Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் காதலே..! என் காதலே..!
என் காதலே..! என் காதலே..!
என் காதலே..! என் காதலே..!
Ebook137 pages51 minutes

என் காதலே..! என் காதலே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேரம் காலை மணி 8. சன்னமாக எஃப் எம்மில் சுசீலா காலைத் தென்றல் பாடிவரும் ராகம் என்று இனிமையாய் பாடிக் கொண்டிருந்தார்... சமையல் அறையில் அன்றைய சமையலை கவனித்துக் கொண்டிருந்த துளசி சுசீலாவின் கூடவே பாடிக்கொண்டு சமையலறையிலிருந்து நடந்து வந்து படுக்கை அறையின் கதவைத் தள்ளி தன் தலையை நுழைத்துப் பார்த்தாள். கிங் சைஸ் பெட்டில் குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டுருந்தான் அவள் கணவன் இளங்கோ... ஒரு சிறு குழந்தைபோல் கைகால்களை பரப்பி தூங்கிக்கொண்டிருக்கும் கணவனை ஒருகணம் ரசித்துப் பார்த்தாள் துளசி...
 துளசி... வயது 25 அளவான உயரம், கூர்நாசி... இரு ஆரஞ்சுச் சுளைகளை மேலும் கீழும் கவிழ்த்து வைத்ததுபோல் உதடுகள்... நீள முகம் சிறிய கூரான மூக்கில் சின்னதாய் ஒரு பொட்டு மூக்குத்தி... அதுவே அவள் அழகிற்கு பத்து மார்க் கூடுதலாய் கொடுத்தது. காலையில் குளித்து கொண்டையை துண்டால் முடிந்து சிறு கோபுரம் போல் வைத்திருந்தாள்... மொத்தத்தில் மாருதி வரைந்த அழகிய ஓவியம்போல் இருந்தாள் துளசி... துளசி மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் யு டி சி க்ளார்க்... அடுத்து இளங்கோ... தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளர்... கதவைத் தள்ளியவள் கண்களுக்கு படுக்கை அறையின் சுவற்றில் தொங்கிய டிஜிட்டல் க்ளாக் மணி எட்டு ஐந்து என்று காட்டியது... சின்னதாய் கோபம் முளைத்தது அவளுள்... 'என்ன இவர் இன்னும் எழுந்துக்காம படுத்துக் கிடக்கிறார்? மனசுல சின்ன பப்பான்னு நெனைப்பு கொஞ்சம் இடம் கொடுத்தால் ரொம்பத்தான் பண்ணுறார்...' எண்ணியவள் அந்தச் சிறு கோபத்தை வடியவிடாமல் சென்று கணவனின் சுருட்டை முடியை சற்று வலிக்க இழுத்தாள்...
 "ஆ..." என்று புரண்டான் இளங்கோ... புரண்டவனை அப்படியே வர்ணிப்போம்...
 இளங்கோ ஆறடியை நெருக்கிய உயரம்... தினமும் ஜாக்கிங் உதவியால் உடம்பை வில்லாய் வைத்திருந்தான்... வட்டமுகம் ஒழுங்கான பல்வரிசை... சிரித்தால் கன்னத்தில் விழும் குழியில் இப்பவும் பெண்கள் தடுக்கி விழத்தயாராய் இருந்தனர்... வயது 28... மனைவி தலைமுடியை இழுத்ததால் சற்று தூக்கம் கலைந்தவன் முணுமுணுத்தான்...
 "என்னம்மா தூங்கவிடு டயர்டா இருக்குது" கண்ணைத் திறக்காமல் முனகியவனைக் கடிந்தாள்...
 "நேரம் என்ன தெரியுமா எட்டேகால்... இப்படியே படுத்துக்கிடந்தால் எப்படி? இனி எப்ப எழுந்து குளிச்சு ஆபீஸ் கிளம்புவீங்க?"
 அவள் கேட்கவும் கண்ணைத் திறக்காமலே பதில் கூறினான் மனைவிக்கு...
 "துளசிம்மா நான் இன்னிக்கு லீவு"
 திடுக்கிட்டாள் துளசி... கணவனை வினவினாள்...
 "என்ன திடீர் லீவு? லீவ் பத்தி நேத்து என்கிட்ட எதுவும் சொல்லலையே?"
 "இந்த வருஷத்து லீவு நெறய பாக்கியிருக்குது. அதை ஏன் வேஸ்ட் பண்ணணும் அதனால இன்னிக்குப் படுத்து நிம்மதியா தூங்கப் போறேன். நீயும் லீவு போட்டுடு"
 "என்னது நான் லீவ் போடுறதா? ஐ... ஆசையப்பாரு... நான் லீவு போட்டா நீங்க தூங்கவா செய்வீங்க?... நீங்க என்னென்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம ஆபீசுல எனக்கு ஆடிட்டிங் வேலை தலைக்கு மேல இருக்குது... இன்னிக்கு லீவ் போட்டேன்னு வைங்க அந்த சூப்ரின்டன்ட் குரங்கு என்னை பிச்சுத் தின்னுடும். உங்க வழிக்கு நான் வரலைப்பா நான் கிளம்பறேன்"
 என்றவள் அவன் கையை உதறிவிட்டு மீண்டும் சமையலறைக்குத் திரும்பினாள்... அவனுக்கு காபி கலந்து கொண்டு அவன் அருகில் வைத்துவிட்டு "காஃபி வச்சிருக்கறேன்" என்று குரல் கொடுத்துவிட்டு மதியத்துக்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு பொடிமாசும் செய்து டிபன்பாக்சில் அடைத்தாள்... காட்டன் புடவைக்கு மாறி டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லியையும் சாம்பாரையும் வயிற்றுக்குக் காட்டினாள்... மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்...என்னங்க காலைக்கு இட்லி சாம்பார்... மதியத்துக்கு சாம்பார் உருளைக்கிழங்கு பொடிமாஸ்... எல்லாம் எடுத்து டைனிங் டேபுளுல வச்சிருக்கறேன். நேரத்துக்கு சாப்பிட்டுடுங்க" என்றவள் கணவன் அருகில் சென்று அவன் கன்னத்தில் மிருதுவாய் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்... அவன் சட்டென்று அவள் கைகளைப் பற்றினான்... பற்றியவன் கேட்டான்...
 "ஏன் துளசிம்மா இன்னிக்கு லீவு போட முடியாதா?"
 "முடியாது சாமி நான் அப்பவே சொல்லிட்டேன் இன்னிக்கு ஆடிட்டிங் ஏகப்பட்ட பெண்டிங் ஃபைல்கள் முடிக்காம கிடக்குது... நான் கிளம்புறேன்"
 என்று அவன் கையை உதறிக் கிளம்பினாள்...

