Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நெஞ்சத்தில் நீ...
நெஞ்சத்தில் நீ...
நெஞ்சத்தில் நீ...
Ebook113 pages41 minutes

நெஞ்சத்தில் நீ...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஒண்ணுமே புரியலியேன்னு நான் வருத்தப்பட்டப்போ, இந்த மும்பையை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சதே நீதானே பாத்திமா? அதற்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தீராது..."
 தன் கையைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கும் குழலியைப் பார்த்தாள், பாத்திமா.
 "ஏய்... என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்? அசடு... உன்னைப் போன்ற நல்லவளுக்கு எல்லோரும் அன்பா பழகி உதவி செய்வாங்க. உன்கிட்ட இருக்கிற விட்டுக் கொடுக்கிற குணம். அடுத்தவங்களை மதிக்கும் பண்பு, ஓடிப்போய் உதவும் பாங்குன்னு உன்னதமான குணங்களைப் பார்த்து நான் பலதரம் வியந்திருக்கிறேன். என்னால் நிச்சயம் இப்படி இருக்க முடியாது..."
 குழலியின் கண்கள். தொலைதூரத்தை வெறித்தன. "இதுக்குக் காரணம் என் குடும்பம்தான் பாத்திமா. எங்க குடும்பத்தில் யாரும் சுயநலமாக இருந்ததே கிடையாது.
 எங்க அண்ணன் என் சேலையைப் பெட்டி போட்டுத் தருவார். எங்கப்பா என் காலை மடியில் வைச்சு அழுத்தி விடுவார். ரெண்டு அக்காவும் படிகணக்கில் மாவு இடிச்சு வர்ற காசை வைத்து எனக்குச் செருப்பு வாங்கி தருவாங்க.
 எங்கம்மாவைப் பத்தி கேட்கவே வேணாம். அவங்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போறேன்னு மலைப்பா இருக்கு."
 "அவங்களை எல்லாம் விட்டுட்டு இந்த மும்பையில் எப்படி இருக்கே? ரொம்ப வியப்பா இருக்கு..."
 "அவங்க என்னை அனுப்பவேமாட்டேன்னுதான் இருந்தாங்க? நான்தான் பிடிவாதமாகப் புறப்பட்டு வந்தேன். எங்க அண்ணாவுக்கு முப்பத்து இரண்டு வயசு. தன்னைப் பத்தி ஒரு விநாடி கூட நினைக்காத உத்தமன்பெரிய அக்கா திருமணக் கடன், சின்னக்கா திருமணம், வயசான பெத்தவங்களைக் காலமெல்லாம் பார்த்துக்கற பொறுப்பு, இதோட கொசுறு மாதிரி நான் வேற...
 ஒரு வார்த்தை அண்ணன் அலுத்துப் பேசி நாங்க கேட்டதில்லை. அந்த அண்ணனோட சுமையில் கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்னு நான் முடிவு செய்தேன். ராமபிரானுக்கு அணில் செய்த உதவி மாதிரி தான்... பெரிசா ஒண்ணும் இல்லை..."
 பாத்திமா அவளைப் பார்த்தபோது ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. எத்தனை அன்பான குடும்பம். அவரவர் இறக்கை முளைத்ததும் பறக்கத்தானே துடிக்கிறார்கள்? இவர்கள் அபூர்வமான மனிதர்கள். இப்படிப் பத்துப் பேர் இருக்கிறதால்தான் நாட்டில் மழை பெய்யுது... கொஞ்சம் பச்சையும், பயிருமாய் பூமி சிரிக்குது. மனித குலம் உயிரோடு இருக்க முடியுது.
 குழலியும், பாத்திமாவும் 'இந்திய நுழைவாயிலில்' உட்கார்ந்திருந்தார்கள். பூச்சிதறலாய் கடல் அலைகள் பாறைகளில் மோதி இறங்கிக் கொண்டிருந்தன. சில்லெனப் புதுவிதமான ஒரு காற்று சுற்றிச் சுற்றி வந்தது. இருவருக்கும் ஓய்வு கிடைப்பதே அரிது. இயந்திரங்கள் போல ஓடிக்கொண்டிருப்பார்கள். இப்படி அபூர்வமாகக் கிடைக்கும் ஓய்வைப் பகலில் தூங்கி விழித்து மாலையில் கடற்கரைக்கு வருவார்கள். மும்பையில் அவர்களை அதிகம் கவர்ந்த இடம் இதுதான்.
 பாத்திமா மீண்டும் குழலியைப் பார்த்தாள். இவளை இரண்டு மாதமாகத்தான் தெரியும். தனியார் அலுவலகம் ஒன்றில் வேலைக்கு வந்து அறைத் தோழியாகச் சேர்ந்து கொண்டவள். வந்த அன்றே அவளைப் பார்த்து வியக்க ஆரம்பித்ததுதான். இந்த விநாடிவரை அந்தப் பிரமிப்பு அடங்கவில்லை.
 சின்ன வயதின் ஏக்கம் எதுவுமில்லாத அவளின் வெளிப்படையான சுபாவம் பாத்திமாவுக்கு மிகவும் பிடித்தது. இருக்கிற ஐந்தாறு சேலைகளை மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வாள். கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல்கள். முகத்தில் குங்குமப் பொட்டு.
 புன்னகையுடன் பேசக் கிளம்பினால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ஒருவித பாசம் வரும்.குழலி வந்த மறுநாளிலிருந்து பாத்திமா தன் துணிகளைத் துவைப்பதே இல்லை. குழலியே தன் துணிகளோடு அவற்றைத் துவைத்துவிடுவது வழக்கம். பலமுறை பாத்திமா கோபித்துத் தடுத்தாலும் குழலி அதைத் தள்ளி விடுவாள்.
 "அதுக்கென்ன பாத்திமா... என் அக்காவுக்கு செய்யமாட்டேனா?"
 ஒருமுறை காய்ச்சலும், தலைவலியும் வந்து அவதிப் பட்டபோது, வாந்தியை முகம் சுளிக்காமல் கையில் ஏந்தி பணிவிடை செய்திருக்கிறாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223815037
நெஞ்சத்தில் நீ...

