Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பயணம்...
பயணம்...
பயணம்...
Ebook140 pages50 minutes

பயணம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதிரவன் அமிலத்தை பூமியில் சொரிந்து கொண்டிருந்தான். மேமாத வெயில் தகித்துக்கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பூமித்தாய் வெள்ளுடை தரித்திருந்தாள். குவியல் குவியலாய் உப்பு அம்பாரமாய் குவிக்கப்பட்டிருந்தது வரப்பின் மேல். ஊரார் சுவையாய் உண்ண உழைப்பாளர்கள் பாத்தி வாருவது, உப்பு சுமப்பது என்று பரபரப்பாய் உழைத்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்விடம் தூத்துக்குடியின் முத்தையாபுரம் உப்பளப்பகுதி. ஆண்கள் பாத்தியில் விளைந்த உப்பை பலகையால் இழுத்து வரப்பில் ஒதுக்கினர். ஈரம் காய்ந்த உப்பை பெண்கள் பனையோலைப் பெட்டியில் சுமந்து சற்று தூரத்தில் உப்பு சேமிக்கும் பகுதியில் கொண்டு குவித்துக் கொண்டிருந்தனர்.

நமது கதாநாயகி சேர்மக்கனி தலையிலும் பனையோலைப் பெட்டி. அவள் கறுத்தமேனி வேர்த்து வடிந்து கொண்டிருந்தது. உழைக்கும் பெண்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்கள் எண்ணம் முழுவதும் உழைப்பு, வாரக் கடைசியில் கிடைக்கும் கூலி இதிலேயே பதிந்திருக்கும். அச்சுறுத்தும் சூரியன் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சூரியன் தோற்றுப் போவது இதுபோன்ற உழைப்பாளர்களிடத்தில் மட்டுமே. சாதாரண மனிதர்களை குடை பிடிக்கவும், மின்விசிறிக்கு கீழேயும் விரட்டும் ஆதவனால் உழைக்கும் இந்த வர்க்கத்தை ஒன்று செய்துவிடமுடிவதில்லை. இதை எண்ணி எண்ணி கதிரவன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தான்.

சேர்மக்கனி. பனையோலைப் பெட்டியை தலையில் வைத்து லாவகமாய் உப்பள வரப்பில் நடந்து கொண்டிருந்தாள். பதினெட்டு வயது கரியமேனி, கறுப்பிலும் களையான முகம், சாயம் போன தாவணியில் ஊர்க்காட்டு அம்மன் சிலை போல் இருந்தாள் சேர்மக்கனி,கையாலாகாத குடிகாரத் தந்தை. கூடப் பிறந்தது இரண்டு தங்கைகள், இளையவள் ராணி ஐந்தாம் வகுப்பு, நடுவில் உள்ளவள் சந்தனமாரி.

இளையவளுக்கு நான்கு வயது இருக்கும் போது காசநோய் தாயை பறித்துக் கொண்டது அவர்களிடமிருந்து. அப்பனுக்கும் சேர்த்து உப்புச் சுமந்தாள் சேர்மக்கனி. அவளின் உழைப்பில்தான் அனைவருக்கும் கஞ்சி என்றாகிப் போனது. தகப்பன் கந்தசாமி கிடைத்த கூலி வேலைக்குச் செல்வான். கிடைக்கும் காசை கூத்தியாள் தங்கபுஷ்பத்துக்கு தாரை வார்த்துவிட்டு அவள் குடிசையே கதியென்று கிடப்பான். வேலியில்லாப் பயிராக அந்த மூன்று பெண்களும் இந்த பூமிப்பந்தில் காலத்தை தள்ளி வந்தார்கள். எல்லோருக்கும் போல அவர்களுக்கும் இரவு பகல் வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது.

தலையில் சுமந்து வந்த உப்பை அம்பாரத்தில் கொட்டிவிட்டு மீண்டும் பாத்தியை நோக்கி நடந்தாள் சேர்மக்கனி. பாதி வரப்பை கடந்தவள் முதுகில் சாட்டை வாரை கொண்டு அடித்தது போல் வலி. வலியை பல்லால் கடித்து அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் சேர்மக்கனி. அங்கே பல்லை இளித்தவாறு பக்கத்து அளத்து வரப்பில் நின்றிருந்தான் கங்காணி ஈசக்கு. ஒரு தீப்பார்வையை அவனுக்குக் கொடுத்தாள் சேர்மக்கனி. அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தன் இளிப்பை பெரிதாக்கிக் கொண்டு பேசினான் ஈசாக்கு.