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223348801
என் காதலே..! என் காதலே..!

Read more from Sahitha Murugan

Related to என் காதலே..! என் காதலே..!

Related ebooks

Related categories

Reviews for என் காதலே..! என் காதலே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் காதலே..! என் காதலே..! - Sahitha Murugan

    1

    நேரம் காலை மணி 8. சன்னமாக எஃப் எம்மில் சுசீலா காலைத் தென்றல் பாடிவரும் ராகம் என்று இனிமையாய் பாடிக் கொண்டிருந்தார்... சமையல் அறையில் அன்றைய சமையலை கவனித்துக் கொண்டிருந்த துளசி சுசீலாவின் கூடவே பாடிக்கொண்டு சமையலறையிலிருந்து நடந்து வந்து படுக்கை அறையின் கதவைத் தள்ளி தன் தலையை நுழைத்துப் பார்த்தாள். கிங் சைஸ் பெட்டில் குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டுருந்தான் அவள் கணவன் இளங்கோ... ஒரு சிறு குழந்தைபோல் கைகால்களை பரப்பி தூங்கிக்கொண்டிருக்கும் கணவனை ஒருகணம் ரசித்துப் பார்த்தாள் துளசி...

    துளசி... வயது 25 அளவான உயரம், கூர்நாசி... இரு ஆரஞ்சுச் சுளைகளை மேலும் கீழும் கவிழ்த்து வைத்ததுபோல் உதடுகள்... நீள முகம் சிறிய கூரான மூக்கில் சின்னதாய் ஒரு பொட்டு மூக்குத்தி... அதுவே அவள் அழகிற்கு பத்து மார்க் கூடுதலாய் கொடுத்தது. காலையில் குளித்து கொண்டையை துண்டால் முடிந்து சிறு கோபுரம் போல் வைத்திருந்தாள்... மொத்தத்தில் மாருதி வரைந்த அழகிய ஓவியம்போல் இருந்தாள் துளசி... துளசி மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் யு டி சி க்ளார்க்... அடுத்து இளங்கோ... தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளர்... கதவைத் தள்ளியவள் கண்களுக்கு படுக்கை அறையின் சுவற்றில் தொங்கிய டிஜிட்டல் க்ளாக் மணி எட்டு ஐந்து என்று காட்டியது... சின்னதாய் கோபம் முளைத்தது அவளுள்... ‘என்ன இவர் இன்னும் எழுந்துக்காம படுத்துக் கிடக்கிறார்? மனசுல சின்ன பப்பான்னு நெனைப்பு கொஞ்சம் இடம் கொடுத்தால் ரொம்பத்தான் பண்ணுறார்...’ எண்ணியவள் அந்தச் சிறு கோபத்தை வடியவிடாமல் சென்று கணவனின் சுருட்டை முடியை சற்று வலிக்க இழுத்தாள்...

