Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வானமடி நீ எனக்கு...
வானமடி நீ எனக்கு...
வானமடி நீ எனக்கு...
Ebook109 pages40 minutes

வானமடி நீ எனக்கு...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நான்தானே... இதோ இங்கேதான் இருக்கேன்... நீங்க ஏம்மா மாடிப்படியேறிச் சிரமப்படறீங்க? இன்னும் அரைமணியில் நானே கீழே வந்திருப்பேனே..."
 "இருக்கட்டும்ப்பா... பாவம் நீ இராத்திரி ரொம்ப நேரமா படிச்சுக்கிட்டு இருந்தே... எதுக்காக இப்படிப் புதுசு புதுசா படிக்கணும்? நீ உடம்பைக் கெடுத்துக்கிட்டுப் படிக்கறது எனக்குப் பிடிக்கலை கண்ணு... படிப்பா நமக்குச் சோறு போடுது? இல்லைப்பா... பத்து தலைமுறைக்குச் சேர்த்து வைச்சிருக்கற சொத்தைப் பாதுகாத்தாலே போதும்" பத்மாவதி அலுத்துக் கொண்டாள்.
 "என்னம்மா இப்படிச் சொல்லிட்டீங்க? படிப்புக்கு ஏதும்மா எல்லை? கவியரசரைப் பத்தி நான் செய்யற ஆராய்ச்சி உலகப் புகழ்பெறப் போகுதம்மா. உங்க மசனோட பெருமை, புத்திசாலித்தனத்தைப் பத்தி இனிமேல்தான் உங்களுக்குத் தெரியப்போகுது..."
 "நீயும், உன் வம்புப் பேச்சும்... சாயங்காலம் மாமா வந்திருந்தார். சுருதிக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது இன்னும் எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்களேன்னு சத்தம் போட்டுட்டுப் போறார். அவருக்கு ஒரு நல்ல பதிலா சொல்ல முடியலியேன்னுதான் எனக்கு வருத்தம்..."
 தாய்க்குப் பதில் சொல்லாமல் கையில் அகப்பட்ட புத்தகத்தைப் புரட்டினான்.
 "சொல்லுப்பா... மாமாவின் கோபம் தெரிஞ்சதுதானே?"
 "ஏம்மா இப்படிப் பயந்து சாகறீங்க? இது சொத்துத் தகராறு மாதிரி பொதுப் பிரச்சினையா? இது என் வாழ்க்கைப் பிரச்சினை. அதனால் முடிவை நானே எடுத்துக்கறேன். மாமா அடுத்தமுறை வந்தா என்கிட்டே பேசச் சொல்லுங்க. நானே சொல்லிக்கறேன். எதாக இருந்தாலும் படிப்பு முடிந்துதான்."
 பத்மாவதி எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாள்.அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது. அதற்காக என்ன செய்ய முடியும்? என் வாழ்க்கையை மற்றவர்களுக்காகவா வாழ முடியும்? படிப்பு, குணம் எதிலும் சுருதிக்குக் குறைச்சல் இல்லைதான். அதற்காகத் திருமணம் செய்து கொள்ள முடியுமா?
 பெண்களுக்குப் பத்தாவதும், ஆண்களுக்கு பனிரெண்டாவது வகுப்பும்தான் இந்தக் குடும்பத்தின் எழுதாத தலைமுறை சட்டம். தொட்டதையெல்லாம் காசு, பணத்தோடு இணைத்துப் பார்க்கும் குடும்பம்.
 இதில் யாருக்குமே வராத படிப்பு எனக்கு மட்டும் வந்தது என் தப்பா? முதுகலை பட்டம் பெற்றதும் ஆராய்ச்சியில் மனம் சென்றது. தமிழின் மீது தீராத காதல். கவியரசர் கண்ணதாசனின் தமிழுக்கு அடிமையாகிப் போன மனது... வேறு எதையும் நினைக்கக்கூட முயற்சிப்பது இல்லை.
 இந்தக் காசு, பணம் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கடலில் தூக்கி எறிந்துவிட வேண்டுமென ஒரு வேகம் வரும். கவியரசரின் புகழுக்கு இன்னும் ஒரு பொற்கிரீடம் சார்த்த முடியுமானால் அதுவே என் வாழ்நாளின் இலட்சியம்.
 குடும்பத்துப் பெரியவர்கள் ஆட்டி வைக்கும்படியெல்லாம் ஆட நான் ஆளில்லை. மாமா கிடக்கிறார். அம்மாவையும் அப்பாவையும் மட்டும்தான் அவரால் மிரட்ட முடியும்.
 கீழிருந்து அம்மாவின் குரல் காலை பலகாரம் சாப்பிடக் கூப்பிட்டது. வேகமாகத் தயாராகிக் கீழே இறங்கினான்.
 பேச்சும், சிரிப்புமாகச் சாப்பிட்டு முடிக்கும்போது, வாயில் பணியாள் துரை உள் இணைப்புத் தொலைபேசியில் கூப்பிட்டான்.
 "சின்னைய்யா... உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு அனுப்பட்டுமா?"
 தன்னைத் தேடி பெண்ணா... யாராக இருக்கும்? சின்னக் குழப்பத்துடன் ஒலிவாங்கியைக் காதில் வைத்துக்கொண்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்வாசற்கதவருகில் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் "இவளா" என்று ஒரு கணம் வியப்பாகியது. நேற்று உணவு விடுதியில் பார்த்தவளாயிற்றே... கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாளே இன்றைக்கு எதற்கு வந்திருக்கிறாள். நேற்றைய கோபம் இன்னும் முகத்தில் தெரிந்தது. இந்த நேரம் அவளை நேருக்கு நேராகச் சந்தித்தால் அவ்வளவுதான்.
 "துரை, அவங்க யாரைத் தேடி வந்திருக்காங்கன்னு பெயர் கேட்டியா?"
 அவன் முடிக்கும் முன் தொலைபேசியில் தேனுகாவின் குரல் வெடித்தது.
 "ஏய் மிஸ்டர்... குலோத்துங்கச் சோழ பல்லவா, உன் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுக்கிட்டியா? வாய்யா வெளியே... உன்னை என்ன செய்யறேன் பாரு..."
 வாயை விட்டு வெளியே வந்த சிரிப்பை உதடு கடித்து அடக்கினான்.
 "மன்னிச்சிடுங்க மேடம். நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கீங்க. நீங்க தேடி வந்த குலோப்ஜாமூன் சோளா பட்டூரா பால்கோவா நான் இல்லீங்க. என் பெயர் கதிரவன். ஆசையா கதிர்னு கூப்பிடுவாங்க. உங்களை யாரோ ஏமாத்தியிருக்காங்க. எதுக்கும் தீர விசாரிச்சுக்கிட்டுப் போய் தேடுங்க."
 தொலைபேசியை அதனிடத்தில் வைக்கப் பார்வை வாசலில் இருந்தது. காவலாளியை அடிக்காத குறையாகத் திட்டிவிட்டு அவள் வண்டியில் ஏறுவது தெரிந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223281634
வானமடி நீ எனக்கு...

