Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalenum Puyal
Kaadhalenum Puyal
Kaadhalenum Puyal
Ebook161 pages1 hour

Kaadhalenum Puyal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவித்ரா என்ற ஒரு இளம்பெண் தன் வாழ்வில் பிரிய கூடாத ஒரு உறவை அவள் பிரிந்து துன்பத்தால் வாடுகிறாள். தன் தாத்தா, மாமாவின் கொடுஞ்சொற்களையும் ஏற்று ஹாஸ்பிடலில் தங்கி படிக்கிறாள். அப்படி எந்த ஒன்றை அவள் பிரிந்தாள்? ஏன்? மீண்டும் அவள் அந்த உறவை ஏற்றாளா? பார்ப்போம்....

Languageதமிழ்
Release dateJul 11, 2022
ISBN6580155608611
Kaadhalenum Puyal

Read more from Lakshmi

Related to Kaadhalenum Puyal

Related ebooks

Reviews for Kaadhalenum Puyal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalenum Puyal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலெனும் புயல்

    Kaadhalenum Puyal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ‘பவி... பவி...! ஏ பாவி!’ சிரிப்பில் மிதந்த குரலைக் கேட்டு சிந்தனையினின்று விழித்துக் கொண்டாள் பவித்ரா. அவளை அப்படியெல்லாம் அழைக்கும் உரிமையுடையவள் அந்த ஹாஸ்டலில் ஒரே ஒருத்திதான். வகுப்புத் தோழியும், அறைத் தோழியுமான நிர்மலாதான் அவளைக் கேலியாக சில சமயம் ‘ஏ பாவி’ என்று கூப்பிடுவது வழக்கம்.

    அதற்காக அவள் கோபித்துக் கொண்டதில்லை. எந்த ஜென்மத்தில் செய்த பாவங்களின் ஒட்டு மொத்தமோ இந்த பிறவி. அதனால்தான் அம்மா அவளுக்கு பவித்ரா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து விட்டிருக்கிறாங்களோ? அடிக்கடி தன்னுள் எண்ணிக் குமைந்ததுண்டு.

    ஹாஸ்டல் மதில் சுவரை ஒட்டி மிகவும் உயரமாக வளர்ந்து கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த வேப்பமரத்தடியில் அவள் புல்தரைமீது தன்னந்தனியே உட்கார்ந்திருந்தாள்.

    அவளது பட்டப் பரீட்சைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. பி.எஸ்.ஸிக்கு அவள் எடுத்துக்கொண்டிருந்த பாடங்களில் - அவள் பௌதீகப் பரீட்சைத்தாளை மனதில் நிறைவு தரும் வண்ணம் எழுதி முடிக்கவில்லை என்ற குழப்பம். இன்னும் தேர்வு முடிய சில நாட்கள் இருந்தன. அதற்கு பின்னர்தான் அவள் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும்.

    வீடு சென்னையிலேயே இருந்தும் பல காரணங்களை உத்தேசித்து மாமா சந்திரன் அவளை ஹாஸ்டலில் தங்கி படிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

    புரசவாக்கம் - தேவசுந்தரம் தெருவிலிருந்து அவள் தினசரி பஸ் பிடித்து கல்லூரிக்கு செல்வது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றார்.

    அவளுக்குத் தெரியும்... என்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தன் மகன் சந்தானத்தின் மேல் இந்த பெண் கண்ணை வைத்துவிடப் போகிறாளே என்ற கவலை மாமாவுக்கு.

    தன் மகன் வருங்காலத்தைப் பற்றி மாமிக்கு பலவித எதிர்பார்ப்புகள் இருந்தன. தன் தூரத்து உறவினர் கோயம்புத்தூர்வாசி, ஒரு தொழிலதிபரின் ஒரே மகளை கட்டிவைத்து - அத்தனை சொத்துக்கும் அதிபதியாக்கிவிட வேண்டுமென்ற திட்டம்.

    அதற்காக அவள் தன் கணவனுக்கு அடித்த வேப்பிலை...

    இப்போதெல்லாம் டாக்டர்கள்கூட சொல்றாங்க. மாமன் மகள் அத்தை மகன் என்று உறவுக்குள்ளேயே சம்பந்தம் செய்து கொள்வது நல்லதல்ல. ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க இது ஒரு காரணம் என்கிறாங்க. அதனாலே நம்ப சந்தானத்துக்கு வேற இடந்தான் பார்க்கணும்.

    மாமி மாலினி கவலைப்பட்டிருக்கவே தேவையில்லை பவித்ராவுக்கு தன் மாமன் மகன் சந்தான கிருஷ்ணனை கொஞ்சமும் பிடிக்காது. ஏன்? அவள் ஆண் வர்க்கத்தையே ஒரு வகையில் வெறுத்தாள் என்றே சொல்லவேண்டும்.

    சின்னஞ்சிறு வயதில் அவளையும், அவள் தாயையும் அனாதைகளாக விட்டுப் போய்விட்ட அப்பாவை அவள் விஷமாக எண்ணினாள். சதா சிடுசிடுவென்று எரிந்து விழுந்த தாத்தாவை வெறுத்தாள்.