    ஆ... என்று புரண்டான் இளங்கோ... புரண்டவனை அப்படியே வர்ணிப்போம்...

    இளங்கோ ஆறடியை நெருக்கிய உயரம்... தினமும் ஜாக்கிங் உதவியால் உடம்பை வில்லாய் வைத்திருந்தான்... வட்டமுகம் ஒழுங்கான பல்வரிசை... சிரித்தால் கன்னத்தில் விழும் குழியில் இப்பவும் பெண்கள் தடுக்கி விழத் தயாராய் இருந்தனர்... வயது 28... மனைவி தலைமுடியை இழுத்ததால் சற்று தூக்கம் கலைந்தவன் முணுமுணுத்தான்...

    என்னம்மா தூங்கவிடு டயர்டா இருக்குது கண்ணைத் திறக்காமல் முனகியவனைக் கடிந்தாள்...

    நேரம் என்ன தெரியுமா எட்டேகால்... இப்படியே படுத்துக்கிடந்தால் எப்படி? இனி எப்ப எழுந்து குளிச்சு ஆபீஸ் கிளம்புவீங்க?

    அவள் கேட்கவும் கண்ணைத் திறக்காமலே பதில் கூறினான் மனைவிக்கு...

    துளசிம்மா நான் இன்னிக்கு லீவு

    திடுக்கிட்டாள் துளசி... கணவனை வினவினாள்...

    என்ன திடீர் லீவு? லீவ் பத்தி நேத்து என்கிட்ட எதுவும் சொல்லலையே?

    இந்த வருஷத்து லீவு நெறய பாக்கியிருக்குது. அதை ஏன் வேஸ்ட் பண்ணணும் அதனால இன்னிக்குப் படுத்து நிம்மதியா தூங்கப் போறேன். நீயும் லீவு போட்டுடு

    என்னது நான் லீவ் போடுறதா? ஐ... ஆசையப்பாரு... நான் லீவு போட்டா நீங்க தூங்கவா செய்வீங்க?... நீங்க என்னென்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம ஆபீசுல எனக்கு ஆடிட்டிங் வேலை தலைக்கு மேல இருக்குது... இன்னிக்கு லீவ் போட்டேன்னு வைங்க அந்த சூப்ரின்டன்ட் குரங்கு என்னை பிச்சுத் தின்னுடும். உங்க வழிக்கு நான் வரலைப்பா நான் கிளம்பறேன்

    என்றவள் அவன் கையை உதறிவிட்டு மீண்டும் சமையலறைக்குத் திரும்பினாள்... அவனுக்கு காபி கலந்து கொண்டு அவன் அருகில் வைத்துவிட்டு காஃபி வச்சிருக்கறேன் என்று குரல் கொடுத்துவிட்டு மதியத்துக்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு பொடிமாசும் செய்து டிபன்பாக்சில் அடைத்தாள்... காட்டன் புடவைக்கு மாறி டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லியையும் சாம்பாரையும் வயிற்றுக்குக் காட்டினாள்... மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்...

    என்னங்க காலைக்கு இட்லி சாம்பார்... மதியத்துக்கு சாம்பார் உருளைக்கிழங்கு பொடிமாஸ்... எல்லாம் எடுத்து டைனிங் டேபுளுல வச்சிருக்கறேன். நேரத்துக்கு சாப்பிட்டுடுங்க என்றவள் கணவன் அருகில் சென்று அவன் கன்னத்தில் மிருதுவாய் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்... அவன் சட்டென்று அவள் கைகளைப் பற்றினான்... பற்றியவன் கேட்டான்...

    ஏன் துளசிம்மா இன்னிக்கு லீவு போட முடியாதா?

    முடியாது சாமி நான் அப்பவே சொல்லிட்டேன் இன்னிக்கு ஆடிட்டிங் ஏகப்பட்ட பெண்டிங் ஃபைல்கள் முடிக்காம கிடக்குது... நான் கிளம்புறேன்