Read more from Megala Chitravel

Related to வானமடி நீ எனக்கு...

Related ebooks

Reviews for வானமடி நீ எனக்கு...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வானமடி நீ எனக்கு... - Megala Chitravel

    1

    நிலவு, காற்றுப்படகேறி மேக வலையை வீசி நட்சத்திர மீன்களைப் பிடிக்கும் முன் மாலைப் பொழுது.

    காற்றுக்குப் போட்டியாக கைனடிக் ஹோண்டா பைக் பறந்து கொண்டிருந்தது. கண் சிமிட்டும் நேரத்துக்குள் கட்டிடங்கள் ஓடிக்கடந்தன. பின் இருக்கையில் இருந்த ரவிக்கு வயிற்றைக் கலக்கியது. வாய் உளற ஆரம்பித்தது.

    ‘மரண தண்டனைக் கைதிக்குக்கூட கடைசி விருப்பம் என்னன்னு கேட்கிறாங்க. எனக்கு அந்த வாய்ப்புக்கூடக் கிடைக்கலியே... அம்மா என்னைப் பெத்தவளே... இன்னிக்கு இராத்திரி சுறாப் புட்டும் எறால் குழம்பும் வைக்கறேன்னு சொன்னியே... ஐயோ... அதைச் சாப்பிட நான் உயிரோட இருக்கப் போறதில்லை... இந்த இருபத்து ஐந்து வயசில் எதையும் அனுபவிக்காமல் போறேனே...

