Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிலவும் நீலமலர்களும்...
நிலவும் நீலமலர்களும்...
நிலவும் நீலமலர்களும்...
Ebook259 pages1 hour

நிலவும் நீலமலர்களும்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூரியப் பூவின் முதல் கதிர் பூமியைத் தொட்ட நேரம். இளங்குளிரைக் கலைத்துக்கொண்டு புது வெய்யில் இறங்கிக்கொண்டிருக்க, அதிதி தோட்டத்தின் புத்தழகில் லயித்திருந்தாள். சின்ன மிளகு அளவிலிருந்து கையகலம் வரை பல வண்ணங்களில் பூக்கள் பூத்து சிரித்துக் கொண்டிருந்தன. வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் அவற்றின் மீது பட்டும் படாமலும் உட்கார்ந்து எழுந்து குதியாட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன. 

"அம்மா... அம்மா..." அந்தக் காலை நேரத்தில் யாரோ வாசல் கேட்டருகில் இருந்து கூப்பிடுவது கேட்டது. அதிதி கவனம் கலைந்துத் திரும்பிப் பார்த்தாள். பரிதாபகரமான தோற்றத்தில் ஒரு வயதானவரும் அவரை ஒட்டினது போல இரண்டு பெண் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

"வாங்க" என்று கையசைத்துக் கூப்பிட்டாள். கைகூப்பிக்கொண்டே வந்தவர், "அம்மா... நீங்கதான் காப்பாத்தணும்மா" என்று காலில் விழப் போனார். 

அதைப் பார்த்துக் குழந்தைகள் இரண்டும் பதறிக்கொண்டு அழக்கிளம்பின. 

"அடடே... என்ன இது... எழுந்திருங்க... பெரியவங்க... என் காலில் விழுந்துக்கிட்டு..." என்று அன்புடன் சொன்னாள் அதிதி. அவர் உட்காரும்போது குழந்தைகள் அவரை ஒட்டிக்கொண்டு நின்றன. 

அதற்குள் பால் டம்ளர்கள் நிறைந்த டிரேயை பணியாள் எடுத்து வந்தாள். "எடுத்துக்குங்க... குழந்தைகளையும் குடிக்கச் சொல்லுங்க" என்று அன்புடன் சொன்னாள். அந்த அன்பில் நனைந்த வார்த்தைகளைக் கேட்டதும் நெஞ்சுருகிப் போனார் அவர். தன்னையும் மீறி அழுதார். விம்மலும் விக்கலுமாக அவர் சொன்னார். 

"உங்களைப்பத்தி நான் கேள்விப்பட்டதைவிட நீங்க ரொம்ப அன்பானவக்ஙளா இருக்கீங்கம்மா... எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா... இதுங்க ரெண்டும் என் பொண்ணோடது. தாய், தகப்பன் ரெண்டு பேரும் ஒரு பஸ் விபத்தில் போய் சேர்ந்திட்டாங்கம்மா... ரெண்டும் அனாதைகளா நிக்குதுங்க. எனக்கோ எந்த வேலைக்கும் போக முடியாம தள்ளாமையா இருக்கு. என்னால இதுகளுக்கு ஒருவேளை வயிறாரக்கூட சோறு போட முடியலைம்மா. பொம்பளை பிள்ளைகளா இருக்கறதால யார்வீட்டுலயும் கொண்டு விடவும் பயமா இருக்குதும்மா. என்ன செய்யறதுன்னு தவிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் உங்களைப்பற்றியும் நீங்க நடந்தற இந்த ஆதரவு இல்லத்தைப் பத்தியும் கேள்விப்பட்டேன். அதனாலதான் நீங்களே சரணம்னு வந்து உங்கக் காலடியில் விழுந்திட்டேன். நீங்கதான் தெய்வமா இதுகளுக்கு ஆதரவு தரணும். நான் எங்கயோ போய் பிச்சை எடுத்தாவது பொழைச்சுக்குவேன் தாயே..." 

அதிதி புன்னகைத்தாள்.

