Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒளி பிறந்தது!
ஒளி பிறந்தது!
ஒளி பிறந்தது!
Ebook169 pages1 hour

ஒளி பிறந்தது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாளையங்கோட்டை சிறைச்சாலையின் அந்த பிரமாண்டமான கதவின் உள்ளேயிருந்த சிறிய கதவினை அந்த ரிடயர்ட் ஆக சில மாதங்களே இருக்கும் கான்ஸ்டபுள் ஆனையப்பன் திறந்தார்... குனிந்து அந்தக் கதவின் வழியே வெளிவந்தான் செந்தில்குமரன். முகம் தலை முழுவதும் புதர் மண்டியிருந்தது அவனுக்கு. நெடு நெடுவென்ற உயரம் உயரத்திற்கேற்ப பருமன் இல்லாமல் மெலிந்திருந்தான்... முடிவெட்டி ஷேவிங் செய்தால் பெண்கள் விரும்பும் ஒரு ஆடவனாக இருப்பான் செந்தில்குமரன். ஆனையப்பன் அவனிடம் கூறினார்...

"செந்தில் ஒரு கொலையை செஞ்சிட்டு ஜெயிலுக்கு வந்த ஆயுள் தண்டனைக் கைதியான நீ உன்னோட நன்னடத்தையால அண்ணா பிறந்த நாளான இன்னிக்கு விடுதலையாகிற, ஆயிரம் கைதிகள் தண்டனை முடிஞ்சு வெளியே போவாங்க அவங்களை நான் ஏன்னு கேட்கறதில்லை? ஏன்னா அவ்வளவு பேரும் அயோக்கியப் பயலுங்க... ஆனா இந்த ஒன்பது வருஷமும் நான் உன்னை பார்த்திட்டு வர்றேன் நீ ஒரு கொலை செஞ்சேன்னா யாரும் நம்ப மாட்டாங்க, ஜெயிலுல நீ ஒரு சின்னதப்பு செஞ்சேன்னு யாரும் சொன்னதில்லை விதியோ சதியோ நீ ஒரு ஒன்பது வருஷத்தை ஜெயிலுல கழிச்சிட்ட... வாழ்க்கையில இனி ஆத்திரத்தை கோபத்தை விட்டுடு... அனுபவஸ்தன் சொல்லுறேன் ஆத்திரம் அறிவுக்கு சத்ரு, இனி மிச்சமிருக்கற உன் வாழ்க்கையை நல்லா அமைச்சுக்கோ ஆண்டவன் உனக்கு நல்லதையே செய்வார்" கூறியவருக்கு ஒரு புன்னகையை பரிசாக கொடுத்துவிட்டு "வர்றேன் ஐயா" என்று கிளம்பினான்...

"இந்த நரகத்துக்கு இனி வர்ற மாதிரி நடந்துக்காத" என்றார் ஆனையப்பன் தூரே சென்றுவிட்ட செந்திலை நோக்கி...

பதினோரு மணி ஆதவன் பிரைட், கான்ட்ராஸ்டை தன் செட்டிங்ஸ்ல் கூட்டி வைத்திருந்தான். தோல் பொசுங்கிவிடும் போலிருந்தது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு வெளியுலகைப் பார்த்தவன் கண்கள் கூசியது... சிறை வளாகத்தில் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்தான் செந்தில். எதிர்புற சுவரில் பேட்ட ரஜினியும், விஸ்வாசம் அஜித்தும் அவனை நேர் பார்வை பார்த்தனர். அருகே கொடிக்கம்பம் கீழே அண்ணாவின் படம் வைத்து மாலை இடப்பட்டிருந்தது. அண்ணாவிற்கு மனதில் 'நன்றியை' கூறிக் கொண்டான் நன்னடத்தை காரணமாக தான் விடுதலையாக காரணமாக இருந்ததற்கு.

ஊர் நிறையவே மாறியிருந்தது. அவனுக்கு காலரா நடக்க வேண்டும் போலிருந்தது... வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். வெளியுலகை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பில் அவனுக்கு காலையில் உணவு உள்ளே சொல்லவில்லை. இப்பொழுது பசி மெலிதாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. இருபது நிமிட நடை பேருந்துநிலையத்தை அடைந்தான் செந்தில்...