    அம்மா... எத்தனை எலும்பு உடைஞ்சுதோ... எந்தெந்த நரம்பு அறுந்ததோ... இந்த அரக்கிக்கிட்டேயிருந்துக் காப்பாத்த யாருமே இல்லையா?’

    திடீரென பைக் நின்றது.

    ஏய்... தூங்குமூஞ்சி... கண்ணை மூடி தவம் செய்தது போதும். கண்ணைத் திறந்து தொலை...

    என் எதிரில் நின்னு பேசறது யாரு? எமதர்மராசாவின் எள்ளு பேத்திதானே?

    அடி படவா... என்ன கொழுப்பா? நானும் அப்போ பிடிச்சு பார்க்கறேன். புலம்பறே. என்னவோ உயிர் போற மாதிரி புலம்பித் தீக்கறியே அப்ப என்னாங்கறே?

    முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு எதிரே நின்ற தேனுகாவைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பினான்.

    நான் ஒண்ணும் சொல்லலை தாயே. எலும்பு உடைஞ்சு, நரம்பு அறுந்து சதை மூட்டையா இருக்கேன், என்னால் போக முடியாது. நீயே ஒரு ஆட்டோ பிடிச்சு அனுப்பிடு. உன் பேரன், பேத்திகளோடு சவுக்கியமா நூறு ஆண்டு இருப்பே.

    தேனுகாவின் கோபம் அதிகமாகியது.

    ஆட்டோ கூப்பிட முடியாது. நீயே போயிடு. இல்லை நாலு உதை கொடுக்கட்டுமா?

    இந்த வார்த்தையை எங்கப்பன் கேட்டிருந்தாரு... தூக்கு மாட்டிக்கிட்டிருப்பாரு... உன்னை எப்படியாவது எனக்குக் கட்டி வைச்சிடணும்னு அந்த மனுசன் ஒத்தைக் காலில் நிக்கிறார்...

    பாவம்... கால் வலிக்கப் போகுது. ரெண்டு காலாலும் நிற்கச் சொல்லு. மூஞ்சைப் பாரு... நரி மாதிரி ஒரு முழ நீளத்துக்கு முன்னாடி நீட்டிக்கிட்டிருக்கு... உன் முகரக்கட்டைக்கு நான் வேணுமா... உங்கப்பனுக்கு ரொம்ப பேராசைதான். என்கிட்டே இந்த வேலையெல்லாம் வேணாம். மூஞ்சி முகரை பேந்துவிடும்னு உங்கப்பன்கிட்டே சொல்லி வை...

    அது சரி... உன்னையெல்லாம் எவன் திருமணம் செய்துக்குவான்.

    முட்டாள்... அந்தக் கவலை உனக்கு வேண்டாம். எனக்குன்னு ராசகுமாரன் ஒருத்தன் பிறந்திருப்பான்; நான் அவனைத் திருமணம் செய்துக்கறேன். முதலில் நீ இடத்தைக் காலி பண்ணு...

    தெரியாமத்தான் கேட்கறேன். காலையிலே இருந்து நீ யாரைத் தேடி இப்படிச் சுத்திக்கிட்டிருக்கே?

    ஒரு கல்லுளிமங்கனைத் தேடிக்கிட்டிருக்கேன். அவன் மட்டும் கிடைக்கட்டும்...

    நீ கூடவா ஆண் மகனைத் தேடித் திரியறே? ஏதாவது காதல் விவகாரத்தில் மாட்டிக்கிட்டியா? இப்ப எந்தக் கட்டத்தில் இருக்கு? காதலா இல்லை ஊடலா?

    "ஏய்... இதுக்குமேல் ஏதாவது ஏடாகூடமா பேசினே அப்படியே அடிச்சுப் பல்லைப் பேத்திடுவேன். என்னைப் பார்த்தா காதலனைத் தேடிக்கிட்டுத் திரியறா மாதிரியா இருக்கு? நானே நொந்து போய் தவிக்கிறேன். நீ வேற கேலி பண்ணிக்கிட்டுக் கூட வரியே...

    எனக்கு உடனே கவியரசர் கண்ணதாசன் புத்தகங்கள் சில வேண்டியிருக்கு. அந்தப் புத்தகங்கள் கிடைக்கலேன்னா என் தலையேப் போயிடும். அதுக்குதான் ஒரு ஆளை இப்படி தேடித் திரியறேன். போதுமா?"

