Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிங்கப் பெண்ணே...!
சிங்கப் பெண்ணே...!
சிங்கப் பெண்ணே...!
Ebook144 pages52 minutes

சிங்கப் பெண்ணே...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருச்செந்தூர் கோவில் கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த மயில் தன் தோகையை இதமாய் தன் அலகால் சிக்கெடுத்துக் கொண்டிருந்தது. தோகை விரிக்கும் மயில் அந்த மங்கிய வெயிலில் ஒரு கண்கொள்ளா காட்சியை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆதவன் அன்றைய அலுவல் முடித்து தன் இரவு வசிப்பிடமான கடலில் மறைந்து கொள்ள முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டுருந்தான். கடல் பொன் கூரை வேய்ந்தது போல் தகதகத்தது... கந்தா கடம்பா கருணைக் கடலே போற்றி என்ற நியான் போர்ட் ஒளிர ஆரம்பித்தது. அதில் பாதி எழுத்துக்களில் விளக்கு எரியவில்லை. கோவில் யானை வாசலில் நின்று காசு வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்து கொண்டுருந்தது. வாசலில் சம்சா, வடை வரிசையாய் கடைகள்... பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஐயர்கள் குறுக்கு வழியில் வாடிக்கையாளர்களை பிடித்து (பின்ன என்ன சொல்ல... வரிசையில் நின்று சாமி கும்பிட சோம்பல்படுபவர்களை வேறு என்ன சொல்ல) கால்கடுக்க மணிக்கணக்காய் நிற்கும் பக்தர்களை துச்சமாகக் கருதி அவர்களை வரிசையை விலக்கிவிட்டு சுப்ரமணியனை குறுக்குவழியில் தரிசனம் காட்டினர்... தர்ம தரிசன வரிசையில் நின்ற மீரா கணவனை வினவினாள்...

"ஏங்க ரெண்டு மணி நேரமாய் நிற்கறோம் வரிசை நகர்ற மாதிரியே தெரியலை. அங்க பாருங்க ஐயருங்க பணம் வாங்கிட்டு ஆட்களை பகவானை ஈசியா பார்க்க வைக்கறாங்க. நீங்களும் ஒரு ஐயரைப் புடிங்க. நாமும் சீக்கிரம் கடவுளை பார்த்துட்டு கிளம்புவோம். இந்த வரிசை இப்போதைக்கு நகருற மாதிரி தெரியலை. பத்து மணிக்கு ட்ரெயின். இந்தக் கூட்டத்துல நின்னா நாம ஊருக்குக் கிளம்ப முடியாது. போங்க போய் ஒரு ஐயரை புடிங்க"

அந்த அழகிய முப்பது வயது மாதவன் மனைவியிடம் கூறினான்...

"இல்ல மீரா சாமிய அப்படி குறுக்குவழியில பார்க்க நான் விரும்பலை. நீயே சொல்லிட்ட பணம் குடுத்து குறுக்கு வழியில் பார்க்கும் ஆட்கள்னு... ஆமாம் அவர்கள் ஆட்கள்தான் பக்தர்கள் இல்லை. இருக்கற நாம இப்படிப் குறுக்கு வழியில போய் கடவுளைப் பார்த்தா இல்லாதவாங்களை நெனச்சுப் பாரு. இந்த மாதிரி செயலைச் செய்தா கண்டிப்பா அவரோட ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்காது. அதனாலதான் நாம சிறப்பு தரிசன டிக்கட் எடுக்காம தர்ம தரிசன வரிசையில நிற்கறோம் புரிஞ்சுக்க"

"அது சரிங்க... இந்தக் கூட்டத்துல நின்னா சாமியை பார்த்துட்டு நாம ட்ரெய்ன புடிக்க முடியாதே?"

"கண்டிப்பா முடியாது... அதனாலதான் டிக்கெட்டை கான்சல் பண்ணிட்டேன்"

கணவன் கூறவும் சிறிது அதிர்ச்சியை கண்ணில் காண்பித்த மீரா கேட்டாள்...

"என்னங்க இப்படி பண்ணீட்டீங்க? அப்ப நாம எப்படி கிளம்புறது?"