    கடுமை தெரிந்த முகத்துடன் அவளை உறுத்துப் பார்த்து எந்த ஒரு சிறு தவறுக்கும் கூச்சல் போட்ட மாமாவை அவளுக்குக் கட்டோடு பிடிக்காது. அம்மாவைப் பார்க்க விடுமுறை நாட்களில் பஸ் பிடித்து வந்தும் மனம் விட்டு பேச முடியாது.

    மாமி அரை மனதுடன் போட்ட சோற்றை தின்றுவிட்டு நிம்மதியைத் தேடி மாடிக்கு வந்தால்... எதிர் வீட்டு ஜன்னல் வழியே அவளைப் பார்த்து கண் அடிக்கும் அந்தக் கயவன், காலேஜ் மாணவனாம் அயோக்கியன்! அவனை கண்களால் எரிக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்துடன் வெறுத்தாள்.

    பி.எஸ்.சி. முடித்ததும் அவள் மேலே படித்துப் பட்டம் பெற்று ஒரு பள்ளியிலோ கல்லூரியிலோ பௌதீகம் போதிக்கும் ஆசிரியையாக வாழ விரும்பினாள்.

    ஆமாம்! - சட்டக் கல்லூரியில் சேர்ந்து அவள் ஏன் வக்கீலுக்குப் படிக்கக் கூடாது?

    சட்டத்தை தனக்கு இஷ்டப்படி வளைத்துக் கொண்ட அப்பா போன்ற சில ஆண்களை அதன் பிடியில் சிக்க வைத்து தண்டிக்க - அவள் ஏன் நியாயத்துக்குப் போராட வக்கீலாகக் கூடாது. அவளுக்குள் இப்படி ஒரு கற்பனைகூட எழும்பக் கூடாது என்பது தாத்தாவின் தீர்மானம் போலும்.

    அடிக்கடி கடிதங்கள் எழுதி அவளைக் குழப்பிக் கொண்டிருந்தனர். ஹாஸ்டலில் வசித்த பெண்கள் தபால்காரர் வருகையைக் கண்டதும் மிகவும் ஆனந்தப்பட்டுப் போவார்கள்.

    தபால்காரர் எல்லா கடிதத்தையும் ஹாஸ்டல் அலுவலகத்தில் உட்கார்ந்து மேற்பார்வையிடும் ஹவுஸ் கீப்பர் திருமதி ஞானத்திடம் கொடுத்துவிட்டு போய் விடுவார்.

    கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் ஹாஸ்டலுக்கு உணவருந்த வரும்போது பெண்கள் மேடம் கடிதாசி வந்திருக்கா? விமலா, ரூம் நம்பர் எண்பது. கொஞ்சம் பாருங்க என்று கூக்குரலிட்டுக் கொண்டு அறையை ஆக்ரமிப்பார்கள்.

    அவள் அப்படி பதறிக்கொண்டு கடிதத்திற்கு ஓடி நின்றவளே இல்லை. திருமதி ஞானமே அவளைக் கூப்பிட்டு மிஸ் பவித்ரா, உனக்கு கடிதம் வந்திருக்கு என்று அழைத்துக் கொடுக்கும் வரை அசட்டையாகவே இருப்பது வழக்கம்.

    அவளுக்கு கடிதம் போடுகிறவர்கள் இரண்டே இரண்டு பேர். பம்பாயிலிருந்து தாத்தா மாதம் ஒன்று என்ற கணக்கில் பொடிப் பொடியான எழுத்துக்களில் பல பக்கங்களை நிறைத்து ஒரு தடிமனான கடித உறையை அனுப்புவார்.

    அவர் என்ன எழுதியிருப்பார் என்பது அவளுக்குத் தெரியும். சட்டென்று பிரித்து படிக்க மனமில்லாது அறை மேஜை மீது அதை போட்டு வைத்திருப்பாள். பாடங்களைப் படித்த பின் மெல்ல கடைசியாக தூங்குமுன் உறையைக் கிழித்து அந்தக் கடிதத்தைப் படிப்பாள்.

    ஒரு சமயம் தாத்தா அதே கடிதத்தின் பல பிரதிகளை காப்பி எடுத்து வைத்திருப்பாரோ என்னவோ?

    ஒரு மாறுதலும் இருக்காது. சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருப்பார். கிழவர் வயது கோளாறோ என்னவோ விரிந்து போன இசைத்தட்டு போல...