"எப்பவும் மனிதனை தெய்வம்னு சொல்லக்கூடாது. குழந்தைகள் மட்டுமில்லே... நீங்களும் இங்கயே தங்கிக்கலாம். பாலைக் குடிச்சிட்டு இவர்கூடப் போய் குளிச்சி வேற துணி மாத்திட்டு பலகாரம் சாப்பிடுங்க." 

பெரியவர் நன்றியுடன் கைகூப்பிவிட்டு அந்த பணியாளருடன் எதிரில் தெரிந்த பெரிய கட்டிடத்துக்குள் போனார். 

அதிதி நிமிர்ந்து பார்த்தாள்.

"மக்கள் இல்லம்" என்னும் பெயர் பலகை பச்சைநிறப் பின்னணியில் தங்க எழுத்துக்களில் பளபளத்தது. ஒரு காலத்தில் ஒருவரோடு ஒருவர் எந்தவிதமான அன்பும் நேசமும் கொள்ளாத மனிதர்கள் மட்டும் வாழ்ந்து வந்த அந்த மிகப்பெரிய வீடு, இன்றைக்கு அன்பை மட்டும் எதிர்பார்க்கும் அனாதரவான அறுபது பேர்களுக்கு ஆறுதல் தரும் அன்பு பூமியாகி விட்டிருந்தது. அதிதியின் முகத்தில் தன்னையும் மீறி புன்னகை வந்தது. 

ஒரு வருடத்துக்கு முன்னால் உறவுகள் எல்லோரும் கைவிட்டுப் போன பிறகு அதிதிக்கு உலகமே இருண்டு போனது போலிருந்தது. ஒரு வாரப் பொழுது இரவா... பகலா என்று தெரியாத நிலையில் ஓடிக் கரைந்தது. மனம் தேறி ஒருநாள் முன்புற தோட்டத்துக்கு வந்தாள். எப்போதும் உட்காரும் மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்தாள். 

அவளை விட்டுவிட்டுப் போனவர்கள் மூவருமே வசதிக்கும் எதிர்காலத்துக்காகவும் போனவர்கள். ஆனால் குடும்பத்தையே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த தான் எங்கே போக முடியும்? அரண்மனை போல நாலுகட்டு வீடும் தென்னந்தோப்பும் ஏராளமான நன்செய் நிலங்களும் தனக்கு வேலியாக நிற்கின்றனவே... இப்போது தனியாக நான் என்ன செய்வது? தனக்குள்ளே பல குழப்பங்கள், கவலைகள், யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளை கலைத்தது நாலைந்து குரல்கள். 

அவளைச் சுற்றிலும் கணவன் வழி சொந்தங்களும், தாய்வழி சொந்தங்களும் நின்றிருந்தன. கூடவே உறவு வழித் தொண்டுக் கிழம் ஒன்று அவர்களை வரவேற்று உட்கார வைத்து காபி கொடுத்து உபசரித்தாள். 

அவளைப் பார்த்து புன்னகைத்த கிழவர் சொன்னார்.

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 30, 2023
ISBN9798223335726
நிலவும் நீலமலர்களும்...

Read more from Megala Chitravel

Related to நிலவும் நீலமலர்களும்...

Related ebooks

Related categories

Reviews for நிலவும் நீலமலர்களும்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிலவும் நீலமலர்களும்... - Megala Chitravel

    1

    சூரியப் பூவின் முதல் கதிர் பூமியைத் தொட்ட நேரம். இளங்குளிரைக் கலைத்துக்கொண்டு புது வெய்யில் இறங்கிக்கொண்டிருக்க, அதிதி தோட்டத்தின் புத்தழகில் லயித்திருந்தாள். சின்ன மிளகு அளவிலிருந்து கையகலம் வரை பல வண்ணங்களில் பூக்கள் பூத்து சிரித்துக் கொண்டிருந்தன. வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் அவற்றின் மீது பட்டும் படாமலும் உட்கார்ந்து எழுந்து குதியாட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.