Read more from Megala Chitravel

Related to நெஞ்சத்தில் நீ...

Related ebooks

Reviews for நெஞ்சத்தில் நீ...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நெஞ்சத்தில் நீ... - Megala Chitravel

    1

    வான வயலில் தன் வேலை முடியும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கதிரவன் காத்திருக்கும் மதியப் பொழுது.

    இருந்தாலும் நீ இப்படி இருக்கக்கூடாது அகல்யா... அங்கே பாரு உன் வீட்டுக்காரர் கீழே நின்று நம் அலுவலக வாசலையே பார்த்துக்கிட்டிருக்கார். ரோசியின் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.

    மூன்று அடுக்கு அலுவலகத்தின் இரண்டாவது மாடி சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

    நான் குருடி... நீ நேர்முக வர்ணனை செய்றியா? செய்றதைச் செய்திட்டு இப்ப காக்காபிடிக்க வந்தால் ஏமாந்திடுவேனா? இப்ப என்ன நடக்குது பாரு... அகல்யாவின் பதிலில் கோபம் கொப்பளித்தது. ரோசி பார்த்துக் கொண்டிருக்கும் போதே பின்புற படிக்கட்டு வழியாக இறங்கி மறைந்து போனாள்.

    ரோசிக்கு அந்த விநாடியில் அகல்யா மீது வெறுப்புப் பீறிட்டது.

    "என்ன பெண் இவள்... ஒரு ஆண் பிள்ளை தன் சுயமரியாதையைப் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல் இவளுக்காக இப்படித் துன்பப்படுகிறார். அதை மதித்துப் பெருமிதம் கொண்டு ஓடிச் சென்று அவரைப் பார்க்காமல் இப்படி அலட்சியப்படுத்துகிறாளே... இவள் குணத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது.

