் அவனைப் பார்த்து லேசாய்ப் பொறாமை கூடத் தோன்றிற்று.

    மிக மிருதுவான குரலில் அவளைப் பற்றியும், எங்கிருந்து வருகிறாள், வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் போன்ற விவரங்களையும் கேட்டான். ஆபீசில் எந்தப் பிரச்சினை என்றாலும் தாராளமாய்த் தன்னை அணுகலாம் என்று சொன்னான். அதோடு சரி.

    இந்த ஆறு மாதங்களில் ஒரு தடவைகூடப் போக வேண்டிய தேவை வரவில்லை. இப்போது கூப்பிட்டனுப்பியிருக்கிறான்.

    ‘என்னவாக இருக்கும்?’ என்கிற பதட்டத்துடன் அவள் எழுந்து வேகமாக நடந்தாள்.

    ஆனந்த் தன்னையே பார்ப்பது தெரிந்தது.

    அவன் பார்வை தன் முதுகையே தொடர்வது போலிருந்தது.

    மானேஜரின் அறைக்குள் நுழைந்ததும் ஏஸி பரப்பியிருந்த மிதமான குளிர் இதமாய் உடலைத் தொட்டது. சிவப்புக் கம்பளத்தில் கால் வைக்கையில் ரோஜாவின் மேல் நடக்கிற மாதிரி இருந்தது. பளபளவென்று துடைக்கப்பட்டு மின்னிய கோழி முட்டை வடிவ டேபிளின் ஸன்மைக்காவும், டெலிபோன்களும், விலையுயர்ந்த பேனாக்களும், ‘செக் பவுன்ஸிங் எ சீரியஸ் கிரைம்’ என்கிற லாமினேட்டெட் அறிக்கைப் பலகையும் மெல்லிய பிரமிப்பை ஏற்படுத்தின.

    ஒக்காருங்க, மிதிலா...

    அவள் மெல்ல நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.

    தாங்க் யூ ஸார்! என்றாள்.

    "ஹவ் டு

    Enjoying the preview?
    Page 1 of 1