Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிரியமானவனே...
பிரியமானவனே...
பிரியமானவனே...
Ebook144 pages55 minutes

பிரியமானவனே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடலலை சங்கீதமாய் காதுகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது... அந்தி மயங்கிக் கொண்டிருந்தது... சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தான். மாலை வெயில்பட்டு கடற்கரை மண் பொன்னிறமாய் காட்சியளித்தது. கதிரவனின் மாலைக்கதிர்கள் பட்டு கோகிலாவின் முகமும் பொன்னிறம் காண்பித்தது. ஒரு தேவதை தோற்றம் காண்பித்தாள் கோகிலா அந்நேரம்... அவள் முதுகில் சாய்ந்து கடலலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த அழகான வருண். கோகிலா வருண் இருவரும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஒரே இடத்தில் வேலை காதல் பற்றிக்கொண்டு வருடங்கள் மூன்று கடந்துவிட்டது. இருவரும் வசதியான பணக்கார வீட்டுப் பிள்ளைகள். வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை இல்லாதவர்கள். ஆனாலும் படித்த படிப்பிற்கு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். அலையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த வருணை சற்று கோபமாய் வினவினாள் கோகிலா...

"வருண் நாம பீச்சுல பொழுதுபோக்க வரலைங்கறது உனக்குத் தெரியும் தானே?"

"தெரியும்"

"தெரிஞ்சும் அலையை வேடிக்கை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?"

"வேடிக்கை பார்த்துட்டே சிந்திச்சிட்டிருக்கறேன்னு அர்த்தம்"

"பார்த்தா அப்படித் தெரியலையே?"

"இல்லை கோகி சிந்திச்சுட்டுத்தான் இருக்கறேன்"

"இனி சிந்திக்க ஒண்ணூம் இல்லை...அரசல் புரசலா எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா எனக்குத் தகவல்கள் வர ஆரம்பிச்சிட்டுது. அதனால நீ நாளைக்கே உங்க அப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேட்கணும்"

"அதைப் பற்றி தான் சிந்திச்சிட்டிருக்கறேன்"

"என்ன?"

"வசதியில நம்ம குடும்பம் ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லை. நீ தான் சொல்லியிருக்கற உங்க அப்பா ஜாதி பார்க்கறவருன்னு. எங்க அப்பா அப்படிப்பட்ட ஆளு இல்லை. எங்க அப்பா உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு ஜாதியை வச்சு உங்க அப்பா அண்ணன் பேசி அவருக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ணிடக் கூடாதுன்னு பார்க்கறேன்"

"அப்ப இதுக்கு என்னதான் முடிவு"

"அதான் யோசிக்கறேன்"

"இப்படியே யோசிச்சிட்டிருந்தா எனக்கு வேற ஆளோட எங்கப்பாவும் அண்ணனும் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடுவாங்க"

"அப்படி கல்யாணம் பண்ணிட்டுப் போய்டுவியா கோகி?"

"ச்சீ...என்ன பேச்சு இது அந்த மாதிரி நிலை வந்தா உயிரை விட்டுடுவேனே தவிர வேற ஒருத்தனை கட்டிக்கச் சம்மதிக்க மாட்டேன்"

அவள் கூறவும் வருண் அவள் கைகளை ஆதரவாய் பிடித்தான்...

"ஓகே கோகி இதுக்கு ஒரு முடிவு கட்டணும். எங்க அப்பா அம்மா வேண்டாம் நானே நாளைக்கு நேரே வந்து உங்க அப்பா அண்ணன்கிட்ட நேரடியாப் பேசறேன்"

கோகிலா முகத்தில் இப்பொழுது லேசான பயம்...

"வருண் எங்க அண்ணன் எதாவது கோபமா நடந்துக்கிட்டா?"

"பயந்தா இனி காரியம் ஆகாது நாளைக்கு இதுக்கு ஒரு முடிவுகட்டுறோம்"

வருண் கூறிமுடிக்கவும் அவன் கைபிடித்து பீச் மணலிலிருந்து எழுந்தாள். வருணும் கூடவே எழுந்தான். மண்ணில் கால்கள் புதையப் புதைய நடந்து ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். பில்லயனில் கோகிலா தொற்றிக்கொள்ள. புல்லட் விரைந்தது சாலையில்,

மறுநாள் இருவரும் வேலை முடிந்து நேரே கோகிலாவின் வீட்டிற்குச் சென்றனர். வாசலில் புல் தரையில் சேர் போட்டு அமர்ந்திருந்த கோகிலாவின் தந்தை குமரேசனின் புருவங்கள் நெரிந்தன. காரணம் மகள் ஒரு இளைஞனுடன் ஜோடியாய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவது கண்டு. புல் தரைக்கு நடுவே பதித்திருந்த பேவர்பிளாக் கற்களில் நடந்து இருவரும் வாசல் வந்து சேர்ந்தனர். புல்வெளியில் அமர்ந்திருந்த குமரேசன் நடந்து அவர்கள் அருகில் வந்தார். முந்திக்கொண்டு கோகிலா வருணை அறிமுகப்படுத்தினாள்...