    அம்மா... அம்மா... அந்தக் காலை நேரத்தில் யாரோ வாசல் கேட்டருகில் இருந்து கூப்பிடுவது கேட்டது. அதிதி கவனம் கலைந்துத் திரும்பிப் பார்த்தாள். பரிதாபகரமான தோற்றத்தில் ஒரு வயதானவரும் அவரை ஒட்டினது போல இரண்டு பெண் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

    வாங்க என்று கையசைத்துக் கூப்பிட்டாள். கைகூப்பிக்கொண்டே வந்தவர், அம்மா... நீங்கதான் காப்பாத்தணும்மா என்று காலில் விழப் போனார்.

    அதைப் பார்த்துக் குழந்தைகள் இரண்டும் பதறிக்கொண்டு அழக்கிளம்பின.

    அடடே... என்ன இது... எழுந்திருங்க... பெரியவங்க... என் காலில் விழுந்துக்கிட்டு... என்று அன்புடன் சொன்னாள் அதிதி. அவர் உட்காரும்போது குழந்தைகள் அவரை ஒட்டிக்கொண்டு நின்றன.

    அதற்குள் பால் டம்ளர்கள் நிறைந்த டிரேயை பணியாள் எடுத்து வந்தாள். எடுத்துக்குங்க... குழந்தைகளையும் குடிக்கச் சொல்லுங்க என்று அன்புடன் சொன்னாள். அந்த அன்பில் நனைந்த வார்த்தைகளைக் கேட்டதும் நெஞ்சுருகிப் போனார் அவர். தன்னையும் மீறி அழுதார். விம்மலும் விக்கலுமாக அவர் சொன்னார்.

    உங்களைப்பத்தி நான் கேள்விப்பட்டதைவிட நீங்க ரொம்ப அன்பானவக்ஙளா இருக்கீங்கம்மா... எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா... இதுங்க ரெண்டும் என் பொண்ணோடது. தாய், தகப்பன் ரெண்டு பேரும் ஒரு பஸ் விபத்தில் போய் சேர்ந்திட்டாங்கம்மா... ரெண்டும் அனாதைகளா நிக்குதுங்க. எனக்கோ எந்த வேலைக்கும் போக முடியாம தள்ளாமையா இருக்கு. என்னால இதுகளுக்கு ஒருவேளை வயிறாரக்கூட சோறு போட முடியலைம்மா. பொம்பளை பிள்ளைகளா இருக்கறதால யார்வீட்டுலயும் கொண்டு விடவும் பயமா இருக்குதும்மா. என்ன செய்யறதுன்னு தவிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் உங்களைப்பற்றியும் நீங்க நடந்தற இந்த ஆதரவு இல்லத்தைப் பத்தியும் கேள்விப்பட்டேன். அதனாலதான் நீங்களே சரணம்னு வந்து உங்கக் காலடியில் விழுந்திட்டேன். நீங்கதான் தெய்வமா இதுகளுக்கு ஆதரவு தரணும். நான் எங்கயோ போய் பிச்சை எடுத்தாவது பொழைச்சுக்குவேன் தாயே...

    அதிதி புன்னகைத்தாள்.

    எப்பவும் மனிதனை தெய்வம்னு சொல்லக்கூடாது. குழந்தைகள் மட்டுமில்லே... நீங்களும் இங்கயே தங்கிக்கலாம். பாலைக் குடிச்சிட்டு இவர்கூடப் போய் குளிச்சி வேற துணி மாத்திட்டு பலகாரம் சாப்பிடுங்க.

    பெரியவர் நன்றியுடன் கைகூப்பிவிட்டு அந்த பணியாளருடன் எதிரில் தெரிந்த பெரிய கட்டிடத்துக்குள் போனார்.

    அதிதி நிமிர்ந்து பார்த்தாள்.

