Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆனந்தி பூங்காற்றே...
ஆனந்தி பூங்காற்றே...
ஆனந்தி பூங்காற்றே...
Ebook155 pages58 minutes

ஆனந்தி பூங்காற்றே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரயில் தலைதெறிக்க தண்டவாளத்தை அரைத்துத் தின்னும் ஆவேசத்துடன் விரைந்து கொண்டிருந்தது...  கடும் கோடை மேலிருந்து மின்விசிறி சூடான காற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தது...  பெட்டி முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்தனர், ஆன்மீகச் சுற்றுலா செல்லும் பேரிளம் பெண்கள் கும்பல் ஒன்று கோச்சை கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது...  பக்கத்துப் பெர்த்தில் உள்ளவர்களும் ஒரே பெட்டியில் கூட மற்ற பயணிகளும் விழி பிதுங்கினர்...  இந்த அமளி துமளி எதையும் கண்டுகொள்ளாமல் ஜன்னலோர இருக்கையில் ஒண்டியிருந்தாள் ஆனந்தி...  முன்னாள் நடிகை ஸ்ரீவித்யாவை தொண்ணூறு சதவிகிதம் ஒத்திருந்தது அவள் முகம், கரிய பெரிய விழிகளில் நிரந்தர சோகம் ஒன்று தங்கியிருந்தது...  பா...  ம்...  ம்...  ரயிலின் ஆரன் சத்தத்தில் அவள் சற்று கலைந்தாள்...  வெளியே எட்டி பார்த்தாள் இருமருங்கிலும் கருவேல மரங்களின் அணிவகுப்பு...  ஆயிரமாவது தடவையாக தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் இந்தப் பயணம் இப்பொழுது தேவையா? வயது நாற்பத்தைந்து ஆகிறது, இனி மிச்சம் கொஞ்சம் வாழ்க்கையே...  இப்படியே வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமே எதற்கு இந்த வீண்முயற்சி? எனக்கு ஏன் இந்த வீண் ஆசை...  ? வீண் ஆசை அல்ல நியாயமான ஆசைதான்!அவள் மனது அவளுக்கு சமாதானம் கூறியது. அவள் நினைவுகள் பின்னோக்கி விரைய...  ரயில் வேகமாக முன்னோக்கி விரைந்தது... 

ஓட்டல் புளூ மூன்...  ஐந்து நட்சத்திர ஓட்டல். பணக்காரர்கள் தங்கள் கறுப்புப் பணத்தைக் கரைக்கும் இடம்...  புளூ மூன் இத்தாலியன் மார்பிள் ஜொலிப்பில் தேவலோகத்தை அங்கே சிரிஷ்டித்திருந்தது. ரிசப்சனில் போனில் மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆனந்தி... 

ஆனந்தி...  வயது இருபத்தி ஐந்து. எந்த கல்யாணமான ஆடவனையும் ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு தங்கள் மனைவியர்களுடன் ஒப்பிட்டு பெருமூச்செறிய வைக்கும் அழகி ஆனந்தி...  படிப்பு பி.ஏ. எக்னாமிஸ், புளூ மூன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கான நேர்முகத் தேர்வில் வந்திருந்த நூற்றுக்கணக்கான பேரை பின்னுக்குத் தள்ளி இந்த ரிசப்ஷனிஸ்ட் வேலையை தனதாக்கிக் கொண்டவள், படிப்பில் கெட்டியானாலும் அசரடிக்கும் அவள் அழகே அவளுக்கு அந்த வேலையை பெற்றுக் கொடுத்தது...  இதுவரை எந்தக் காதல் வலையிலும் சிக்கவில்லை...  அப்பா சிறுவயதிலேயே ஒரு அட்டாக்கில் போய்ச் சேர்ந்திருந்தார், தாய் பிரபாவதி டெய்லரிங் வேலை செய்து அவளை டிகிரி வரை படிக்க வைத்திருந்தாள்...  ஷுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் அனைத்தையும் இப்பொழுது பெற்றிருந்தாள் பிரபாவதி...  ஆனந்தி வாங்கும் சம்பளத்தில் கால்வாசிக்கு மேல் பிரபாவதியின் மாத்திரை, மருந்துக்கே சரியாகிப் போனது...  காதல் தூதுகள் வேலை செய்யும் இடத்திலும், வெளியிலும் நிறையவே துரத்துகிறது அவளை, ஆனால் அவற்றை புறம் தள்ளிவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டென்று வாழ்ந்து வருகிறாள் அவள். மற்ற வயது பெண்கள் போல் சினிமா, பார்க், பீச் என்று சுற்றும் குணம் சற்றும் இல்லாதவள் ஆனந்தி...  வேலைவிட்டால் வீடு, விடுமுறை நாட்களை காருண்யா கருணை இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் செலவிடுவதுதான் அவளின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு...  குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு... 