"அப்பா இது வருண் என் கூட வேலை பார்க்கறார்"

"இருக்கட்டும் உள்ளே வாங்க"'என்ற குமரேசனின் குரலில் நட்பு இல்லை. குமரேசன் பழைய நடிகர் ரங்கராவை சாயலில் பெற்றிருந்தார்...

"உக்காருங்க" என்றவர் ஹாலில் கிடந்த உயர் தர சோபாவைக் காட்டினார். அமர்ந்தான் வருண். சோபாவின் அருகில் நின்றுகொண்டாள் கோகிலா...

"கோகிலா வந்தவருக்குப் போய் காபி கொண்டா" அவள் புறப்பட கோகிலாவின் தாய் உள்ளறையிலிருந்து வந்தாள். வந்தவள் முகத்தில் கேள்வி தொற்றி நின்றது சோபாவில் அமர்ந்திருந்த வருணைக் கண்டு. குமரேசன் அவளுக்குக் கூறினார்...

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223693772
பிரியமானவனே...

Read more from Sahitha Murugan

Related to பிரியமானவனே...

Related ebooks

Related categories

Reviews for பிரியமானவனே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிரியமானவனே... - Sahitha Murugan

    1

    கடலலை சங்கீதமாய் காதுகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது... அந்தி மயங்கிக் கொண்டிருந்தது... சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தான். மாலை வெயில்பட்டு கடற்கரை மண் பொன்னிறமாய் காட்சியளித்தது. கதிரவனின் மாலைக்கதிர்கள் பட்டு கோகிலாவின் முகமும் பொன்னிறம் காண்பித்தது. ஒரு தேவதை தோற்றம் காண்பித்தாள் கோகிலா அந்நேரம்... அவள் முதுகில் சாய்ந்து கடலலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த அழகான வருண். கோகிலா வருண் இருவரும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஒரே இடத்தில் வேலை காதல் பற்றிக்கொண்டு வருடங்கள் மூன்று கடந்துவிட்டது. இருவரும் வசதியான பணக்கார வீட்டுப் பிள்ளைகள். வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை இல்லாதவர்கள். ஆனாலும் படித்த படிப்பிற்கு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். அலையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த வருணை சற்று கோபமாய் வினவினாள் கோகிலா...

    வருண் நாம பீச்சுல பொழுதுபோக்க வரலைங்கறது உனக்குத் தெரியும் தானே?

    தெரியும்

    தெரிஞ்சும் அலையை வேடிக்கை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?

    வேடிக்கை பார்த்துட்டே சிந்திச்சிட்டிருக்கறேன்னு அர்த்தம்

    பார்த்தா அப்படித் தெரியலையே?

    இல்லை கோகி சிந்திச்சுட்டுத்தான் இருக்கறேன்

    இனி சிந்திக்க ஒண்ணூம் இல்லை...அரசல் புரசலா எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா எனக்குத் தகவல்கள் வர ஆரம்பிச்சிட்டுது. அதனால நீ நாளைக்கே உங்க அப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேட்கணும்

    அதைப் பற்றி தான் சிந்திச்சிட்டிருக்கறேன்

    என்ன?

    வசதியில நம்ம குடும்பம் ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லை. நீ தான் சொல்லியிருக்கற உங்க அப்பா ஜாதி பார்க்கறவருன்னு. எங்க அப்பா அப்படிப்பட்ட ஆளு இல்லை. எங்க அப்பா உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு ஜாதியை வச்சு உங்க அப்பா அண்ணன் பேசி அவருக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ணிடக் கூடாதுன்னு பார்க்கறேன்

    அப்ப இதுக்கு என்னதான் முடிவு

    அதான் யோசிக்கறேன்

    இப்படியே யோசிச்சிட்டிருந்தா எனக்கு வேற ஆளோட எங்கப்பாவும் அண்ணனும் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடுவாங்க

    அப்படி கல்யாணம் பண்ணிட்டுப் போய்டுவியா கோகி?

    ச்சீ...என்ன பேச்சு இது அந்த மாதிரி நிலை வந்தா உயிரை விட்டுடுவேனே தவிர வேற ஒருத்தனை கட்டிக்கச் சம்மதிக்க மாட்டேன்

    அவள் கூறவும் வருண் அவள் கைகளை ஆதரவாய் பிடித்தான்...