    மக்கள் இல்லம் என்னும் பெயர் பலகை பச்சைநிறப் பின்னணியில் தங்க எழுத்துக்களில் பளபளத்தது. ஒரு காலத்தில் ஒருவரோடு ஒருவர் எந்தவிதமான அன்பும் நேசமும் கொள்ளாத மனிதர்கள் மட்டும் வாழ்ந்து வந்த அந்த மிகப்பெரிய வீடு, இன்றைக்கு அன்பை மட்டும் எதிர்பார்க்கும் அனாதரவான அறுபது பேர்களுக்கு ஆறுதல் தரும் அன்பு பூமியாகி விட்டிருந்தது. அதிதியின் முகத்தில் தன்னையும் மீறி புன்னகை வந்தது.

    ஒரு வருடத்துக்கு முன்னால் உறவுகள் எல்லோரும் கைவிட்டுப் போன பிறகு அதிதிக்கு உலகமே இருண்டு போனது போலிருந்தது. ஒரு வாரப் பொழுது இரவா... பகலா என்று தெரியாத நிலையில் ஓடிக் கரைந்தது. மனம் தேறி ஒருநாள் முன்புற தோட்டத்துக்கு வந்தாள். எப்போதும் உட்காரும் மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்தாள்.

    அவளை விட்டுவிட்டுப் போனவர்கள் மூவருமே வசதிக்கும் எதிர்காலத்துக்காகவும் போனவர்கள். ஆனால் குடும்பத்தையே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த தான் எங்கே போக முடியும்? அரண்மனை போல நாலுகட்டு வீடும் தென்னந்தோப்பும் ஏராளமான நன்செய் நிலங்களும் தனக்கு வேலியாக நிற்கின்றனவே... இப்போது தனியாக நான் என்ன செய்வது? தனக்குள்ளே பல குழப்பங்கள், கவலைகள், யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளை கலைத்தது நாலைந்து குரல்கள்.

    அவளைச் சுற்றிலும் கணவன் வழி சொந்தங்களும், தாய்வழி சொந்தங்களும் நின்றிருந்தன. கூடவே உறவு வழித் தொண்டுக் கிழம் ஒன்று அவர்களை வரவேற்று உட்கார வைத்து காபி கொடுத்து உபசரித்தாள்.

    அவளைப் பார்த்து புன்னகைத்த கிழவர் சொன்னார்.

    ஏம்மா அதிதி உன் குடும்பத்தில நடந்ததெல்லாம் கேள்விபட்டோம். எல்லாருமே ஓடிப்போயிட்டாங்களாமே... ரொம்ப வருத்தமா இருந்தது. பாவம் நீ, ரொம்ப படிப்பறிவோ, உலக அனுபவமோ இல்லாதவள். இத்தனை சொத்தையும் எப்படி பாத்துக்குவே? தனியா சமாளிக்க முடியாம நீ கஷ்டப்பட்டிடக்கூடாதுன்னுதான் நாங்கள்ளலாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். இனிமே உனக்கு உதவியா, இவங்கள்ளாம் இங்கயே இருந்துக்குவாங்க. நாங்க பெரியவங்க வந்து போக இருப்போம். நாம எல்லாருமா சேர்ந்து பார்த்து ஒண்ணைப் பத்தாக்கலாம். நீ கவலைப்படாதே.

    அதிதிக்கு ஒரு கணம் மனதோடு உடலும் அதிர்ந்தது. அதை வெளிக்காட்டாமல் சட்டென சமாளித்துக்கொண்டு மந்தகாசமாகப் புன்னகைத்தாள்.