    உன் தாயார் மிகவும் பாடுபட்டு உன்னை படிக்க வைக்கிறாள். அவளது பொருளாதார நிலையை உத்தேசித்து நானும் உன் ஹாஸ்டல் செலவுக்கும், படிப்பு செலவுக்கும் கைகொடுத்து உதவுகிறேன். உன் மாமா உன் தாயை தன் வீட்டில் வைத்துக் கொண்டு காப்பாற்றி வருகிறான். இவைகளையெல்லாம் நீ ஞாபகத்தில் வைத்துக் கொண்டு படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆடை அலங்காரங்கள், சினிமா, இத்யாதிகளில் மனதை அலக்கழித்துக் கொள்ளாது புத்திசாலியாக உன் முழு நேரத்தையும் படிப்பில் செலவிட வேண்டும். கண்ட புத்தகங்களை எடுத்துப் படிக்காது நமது பண்பாட்டை சித்தரிக்கும் இலக்கிய நயமுள்ள புத்தகங்களையே கல்லூரி நூல் நிலையத்திலிருந்து நீ எடுத்துப் படிக்க வேண்டும்... இப்படி பல. அவள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று பக்கம் பக்கமாக சொன்னதையே திருப்பி... அட கடவுளே. இந்த கிழவருக்கு கற்பனை என்பது துளிகூட கிடையாதா? பம்பாயில் வசிக்கும் இவர், அந்த நகரத்தைப் பற்றி எத்தனையோ சுவையான விஷயங்களை எழுதி கடிதத்தை சுவாரஸ்யமானதாக்கலாமே! அதைவிட்டு... மேலெழுந்த வாரியாக படித்துவிட்டு இரு சுக்கலாக கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டு விடுவாள். அதை படித்தபின் அப்படி ஒரு கோபம் அவளுக்கு ஏற்படும்.

    அம்மா கார்டுதான் போடுவாள். தாத்தா கூறுவது போல அம்மாவின் பொருளாதார நிலை மோசந்தான். தன்னைக் காத்துக்கொள்ள அவள் அருகிலிருந்த ஒரு அலுவலகத்தில் தாத்தாவின் பலத்த சிபாரிசில் சில ஆண்டுகளாக ஒரு டைப்பிஸ்ட்டாக வேலை செய்கிறாள்.

    மாதம் நானூற்று எழுபது ரூபாய் சம்பளம். தன் சொந்த செலவு போக அண்ணா வீட்டில் தங்கி வசிப்பதற்கு சாப்பாட்டுக்கு இருநூறு தந்தாக வேண்டும். மீதியில் அவள் தனக்கும் தன் மகளுக்கும் துணிமணி வாங்குவதிலிருந்து சகலத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த அழகில் மகளுக்கு கல்லூரி படிப்பு. ஹாஸ்டலில் வாசம்!

    அவள் ஹாஸ்டலுக்கும், சாப்பாட்டிற்கும், கல்லூரி சம்பளத்திற்கும் புத்தகங்கள் வாங்குவதற்கும் உண்டான செலவின் தொண்ணூறு சதவிகிதம் தாத்தாவின் தலையில் விழுந்திருந்தது உண்மை. அந்த உரிமையில் தான் தாத்தா உபதேசத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

    அம்மா அதிகம் எழுதமாட்டாள். கார்டில் சில வரிகள், நான் நலமாக இருக்கிறேன். நீ நலந்தானே! இந்த வாரம் விடுமுறைக்கு நீ வரலாம் என்று மாமா உத்தரவு கொடுத்திருக்கிறார். வந்ததும் வழக்கம்போல் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு திரும்பி போய்விடு. மாமி மாலினி வற்புறுத்தி வீட்டில் தங்கச் சொன்னால் ஒழிய நீ மாமா வீட்டில் இரவு தங்க வேண்டியதில்லை. கவலைப்படாதே. நமக்கு என்று ஒரு வீடு எடுத்து நாம் தனியே வசிக்கும் காலம் வரும். பொறுமையாக இரு, அம்மா சுகந்தி இதுமாதிரியான கார்டுகள் தான் அவளிடமிருந்து வரும். கடிதத்தின் முடிவில் பொறுமையாக இரு என்ற உபதேசம். அதைப் படிக்கும் பொழுது அவள் சீறி எழுவாள்.

    தனக்கு மீறிய சுமையைத் தாங்கிக்கொண்டு கத்தத்துணிவின்றி விழித்து நிற்கும் கழுதைக்கு சமமாக அம்மா இந்த பொறுமை என்னும் உணர்வை அனுசரித்ததினால் தானே இப்படி ஒரு அவலநிலைக்கு ஆளானாள். தான் கெட்டது போதாதது போல மகளையும் தன் கதிக்கு கொண்டு வர நினைக்கும் அம்மாவுக்கும் மூளை சரியில்லை தான்.

    பவித்ரா தாத்தாவுக்கு மரியாதைக்காக பதிலுக்கு மாதம் ஒரு கார்டு போடுவாள். உள்ளூரில் இருக்கும் அம்மாவிடம் ஹாஸ்டல் தொலைபேசி மூலம் மாதமொருமுறையாவது பேசுவாள்.

    என்னத்துக்கு டெலிபோனுக்கு பணம் செலவழிக்கிறே... வேலை செய்யும் அலுவலகத்து போனில் மறுபக்கத்திலிருந்து அம்மா கேட்பாள்.

    "வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1