    ரவி அவளைப் பார்த்த பார்வையில் சந்தேகம் தெரிந்தது.

    நம்பமுடியலியே... நீயாவது புத்தகங்களைத் தேடி. அலையறதாவது? உன் ஜென்மத்தில் புத்தகம் படிச்சிருக்கியா? கல்லூரியில் நீ செய்த அடாவடியைத் தாங்க முடியாமத்தானே உன்னை வெளியே அனுப்பினாங்க, என்கிட்டே சும்மா கதைதானே விடறே... எந்தக் கதாநாயகனைத் தேடித் திரிஞ்சிக்கிட்டிருக்கே?

    தேனுகா தலையில் அடித்துக் கொண்டாள். அடேய் பாவி... படுபாவி... என்னை நம்புடா... நான் நூலகத்தில் அந்தப் புத்தகங்களைக் கேட்டேன். அங்கேதான் சொன்னாங்க யாரோ ஒரு மாணவன் கவியரசரைப் பத்தி ஆராயரானாம். அவன்தான் அத்தனை புத்தகத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிருக்கிறான். அவனைத்தான் தேடித் திரியறேன் வேற ஒண்ணுமில்லை.

    பார்த்தியா திரும்பவும் பொய் சொல்றியே; உனக்குப் புத்தகம் எதுக்கு? அதைச் சொல்லலியே... அந்த ஆளைப் பத்தி மட்டும்தானே சொல்றே?

    "ஐயோ கடவுளே... என்னை இவன்கிட்டே இருந்து காப்பாத்தமாட்டியா? எங்க முதலாளி இருக்காரே. அவர் ஒரு கவியரசர் பைத்தியம். அவருக்கு ஐஸ் வைச்சு ஒரு பதவி உயர்வைத் தட்டிடலாம்னு கணக்குப் போட்டேன். நானே வலியப்போய் என்னால் எல்லாப் புத்தகத்தையும் கொண்டு வர முடியும்னு சொல்லித் தொலைச்சுட்டேன்.

    மனுசன் நாலு நாளா என்னைச் சாகடிக்கிறார். எப்படியாவது இந்த ஆளைப் பிடித்துப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து அவரைச் சமாளிச்சிடலாம்னு பார்க்கிறேன். நடக்கலியே..."

    ரவியின் முகத்தில் சந்தேகம் நீங்கிய சிரிப்பு. ஆள் அடையாளம் ஏதாவது இருந்தா சொல்லேன். நானும் எதிர்ல தென்படற முகங்களில் தேடுவேன் இல்லே...

    கிழிச்சிடுவே... அந்தாளை நேரில் பார்த்திருந்தா நான் ஏன் இப்படி அலையறேன்? அவன் முகவரியும் தெரியாது. நூலகத்தில் அவன் நண்பனுடைய அட்டையில் தான் புத்தகம் வாங்கியிருக்கான். பெயர் மட்டும் தெரியுது...

    சரியான ஏமாத்துப் பேர்வழியா இருப்பான் போலிருக்கே... அவன் பெயர் என்னவாம்?

    பேருக்கு என்ன குறைச்சல்? அது இருக்கு ஒரு முழ நீளத்துக்கு. அனுமார்வால் மாதிரி. குலோத்துங்க சோழ பல்லவனாம்...

    ரவி கைதட்டிச் சிரித்தான்.

    குலோத்துங்க சோழ பல்லவன்... பிரமாதம்... அவன் பிற்கால சோழ பரம்பரையா? இல்லை பிற்கால பல்லவ வம்சத்தவனா? ஒண்ணு மட்டும் நிச்சயம் தேனு, உன்னை யாரோ நல்லா ஏமாத்திக்கிட்டிருக்காங்க. இந்த அவசர யுகத்தில் எவனாவது இப்படியெல்லாம் பெயர் வைச்சுக்குவானா?

    தேனுகா ஒரு விநாடி பேச்சிழந்து நின்றாள். ‘அதுதானே... இது ஏன் புரியாம போச்சு...’ தன் அதிர்ச்சியை, தோல்வியை ரவியிடம் காட்டிக்கொள்ளாமல் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

    "இது எனக்குத் தெரியாதா? நீ வாயை மூடிக்கிட்டு, உன்

    Enjoying the preview?
    Page 1 of 1