Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennavo Nee Kidaiththaai
Ennavo Nee Kidaiththaai
Ennavo Nee Kidaiththaai
Ebook105 pages38 minutes

Ennavo Nee Kidaiththaai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466961
Ennavo Nee Kidaiththaai

Read more from V.Usha

Related to Ennavo Nee Kidaiththaai

Related ebooks

Related categories

Reviews for Ennavo Nee Kidaiththaai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennavo Nee Kidaiththaai - V.Usha

    1

    ஊர்மிளா தலையை மட்டும் தொங்கப் போட்டுக் கீழே பார்த்தாள்.

    ஜன்னல்கள் மூன்று மூடியிருந்தாலும், ஒரே ஒரு ஜன்னல் மட்டும் திறந்து அதை ஒட்டினாற்போல அந்தப் பச்சைச்சட்டை இளைஞன் உட்கார்ந்திருந்தான்.

    குளிர் காற்று மலைப் பிரதேசத்தின் அண்மையை உணர்த்தியது. விடிந்தும் விடியாததுமான வானம். ரயில் பயணங்களில் மட்டுமே தெளிவாகப் பார்க்க முடிகிற மெல்லிய ஆரஞ்சு வர்ண வானம்.

    நேரம் என்னவென்று தெரியவில்லை. ஆறு மணிக்குக் கோயம்புத்தூர் வந்துவிடும் என்று ஓமனா சொல்லியிருந்தாள். முக்கால் மணி நேரத்தில் மேட்டுப்பாளையம். எதிர் பிளாட்பார்மிலேயே ஊட்டி செல்லும் ரயில் காத்துக் கொண்டிருக்குமாம்.

    எவ்வளவு விரைவாக இதிலிருந்து இறங்கி அதைப் பிடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சற்றே வசதியாக இருக்கை கிடைக்குமாம்.

    எக்ஸ்க்யுஸ் மி சார்... ஊர்மிளா மேல் பர்த்திலேயே எழுந்து உட்கார்ந்தாள். குட் மார்னிங்... டயம் என்ன சொல்லுங்களேன்...

    கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி அவன் தலைதூக்காமலே சொன்னான் அஞ்சே முக்கால்...

    தாங்க்யு…

    பதிலுக்கு குட்மார்னிங் சொல்லவில்லை. என்னடா ஒரு அழகான இளம் பெண் வலிய வந்து கேட்கிறாளே என்று பரபரத்துப் போகவும் இல்லை.

    வித்தியாசமான இளைஞன்தான். ராத்திரி பூரா அவன் சரியாகத் தூங்கியிருக்கவில்லை என்று அவளுக்குத் தெரியும். இயல்பான ஜாக்கிரதை உணர்வும், தனியாகப் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற பொறுப்பும் அவளையும் அடிக்கடி எழுப்பிவிட்டுத்தான் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் அவள் பார்வை இயல்பாகக் கீழே சென்றது. இதே போல விழித்துக் கொண்டு அவன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதையோ, பர்ஸைத் திறந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதையோ, விவேகானந்தர் படம் போட்ட ஒரு சிவப்புப் புத்தகத்தை வருடுவதையோ கவனித்தாள். தன்னைப் போலவே வாழ்க்கையின் முக்கியமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறான் போலும் அவன் என்று நினைத்துக் கொண்டாள. ரயிலின் வேகம் குறைய ஆரம்பித்தது.

    ஊர்மிளா படுக்கையை மடித்துக் கட்டிவைத்தாள். இரும்பு ஏணி வழியாகக் கீழே இறங்கினாள். பாத்ரூம் கிட் எடுத்துக் கொண்டு போய்ப் பத்து நிமிடங்களில் பளிச்சென்று திரும்பி வந்தாள். அதற்குள் மற்றப். பயணிகளும் விழித்துக் கொண்டு கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனை வரவேற்க ஆர்வமாகயிருப்பதைப் பார்த்தாள். இரண்டு சூட்கேஸ்கள், ஹோல்டால், வானிடி என்று சேகரித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    மம்மி... டிக்கெட் எடுத்து ரெடியா வெச்சுக்க மம்மி... டி.டி. ஆர் வரார் பாரு. இதோ வந்துட்டார்....

    எதிர் சீட் சுட்டிக் குழந்தை பரபரத்தது.

    ஸ்மார்ட் கேர்ள்! என்று அதன் கன்னத்தைத் தட்டிவிட்டு, பூர்ணம் விஸ்வநாதன் ஜாடையில் இருந்த டிக்கெட் கண்காணிப்பாளர் பயணிகளுக்கு நடுவே உட்கார்ந்தார்.