    என்று அவன் கையை உதறிக் கிளம்பினாள்... கண்ணாடி முன் நின்று ஸ்டிக்கர் பொட்டை சரி செய்துகொண்டு கதவைச் சாற்றிப் பூட்டினாள். அது உள்ளேயும் வெளியேயும் இருந்து பூட்டும் வசதி உள்ள பூட்டு. போர்டிக்கோவில் நின்ற ஹோண்டா டியோ ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தாள் துளசி... அந்நேரத்துக்கே கதிரவன் சூடு வைக்க ஆரம்பித்துவிட்டான்... அவள் அலுவலகம் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நகருக்குள் இருந்தது... வாகனத்தை விரட்டினாள்... தன்னை உரசியபடி சென்ற மீன் பாடி வண்டிக்காரனை திட்டினாள்... ட்ராஃபிக்கில் அனாயசமா ஓட்டி ஸ்கூட்டரில் பாதி தூரம் கடந்தவள் மூளையில் சுரீரென்று உறைத்தது... ‘ஐயோ முக்கியமான ஃபைல் ஒன்றை வீட்டில் விட்டுட்டு வந்துட்டேனே’... ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட ஃபைல் அது. அலுவலகத்தில் வேலை முடியாததால் வீட்டிற்கு கொண்டு வந்து வேலையை முடித்து வைத்திருந்தாள். புறப்படும் அவசரத்தில் ஃபைலை மறந்தாயிற்று... முக்கியமான ஃபைல் அது... கொண்டு போகவில்லை என்றால் சூப்ரின்ட்டன்ட் கோட்டான் பார்வதி ராட்சஷி ஆகிவிடுவாள். சூப்பிரண்டின் கடுகடுத்த முகம் மனதில் நிழலாட மனம் அச்சத்தில் விழுந்தது... வாகனத்தை திருப்பினாள். 15நிமிடப் பயணம் வீட்டின் முன் ரோட்டின் ஓரம் வாகனத்தை நிறுத்தினாள். கேட்டைத் திறந்து போர்டிக்கோ கடந்து வீட்டுக் கதவில் சாவியை நுழைக்கப் போனவள் காதில் கணவனின் குரல் விழுந்தது... மூளை கேள்வி கேட்டது... ‘என்ன தூங்கப் போகிறேன் என்ற கணவன் நான் கிளம்பியதும் செல்லை எடுத்துவிட்டான்?’... எண்ணியவள் கதவைத் திறக்கப்போனாள் ஆனால் அதற்கு முன் கணவனின் சம்பாஷணை காதில் விழுந்தது... திடுக்கிட்டாள்... கதவைத் திறக்காமல் கணவன் செல்போன் சம்பாஷணையை செவிமடுத்தாள்...

    செல்லம் நீ கவலைப்படாதே பணம்தானே நான் அனுப்பறேன்... கூகுள் பே இருக்குதுல்ல?

    அவள் மூளைக்குள் அலாரம் ‘செல்லம் கவலைப்படாதே பணம் அனுப்புறேன்’ கணவனின் குரல் அவளுள் எதிரொலித்தது... இப்பொழுது கூர்மையாய் சம்பாஷணையை செவிமடுத்தாள்...

    எதிர் முனை கூகுள் பே இல்லை என்றது போல...

    பரவாயில்லை நீ கவலைப் படாதே நான் வேற எந்த வழியிலயாவது உனக்கு பணம் வந்து சேருறமாதிரி பண்ணிடறேன் செல்லம்

    சம்பாஷணையை முடித்தான் இளங்கோ... துளசியின் உடலில் மின்சாரம் பாய்ந்து ஓய்ந்தது... தன்னை நிலைப்படுத்தியவள் கதவைத் திறந்தாள்... அந்த நேரம் மனைவியைக் கண்டவன் திடுக்கிட்டான்...

    என்னம்மா திரும்பி வந்துட்ட மனசு மாறி லீவு போட்டுட்டியா?

    துளசியின் முகம் இருட்டில் விழுந்தது... சுரத்தில்லாமல் கூறினாள்...

    இல்லை முக்கியமான ஃபைல் ஒண்ணை விட்டுட்டுப் போயிட்டேன். எடுத்துட்டுப் போக வந்தேன் என்றவள் பீரோ திறந்து அந்த ஃபைலை எடுத்துவிட்டு திரும்பினாள்...

    கணவனிடம் சொல்லக்கூட தோன்றாமல் கீ கொடுத்த பொம்மை போல் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள் துளசி...

    சாலையில் செல்லும் பொழுது கணவன் செல்லில் கூறிய ‘செல்லம் பணம்தான எந்த வழியிலாவது உனக்கு வந்து சேருற மாதிரி பண்ணிடறேன்’ என்ற வார்த்தை எக்கோவில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது... அவள் மனதில் அந்தக் கேள்வி முளைத்தது... யார் அந்தச் செல்லம்?!

    2

    நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலத்தில் அமைந்திருக்கும் வெலிங்டன் ராணுவ பயிற்சிப்பள்ளி லாட வடிவத்தில் உயரமாய் பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்றிருந்தது... கட்டடத்தின் முன்பு விஸ்தாரமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1