பரபரப்பாக ரிசப்ஷனில் இயங்கிக் கொண்டிருந்தவள் முன் வந்து நின்றான் அந்த வெயிட்டர்...  அவனை வினவினாள்... 

"என்ன ராபர்ட்?" அவள் அவனை வினவிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு துண்டுச் சீட்டை அவள் முன் நீட்டினான் ராபர்ட், யோசனையினூடே அவனைக் கேட்டாள்... 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 3, 2023
ISBN9798223321484
ஆனந்தி பூங்காற்றே...

Read more from Sahitha Murugan

Related to ஆனந்தி பூங்காற்றே...

Related ebooks

Reviews for ஆனந்தி பூங்காற்றே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆனந்தி பூங்காற்றே... - Sahitha Murugan

    1

    ரயில் தலைதெறிக்க தண்டவாளத்தை அரைத்துத் தின்னும் ஆவேசத்துடன் விரைந்து கொண்டிருந்தது... கடும் கோடை மேலிருந்து மின்விசிறி சூடான காற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தது... பெட்டி முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்தனர், ஆன்மீகச் சுற்றுலா செல்லும் பேரிளம் பெண்கள் கும்பல் ஒன்று கோச்சை கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தது... பக்கத்துப் பெர்த்தில் உள்ளவர்களும் ஒரே பெட்டியில் கூட மற்ற பயணிகளும் விழி பிதுங்கினர்... இந்த அமளி துமளி எதையும் கண்டுகொள்ளாமல் ஜன்னலோர இருக்கையில் ஒண்டியிருந்தாள் ஆனந்தி... முன்னாள் நடிகை ஸ்ரீவித்யாவை தொண்ணூறு சதவிகிதம் ஒத்திருந்தது அவள் முகம், கரிய பெரிய விழிகளில் நிரந்தர சோகம் ஒன்று தங்கியிருந்தது... பா... ம்... ம்... ரயிலின் ஆரன் சத்தத்தில் அவள் சற்று கலைந்தாள்... வெளியே எட்டி பார்த்தாள் இருமருங்கிலும் கருவேல மரங்களின் அணிவகுப்பு... ஆயிரமாவது தடவையாக தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் இந்தப் பயணம் இப்பொழுது தேவையா? வயது நாற்பத்தைந்து ஆகிறது, இனி மிச்சம் கொஞ்சம் வாழ்க்கையே... இப்படியே வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமே எதற்கு இந்த வீண்முயற்சி? எனக்கு ஏன் இந்த வீண் ஆசை... ? வீண் ஆசை அல்ல நியாயமான ஆசைதான்!அவள் மனது அவளுக்கு சமாதானம் கூறியது. அவள் நினைவுகள் பின்னோக்கி விரைய... ரயில் வேகமாக முன்னோக்கி விரைந்தது...

    ஓட்டல் புளூ மூன்... ஐந்து நட்சத்திர ஓட்டல். பணக்காரர்கள் தங்கள் கறுப்புப் பணத்தைக் கரைக்கும் இடம்... புளூ மூன் இத்தாலியன் மார்பிள் ஜொலிப்பில் தேவலோகத்தை அங்கே சிரிஷ்டித்திருந்தது. ரிசப்சனில் போனில் மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆனந்தி...