    அதுக்கென்ன மாமா... நீங்க வயசிலயும் அனுபவத்திலயும் எவ்வளவு பெரியவங்க? நீங்க சொன்னா தப்பா இருக்குமா? நீங்கள்ளாம் என்கூடவே இங்கயே இருக்கோம்னு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். ஆனா இதுவரைக்கும் யாருக்குமே தெரியாமல் இருந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துட்டுது மாமா. எங்க வீட்டுக்காரர் இங்கே இருக்கும்போதே எனக்கும் தெரியாம இந்த சொத்தையெல்லாம் மார்வாடிக்கிட்டே அடமானம் வைச்சிருக்காரு மாமா. அதுக்கு சரியா வட்டிகட்டாம ஏமாத்தியிருக்காரு. மார்வாடி கேட்டுக்கிட்டே இருந்து இருக்காரு. கூடவே இருந்திருக்கேன் மாமா... எனக்கு எதுவும் தெரியலை பாருங்க. இதுவரைக்கும் சும்மா இருந்த மார்வாடி இவர் ஓடிப்போனதால கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்து சொத்தையெல்லாம் தன் பேருக்கு மாத்திக்கப் போறாரு. கொஞ்சம் முந்திதான் எனக்கு சேதி வந்தது. எந்த நேரமும் மார்வாடி வரலாம். நான் கட்டின துணியோட வீட்டை விட்டு வெளியே போயிட வேண்டியதுதான். எங்க போகலாம்னு நான் நினைச்சப்ப உங்க நினைப்புதான் வந்தது மாமா. நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலைன்னு தெம்பும் வந்தது. தெய்வம் போல என்னைக் காப்பாத்த வந்துட்டீங்க மாமா. போகலாமா?

    அவளுடைய வார்த்தைகள் அணுகுண்டைத் தூக்கி அவர்களின் தலையில் போட்டது போலிருந்தது. அவர்களின் முகம் கறுத்தது. ஆனாலும் கிழவர் கில்லாடி.

    ஏம்மா அதிதி... இதெல்லாம் பரம்பரைச் சொத்தாச்சே. இதை எப்படி உன் புருஷன் தன்னிச்சையா மார்வாடிக்கிட்ட அடமானம் வைச்சான்? சட்டம் ஒத்துக்காதேம்மா...

    அதிதி சிரித்தாள். அப்படி கேளுங்க மாமா... இவங்க இப்ப உங்கக்கூட ரொம்ப உரிமை இருக்கறதா வந்திருக்காங்களே. இவங்க நாலு பேரும் என்ன செய்தாங்க தெரியுமா? தங்களுக்குண்டான பங்குக்கு மேலயே பணத்தை சண்டை போட்டு வாங்கிக்கிட்டு விடுதலை பத்திரம் எழுதி கோர்ட் மூலமே ரிஜிஸ்டர் பண்ணிக் குடுத்திருக்காங்க மாமா. உண்டா இல்லையான்னு கேளுங்க மாமா. என்ன சண்டை போட்டாங்க. அடிதடியாகிப் போச்சே மாமா. இன்னிக்கு உங்களைக் கூட்டிட்டு வந்தா மாதிரி அன்னிக்கு கூட்டிட்டு வந்திருக்கலாமில்லே? ஏன் செய்யலை? அப்ப மட்டும் நீங்க கண்ணுக்குத் தெரியலையா?

    கிழவருக்கு முகத்திலடித்தது போலிருந்தது. முதலில் அவர்களை உள்ளே அனுப்பிவிட்டுத்தான் பின்னாலேயே வந்து நிரந்தரமாகத் தங்கிக்கொண்டு வயதைக் காட்டி அதிகாரம் செய்துவிடும் திட்டத்தில் தானே அவர் இருந்தார்? எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டதில் அவருக்குக் கோபம் வந்தது.

    அடப்பாவிகளா... இப்படியா விஷயம்? இதை என்கிட்டே சொல்லாம ஏண்டா மறைச்சீங்க? பாவம் அதிதி. இங்க இருக்க இடமில்லாம தனியா என்ன பண்ணுவா? எங்க போவா? மரியாதையா அவளை உங்கக்கூட அழைச்சிக்கிட்டுப் போய் வைச்சிக்குங்க. நானே கூட்டிட்டுப் போயிடுவேன். ஆனா... அடுத்த வாரம் என் பையன் வீட்டுக்கு மும்பைக்குப் போறேன். திரும்பி வர எப்படியும் ஒரு வருஷம் ஆகிடும். அதான் பார்க்கறேன் என்று லாவகமாக நழுவிக்கொண்டார். மற்றவர்கள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து சத்தமில்லாமல் நழுவும் பாம்புபோல ஓடி மறைந்தார்கள்.