"எவ்வளவு நேரமானாலும் வரிசையில நின்னு சாமியை தரிசனம் பண்ணுவோம். அப்புறம் எதாவது ட்ராவல்ஸ்ல டிக்கட் கிடைக்குதா பார்ப்போம். இல்லைனா லாட்ஜ்ல தங்கிட்டு காலைல கிளம்புவோம்"

கணவன் கூறவும் சரி என்று தலையாட்டினாள் மீரா. வரிசை நத்தையாய் நகர்ந்தது... வரிசையில் நின்றவன் பிரகாரத்திற்கு வெளியே தன் கண்களை செலுத்தினான்... காவி தரித்த பண்டாரங்கள் வரிசையாய் அமர்ந்திருந்தனர் திருவோடு சகிதம்... முக்கியவாறும் அனைவரும் வயதானவர்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் காவி தரித்து கையில் திருவோடுடன் அமர்ந்திருந்தது அவனுக்கு வித்தியாசமாய் பட்டது. என்னடா இந்த வயசில் சன்யாசம்? என்று எண்ணியவன் அவனை கூர்ந்து பார்த்தான். இப்பொழுது சற்று சுவாரஸ்யம் அவனுள் எழுந்தது. அந்த வாலிபனை மீண்டும் கூர்ந்து பார்த்தான். தாடி மீசை அடர்ந்திருந்தது... அவனுள் இப்பொழுது ஒரு பொறி பற்றியது... இந்தக் கண்கள் இதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே? அவன் உள்ளம் பரபரப்படைந்தது. இந்த முகம் தாடி இல்லாமல் அடர்த்தியான மீசை மட்டும் வைத்து புன்னகை தவழ நான் பார்த்திருக்கிறேன். அவன் மூளையின் நியூரான்கள் பரபரப்படைந்தது... சென்னையில் இந்த முகத்தை நான் கண்டிருக்கிறேன். மனதினில் கூறிக்கொண்டவன் மனைவியிடம் கூறினான்...

"மீரா ஒரு நிமிஷம் வரிசையில நில்லு நான் வந்திடுறேன்" என்றவன் விறு விறுவென்று நடந்தான்...

"ஏங்க எங்க போறீங்க?"

"மீரா நில்லு நான் இப்ப வாந்துடுறேன்"

கூறியவன் வேகமாக நடந்து அந்த இளம் பண்டாரத்தின் முன் நின்றான்... நின்றவன் அவனை கூர்ந்து பார்த்தான். அந்த இளம் பண்டாரம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தான். மற்ற பண்டாரங்கள் அவனைப் பார்த்ததும் ஐயா தர்மம் பண்ணுங்க என்று கோரசாய் கேட்டனர். ஆனால் அவன் மட்டும் எதுவும் கேட்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்... இப்பொழுது மாதவன் அவனை வினவினான்...

"ஹலோ நீங்க சென்னையா?"

அவனிடம் எந்த சலனமும் இல்லை... மீண்டும் வினவினான் மாதவன்...

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223895589
சிங்கப் பெண்ணே...!

Read more from Sahitha Murugan

Related to சிங்கப் பெண்ணே...!

Related ebooks

Related categories

Reviews for சிங்கப் பெண்ணே...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிங்கப் பெண்ணே...! - Sahitha Murugan

    1

    திருச்செந்தூர் கோவில் கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த மயில் தன் தோகையை இதமாய் தன் அலகால் சிக்கெடுத்துக் கொண்டிருந்தது. தோகை விரிக்கும் மயில் அந்த மங்கிய வெயிலில் ஒரு கண்கொள்ளா காட்சியை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆதவன் அன்றைய அலுவல் முடித்து தன் இரவு வசிப்பிடமான கடலில் மறைந்து கொள்ள முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டுருந்தான். கடல் பொன் கூரை வேய்ந்தது போல் தகதகத்தது... கந்தா கடம்பா கருணைக் கடலே போற்றி என்ற நியான் போர்ட் ஒளிர ஆரம்பித்தது. அதில் பாதி எழுத்துக்களில் விளக்கு எரியவில்லை. கோவில் யானை வாசலில் நின்று காசு வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்து கொண்டுருந்தது. வாசலில் சம்சா, வடை வரிசையாய் கடைகள்... பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஐயர்கள் குறுக்கு வழியில் வாடிக்கையாளர்களை பிடித்து (பின்ன என்ன சொல்ல... வரிசையில் நின்று சாமி கும்பிட சோம்பல்படுபவர்களை வேறு என்ன சொல்ல) கால்கடுக்க மணிக்கணக்காய் நிற்கும் பக்தர்களை துச்சமாகக் கருதி அவர்களை வரிசையை விலக்கிவிட்டு சுப்ரமணியனை குறுக்குவழியில் தரிசனம் காட்டினர்... தர்ம தரிசன வரிசையில் நின்ற மீரா கணவனை வினவினாள்...

    ஏங்க ரெண்டு மணி நேரமாய் நிற்கறோம் வரிசை நகர்ற மாதிரியே தெரியலை. அங்க பாருங்க ஐயருங்க பணம் வாங்கிட்டு ஆட்களை பகவானை ஈசியா பார்க்க வைக்கறாங்க. நீங்களும் ஒரு ஐயரைப் புடிங்க. நாமும் சீக்கிரம் கடவுளை பார்த்துட்டு கிளம்புவோம். இந்த வரிசை இப்போதைக்கு நகருற மாதிரி தெரியலை. பத்து மணிக்கு ட்ரெயின். இந்தக் கூட்டத்துல நின்னா நாம ஊருக்குக் கிளம்ப முடியாது. போங்க போய் ஒரு ஐயரை புடிங்க

    அந்த அழகிய முப்பது வயது மாதவன் மனைவியிடம் கூறினான்...

