Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணே கருமைநிறக் கண்ணே...
கண்ணே கருமைநிறக் கண்ணே...
கண்ணே கருமைநிறக் கண்ணே...
Ebook159 pages55 minutes

கண்ணே கருமைநிறக் கண்ணே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலையில் மும்முரமாக இருந்த ரமணனின் கவனத்தைச் சிதைக்கும் வண்ணம் அவன் செல்போன் ரிங்டோனை இசைத்தது இளையராஜாவின் கண்ணே கலைமானே பாடலை... அந்த பிரம்மாண்ட நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம். ரமணன் அப்பர் டிவிஷன் கிளர்க்... திருத்தமான முகம் மாநிறம். மேவாயில் செழிப்பான மீசை... லேசாக உள்வாங்க ஆரம்பித்திருந்தது தலைமுடி. ஆனாலும் அதுகூட அவனுக்கு ஒரு அழகையே கொடுத்திருந்தது, ஐந்து அடி பத்து அங்குல உயரம். தாய் தந்தை சிறு வயதிலேயே இறந்தபின்பும் தனி ஒரு மனிதனாய் இரண்டு தங்கைகளை படிக்க வைத்து மணம் முடித்து நிமிர்ந்து பார்க்கும் பொழுது வயது 34 ஐ தொட்டிருந்தது... மூத்த தங்கை மாலதியை தூத்துக்குடி தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் சுந்தரேசனுக்கு மணமுடித்து கொடுத்திருந்தான். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முத்தையாபுரத்தில் வாடகை வீட்டுக் குடித்தனம். இளைய தங்கை பார்வதி... அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இரண்டாம் வகுப்பில் படிக்கிறது. அவள் கணவன் மாரியப்பன் தனியார் உரத்தொழிற்சாலையில் டெக்னீஷியன். சொந்த வீட்டில் ஆறுமுகநேரியில் குடியிருக்கின்றனர்... ரமணனின் தாய் தந்தை இருவரும் அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில் ஒருவர் பின் ஒருவராய் இறைவன் திருவடியில் சேர்ந்தனர்.

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி இப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை... ஒற்றைச் சம்பாத்தியத்தில் தங்கைகள் இருவரையும் அவர்களுக்குத் தகுந்த இடத்தில் மணமுடித்துக் கொடுத்திருந்தான். இப்பொழுது தனிக் கட்டை அவன். இன்னும் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறான். லோன் போட்டு சிறியதாக ஒரு வீடு கட்ட ஆசை ஆனால் தங்கைகள் கல்யாணத்திற்கு வாங்கிய கடனே அடைந்த பாடில்லை... வீடு கட்டிய பின்பே திருமணம் என்று முடிவெடுத்து அது முடியாமல் அதுவும் தள்ளிக்கொண்டே போய் வயதும் முப்பத்தியிரண்டு ஆகிவிட்டிருந்தது... ஆனால் தங்கைகள் இன்னும் தள்ளிப் போட்டால் அண்ணன் கிழவன் ஆகிவிடுவான் என்று உணர்ந்தவர்கள் ஓராண்டாக அண்ணனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர். எதுவும் இதுவரை தகையவில்லை... இசைத்த செல்போன் திரையைத் தடவி காதில் வைத்தான் ரமணன்... மறுமுனையில் தங்கை மாலதி முத்தையாபுரத்தில இருந்து அழைத்தாள்...

"அண்ணே" மாலதியின் குரல் கேட்கவும்...

"சொல்லு மாலு என்ன விஷயம்? இந்த நேரம் போன் பண்ணியிருக்கற?"

"அண்ணே நீ கோபப்படக் கூடாது"

"என்னிக்கும்மா அண்ணன் உங்ககிட்ட கோபப்பட்டிருக்கறேன்? என்ன விஷயமுன்னு சொல்லு"

"அண்ணே நானும் பாருவும் உங்கிட்டக் கேட்காம ஒரு அரேஞ்ச்மெண்ட் பண்ணிட்டோம்"

"என்ன?"