    அதிதி நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஜில்லென ஒரு சொம்பு தண்ணீர் குடித்து ஆசுவாசமானாள். எதற்குமே உதவாத தன் கணவன் இதற்காவது உதவினாரே என்று நினைத்துக்கொண்டு இரவெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தாள். மறுநாள் காலையில் வழக்கறிஞரைப் பார்க்கப் போனாள். அவருடைய யோசனைப்படி சொத்துக்களை அறக்கட்டளையாக மாற்றி அன்பு தேடி அலையும் ஆதரவற்றோருக்கு உதவ ஆரம்பித்தாள். வீட்டை தேவையான மாறுதல்களோடு புதுப்பித்து, ‘மக்கள் இல்ல’மாக மாற்றி நிம்மதியாக இருக்கலானாள்.

    தன்னை இப்படி உதறிவிட்டுப் போன அந்த உதவாக்கரைகளைப் பற்றின நினைப்பு வரும்போது மட்டும் சின்னத் தவிப்பு உண்டாகும். அவங்கதான் ஏதோ கோபத்தில போயிட்டாங்க. நீங்களாவது தேடலாமில்லே? என்று புரியாதவர்கள் கேட்கும் போது அதிதிக்கு சிரிப்பு வரும்.

    அதுகள் காணாமல் போயிருந்தால் அல்லவா தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்? அதுகள் மூன்றும் ஓடிப்போனவர்கள். அந்த ஓடுகாலிகளை எதற்காகத் தேட வேண்டும்? அந்த நேரத்தையும் அதற்காகும் செலவையும் வைத்து இன்னும் நாலு நல்ல காரியங்களைச் செய்யலாம். தானாக ஓடியவர்கள் தானாகவே வருவார்கள். ஏனென்றால் ஓடிப்போன மூன்றும் உலகத்தையே புரட்டிப்போடும் வல்லமை படைத்ததாயிற்றே.

    அதற்குமேலும் அவளை சிந்திக்க விடாமல் இல்லத்திலிருக்கும் குழந்தைகள் சீருடை அணிந்து பள்ளிக்குப் போக கிளம்பி வந்துவிட்டார்கள். வேனில் ஏறி அவளுக்கு ‘டாட்டா’ காட்டினார்கள். அவர்களை வழியனுப்பிவிட்டு பணியாளரைக் கூப்பிட்டாள்.

    பாலு இன்னிக்கு புதுசா வந்திருக்கிற ரெண்டு பொண்ணுங்களையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கணும். ஸ்கூல் பிரின்ஸிபாலிடம் நான் வருவதாகச் சொல்லு. செக்கில் கையெழுத்து போட்டிருக்கிறேன். மேனேஜர்கிட்ட குடுத்து கேஷ் பண்ணச் சொல்லு என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

    2

    மஞ்சள் விளக்குகளின் ஒளியில் அந்த இடமே மஞ்சள் மழை பொழிந்தது போல ‘தகதக’ வென மின்னிக் கொண்டிருந்தது. என்னப்பா... அந்த பொண்ணு வந்திட்டுதா? எல்லாரும் நாலு மணி நேரமா காத்திருக்கோம். இன்னும் வரலைன்னா எப்படி? போன் போடு... இயக்குனர் எரிச்சல்பட்டார்.

    வந்திட்டாங்க சார்... மேக்கப் போட்டிக்கிட்டிருக்காங்க. வந்த புதுசில இருந்த மாதிரி அவங்க இப்ப இல்லை சார். ரொம்பத் தொல்லை குடுக்கறாங்க. பெரிய சினிமா ஸ்டார்னு நினைப்புதான். நாம எடுக்கறது வெறும் விளம்பரப்படம்தானே சார்? எதுக்கு சார் அந்தப் பொண்ணையே தாங்கனும்? கொஞ்சம் தேடினா இன்னும் அழகழகானப் பொண்ணுங்க கிடைப்பாங்க சார் உதவியாளன் முணுமுணுத்தான்.