சுற்றிலும் பார்த்தான் வசந்தபவன் போர்ட் கண்ணில் பட்டது அதற்குள் நுழைந்தான். காலியாகக் கிடந்த மேசை ஒன்றில் அமர்ந்தான். அவன் முன் வந்த சர்வர் சாப்பாட்டிற்கு டோக்கன் வாங்கச் சொன்னான். ஒன்பது வருடம் ஜெயிலில் வேலை பார்த்ததற்கான பணம் அவன் பையில் இருந்தது அதிலிருந்து நூறு ரூபாயை எடுத்து சாப்பாடு டோக்கன் வாங்கிவிட்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். இலையைப் போட்டு கூட்டு பொரியல் வைத்து சோற்றை வைத்து சாம்பாரை ஊற்றினான் சர்வர்... சோற்றைப் பிசைந்து வாயில் வைத்தவன் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது. காரணம் உப்புச் சப்பில்லாத ஜெயில் சாப்பாடு... அதை விட கொடுமையான புறக்கணிப்பு!

இந்த ஒன்பது வருடங்களில் அவனை அவன் குடும்பத்திலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.

வழக்கு நடக்கும் பொழுது யாரும் அவனை ஜாமீனில் எடுக்கவில்லை, இலவச வக்கீல் ஏனோ தானோ என்று வாதாட அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. வழக்கு நடக்கும்பொழுது ஜாமீனில் எடுக்கதாவர்களா அவனை பரோலில் எடுத்து சில நாட்களாவது வெளியுலகத்தை அவனுக்கு காட்டியிருப்பார்கள்? தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்றிருந்ததால் அவனுக்கு அதிகமான நெருங்கிய நண்பர்கள் யாரும் இருந்ததில்லை. ஒரு நண்பன் இருந்தான் அவனும் வந்து பார்க்கவில்லை அவனை. அவனுடைய நன்னடத்தை அவனுடைய ஆயுள் தண்டனையை ஒன்பது வருடங்களாக குறைத்து இன்று அவனுக்கு விடுதலை. யோசனையினூடே சாப்பிட்டு முடித்திருந்தான். அடுத்து?... இமயமலை அளவு உயர்ந்து நின்றது அவன் முன் கேள்வி!

'தன்னை ஒரு முறை கூட ஜெயிலில் வந்து பார்க்காத தன் குடும்பம் இனி தன்னை எப்படி ஏற்றுக் கொள்ளும்?' தாய் தன் மீது அன்பானவள்தான், ஆனால் கோபக்கார கணவனை மீறும் திராணி இல்லாத அப்பாவி ஜீவன் அவள். தங்கைகள் மூவரும் இப்பொழுது என்ன செய்வார்கள்? கல்யாணம் ஆகியிருக்குமா? குடும்பத்துக்கு மூத்தவனாக இருந்து கீழே உள்ள தங்கைகளை கரை சேர்க்க வேண்டிய நான் ஒன்பது வருடம் ஜெயிலில் கழித்து விட்டேன்' நினைவுச் சுழல் அவனை சுற்றி வந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223766001
ஒளி பிறந்தது!

Read more from Sahitha Murugan

Related to ஒளி பிறந்தது!

Related ebooks

Related categories

Reviews for ஒளி பிறந்தது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒளி பிறந்தது! - Sahitha Murugan

    1

    பாளையங்கோட்டை சிறைச்சாலையின் அந்த பிரமாண்டமான கதவின் உள்ளேயிருந்த சிறிய கதவினை அந்த ரிடயர்ட் ஆக சில மாதங்களே இருக்கும் கான்ஸ்டபுள் ஆனையப்பன் திறந்தார்... குனிந்து அந்தக் கதவின் வழியே வெளிவந்தான் செந்தில்குமரன். முகம் தலை முழுவதும் புதர் மண்டியிருந்தது அவனுக்கு. நெடு நெடுவென்ற உயரம் உயரத்திற்கேற்ப பருமன் இல்லாமல் மெலிந்திருந்தான்... முடிவெட்டி ஷேவிங் செய்தால் பெண்கள் விரும்பும் ஒரு ஆடவனாக இருப்பான் செந்தில்குமரன். ஆனையப்பன் அவனிடம் கூறினார்...