"நம்ம ராமசாமி மாமா ஒரு பொண்ணோட ஜாதகத்தைக் கொண்டு வந்தார் பொண்ணும் பார்க்க அழகா இருக்கறா"

"அதனால?"

"நீ சொன்னா கேட்கமாட்டேன்னு தெரியும் அதனால சாயந்திரம் பொண்ணு பார்க்க வர்றோம்னு ராமசாமி மாமாட்டச் சொல்லி பொண்ணு வீட்டுல தகவல் சொல்லிட்டோம்"

அதிர்ச்சியானான் ரமணன் "என்னம்மா இப்படி வேண்டா வேலை பார்க்கறீங்க?"

"என்னண்ணே இப்படிச் சொல்லுற? இது வேண்டா வேலையா? எங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் உன் கல்யாணம்னு சொன்ன ஒத்துக்கிட்டோம்... இப்ப வீடு கட்டணும்னு சொல்லுற நீ வீடு கட்டுறதுக்குள்ள கிழவனாயிடுவ... சாயங்காலம் பார்வதி ஆறுமுகனேரியில இருந்து கால்டாக்சியில வருவா நாம எல்லம் சேர்ந்து பொண்ணு பார்க்கப் போறோம்"

மாலதி திடமாகக் கூற அவனால் தட்ட முடியவில்லை...

"மாலும்மா எனக்கு இந்தப் பொண்ணு பார்க்கற சடங்குல நம்பிக்கை இல்லை... போய் பார்த்து பொண்ணு புடிக்கலைனு சொன்னா அந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபடும்... அதனால இந்தப் பொண்ணு பா      ர்க்கிற சடங்கு வேணாமே"

"பொறு பொறு... எதுக்கு எல்லாத்துக்கும் பொங்குற? பொண்ணு போட்டோவை நான் பார்த்துட்டேன் பொண்ணு அழகா இருந்தா"

"இங்க பாரு மாலு பொண்ணு நேருல பார்க்க நல்லா இல்லை அப்பிடி இப்பிடி சொல்லிட்டு வரக்கூடாது... எனக்கு ஒரு குறிக்கோள்... வாழ்க்கையில நான் பொண்ணு பார்க்கப் போற மொதப் பொண்ணை... அவ கறுப்போ சிவப்போ நெட்டையோ குட்டையோ எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடணும்... சால்ஜாப்பு சொல்லி எதிர்பார்ப்புல இருக்கற பொண்ணுங்களை ஏமாத்துறது பாவம்"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223056300
கண்ணே கருமைநிறக் கண்ணே...

Read more from Sahitha Murugan

Related to கண்ணே கருமைநிறக் கண்ணே...

Related ebooks

Related categories

Reviews for கண்ணே கருமைநிறக் கண்ணே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணே கருமைநிறக் கண்ணே... - Sahitha Murugan

    1

    வேலையில் மும்முரமாக இருந்த ரமணனின் கவனத்தைச் சிதைக்கும் வண்ணம் அவன் செல்போன் ரிங்டோனை இசைத்தது இளையராஜாவின் கண்ணே கலைமானே பாடலை... அந்த பிரம்மாண்ட நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம். ரமணன் அப்பர் டிவிஷன் கிளர்க்... திருத்தமான முகம் மாநிறம். மேவாயில் செழிப்பான மீசை... லேசாக உள்வாங்க ஆரம்பித்திருந்தது தலைமுடி. ஆனாலும் அதுகூட அவனுக்கு ஒரு அழகையே கொடுத்திருந்தது, ஐந்து அடி பத்து அங்குல உயரம். தாய் தந்தை சிறு வயதிலேயே இறந்தபின்பும் தனி ஒரு மனிதனாய் இரண்டு தங்கைகளை படிக்க வைத்து மணம் முடித்து நிமிர்ந்து பார்க்கும் பொழுது வயது 34 ஐ தொட்டிருந்தது... மூத்த தங்கை மாலதியை தூத்துக்குடி தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் சுந்தரேசனுக்கு மணமுடித்து கொடுத்திருந்தான். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முத்தையாபுரத்தில் வாடகை வீட்டுக் குடித்தனம். இளைய தங்கை பார்வதி... அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இரண்டாம் வகுப்பில் படிக்கிறது. அவள் கணவன் மாரியப்பன் தனியார் உரத்தொழிற்சாலையில் டெக்னீஷியன். சொந்த வீட்டில் ஆறுமுகநேரியில் குடியிருக்கின்றனர்... ரமணனின் தாய் தந்தை இருவரும் அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில் ஒருவர் பின் ஒருவராய் இறைவன் திருவடியில் சேர்ந்தனர்.

    பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி இப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை... ஒற்றைச் சம்பாத்தியத்தில் தங்கைகள் இருவரையும் அவர்களுக்குத் தகுந்த இடத்தில் மணமுடித்துக் கொடுத்திருந்தான். இப்பொழுது தனிக் கட்டை அவன். இன்னும் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறான். லோன் போட்டு சிறியதாக ஒரு வீடு கட்ட ஆசை ஆனால் தங்கைகள் கல்யாணத்திற்கு வாங்கிய கடனே அடைந்த பாடில்லை... வீடு கட்டிய பின்பே திருமணம் என்று முடிவெடுத்து அது முடியாமல் அதுவும் தள்ளிக்கொண்டே போய் வயதும் முப்பத்தியிரண்டு ஆகிவிட்டிருந்தது... ஆனால் தங்கைகள் இன்னும் தள்ளிப் போட்டால் அண்ணன் கிழவன் ஆகிவிடுவான் என்று உணர்ந்தவர்கள் ஓராண்டாக அண்ணனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர். எதுவும் இதுவரை தகையவில்லை... இசைத்த செல்போன் திரையைத் தடவி காதில் வைத்தான் ரமணன்... மறுமுனையில் தங்கை மாலதி முத்தையாபுரத்தில இருந்து அழைத்தாள்...

    அண்ணே மாலதியின் குரல் கேட்கவும்...

    சொல்லு மாலு என்ன விஷயம்? இந்த நேரம் போன் பண்ணியிருக்கற?

    அண்ணே நீ கோபப்படக் கூடாது

    என்னிக்கும்மா அண்ணன் உங்ககிட்ட கோபப்பட்டிருக்கறேன்? என்ன விஷயமுன்னு சொல்லு

    அண்ணே நானும் பாருவும் உங்கிட்டக் கேட்காம ஒரு அரேஞ்ச்மெண்ட் பண்ணிட்டோம்

    என்ன?

    நம்ம ராமசாமி மாமா ஒரு பொண்ணோட ஜாதகத்தைக் கொண்டு வந்தார் பொண்ணும் பார்க்க அழகா இருக்கறா

    அதனால?

    நீ சொன்னா கேட்கமாட்டேன்னு தெரியும் அதனால சாயந்திரம் பொண்ணு பார்க்க வர்றோம்னு ராமசாமி மாமாட்டச் சொல்லி பொண்ணு வீட்டுல தகவல் சொல்லிட்டோம்

    அதிர்ச்சியானான் ரமணன் என்னம்மா இப்படி வேண்டா வேலை பார்க்கறீங்க?

    என்னண்ணே இப்படிச் சொல்லுற? இது வேண்டா வேலையா? எங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் உன் கல்யாணம்னு சொன்ன ஒத்துக்கிட்டோம்... இப்ப வீடு கட்டணும்னு சொல்லுற நீ வீடு கட்டுறதுக்குள்ள கிழவனாயிடுவ... சாயங்காலம் பார்வதி ஆறுமுகனேரியில இருந்து கால்டாக்சியில வருவா நாம எல்லம் சேர்ந்து பொண்ணு பார்க்கப் போறோம்

    மாலதி திடமாகக் கூற அவனால் தட்ட முடியவில்லை...