    இல்ல மீரா சாமிய அப்படி குறுக்குவழியில பார்க்க நான் விரும்பலை. நீயே சொல்லிட்ட பணம் குடுத்து குறுக்கு வழியில் பார்க்கும் ஆட்கள்னு... ஆமாம் அவர்கள் ஆட்கள்தான் பக்தர்கள் இல்லை. இருக்கற நாம இப்படிப் குறுக்கு வழியில போய் கடவுளைப் பார்த்தா இல்லாதவாங்களை நெனச்சுப் பாரு. இந்த மாதிரி செயலைச் செய்தா கண்டிப்பா அவரோட ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்காது. அதனாலதான் நாம சிறப்பு தரிசன டிக்கட் எடுக்காம தர்ம தரிசன வரிசையில நிற்கறோம் புரிஞ்சுக்க

    அது சரிங்க... இந்தக் கூட்டத்துல நின்னா சாமியை பார்த்துட்டு நாம ட்ரெய்ன புடிக்க முடியாதே?

    கண்டிப்பா முடியாது... அதனாலதான் டிக்கெட்டை கான்சல் பண்ணிட்டேன்

    கணவன் கூறவும் சிறிது அதிர்ச்சியை கண்ணில் காண்பித்த மீரா கேட்டாள்...

    என்னங்க இப்படி பண்ணீட்டீங்க? அப்ப நாம எப்படி கிளம்புறது?

    எவ்வளவு நேரமானாலும் வரிசையில நின்னு சாமியை தரிசனம் பண்ணுவோம். அப்புறம் எதாவது ட்ராவல்ஸ்ல டிக்கட் கிடைக்குதா பார்ப்போம். இல்லைனா லாட்ஜ்ல தங்கிட்டு காலைல கிளம்புவோம்

    கணவன் கூறவும் சரி என்று தலையாட்டினாள் மீரா. வரிசை நத்தையாய் நகர்ந்தது... வரிசையில் நின்றவன் பிரகாரத்திற்கு வெளியே தன் கண்களை செலுத்தினான்... காவி தரித்த பண்டாரங்கள் வரிசையாய் அமர்ந்திருந்தனர் திருவோடு சகிதம்... முக்கியவாறும் அனைவரும் வயதானவர்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் காவி தரித்து கையில் திருவோடுடன் அமர்ந்திருந்தது அவனுக்கு வித்தியாசமாய் பட்டது. என்னடா இந்த வயசில் சன்யாசம்? என்று எண்ணியவன் அவனை கூர்ந்து பார்த்தான். இப்பொழுது சற்று சுவாரஸ்யம் அவனுள் எழுந்தது. அந்த வாலிபனை மீண்டும் கூர்ந்து பார்த்தான். தாடி மீசை அடர்ந்திருந்தது... அவனுள் இப்பொழுது ஒரு பொறி பற்றியது... இந்தக் கண்கள் இதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே? அவன் உள்ளம் பரபரப்படைந்தது. இந்த முகம் தாடி இல்லாமல் அடர்த்தியான மீசை மட்டும் வைத்து புன்னகை தவழ நான் பார்த்திருக்கிறேன். அவன் மூளையின் நியூரான்கள் பரபரப்படைந்தது... சென்னையில் இந்த முகத்தை நான் கண்டிருக்கிறேன். மனதினில் கூறிக்கொண்டவன் மனைவியிடம் கூறினான்...

    மீரா ஒரு நிமிஷம் வரிசையில நில்லு நான் வந்திடுறேன் என்றவன் விறு விறுவென்று நடந்தான்...

    ஏங்க எங்க போறீங்க?

    மீரா நில்லு நான் இப்ப வாந்துடுறேன்

    கூறியவன் வேகமாக நடந்து அந்த இளம் பண்டாரத்தின் முன் நின்றான்... நின்றவன் அவனை கூர்ந்து பார்த்தான். அந்த இளம் பண்டாரம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தான். மற்ற பண்டாரங்கள் அவனைப் பார்த்ததும் ஐயா தர்மம் பண்ணுங்க என்று கோரசாய் கேட்டனர். ஆனால் அவன் மட்டும் எதுவும் கேட்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்... இப்பொழுது மாதவன் அவனை வினவினான்...

    ஹலோ நீங்க சென்னையா?