    ஓகே கோகி இதுக்கு ஒரு முடிவு கட்டணும். எங்க அப்பா அம்மா வேண்டாம் நானே நாளைக்கு நேரே வந்து உங்க அப்பா அண்ணன்கிட்ட நேரடியாப் பேசறேன்

    கோகிலா முகத்தில் இப்பொழுது லேசான பயம்...

    வருண் எங்க அண்ணன் எதாவது கோபமா நடந்துக்கிட்டா?

    பயந்தா இனி காரியம் ஆகாது நாளைக்கு இதுக்கு ஒரு முடிவுகட்டுறோம்

    வருண் கூறிமுடிக்கவும் அவன் கைபிடித்து பீச் மணலிலிருந்து எழுந்தாள். வருணும் கூடவே எழுந்தான். மண்ணில் கால்கள் புதையப் புதைய நடந்து ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். பில்லயனில் கோகிலா தொற்றிக்கொள்ள. புல்லட் விரைந்தது சாலையில்,

    மறுநாள் இருவரும் வேலை முடிந்து நேரே கோகிலாவின் வீட்டிற்குச் சென்றனர். வாசலில் புல் தரையில் சேர் போட்டு அமர்ந்திருந்த கோகிலாவின் தந்தை குமரேசனின் புருவங்கள் நெரிந்தன. காரணம் மகள் ஒரு இளைஞனுடன் ஜோடியாய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவது கண்டு. புல் தரைக்கு நடுவே பதித்திருந்த பேவர்பிளாக் கற்களில் நடந்து இருவரும் வாசல் வந்து சேர்ந்தனர். புல்வெளியில் அமர்ந்திருந்த குமரேசன் நடந்து அவர்கள் அருகில் வந்தார். முந்திக்கொண்டு கோகிலா வருணை அறிமுகப்படுத்தினாள்...

    அப்பா இது வருண் என் கூட வேலை பார்க்கறார்

    இருக்கட்டும் உள்ளே வாங்க‘என்ற குமரேசனின் குரலில் நட்பு இல்லை. குமரேசன் பழைய நடிகர் ரங்கராவை சாயலில் பெற்றிருந்தார்...

    உக்காருங்க என்றவர் ஹாலில் கிடந்த உயர் தர சோபாவைக் காட்டினார். அமர்ந்தான் வருண். சோபாவின் அருகில் நின்றுகொண்டாள் கோகிலா...

    கோகிலா வந்தவருக்குப் போய் காபி கொண்டா அவள் புறப்பட கோகிலாவின் தாய் உள்ளறையிலிருந்து வந்தாள். வந்தவள் முகத்தில் கேள்வி தொற்றி நின்றது சோபாவில் அமர்ந்திருந்த வருணைக் கண்டு. குமரேசன் அவளுக்குக் கூறினார்...

    இது வருண் கோகிலாவோட வேலை பார்க்கிறவர் அவஸ்தையாய் நிமிடங்கள் கரைய கையில் காப்பிக் கோப்பையுடன் வந்தவள் அருணிடம் கோப்பையை நீட்டினாள்... வருண் கோப்பையை வாங்கியவாறு கேட்டான்...

    அங்கிளுக்கு

    அந்த அங்கிள் என்ற பதம் சுருக்கென்று தைத்தது குமரேசனை...

    நான் டீ காபி குடிக்கறதில்லை... சரி நீங்க வந்த விஷயத்தைக் சொல்லலாம்

    இப்பொழுது அவர் குரல் சற்று தடித்திருந்தது.

    அங்கிள்

    டோன்ட் கால்மீ அங்கிள் கால் மீ சார்

    நோ அங்கிள் நான் அப்படித்தான் கூப்பிடணும்

    நீ சொல்லுறது விளங்கலை அவர் ஒருமைக்குத் தாவினார்.

    எஸ் அங்கிள் நானும் உங்க பொண்ணும் மூணு வருஷமா லவ் பண்ணுறோம். எங்க திருமணத்துக்குச் சம்மதம் கேட்கத்தான் நான் வந்திருக்கறேன்

    குமரேசனும் அவர் மனைவி பூரணியும் ஒரே நேரம் அதிர்ந்தனர். கோகிலாவின் முகத்தில் பயம்...