ஆறடி உயரம், உடல் உழைக்காமல் உக்கார்ந்து கங்காணி வேலை பார்க்கும் ஈசாக்கு ஒரு மாமிச உருண்டையாய் இருந்தான். கண்கள் ரத்தச் சிவப்பில், காரணம் முந்தைய நாள் மூலக்கரையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து குடித்த கள்ளச்சாராயத்தின் மகிமை.

"ஏம்புள்ள கனி செத்த நிமிஷம் நம்ம செட்டுக்கு வந்து குளுகுளுன்னு தண்ணி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்து எந்திச்சுப் போலாமுல்ல?"

பதில் பேசாமல் நடந்தாள் சேர்மக்கனி. வரப்பில் சில அடிகள் நடந்தவள் முதுகில் அதே சாட்டை வாரால் அடித்த வலி. அதற்குக் காரணம் மறுபடியும் பிடி உப்பை அள்ளி சுள்ளென்று அவள் முதுகில் ஈசக்கு வீசியதே. பெட்டியை கீழே போட்டுவிட்டு உக்கிரகாளியாய் முறைத்தாள் சேர்மக்கனி ஈசாக்கை.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223852834
பயணம்...

Read more from Sahitha Murugan

Related to பயணம்...

Related ebooks

Related categories

Reviews for பயணம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பயணம்... - Sahitha Murugan

    1

    கதிரவன் அமிலத்தை பூமியில் சொரிந்து கொண்டிருந்தான். மேமாத வெயில் தகித்துக்கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பூமித்தாய் வெள்ளுடை தரித்திருந்தாள். குவியல் குவியலாய் உப்பு அம்பாரமாய் குவிக்கப்பட்டிருந்தது வரப்பின் மேல். ஊரார் சுவையாய் உண்ண உழைப்பாளர்கள் பாத்தி வாருவது, உப்பு சுமப்பது என்று பரபரப்பாய் உழைத்துக் கொண்டிருந்தனர்.

    நிகழ்விடம் தூத்துக்குடியின் முத்தையாபுரம் உப்பளப்பகுதி. ஆண்கள் பாத்தியில் விளைந்த உப்பை பலகையால் இழுத்து வரப்பில் ஒதுக்கினர். ஈரம் காய்ந்த உப்பை பெண்கள் பனையோலைப் பெட்டியில் சுமந்து சற்று தூரத்தில் உப்பு சேமிக்கும் பகுதியில் கொண்டு குவித்துக் கொண்டிருந்தனர்.

    நமது கதாநாயகி சேர்மக்கனி தலையிலும் பனையோலைப் பெட்டி. அவள் கறுத்தமேனி வேர்த்து வடிந்து கொண்டிருந்தது. உழைக்கும் பெண்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்கள் எண்ணம் முழுவதும் உழைப்பு, வாரக் கடைசியில் கிடைக்கும் கூலி இதிலேயே பதிந்திருக்கும். அச்சுறுத்தும் சூரியன் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சூரியன் தோற்றுப் போவது இதுபோன்ற உழைப்பாளர்களிடத்தில் மட்டுமே. சாதாரண மனிதர்களை குடை பிடிக்கவும், மின்விசிறிக்கு கீழேயும் விரட்டும் ஆதவனால் உழைக்கும் இந்த வர்க்கத்தை ஒன்று செய்துவிடமுடிவதில்லை. இதை எண்ணி எண்ணி கதிரவன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தான்.

    சேர்மக்கனி. பனையோலைப் பெட்டியை தலையில் வைத்து லாவகமாய் உப்பள வரப்பில் நடந்து கொண்டிருந்தாள். பதினெட்டு வயது கரியமேனி, கறுப்பிலும் களையான முகம், சாயம் போன தாவணியில் ஊர்க்காட்டு அம்மன் சிலை போல் இருந்தாள் சேர்மக்கனி,கையாலாகாத குடிகாரத் தந்தை. கூடப் பிறந்தது இரண்டு தங்கைகள், இளையவள் ராணி ஐந்தாம் வகுப்பு, நடுவில் உள்ளவள் சந்தனமாரி.