    இயக்குநர் சிரித்தார். இந்த மாடல் உலகத்தில யாருமே நிரந்தரமா இருக்க முடியாது. கதாநாயகியா அறிமுகமாகி வயசானாலும் அக்கா, அண்ணி, அம்மா, பாட்டின்னு படிப்படியா இறங்கி வயத்து பாட்டுக்கு பிழைப்பை ஓட்டுறா மாதிரி இங்க இருக்க முடியாது. ஏன்னா இது சினிமா உலகம் இல்லை. ரொம்ப கொஞ்சநாள்தான் இங்க தாக்குப்பிடிக்க முடியும். அவங்க அழகா இருக்கறவரைக்கும் ஆடுவாங்க. அதுவரைக்கும் பொறுமையா நாம இருப்போம். இவளைப்போல எத்தனையோ பேரை பார்த்தாச்சி. ஆடறவரைக்கும் ஆடட்டும். இவளைவிட அழகான வேற பொண்ணு வந்துட்டா தானாவே குப்பைத் தொட்டிக்குப் போயிடுவா. ஆனா நாம என்னிக்கும் இங்கதான் இருப்போம். கொஞ்சம் பொறுமையா இரு.

    அவர் சொல்லி முடிக்கும்போது அந்த இடம் பரபரப்பானது.

    சார் மோகினி மேடம் வந்திட்டாங்க என்று இன்னொரு உதவியாளன் ஓடி வந்தான். எல்லாம் தயாராக இருந்ததால் வேலை மடமடவென முடிந்தது.

    சார்... நான் கிளம்பட்டுமா? எனக்கு இன்னொரு ஷூட்டிங் இருக்கு. கொஞ்சலாகக் கேட்டாள் மோகினி. இயக்குனர் புன்னகையுடன் தலையசைத்தார்.

    சார்... ஒரு விஷயம். பேமெண்ட்டை கொஞ்சம் உயர்த்திக் குடுத்தா நல்லா இருக்கும். கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க. பிளீஸ் என்று ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டுக் காரிலேறி பறந்துவிட்டாள்.

    அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த தயாரிப்பு தரப்பு ஆள் முகம் சுளித்தார். சார்... இவங்களுக்கு இப்ப குடுக்கறதே அதிகம். இன்னும் அதிகம்னா முடியாது சார். அதோட இவங்களால நெறைய செலவு ஆகுது. ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துக்கு வர்றதில்லை. வரும்போது கூடவே பெரிய பட்டாளத்தை கூட்டிட்டு வராங்க. இந்தம்மாவை விட கூட வர்றவங்க பண்ற அலட்டலைத் தாங்க முடியலை. வரவர மோகினியை எனக்கெல்லாம் பிடிக்கலை சார்.

    அவ பாவம் நல்லவதான். கூட இருக்கிற கூட்டம்தான் சரியில்லை. பொறுங்க... ஏதாவது முடிவு பண்ணுவோம் இயக்குனர் எழுந்தார்.

    வேகமாகப் போய்க்கொண்டிருந்த காரில் மோகினியின் தலை அலங்காரத்தை மாற்றி விட ஹேர்டிரசர் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள். முன்புறம் உட்கார்ந்திருந்த ரத்தன் சொன்னான்...

    நீ எதுக்கு அந்த டைரக்டர்கிட்ட கெஞ்சிக்கிட்டிருக்கே? எனக்கு அது பிடிக்கலைப்பா... அவனுடைய மனைவி பிரமிளாவும் அதுதானே? நாம எதுக்கு இவனுங்களைக் கெஞ்சணும் என்று கேட்டாள்.

    விட்டல் இன்னும் ஒருபடி மேலே போனான். கேக்கறதைக் பட்டுனு கேட்டுடணும் மோகினி. எனக்கு இவ்வளவு குடுங்கன்னு நீ கேட்கணும். அதைவிட்டுட்டு பார்த்துக் குடுங்கன்னு சொன்னீன்னா உன்னை பார்த்திட்டு அதையே குடுப்பானுங்க. எல்லாருமே எமகாதகனுங்க. இப்படி நீ ஏமாளியா இருந்தியானா நம்ம தலையில் மிளகாய் அரைச்சிடுவானுங்க. சில பொருட்களுக்கு நீ மாடலிங்க் பண்ண ஆரம்பிச்சப்பறம்தான் அதுகளோட விற்பனையே சூடு பிடிச்சதுன்னு பலர் சொல்றாங்க. நமக்கு இதுதான் சரியான நேரம். நல்லா காசு பார்த்திடணும். விட்டா பிடிக்க முடியாது.