    எப்பப் பார்த்தாலும் பிடிவாதம், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்கிற ஆங்காரம். யாரோடும் ஒத்துப்போகாத குணம். எல்லாவற்றுக்கும் மேலாக யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலம்.

    இவள் நட்பு மிகவும் துன்பம். ஆனால் ஒரே துறையில் பக்கத்து பக்கத்து இருக்கையில் இருக்கும் போது நட்பு இல்லாமல் இருக்கவும் முடியவில்லை. ஏதாவது தெரியவில்லை என்று அவளிடம் கேட்கும் போது அகல்யாவின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை நெளியும். ‘இவ்வளவுதானா நீ’ என்கிற கேலி கண்ணில் தெறிக்கும். எதிரில் நிற்பவர் உடல் கூனிக் குறுகிப் போகும்.

    வெறும் ஆறு மணி நேரமே இவளைச் சகித்துக்கொள்ள முடியவில்லையே. இவளைத் திருமணம் செய்து கொண்டு உடன் வாழும் சத்தியகுமாரின் நிலைமை அந்தோ பாவம். அவரை விட அவருடைய அம்மா கமலா அதைவிட மிகப் பரிதாபம். இந்த அரக்கி அந்த வயதான அம்மாவை என்ன பாடுபடுத்துவாள். அகல்யாவோடு வாழ்வதும் ஒரு வாழ்வில் சேர்த்தியா?

    வருத்தத்துடன் ரோசி தன் இருக்கைக்கு வந்தாள். அரை மணி நேரத்திற்குப் பின் அவளைப் பார்க்க பார்வையாளர் வந்திருப்பதாகத் தகவல் வந்தது.

    யாராக இருக்கும் என்று வியப்புடன் கீழே இறங்கி வந்தவள், வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த சத்தியகுமாரைப் பார்த்து சங்கடத்துடன் திடுக்கிட்டாள்.

    என்னங்க ரோசி... சவுக்கியமா. அகல்யா அவங்க இருக்கையில்தானே இருக்காங்க. ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கேன். அலுவலகம் இன்னும் அரை மணி நேரம் தானே இருக்கு. அவங்களை அனுமதி கேட்டுட்டு வரச் சொல்றீங்களா?

    அகல்யா மீது இருந்த கோபம் சாத்தியகுமார் மீது திரும்பியது. என்ன சார் நீங்க... இந்தக் காலத்தில் இப்படி இருக்கீங்க... இவ்வளவு நேரம் காத்திருந்ததைவிட நேரா அலுவலகத்துக்குள்ளே வந்திருக்கலாமில்லே? அகல்யாகிட்டே பேசி அவளை அழைச்சிக்கிட்டுப் போயிருக்கலாமில்லையா?

    சத்தியகுமார் அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அகல்யாவின் கோபம் உங்களுக்குத் தெரியாதா? நான் கூப்பிட்டால் அவங்க பாட்டுக்கு எரிச்சலில் திட்டிட்டாங்கன்னா அப்புறம் மத்தவங்க எதிரில் ரசாபாசமாயிடும் இல்லே அதுதான் பார்த்தேன். தயவு பண்ணி கூப்பிடறீங்களா? கடைக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகணும்.

    சத்தியகுமாரைப் பார்த்து ரோசிக்கு அழுவதா சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    சார்... ரொம்ப நாளா உங்கக்கிட்டே கேட்கணும்னு நினைச்சேன். அது என்ன சார், உங்கள் மனைவி அகல்யாவை அவங்க, இவங்கன்னு மரியாதை கொடுத்துப் பேசறீங்க? கேட்கறவங்க சிரிக்கிறாங்க. தெரியுமா உங்களுக்கு?