    அவனிடம் எந்த சலனமும் இல்லை... மீண்டும் வினவினான் மாதவன்...

    உங்களை நான் சென்னையில எங்கயோ பார்த்திருக்கறேன். ஆனா இப்படி இல்லை. பதில் சொல்லுங்க

    இப்பொழுதும் அவனிடமிருந்து பதிலோ எந்தச் சலனமோ இல்லை. இனி இவனிடம் பேசி பலனில்லை என்று உணர்ந்த மாதவன் தன் செல்போனில் அவனை ஒரு படம் எழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான்...

    வரிசையில் நின்றவன் எண்ணம் அந்த இளம் பண்டாரத்தையே சுற்றி வந்தது. எண்ணத்தில் ஒரு மின்னல். வேகவேகமாய் தன் செல்லில் போட்டோஷாப் ஆப்பை டவுன்லோட் செய்தான். அதில் தான் எடுத்த அந்த இளம் துறவியின் படத்தை எடிட் செய்து அந்தத் தாடி மீசையை எடுத்தான். பரட்டைத் தலையை டிரிம் செய்தான். இப்பொழுது படத்தைப் பார்த்தவன் வாய் விட்டுக் கூறினான்...

    அமர்... நீங்களா?

    2

    "என்னங்க தனக்குத்தானே பேசிக்கறீங்க? சாமியை கும்பிடப்போற சமயம் எதுக்கு செல்லை நோண்டறீங்க? பேசாம செல்லை பேண்ட் பாக்கெட்டுல வைங்க" சற்றே கோபமாய் மீரா கூற அவளுக்கு பதில் கூறினான் மாதவன்...

    மீரா நான் காரணம் இல்லாம செல்லை நோண்டல, சாமியை கும்பிடுற நேரம் யாராவது செல்லை னோண்டுவாங்களா? எல்லாம் காரணமாத்தா என்றவன் செல்லில் அவன் எடிட் செய்த படத்தைக் காண்பித்தான்... யோசனையாய் பார்த்தவள் கேட்டாள்...

    யாருங்க இவரு?

    கேலக்ஷி எக்ஸ்போர்ட் இம்போர்ட் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் அமர்நாத்

    என்னங்க சொல்லுறீங்க நீங்க அந்தக் கம்பெனியில தானே பிஸ்னஸ் பண்ணுறீங்க. எக்ஸ்போர்ட் ஆடை நிறுவனங்களுக்கு நூல் சப்ளை பண்ணுற நிறுவங்களுல அதுவும் ஒண்ணு தானே

    ஆமாம் மீரா நான் மும்பையில இருந்து நூல் வாங்கி சப்ளை பண்ணுற கம்பெனியில எனக்கு பெரிய ஆர்டர் தர்ற கம்பனி இந்த காலக்ஷி

    சரிங்க அதுக்கு என்ன இப்ப?

    அவள் கேட்கவும் தாடி மீசை அடர் முடியுடன் இருக்கும் அமரின் படத்தை அவளிடம் காண்பித்தான் மாதவன். மீரா கேட்டாள்...

    இது யாருங்க?

    நல்லா பாரு மீரா தெரியும்

    கூர்ந்து பார்த்தவள் கூறினாள்...

    இது நீங்க காட்டுன அமர்நாத் தாடி மீசை புதர் முடியோட இருக்கற மாதிரி இருக்குதே

    அதேதான் மீரா... இது அமர்தான்

    சரி அவரு இப்ப எங்க இருக்கறாரு?

    அவள் கேட்கவும் பண்டாரங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி கையை நீட்டினான் மாதவன்...

    அங்க பாரு மீரா பண்டாரங்கள் பிச்சை எடுக்க உக்கார்ந்திருக்கறாங்களே அதுக்கு நடுவுல உக்கார்ந்து பிச்சை எடுக்கறார் பாரு அதுதான் அமர்

    இப்பொழுது மீராவின் கண்களில் அதிர்ச்சி. அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்...

    என்னங்க சொல்லுறீங்க? அவ்வளவு பெரிய கம்பெனி ஜெனரல் மேனேஜர் பண்டார வேஷம் போட்டு பிச்சை எடுக்கறாரா? ஏது இந்தப் பிச்சைக்காரன் படத்துல வர்ற மாதிரி யாருக்காவது உடம்பு சரியில்லாம ஆகி வேண்டுதலுக்காக பிச்சை எடுக்கறாரா?

    இல்லை மீரா?

    பின்ன ஏங்க அவ்வளவு பெரிய ஆளு கோயிலுல பிச்சை எடுக்கறாரு?

    அது ஒரு பெரிய சோகக் கதை மீரா

    என்னன்னு சொல்லுங்க

    மீரா ஆர்வமானாள்...

    அன்பான

    Enjoying the preview?
    Page 1 of 1