    மாலும்மா எனக்கு இந்தப் பொண்ணு பார்க்கற சடங்குல நம்பிக்கை இல்லை... போய் பார்த்து பொண்ணு புடிக்கலைனு சொன்னா அந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபடும்... அதனால இந்தப் பொண்ணு பா ர்க்கிற சடங்கு வேணாமே

    பொறு பொறு... எதுக்கு எல்லாத்துக்கும் பொங்குற? பொண்ணு போட்டோவை நான் பார்த்துட்டேன் பொண்ணு அழகா இருந்தா

    இங்க பாரு மாலு பொண்ணு நேருல பார்க்க நல்லா இல்லை அப்பிடி இப்பிடி சொல்லிட்டு வரக்கூடாது... எனக்கு ஒரு குறிக்கோள்... வாழ்க்கையில நான் பொண்ணு பார்க்கப் போற மொதப் பொண்ணை... அவ கறுப்போ சிவப்போ நெட்டையோ குட்டையோ எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடணும்... சால்ஜாப்பு சொல்லி எதிர்பார்ப்புல இருக்கற பொண்ணுங்களை ஏமாத்துறது பாவம்

    ஓகே ஓகேண்ணே... இந்தப் பொண்ணை சிவன் கோவில்ல வச்சு நான் நேருலயும் பார்த்திருக்கறேன் அம்சமா இருப்பா. போறோம் நாள் குறிக்கறோம் கல்யாணத் தேதியை நிச்சயம் பண்ணுறோம். இப்ப கிளம்புற வேலையைப் பாரு

    தங்கை கண்டிப்புடன் கூற அதற்கு மேல் அவளிடம் வாதிடாமல் ‘சரி’ சொல்லி தொடர்பை துண்டித்தான் ரமணன்.

    ‘காலையலயே லீவ் சொல்லியிருக்கணும் இப்ப திடீர்னு போய் லீவ் கேட்டா மேடம் என்ன சொல்லுவாங்களோ?’ மனதில் நினைத்தவன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து சூப்ரிண்டன்ட் என்று எழுதப்பட்ட அந்தக் அறைக் கதவைத் தட்டினான்.

    எஸ் கமின் என்ற அசரீரி கேட்கவும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரமணன்...

    உக்காருங்க ரமணன் என்று எதிர் இருக்கையைக் காட்டினாள் சூப்ரிண்டன்ட் உமாதேவி.

    உமாதேவி... காட்டன் புடவையில் அளவான அங்க லாவண்யத்தில் கண்ணியத் தோற்றம் காட்டினாள்... ஆனால் சற்று மினுமினுப்பான கறுப்பு அவள்... இந்த மாதம் முடிந்தால் இருபத்தி ஏழு வயது முடிகிறது அவளுக்கு. நன்றாக படித்து தேர்வு எழுதி இந்தச் சிறு வயதிலேயே சூப்ரிண்டன்ட் அந்தஸ்தில் அந்த அலுவலகத்தை கட்டி மேய்க்கிறாள். அவளுக்குக் கீழே நாற்பது ஊழியர்கள்.அமர்த்தலாய் இருக்கையில் அமர்ந்தான் ரமணன். உமாதேவி கேட்டாள்...

    என்ன விஷயம் ரமணன் சார்?

    தன்னை விட பதவியில் குறைவென்றாலும் வயதில் மூத்தவன் என்பதால் ரமணனை சார் என்றே விளித்தாள் உமாதேவி...

    மேடம் ஒரு அரை நாள் லீவ் வேணும்

    என்ன ரமணன் சார் திடீர் லீவ்? காலைல நீங்க ஒண்ணும் சொல்லலை?