    இந்த பேச்சுகளை காதில் வாங்கினாலும் பதில் சொல்லாமல் மோகினி அமைதி காத்தாள். அவளுடைய நினைப்பு முழுவதும் பிரேம் மீதே வட்டமிட்டது. டூர் முடித்து இரவு பத்து மணிக்குள் வந்துவிடுவதாக போனில் சொல்லியிருந்தான். வரும் நேரத்தில் வீட்டில் தான் இல்லை என்றால் முகம் வாடிப் போவானே... இன்னிக்குன்னு பார்த்து நிறைய வேலையா இருக்கு.

    அவள் மனதை புரிந்தவன் போல ரத்தன், இதோ பாரு மோகினி. இப்ப உன் மனசில என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும். சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதே. பிரேமைப்பத்தின நினைப்பை கொஞ்ச தூரத்தில் வைச்சியானா இந்த மாடலிங் பீல்டிங்கில் உன்னை அடிச்சிக்கறதுக்கே ஆள் இல்லை. எல்லாம் நாங்க சொல்றபடியே கேட்கிற நீ... இதில் மட்டும் ஏன் மறுக்கறேன்னு எங்களுக்குப் புரியலை என்றான்.

    ஆமாம் மோகினி. நீதான் இந்த விஷயத்தில் மனசு வைக்கணும். இது ஏமார்ந்து போற வயசு. இப்படி வர்றவனுங்க ரொம்ப யோக்கியனுங்க மாதிரி வந்து சேர்ந்து ஒட்டுண்ணிங்க மாதிரி ரத்தத்தை உறிஞ்சிட்டு அழுவ வைச்சிட்டு ஓடிப்போவானுங்க. எங்க பேச்சைக் கேளு... பிரமிளா தத்துவம் சொன்னாள்.

    இன்னும் மூணு ஷிப்ட் இருக்கு. பிரேமை ஒதுக்கிட்டு வேலையில கவனம் வை மோகினி. அவனவன் பணத்தைக் கொட்டிட்டு உனக்காக காத்திருக்கான். சந்து மிரட்டினான்.

    அதற்குள் தலையலங்காரம் முடித்த ரீனா, தயவு செய்து உங்க அறிவுரை மழையை கொஞ்சம் நிறுத்துங்க. அதுல அடிக்கிற சாரல் எனக்கே தாங்க முடியலை. மேடம் கொஞ்சம் ஜுஸ் குடிக்கட்டும் என்று பிளாஸ்கை திறந்தாள். அது காலியாக இருந்தது.

    ஐஸ் போட்ட ஜுஸ் குடிச்சா தொண்டைக்கு அவளுக்கு ஒத்துக்காதுன்னு நாங்க குடிச்சிட்டோமே. முதல்லயே வேணும்னு நீயேன் சொல்லலை? எப்பவும் எதையும் திட்டமிட்டு நீ செய்யறதில்லை என்று ரத்தன் அவளைத் திட்டினான்.

    விடு ரீனா... ஷூட்டிங் போனதும் குடிச்சிக்கலாம் என்று சொல்லிவிட்டு மோகினி கவலையுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

    அங்க மட்டும் என்ன வாழும்? உங்களைக் குடிக்க விடுமா இதுகள்? என்று ரீனா முணுமுணுத்தாள். அவளையே கவனித்துக் கொண்டிருந்த பிரமிளா, ஏய் ரீனா என்னடி முணுமுணுக்கறே? தொலைச்சிடுவேன் உன்னை. கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப துள்ளறே... அடங்குடி அடங்கு என்று கத்தினாள். ரத்தன் ஜாடைகாட்டி அவளை அடக்கினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1