    இளையவளுக்கு நான்கு வயது இருக்கும் போது காசநோய் தாயை பறித்துக் கொண்டது அவர்களிடமிருந்து. அப்பனுக்கும் சேர்த்து உப்புச் சுமந்தாள் சேர்மக்கனி. அவளின் உழைப்பில்தான் அனைவருக்கும் கஞ்சி என்றாகிப் போனது. தகப்பன் கந்தசாமி கிடைத்த கூலி வேலைக்குச் செல்வான். கிடைக்கும் காசை கூத்தியாள் தங்கபுஷ்பத்துக்கு தாரை வார்த்துவிட்டு அவள் குடிசையே கதியென்று கிடப்பான். வேலியில்லாப் பயிராக அந்த மூன்று பெண்களும் இந்த பூமிப்பந்தில் காலத்தை தள்ளி வந்தார்கள். எல்லோருக்கும் போல அவர்களுக்கும் இரவு பகல் வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது.

    தலையில் சுமந்து வந்த உப்பை அம்பாரத்தில் கொட்டிவிட்டு மீண்டும் பாத்தியை நோக்கி நடந்தாள் சேர்மக்கனி. பாதி வரப்பை கடந்தவள் முதுகில் சாட்டை வாரை கொண்டு அடித்தது போல் வலி. வலியை பல்லால் கடித்து அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் சேர்மக்கனி. அங்கே பல்லை இளித்தவாறு பக்கத்து அளத்து வரப்பில் நின்றிருந்தான் கங்காணி ஈசக்கு. ஒரு தீப்பார்வையை அவனுக்குக் கொடுத்தாள் சேர்மக்கனி. அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தன் இளிப்பை பெரிதாக்கிக் கொண்டு பேசினான் ஈசாக்கு.

    ஆறடி உயரம், உடல் உழைக்காமல் உக்கார்ந்து கங்காணி வேலை பார்க்கும் ஈசாக்கு ஒரு மாமிச உருண்டையாய் இருந்தான். கண்கள் ரத்தச் சிவப்பில், காரணம் முந்தைய நாள் மூலக்கரையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து குடித்த கள்ளச்சாராயத்தின் மகிமை.

    ஏம்புள்ள கனி செத்த நிமிஷம் நம்ம செட்டுக்கு வந்து குளுகுளுன்னு தண்ணி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்து எந்திச்சுப் போலாமுல்ல?

    பதில் பேசாமல் நடந்தாள் சேர்மக்கனி. வரப்பில் சில அடிகள் நடந்தவள் முதுகில் அதே சாட்டை வாரால் அடித்த வலி. அதற்குக் காரணம் மறுபடியும் பிடி உப்பை அள்ளி சுள்ளென்று அவள் முதுகில் ஈசக்கு வீசியதே. பெட்டியை கீழே போட்டுவிட்டு உக்கிரகாளியாய் முறைத்தாள் சேர்மக்கனி ஈசாக்கை.

    மொறைக்கும் போதுகூட நீ அழகாத்தாண்டி இருக்கற கனி.

    அவன் நக்கல் பேச்சு மேலும் மேலும் சேர்மக்கனியை ஆத்திரப்படுத்தியது. மனதில் எண்ணம் ஓடியது ‘வெறிநாய் கடிக்க வருகிறது அதை யாராவது திரும்பிக் கடிப்பாங்களா?’ எண்ணியவள் சற்று சாந்தமடைந்தாள். சாந்தமானவள் கீழே விழுந்த கடவப் பெட்டியை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு நடக்க எத்தனித்தாள். அந்நேரம் ஈசாக்கு விரைவாய் நடைபோட்டு அவள் அருகில் வந்தான். வந்தவன் அவள் எதிர்பாராத தருணத்தில் அவள் கையை பற்றி இழுத்து அவளை தன்பால் நெருக்கினான். உழைத்து உரமேறிய உடல் அவளுக்கு, மாமிச மலை ஈசாக்கை சுலபமாக தள்ளி விட்டு விட்டு அருகில் இருந்த உடங்காட்டிற்குள் ஓடினாள் சேர்மக்கனி. அவளை துரத்தியவாறு அவனும் ஓடினான். சற்றுநேரத்தில் அவளை அடைந்த ஈசாக்கு ஓடிய சேர்மக்கனியின் காலை இடறிவிட்டான். தடுமாறி விழுந்தாள் சேர்மக்கனி. கீழே விழுந்தவள் அருகில் மண்டியிட்டான் ஈசாக்கு. சேர்மக்கனியின் பெண்மை உஷாரானது. நீண்ட தூரம் ஓடி அடர்ந்த பகுதிக்குள் வந்திருப்பது அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது. திரும்பிய இடமெல்லாம் உடை மரங்கள். கருவேல மரத்தைத்தான் தூத்துக்குடி பகுதியில் உடைமரம் என்பர். சுற்றுமுற்றும் பார்வையை வீசினாள் சேர்மக்கனி.