    இப்பத்தான் தங்கச்சி போன் பண்ணுனா ஒரு திடீர் ப்ரோக்ராம்?

    அப்படி என்ன திடீர் ப்ரோக்ராம் சார், உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்டச் சொல்லலாமே?

    ரொம்ப நாளா தங்கச்சிங்க எனக்கு வயசாயிட்டுப் போகுது கல்யாணத்தைப் பண்ணிக்கன்னு தொந்தரவு பண்ணிட்டிருந்தாங்க. நான் ஒரு வீட்டைக் கட்டிக்கிட்டு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாமேன்னு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன். தங்கச்சிங்க கல்யாணத்துக்கு வாங்குன லோன்களே இன்னும் முடியலை எங்க வீடு கட்ட? அதனால கல்யாணத்தைக் கட்ட சரி சொல்லிட்டேன். இன்னிக்கு ஒரு பொண்ணைப் பார்க்க தங்கை திடீர்னு ஏற்பாடு பண்ணிட்டா...எவ்வளவோ மறுத்துப் பார்த்திட்டேன் ஒத்தக் காலுல நிற்கறா

    ஏன் ரமணன் சார் உங்களுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?

    ஓ... அப்படியெல்லாம் இல்லை மேடம் ஒரு வீட்டைக் கட்டிட்டு கல்யாணத்தைப் பண்ணிக்கலாம்னு இருந்தேன்னு சொன்னேனே அதான் காரணம்...வயசாகுது அப்புறம் வீடு இப்பக் கல்யாணம்னு கண்டிப்பாச் சொல்லுறா தங்கச்சி?

    சோ...

    வேற வழியில்லை பொண்ணைப் போய்ப் பார்க்கறதா முடிவு பண்ணிட்டேன்... அதுக்குத்தான் ஒரு அரை நாள் லீவ் வேணும்

    இப்பொழுது உமாதேவியன் முகம் வாடியது. இயந்திரம் போல் கூறினாள்...

    ஓகே ரமணன் சார் லீவ் சாங்ஷன்ட் ... ஆல் தி பெஸ்ட்

    தேங்க்ஸ் மேடம் என்று அறையிலிருந்து கிளம்பினான் ரமணன்.

    முகம் வாடிப்போய் ஒரு கணம் அமர்ந்திருந்த உமாதேவி டிராயர் கைப்பிடியை இழுத்தாள் உள்ளிருந்த கத்தை கடிதங்களை எடுத்து மேஜை மேல் வைத்தாள்... அதில் ஒன்றை உருவி மேஜை மேல் தனியாக வைத்தாள்... பேப்பரின் வரிகளின் மேல் கண்கள் ஓடியது... வார்த்தைகளை மூளை கிரகிக்க கண்ணிலிருந்து நீர் முத்து ஒன்று உருண்டு கடித வரியின் மேல் விழுந்தது... நீர் மல்க கடிதத்தின் முதல் வரியை வாய் விட்டு வாசித்தாள்...

    அது... ‘என் அன்பான ரமணா’ என்று ஆரம்பித்திருந்தது!

    2

    மேற்கொண்டு வரிகளை படிக்க முடியாமல் கண்ணில் நீர் நிறைந்து நின்றது. ஆற்றாமையில் அவள் மனம் கிடந்து தவித்தது...

    உமாதேவி லட்சணமாகத்தான் இருந்தாள். வயது 28 ஆகப்போகிறது... ஆனால் அந்தக் கண்ணனின் நிறம் அவள்... இருக்கும் பதவிக்கும் அவள் வாங்கும் சம்பளத்திற்கும் ஆசைப்பட்டு ஆண்கள் வந்தார்களே தவிர அவள் மனதுக்குப் பிடித்த ஆண் யாரும் வரவில்லை. ஆண்கள் மேல் ஆர்வமில்லாமல் இருந்தவளை ரமணன்

    Enjoying the preview?
    Page 1 of 1