    செந்தில் ஒரு கொலையை செஞ்சிட்டு ஜெயிலுக்கு வந்த ஆயுள் தண்டனைக் கைதியான நீ உன்னோட நன்னடத்தையால அண்ணா பிறந்த நாளான இன்னிக்கு விடுதலையாகிற, ஆயிரம் கைதிகள் தண்டனை முடிஞ்சு வெளியே போவாங்க அவங்களை நான் ஏன்னு கேட்கறதில்லை? ஏன்னா அவ்வளவு பேரும் அயோக்கியப் பயலுங்க... ஆனா இந்த ஒன்பது வருஷமும் நான் உன்னை பார்த்திட்டு வர்றேன் நீ ஒரு கொலை செஞ்சேன்னா யாரும் நம்ப மாட்டாங்க, ஜெயிலுல நீ ஒரு சின்னதப்பு செஞ்சேன்னு யாரும் சொன்னதில்லை விதியோ சதியோ நீ ஒரு ஒன்பது வருஷத்தை ஜெயிலுல கழிச்சிட்ட... வாழ்க்கையில இனி ஆத்திரத்தை கோபத்தை விட்டுடு... அனுபவஸ்தன் சொல்லுறேன் ஆத்திரம் அறிவுக்கு சத்ரு, இனி மிச்சமிருக்கற உன் வாழ்க்கையை நல்லா அமைச்சுக்கோ ஆண்டவன் உனக்கு நல்லதையே செய்வார் கூறியவருக்கு ஒரு புன்னகையை பரிசாக கொடுத்துவிட்டு வர்றேன் ஐயா என்று கிளம்பினான்...

    இந்த நரகத்துக்கு இனி வர்ற மாதிரி நடந்துக்காத என்றார் ஆனையப்பன் தூரே சென்றுவிட்ட செந்திலை நோக்கி...

    பதினோரு மணி ஆதவன் பிரைட், கான்ட்ராஸ்டை தன் செட்டிங்ஸ்ல் கூட்டி வைத்திருந்தான். தோல் பொசுங்கிவிடும் போலிருந்தது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு வெளியுலகைப் பார்த்தவன் கண்கள் கூசியது... சிறை வளாகத்தில் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்தான் செந்தில். எதிர்புற சுவரில் பேட்ட ரஜினியும், விஸ்வாசம் அஜித்தும் அவனை நேர் பார்வை பார்த்தனர். அருகே கொடிக்கம்பம் கீழே அண்ணாவின் படம் வைத்து மாலை இடப்பட்டிருந்தது. அண்ணாவிற்கு மனதில் ‘நன்றியை’ கூறிக் கொண்டான் நன்னடத்தை காரணமாக தான் விடுதலையாக காரணமாக இருந்ததற்கு.

    ஊர் நிறையவே மாறியிருந்தது. அவனுக்கு காலரா நடக்க வேண்டும் போலிருந்தது... வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். வெளியுலகை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பில் அவனுக்கு காலையில் உணவு உள்ளே சொல்லவில்லை. இப்பொழுது பசி மெலிதாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. இருபது நிமிட நடை பேருந்துநிலையத்தை அடைந்தான் செந்தில்...

    சுற்றிலும் பார்த்தான் வசந்தபவன் போர்ட் கண்ணில் பட்டது அதற்குள் நுழைந்தான். காலியாகக் கிடந்த மேசை ஒன்றில் அமர்ந்தான். அவன் முன் வந்த சர்வர் சாப்பாட்டிற்கு டோக்கன் வாங்கச் சொன்னான். ஒன்பது வருடம் ஜெயிலில் வேலை பார்த்ததற்கான பணம் அவன் பையில் இருந்தது அதிலிருந்து நூறு ரூபாயை எடுத்து சாப்பாடு டோக்கன் வாங்கிவிட்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். இலையைப் போட்டு கூட்டு பொரியல் வைத்து சோற்றை வைத்து சாம்பாரை ஊற்றினான் சர்வர்... சோற்றைப் பிசைந்து வாயில் வைத்தவன் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது. காரணம் உப்புச் சப்பில்லாத ஜெயில் சாப்பாடு... அதை விட கொடுமையான புறக்கணிப்பு!

    இந்த ஒன்பது வருடங்களில் அவனை அவன் குடும்பத்திலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.