    இங்க பாரு தம்பி உனக்கு நல்ல நேரம் என் பையன் வீட்டுல இல்ல அவன் இருந்தா இங்க நடக்குறதே வேற... அவன் வந்து எதாவது ரசாபாசம் நடக்குறதுக்குள்ள இங்க இருந்து கிளம்பிடுங்க. எங்க பொண்ணை யாருக்கு கட்டிக் குடுக்கனும்னு எங்களுக்குத் தெரியும் என் மகன் வர்ற நேரம் வர்றதுக்கு முன்னாடி கிளம்பிடுங்க

    "அங்கிள் கோபப்படாம கேளுங்க... நான் ஒண்ணும் ரோட்சைட் ரோமியோ கிடையாது எங்களோடதும் ஒரு ரெப்யூட்டட் ஃபேமிலிதான். நான் நல்ல வேலையில இருக்கறேன். அதுவும் இல்லாம நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்’’

    விரும்பிட்டா எதோ ஒரு ஜாதிக்காரனுக்கு என் பொண்ணை கட்டிக் குடுத்திடுறதா? வருண் இதை எதிர்பார்த்ததால் திடுக்கிடவில்லை அவரை நிதானமாகக் கேட்டான்...

    அங்கிள் இந்த 21ம் நூற்றாண்டுலயும் ஜாதியா? உலகம் எங்கயோ போயிட்டிருக்குது

    எத்தனை நூற்றாண்டு கழிந்தாலும் ஜாதி எங்களுக்குப் பெரிசுதான்

    இப்ப முடிவா என்னதான் சொல்லுறீங்க?

    என் பொண்ணுக்கு நாங்க பார்க்கற மாப்பிள்ளைதான்.அதுவும் எங்க ஜாதி மாப்பிள்ளை தான்

    ஒண்ணு நீங்க புரிஞ்ச்சுக்கணும்... நாங்க மேஜர் நாங்க நெனச்சா உங்களுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா நாங்க அப்படியில்லை அப்பா அம்மா ஆசீர்வாதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும்னு நெனைக்கிறோம். அதுக்குத்தான் உங்க சம்மதம் கேட்டு வந்திருக்கறோம்

    அது முடியாத காரியம் நீ கிளம்பலாம்

    அங்கிள் இப்பக் கிளம்பினாலும் திரும்பவும் வருவேன். உங்க சம்மதத்தோட எங்க கல்யாணம் நடந்தேதீரும். கோகிலா நீ பயப்படாம இரு என்று கூறி கிளம்பும் வருணை கோபமாய் பார்த்து நின்றார் குமரேசன்!

    2

    மறுநாள் அலுவலக கேப்டீரியாவில் கோகிலாவுடன் அமர்ந்திருந்தான் வருண்...

    என்ன கோகி உங்க அப்பா இப்படிப் பேசறார்?

    அவர் அப்படித்தான் பேசுவார்... எங்க அப்பா அப்படிப் பேசலைனாத் தான் அதிசயம்

    அப்ப நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா சம்மதிக்க மாட்டார் அப்படித்தானே?

    நிச்சயமா சம்மதிக்க மாட்டார்?

    அடுத்து நாம என்ன பண்ணுறது கோகி?

    திருட்டுக்கல்யாணம்தான் வேற வழியில்லை

    கோகிலா கூறவும் ‘நோ’ என்றான் வருண்...

    பின்ன என்னதான் பண்ணுறது வருண்?

    நாம போராடுவோம். உங்க குடும்பத்தோட மனசு மாறுற வரைக்கும் காத்திருப்போம்

    அவங்க அப்பவும் ஒத்துக்கலைனா

    ஒத்துக்க வைப்போம்

    சரி உங்க அண்ணன் என்ன சொன்னார்?

    அப்பாவுக்கு பின்பாட்டுப்பாடினார். என்னை வேலைக்குப் போகக்கூடாதுன்னார். நான் கொஞ்சம் உறைக்கற மாதிரி சொன்னேன். நாங்க திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கணும்னா உங்ககிட்ட வந்து பேசியிருக்கவேமாட்டோம். உங்க சம்மதம் இல்லாம எங்க கல்யாணம் நடக்காது. நாங்க திருட்டுக் கல்யாணமும் பண்ணிக்கமாட்டோம்னு சொன்னேன். அப்புறம்தான் வேலைக்குப் போக அனுமதிச்சார்

    ஓகே கோகி காத்திருப்போம் நல்லதே நடக்கும் என்று கூறி தன் கேபினுக்கு நடந்தான் வருண்.

    வாரக் கடைசி... வீட்டின் முன் ஒரு இனோவா வந்து நிற்பதைக் கண்ட கோகிலா ஆச்ச்சர்யப்பட்டாள். அதிலிருந்து மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் இறங்கி வந்தனர். அவர்களை அவள் தந்தை வரவேற்று ஹாலில் சோபாவில் அமர

    Enjoying the preview?
    Page 1 of 1