    கோயம்புத்தூர்ல குண்டு வெடிச்சாலும் வெடிச்சது. பஸ், ரயில், ஆட்டோ ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் கெடுபிடி ஜாஸ்தியா போயிடுச்சு. சென்ட்ரல் தாண்டினதுமே செக்கிங் முடிஞ்சாச்சு... இருந்தாலும் இறங்கறதுக்கு முன்னாடி இன்னொண்ணு... பெரிய ஜனநாயக நாடு இல்லையா? எல்லாரையும் உள்ளயும் விடணும், வாட்ச்சும் பண்ணணும்... ம்... ஒரு வெள்ளைத் தாடி முதியவர் அலுத்துக் கொண்டார்.

    ஊர்மிளா ஞாபகமாக வைத்த இடத்திலிருந்து டிக்கெட்டை எடுத்து நீட்டிக் காண்பித்து விட்டு, மறுபடி பத்திரமாக உள்ளே வைத்தாள்.

    வெளியே தெரிந்த பசுமலைகள் குழந்தையைப் போல அவளைப் பரவசமடையச் செய்தன. காற்றில் இருக்கிற சுத்தத்தை நாசி சுலபமாக உணர்ந்தது. சுற்றுப்புறம் குளுமையில் ஏதோ ஏசியில் வைத்த தக்காளிப்பழம் போல இருந்தது. ஜன்னல் கம்பிகள் மேல் விரல்கள் பட்டபோது, பனிக்கம்பிகளைத் தொட்ட மாதிரித் தோன்றியது.

    திடீரென்று கம்பார்ட்மென்ட்டில் ஏற்பட்ட பரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. என்ன ஆயிற்று?

    இல்லே சார்... இங்கியேதான் சார் இருந்தேன்... ராத்திரி கண்மூடக்கூட இல்லே சார்... எப்படி சார் போயிருக்கு! ஐயோ... பணம், டிக்கெட் மட்டும் அதுல இல்லே... என் உயிரே அதுலதான் சார் இருந்தது... என் அம்மாவின் போட்டா... ஒரே ஒரு ஃபோட்டோ... மை காட்! யார் திருடியிருப்பா!... எதுக்காக!...

    அந்த இளைஞன்தான் அலறினான். கம்பீரமான கறுப்பு முகம் உணர்ச்சிவசப்பட்டுத் தடுமாறுவது அவளை என்னவோ செய்தது.

    சரியா பாருங்க சார்... தூங்கலேங்கறீங்க... உள்ளே யாரும் வர அவ்வளவா சான்ஸ் இல்லே... அதுவும் பான்ட் பாக்கெட்ல கையை விட்டு யார் திருடியிருக்கப் போறாங்க...? ஏதாவது ஸ்டேஷன்ல இறங்கினீங்களா?

    சட்டென்று முகத்தில் மின்னலடிக்க, அவன் படபடத்தான்.

    கரெக்ட் சார்... ஈரோட்டுல இறங்கினேன்... டீ சாப்பிட்டேன்... இந்தியா டுடே புஸ்தகம் வாங்கினேன்... சில்லரை எண்ணிக் கொடுத்து பர்ஸ் பாக்கெட்ல வெச்சுது நல்லா ஞாபகம் இருக்கே... பக்கத்துல ஒரு ஆள் கொடுங்க சார், அந்த புஸ்தகத்தை ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு தரேன்னான்... கொடுத்தேன்... டீ குடிச்ச பிறகு புஸ்தகத்தையும் வாங்கிக்கிட்டு நகர ஆரம்பிச்ச ரயில்ல ஏறினேன் சார்...

    சரியா தேடிப் பாருங்க சார்... பாத்ரூம் போகும்போது கூட எடுத்து வெச்சிருக்கலாம்... என்றார் வெண்தாடி.

    அனைவரும் அவனையே பரிதாபமாகப் பார்த்தார்கள்.

    இறுக்கமான முகத்துடன் அவன் சென்னையில் ஏறி எதிர் சீட்டில் ஓரத்தில் உட்கார்ந்தது நினைவுக்கு வந்தது. மெழுகுப் பொம்மை போல எல்லாரிடமும் ஓடிப் பழகி ஓட்டிக்கொண்ட குண்டுக் குழந்தையிடம் கூட அவன் லேசான் புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான். புளியஞ்சாதம், தோசை, தயிர்சாதம் என்று ஒன்பது மணிக்கு எல்லாரும் கட்டுப்பிரித்தபோது, அவன் இரண்டு வாழைப்பழங்களுடன் ராச்சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.

    ஸார்... ஸார்... தொலைஞ்சு போனது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... ரயில்வே போலிஸ்கிட்ட கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டுப் போங்க... பட், இப்ப நீங்க ஃபைன் கட்டித்தான் ஆகணும்... டிக்கெட் சார்ஜ் பிளஸ்... டி.டி.ஆர். சொல்லிக் கொண்டே

    Enjoying the preview?
    Page 1 of 1