    வழக்கு நடக்கும் பொழுது யாரும் அவனை ஜாமீனில் எடுக்கவில்லை, இலவச வக்கீல் ஏனோ தானோ என்று வாதாட அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. வழக்கு நடக்கும்பொழுது ஜாமீனில் எடுக்கதாவர்களா அவனை பரோலில் எடுத்து சில நாட்களாவது வெளியுலகத்தை அவனுக்கு காட்டியிருப்பார்கள்? தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்றிருந்ததால் அவனுக்கு அதிகமான நெருங்கிய நண்பர்கள் யாரும் இருந்ததில்லை. ஒரு நண்பன் இருந்தான் அவனும் வந்து பார்க்கவில்லை அவனை. அவனுடைய நன்னடத்தை அவனுடைய ஆயுள் தண்டனையை ஒன்பது வருடங்களாக குறைத்து இன்று அவனுக்கு விடுதலை. யோசனையினூடே சாப்பிட்டு முடித்திருந்தான். அடுத்து?... இமயமலை அளவு உயர்ந்து நின்றது அவன் முன் கேள்வி!

    ‘தன்னை ஒரு முறை கூட ஜெயிலில் வந்து பார்க்காத தன் குடும்பம் இனி தன்னை எப்படி ஏற்றுக் கொள்ளும்?’ தாய் தன் மீது அன்பானவள்தான், ஆனால் கோபக்கார கணவனை மீறும் திராணி இல்லாத அப்பாவி ஜீவன் அவள். தங்கைகள் மூவரும் இப்பொழுது என்ன செய்வார்கள்? கல்யாணம் ஆகியிருக்குமா? குடும்பத்துக்கு மூத்தவனாக இருந்து கீழே உள்ள தங்கைகளை கரை சேர்க்க வேண்டிய நான் ஒன்பது வருடம் ஜெயிலில் கழித்து விட்டேன்’ நினைவுச் சுழல் அவனை சுற்றி வந்தது.

    ஐயா சாப்பிட்டாச்சுன்னா எழுந்திருங்க, நெறய பேர் டோக்கன் வாங்கிட்டு வெயிட் பண்ணுறாங்க

    ‘என் தாடி முடி கோலத்தைப் பார்த்து சர்வர் ஐயா என்கிறான். அடேய் தம்பி எனக்கு முப்பத்தி நாலு வயசுதாண்டா ஆகுது’ என கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஜெயிலுக்கு வரும் பொழுது அவனுக்கு இருபத்தி ஐந்து வயசு. சாப்பாட்டு மேசையிலிருந்து எழுந்து கை கழுவினான். ஓட்டலை விட்டு வெளியே வந்தவன் தூத்துக்குடி செல்லும் பேருந்து நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான்...

    திருநெல்வேலி பேருந்துநிலையம்...ஒன்பது வருடத்தில் அது ஒன்றும் பெரிதாக மாறியிருக்கவில்லை. அன்றைவிட சாந்தி ஸ்வீட் ஸ்டால்கள் இன்னும் அதிகமாயிருந்தது...பையை தடவினான் பணம் இருந்தது... ‘தங்கைகளுக்கு எதாவது வாங்கிப் போகலாமா?’ யோசித்தவன் வீடு தன்னை எப்படி எதிர்கொள்கிறது என்று பார்த்துவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.

    எண்ட் டூ எண்ட் தூத்துக்குடி பேருந்து வந்து நின்றதும் ஏறி அமர்ந்தான்... பத்து நிமிடத்தில் பேருந்து புறப்பட்டது. அவன் மனம் ஆற்றாமையில் தவித்தது... மகன் கொலைகாரன் ஆகிப் போனான், கோபக்கார தந்தை தானும் வந்து பார்க்காமல் குடும்பத்தையும் பார்க்க அனுமதித்திருக்கவில்லை. ஆனால் சுகந்தி நீ ஏன் என்னை வந்து பார்க்கவில்லை? நான் கொலைகாரன் ஆனது உனக்காகத் தானே?!

    நினைவுகள் புரட்டியடித்தது அவனை... வெளியே எட்டிப் பார்த்தான் பேருந்து வல்லநாடு புதுப்பாலத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. அவனை பாளையங்கோட்டை அழைத்து வரும் பொழுது இந்தப் பாலம் கட்டப்படவில்லை. பேருந்திலிருந்து அன்று ஜெயில் வாகனத்தில் பயணப்பட்ட பழைய பாலத்தை ஜன்னல் வழியே பார்த்தான். பேருந்து விரைந்தது. வெளியே அனல்காற்று வீசியது அதை மீறிய அனலில் தகித்தது அவன் மனம். முப்பது நிமிடங்கள் கரைந்திருக்க பேருந்து தூத்துக்குடி பேருந்துநிலையத்திற்குள் நுழைந்து நடைமேடையில் நின்றது. இறங்கியவன் திருச்செந்தூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்தான். கண்டக்டர் கேட்டார்...