    சத்தியகுமார் மறுத்தான். அது எப்படிங்க? வீட்டுலதான் அவங்க என் மனைவி. வெளியே அவங்களுக்குன்னு ஒரு கவுரவம், மரியாதை எல்லாம் இருக்கில்லே? அதைக் காப்பாத்தறது என் கடமையாச்சுங்களே...

    ரோசி வாயடைத்து நின்றுவிட்டாள். இப்படியுமா ஒரு ஆண் மகனால் சிந்திக்க முடியும்? மனைவியை மதிக்கும் பண்பு பெருமைக்குரியதல்லவா?

    சரிங்க... நான் கிளம்பறேன். அகல்யா இந்த நேரம் வீட்டுக்குப் போயிருப்பாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். பரவாயில்லை. நான் அங்கே போய் சமாதானம் செய்துக்கறேன். நேற்றிலிருந்து என்மேல கோபமா இருக்காங்க... சமாதானம் செய்யலேன்னா பிரச்சினையாகிப் போகும்.

    தன் இருக்கைக்குத் திரும்பின ரோசிக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை. அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சினை இருக்கும்? அப்படி அவள் முன்னாடி ஓட, இவர் பின்னாடி துரத்திக்கிட்டு ஓட எனக்கு ஒண்ணுமே புரியலியே...

    2

    "ஒண்ணுமே புரியலியேன்னு நான் வருத்தப்பட்டப்போ, இந்த மும்பையை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சதே நீதானே பாத்திமா? அதற்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தீராது..."

    தன் கையைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கும் குழலியைப் பார்த்தாள், பாத்திமா.

    ஏய்... என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்? அசடு... உன்னைப் போன்ற நல்லவளுக்கு எல்லோரும் அன்பா பழகி உதவி செய்வாங்க. உன்கிட்ட இருக்கிற விட்டுக் கொடுக்கிற குணம். அடுத்தவங்களை மதிக்கும் பண்பு, ஓடிப்போய் உதவும் பாங்குன்னு உன்னதமான குணங்களைப் பார்த்து நான் பலதரம் வியந்திருக்கிறேன். என்னால் நிச்சயம் இப்படி இருக்க முடியாது...

    குழலியின் கண்கள். தொலைதூரத்தை வெறித்தன. "இதுக்குக் காரணம் என் குடும்பம்தான் பாத்திமா. எங்க குடும்பத்தில் யாரும் சுயநலமாக இருந்ததே கிடையாது.

    எங்க அண்ணன் என் சேலையைப் பெட்டி போட்டுத் தருவார். எங்கப்பா என் காலை மடியில் வைச்சு அழுத்தி விடுவார். ரெண்டு அக்காவும் படிகணக்கில் மாவு இடிச்சு வர்ற காசை வைத்து எனக்குச் செருப்பு வாங்கி தருவாங்க.

    எங்கம்மாவைப் பத்தி கேட்கவே வேணாம். அவங்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போறேன்னு மலைப்பா இருக்கு."

    அவங்களை எல்லாம் விட்டுட்டு இந்த மும்பையில் எப்படி இருக்கே? ரொம்ப வியப்பா இருக்கு...

    "அவங்க என்னை அனுப்பவேமாட்டேன்னுதான் இருந்தாங்க? நான்தான் பிடிவாதமாகப் புறப்பட்டு வந்தேன். எங்க அண்ணாவுக்கு முப்பத்து இரண்டு வயசு. தன்னைப் பத்தி ஒரு விநாடி கூட நினைக்காத உத்தமன்.

    பெரிய அக்கா திருமணக் கடன், சின்னக்கா திருமணம், வயசான பெத்தவங்களைக் காலமெல்லாம் பார்த்துக்கற பொறுப்பு, இதோட கொசுறு மாதிரி நான் வேற...

    ஒரு வார்த்தை அண்ணன் அலுத்துப் பேசி நாங்க கேட்டதில்லை. அந்த அண்ணனோட சுமையில் கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்னு நான்

    Enjoying the preview?
    Page 1 of 1