    சற்று தூரத்தில் ஒரு பெண் எரிப்பதற்கு விறகு வெட்டிக் கொண்டிருந்தாள். ஈசாக்கை காலால் உதைத்து விட்டு அவளை நோக்கி ஓட்டம் எடுத்தாள் சேர்மக்கனி. அருகில் சென்ற பின்புதான் தெரிந்தது அது முள்ளக்காட்டை சேர்ந்த பேச்சியம்மாள் என்று. அவள் கையில் கூர்மையான அரிவாள். சேர்மக்கனியின் கண்கள் வேறு எதையும் பார்க்கவில்லை.

    அர்ஜுனனுக்கு கிளியின் கண்கள் மட்டும் தெரிந்தது போல், சேர்மக்கனிக்கு பேச்சியம்மாளின் கையில் இருந்த அரிவாள் மட்டுமே அவள் கண்களில் பதிந்தது. ஏன், எதற்கு என்று கேட்க நேரமில்லை பேச்சியின் கையிலிருந்த அருவாளைப் பறித்தாள் சேர்மக்கனி!. அந்நேரம் அவளை துரத்தி அங்கே வந்து சேர்ந்திருந்தான் ஈசாக்கு. அங்கே மற்றொரு பெண் இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் துணுக்குற்று நின்றான் ஈசாக்கு. காம வெறி தலைக்கேறிய ஈசாக்குக்கு இன்னொரு பெண் அருகில் இருப்பது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அவனை செலுத்தியது மிருக வெறி மட்டுமே. அருவாளோடு நின்றிருந்த சேர்மக்கனி அவனுக்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லை அப்பொழுது. எட்டி அவள் முந்தானையை இழுத்தான். ரௌத்திரமானாள் சேர்மக்கனி. எட்டி உதைத்தாள் ஈசாக்கின் வயிற்றில், எதிர்பாராத அந்த தாக்குதலில் தடுமாறி கீழே விழுந்தான் ஈசாக்கு. ஆங்காரமாய் வீசினாள் அருவளை, உருண்டு தப்பித்தான் ஈசாக்கு.

    சேர்மக்கனி. என்ன பண்ணுற, என்ன பண்ணுற? பயத்தில் அலறினாள் பேச்சியம்மாள். தன் பெண்மைக்கு நேர்ந்த அவமானத்தை துடைக்க ஒரு வினாடியில் முடிவெடுத்தது அவள் மனம்.

    உருண்டு தப்பித்த ஈசாக்கு அளத்தை நோக்கி உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். பேச்சியம்மாள் அலற அலற அதை பொருட்படுத்தாமல் வெறி கொண்ட பெண் புலியென விரட்டினாள் சேர்மக்கனி ஈசாக்கை! பதட்டத்தில் ஓடியவன் கால்தடுமாறி வரப்பில் குவித்து வைத்திருந்த உப்பு அம்பாரத்தில் விழுந்தான். வெறிகொண்ட சேர்மக்கனி அவன் நெஞ்சில் காலை வைத்து அழுத்தினாள். அவன் திமிறி எழும் முன் சொத்தென விழுந்தது ஈசாக்கின் வலது கையில் வெட்டு. கூர்மையான அந்த அருவாளும், உறுதியான சேர்மக்கனியின் கையின் வேகமும் சேர ஈசாக்கின் முளங்கைக்கு கீழே துண்டாக விழுந்தது. அலறித் துடித்து உப்பில் புரண்டான் ஈசாக்கு. வெள்ளை உப்பு அம்பாரம் ஈசாக்கின் கெட்ட குருதியால் சிவப்பாக மாறத் தொடங்கியது!

    2

    ஈசாக்கின் அலறல் கேட்டு சுற்றுவட்டாரத்தில் அளத்தில் வேலை செய்த உப்பளத் தொழிலாளர்கள் அனைவரும் அங்கே குழுமிவிட்டனர். செய்வதற்கரிய செயலை செய்த பெருமிதத்தில் நின்றிருந்தாள் சேர்மக்கனி! அவள் முகத்தில் ஒரு கடுகளவு குற்ற உணர்ச்சியோ, பயமோ தென்படவில்லை.

    அதிகப்படியான ரத்தஇழப்பு ஈசாக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1