    ஆனந்தி... வயது இருபத்தி ஐந்து. எந்த கல்யாணமான ஆடவனையும் ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு தங்கள் மனைவியர்களுடன் ஒப்பிட்டு பெருமூச்செறிய வைக்கும் அழகி ஆனந்தி... படிப்பு பி.ஏ. எக்னாமிஸ், புளூ மூன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கான நேர்முகத் தேர்வில் வந்திருந்த நூற்றுக்கணக்கான பேரை பின்னுக்குத் தள்ளி இந்த ரிசப்ஷனிஸ்ட் வேலையை தனதாக்கிக் கொண்டவள், படிப்பில் கெட்டியானாலும் அசரடிக்கும் அவள் அழகே அவளுக்கு அந்த வேலையை பெற்றுக் கொடுத்தது... இதுவரை எந்தக் காதல் வலையிலும் சிக்கவில்லை... அப்பா சிறுவயதிலேயே ஒரு அட்டாக்கில் போய்ச் சேர்ந்திருந்தார், தாய் பிரபாவதி டெய்லரிங் வேலை செய்து அவளை டிகிரி வரை படிக்க வைத்திருந்தாள்... ஷுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் அனைத்தையும் இப்பொழுது பெற்றிருந்தாள் பிரபாவதி... ஆனந்தி வாங்கும் சம்பளத்தில் கால்வாசிக்கு மேல் பிரபாவதியின் மாத்திரை, மருந்துக்கே சரியாகிப் போனது... காதல் தூதுகள் வேலை செய்யும் இடத்திலும், வெளியிலும் நிறையவே துரத்துகிறது அவளை, ஆனால் அவற்றை புறம் தள்ளிவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டென்று வாழ்ந்து வருகிறாள் அவள். மற்ற வயது பெண்கள் போல் சினிமா, பார்க், பீச் என்று சுற்றும் குணம் சற்றும் இல்லாதவள் ஆனந்தி... வேலைவிட்டால் வீடு, விடுமுறை நாட்களை காருண்யா கருணை இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் செலவிடுவதுதான் அவளின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு... குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு...

    பரபரப்பாக ரிசப்ஷனில் இயங்கிக் கொண்டிருந்தவள் முன் வந்து நின்றான் அந்த வெயிட்டர்... அவனை வினவினாள்...

    என்ன ராபர்ட்? அவள் அவனை வினவிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு துண்டுச் சீட்டை அவள் முன் நீட்டினான் ராபர்ட், யோசனையினூடே அவனைக் கேட்டாள்...

    என்ன ராபர்ட் இது?

    மேடம் அதோ அங்க சோபாவுல உக்கார்ந்திருக்கறாரே ஒரு சார் அவர் குடுத்துவிட்டார்...

    இப்பொழுது அவள் பார்வை கடல் போன்று விரிந்து கிடந்த ரிசப்ஷன் ஏரியாவில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த சோபாவில் சஃபாரியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அந்த ஆடவன் மேல் விழுந்தது... தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது அவள் மூளை உணர்த்தியது ஆண்களில் இவன் அழகன்... ‘துண்டுச் சீட்டில் என்ன எழுதி அனுப்பியிருப்பான்?’ மனம் கேள்வி கேட்க, கைகள் அந்தத் துண்டுச் சீட்டை பிரித்தது... பார்வை அதில் எழுதியிருந்த வரிகளின் மேல் ஓடியது... திக்கென்று அதிர்ந்தது அவள் இதயம்... மீண்டும் அந்த வரிகளைப் படித்தாள், அழகான கூட்டெழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்த வார்த்தைகள், அவள் உதடுகள் மீண்டும் படித்தது, வில் யூ மேரி மீ என்ற வார்த்தையை...

    என்னை திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா என்று துண்டுச் சீட்டில் எழுதி ஒரு நபர் மூலம் கொடுத்து விட்டு விட்டு தைரியமாக அவள் முன்னமே அமர்ந்திருக்கும் அந்த ஆணை வியப்பாகவும், சற்று பயத்துடனும் பார்த்தாள் ஆனந்தி...

    அவன் தோற்றம் அவளுக்கு உணர்த்தியது இவன் ஒரு ரோட் சைட் ரோமியோ இல்லை, தோற்றத்தில் கண்ணியத்தை தேக்கி வைத்திருக்கும் ஒரு பணக்காரன், ஐந்து நட்சத்திர விடுதிக்கு வர வேண்டுமென்றால் அது பணக்காரர்களால்தான் முடியும், நிச்சயம் இவன் பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும், இருக்கட்டுமே பணக்காரனாக இருந்தால் கண்ணில் காணும் அழகிய பெண்ணுக்கு ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று அடாவடியாக கேட்கும் லைசன்சை யார் கொடுத்தது? அவள் ரத்தத்தில் உஷ்ணம் ஏறியது, இந்தத் தொந்தரவுக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டும், இதை முளையிலேயே கிள்ள வேண்டும்’ என்று நினைத்தவள் விடுவிடுவென்று நடந்து அந்த ஆடவன் அமர்ந்திருக்கும் சோஃபாவின் முன் நின்றாள்...

    முகத்தில் கோபத்தின் சாயையை சற்று அதிகமாகவே பூசிக் கொண்டவள் அவனை வினவினாள்...

    ஏய் மிஸ்டர்... என்ன இது?