    எங்க?

    முத்தையாபுரம்

    முத்தையாபுரம், ஸ்பிக்நகர் எல்லாம் வண்டி எடுத்த பொறவு ஏறுங்க என்றார் கண்டக்டர். கீழே இறங்கினான் செந்தில். பத்து நிமிடத்தில் வண்டியில் கூட்டம் பிடித்தது. வண்டி புறப்பட்டது, சீட் முழுவதும் நிரம்பியிருந்தது. உக்கார இருக்கை கிடைக்கவில்லை. அதைப்பற்றி அவன் கவலைப்படவும் இல்லை, அவன் மனம் முழுவதும் ‘வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும்?’ என்பதிலேயே இருந்தது. ‘தந்தை என்ன சொல்வார்? தாய் தங்கைகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். மகிழவே செய்வார்கள். எண்ணங்கள் அலையலையாய் அவனை வந்து மோதியது.

    காமராஜ் கல்லூரி, உப்பாத்து ஓடை, தாண்டியது பேருந்து... உடலில் ஒரு வெப்பம் வந்து சூழ்ந்தது அவனுக்கு... அடுத்து முத்தையாபுரம் நிறுத்தம் அவன் பிறந்த ஊர், அவன் சொந்தங்கள் வாழும் ஊர்... அவன் பிறந்து வளர்ந்த ஊர். அடுத்த ஐந்தாவது நிமிடம் கண்டக்டர் விசிலை ஊதினார் பேருந்து நின்றது... ஐந்து பயணிகளுக்கு அடுத்து கடைசியாய் இறங்கினான் செந்தில். புதிதாக பேருந்து நிறுத்தம் கட்டியிருந்தார்கள்... வழக்கம் போல பேருந்து நிறுத்தச் சுவர் நிரம்பி வழிந்தது மூலம், பௌத்திரம் போஸ்ட்டர்களால். சிறியதாக இருந்த சாலை அகலமாக்கப்பட்டிருந்தது. முத்தையாபுரம் ஜங்ஷன் அந்த பனிரெண்டு மணிக்கும் பரபரப்பாய் இருந்தது. காந்தி டீக்கடை அதே இடத்தில் இருந்தது... தன் தாடியை, முடியை ஒரு கணம் தடவிப் பார்த்தான் ‘இப்படியே வீட்டிற்கு செல்ல வேண்டாம்’ என்ணியவன் எதிரே கண்ட சுதா சலூனில் புகுந்தான் கடைச்சிப்பந்தி கேட்டான் கட்டிங்கா? ஷேவிங்கா?

    ரெண்டும் பண்ணுப்பா முத்து என்ற செந்திலை கூர்ந்து பார்த்த சலூன்கடை முத்து கேட்டான் நீங்க யாரு? என் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்?

    முடியை வெட்டிட்டுப் பாரு தெரியும் என்றான் செந்தில்.

    ஆர்வத்தில் பரபரப்பாய் தொழிலில் இறங்கிய முத்து முடிவெட்டி அவன் தாடியை ஷேவ் செய்து முடித்ததும் கேட்டான் நீ செந்தில் இல்ல?

    அதே செந்தில்தான்

    எப்ப வந்த? ஜெயிலில் இருந்து என்று கேட்கவில்லை அந்த தன்மையான முத்து.

    வீட்டுல யாரும் கூப்பிட வரலையா?

    விரக்தியாய் புன்னகைத்தவன் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கூறினான் எல்லாம் அப்புறம் சொல்லுறேன் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்... நடக்க நடக்கவே எண்ணினான் ‘முத்துவைப் போல் அடையாளம் கண்டுபிடிப்பவர்களுக்கு பதில் கூறும் தர்மசங்கடம் வரும்’ நினைத்தவன் ஒரு ஆட்டோ பிடித்தான். ஆட்டோ அவன் வீடு இருக்கும் தோப்புத் தெரு நோக்கி விரைந்தது.

    2

    பிரதான சாலையிலிருந்து பிரிந்த சிறிய சாலை தோப்புத் தெருவிற்குள் நுழைந்தது... பேருக்குத்தான் அது தோப்புத்தெரு அங்கே எந்த மரமும் தென்படவில்லை. ஒரு காலத்தில் புளியமரம் நிறைய இருந்ததாம் அதனால் அந்தப் பெயர் வந்திருந்தது. ஆட்டோவை நிறுத்தச்

    Enjoying the preview?
    Page 1 of 1