    அந்தத் துண்டுச் சீட்டை அவன் முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்தாள்... அவன் அதிக உணர்ச்சிகளைக் காட்டாமல் கூலாக கூறினான்...

    என்னுடைய ஆசை, அதை உங்ககிட்ட கம்யூனிக்கேட் பண்ணியிருக்கறேன் அவ்வளவுதான்...

    அப்ப ஊருல ஒலகத்துல அழகா எவளாவது இருந்தா உடனே துண்டுச் சீட்டு அனுப்பிடறதுதானா? அவள் குரல் சற்று உயர்ந்தது...

    எல்லாருக்கும் நான் கொடுக்கலையே, உங்களுக்குத்தானே கொடுத்திருக்கறேன்...

    இங்க பாருங்க இது பொதுஇடம் நான் ஒரு பொம்பளை, நீங்க இப்படி அநாகரீகமா நடந்துக்கிட்டதை சத்தம் போட்டுச் சொன்னா உங்களுக்கு அசிங்கமாயிடும்... அவள் குரல் மேலும் உயர்ந்தது...

    சரி... சரி. நீங்க பொம்பளை சத்தம் போட்டா, இப்ப கூட்டம் கூடும், நான் அசிங்கப்படுவேன் தெரியுது, ஐயாம் சாரி... என்று கிளம்பியவனைக் கேட்டாள்...

    இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட துண்டுச் சீட்டு அனுப்பியிருக்கறீங்களே இதுக்கு பதில் சொல்லிட்டுப் போங்க...

    சற்று தூரம் சென்றவன் அமைதியாக உறுதியான குரலில் கூறினான், நான் உங்களை விரும்புறேன் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன் கூறிவிட்டு நிதான நடை போட்டுக் கிளம்பினான் அவ்விடத்தை விட்டு, பேசமறந்து நின்று கொண்டிருந்தாள் ஆனந்தி!

    2

    அவன் கிளம்பினாலும் அவன் விட்டுச் சென்ற செண்டின் மனம் அங்கேயே நின்று கொண்டிருந்தது... அவள் அதிர்ச்சி கலந்த பிரமிப்பில் இருந்தாள். ‘ஒரு பெண்ணிடம் ஒரு ஆணால் இப்படி தடாலடியாக தன் காதலை எப்படி கூற முடிகிறது?’ என்ற கேள்வி அவள் முன் எழுந்தது... ‘நாம ஒரு சாதாரண ரிசப்ஷனிஸ்ட் என்ற அலட்சியப் பார்வைதான் இது’ எண்ணியவள் மேலும் நினைத்துக் கொண்டாள் அடுத்த முறை இவன் என்னை அணுகினால் அவனுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்... அன்று அவளுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை... நினைவுகள் அந்த ஆண்மகனையே சுற்றி வந்தது... அவனை நினைக்காதே என்றது மனது, கட்டளை இட்டாலும் அவன் முகத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திப் பார்த்தது மூளை... ‘ஆள் அழகாய் இருந்தான், ச்சீ... என்ன நினைப்பு இது? அவன் அழகாய் இருந்தால் என்ன அசிங்கமாக இருந்தால் எனக்கு என்ன... இனி ஒரு முறை என்னை அணுகினால் அவனுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்!’ மனதில் உறுதி பூண்டவள் வேலையில் கவனம் செலுத்த முயற்சித்தாள்...

    மறுநாள் வேலையில் மும்முரமாய் இருந்தவளை டெலிபோன் அழைப்பு ஈர்த்தது... எடுத்து செவிமடுத்தவள்,

    எஸ்... ஹோட்டல் புளூ ஸ்டார்

    மறுமுனையில் மௌனம்... ரிசீவரை வெறித்தவள் கூறினான்... திஸ் இஸ் ஹோட்டல் புளூ ஸ்டார் ரிசப்ஷன் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ...

    மறுமுனையின் மௌனம் கலைந்து சிறிய சிரிப்புடனே ஒரு ஆடவன் குரல் அவள் காதுகளை அடைந்தது...

    வெரி சிம்பிள் ஹெல்ப் ஃபிரம் யூ...

    அவள் மூளை அவளை உஷார் செய்தது... ‘இந்த குரல்... இந்தக் குரல் நேற்று என்னிடம் தடாலடியாக காதலைச் சொன்னவன் குரல்... இவனை கவனமாக கையாள வேண்டும்’ எண்ணியவள் கேட்டாள்...

    என்ன வேணும் சொல்லுங்க...

    வினாடி நேர இடைவெளியில் கூறினாள்...

    "உன்

    Enjoying the preview?
    Page 1 of 1