Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athisaya Raagam
Athisaya Raagam
Athisaya Raagam
Ebook113 pages39 minutes

Athisaya Raagam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்த கதையின் கதாநாயகியான நீலா என்பவள் தன் அறியாமையால் சேகர் என்பவனின் வலையில் மாட்டி ஏமாற்றப்படுகிறாள். ஒரு ஆண் தவறு செய்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம் ஒரு பெண்ணின் தவறை ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல் அவைகள் உறவினர்கள் யாரும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை அநாதையாக ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறாள். அந்த பயணத்தின் இறுதியில் அதிசய ராகமாய் அவளுடன் இருப்பது யார்? என்பதை படித்து பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580155608826
Athisaya Raagam

Read more from Lakshmi

Related to Athisaya Raagam

Related ebooks

Reviews for Athisaya Raagam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athisaya Raagam - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அதிசய ராகம்

    Athisaya Raagam

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    கார் தயாராக நின்றது.

    சோழன் எக்ஸ்பிரஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்த கற்பகம் மாடியறையிலிருந்து பட்டுச் சேலை சரசரக்க இறங்கி வந்தாள்.

    தொலைபேசி கிணுகிணுத்தது.

    பூசை வேளையில் கரடி போல யார் இப்போ கூப்பிடறது...?

    ஏய் நீலா...! உரத்த குரலில் அதிகாரமாகக் கத்தினாள்.

    சமையலறையில், பூங்காவனத்திற்கு உதவியாகக் காய்களை நறுக்கிக்கொண்டிருந்த நீலா, ஒரே ஓட்டமாக வந்து தொலைபேசியை எடுத்தாள்.

    உங்களைத்தான் யாரோ கூப்பிடுறாங்க பெரியம்மா.

    வெடுக்கென்று அவள் கையிலிருந்த தொலைபேசியைப் பிடுங்கிக் கொண்டாள் கற்பகம்.

    அலோ! நான்தான் சுகந்தி பேசறேன். நம்ப மகளிர் சங்கத் தலைவிக்கு நேத்து இரவு பேத்தி பிறந்திருக்கா இரைந்து மறுபக்கம் கத்திய பெண்ணின் குரல் அருகில் நின்ற நீலாவின் காதுகளில் துல்லியமாகக் கேட்டது.

    கடுகடு என்று இருந்த கற்பகத்தின் முகத்தில் ஏளனச் சிரிப்புப் படர்ந்தது.

    அப்படியா! மனோன்மணி மூஞ்சியிலே நல்லாவே கரியை பூசிகிட்டாள்னு சொல்லு. பேரன் பிறக்கப் போகிறதாக ஜோசியர் சொன்னார்னு டமாரம் அடிச்சு கிட்டிருந்தாளே.

    காலையிலே அவங்க வீட்டுக்குப் போய் விசாரித்தேன் - பேத்தி பிறந்திருக்கிறாளாமே, பாராட்டுதல்கள் என்றேன். அவங்க மூஞ்சியே மாறிப்போச்சு. மேலே விசாரிச்சா ஓவென்று அழுதுடுவாங்க போல இருந்திச்சு.

    "நான் அவசரமா கும்பகோணத்துக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். வந்த பிறகு பேசிக்கலாம். நாம ரெண்டுபேரும் நல்லவேளை ஆண் குழந்தைகளை பெத்துக்கிட்டோம். நம்ம மருமகள்களும் புத்திசாலிகள். ஆண் குழந்தைகளையே பெத்துகிட்டாங்க, இல்லையா? சிரித்தபடி கற்பகம் தொலைபேசியை வைத்தாள்.

    பூங்காவனம்! கேட்டியா சங்கதியை? நீதிபதி செல்வராசன் மனைவி மனோன்மணியம்மாலைத் தெரியும் இல்லையா? அவங்களுக்கு நேத்து பேத்தி பிறந்திருக்காளாம். அந்தம்மாளுக்கு ஒரே வருத்தம்.

    ஏன் வருத்தப்படணும் வீட்டுக்கு லெட்சுமி வந்திருக்கான்னு குதூகலப்பட வேண்டாமா, அம்மா?

    மண்ணாங்கட்டி! பெண் குழந்தைன்னா யாருக்குப் பிடிக்குது, சொல்லு... அதை வளர்க்கிறது எத்தனை பாடு. எத்தனை சிரமம். வயித்திலே நெருப்பை கட்டிக்கிட்டு, வயசுப் பெண்ணைக் கட்டிக் காக்கிறது லேசான காரியமா...! தோள்களைக் குலுக்கிட்டு அருகில் நின்ற நீலாவை ஏற இறங்கப் பார்த்தாள், கற்பகம்.

    பெட்டியைக் கொண்டு டிக்கியில் வைச்சுட்டியா? மசமசன்னு நிக்காதே என்று அதட்டிவிட்டு, பூங்காவனம்! வீட்டையும், இவளையும் உன்கிட்ட ஒப்படைச்சுட்டு கிளம்பறேன், கவனம் என்று கூறியபடி, படியிறங்கி, காரோட்டி திறந்துவிட்ட பின் இருக்கையில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

    கார் கிளம்பியதும் உள்ளே வந்தாள், நீலா.

    பெரியம்மாவின் ஏளனப் பார்வையில் கூனிக் குறுகிப்போன உடல் நிமிராது, ஒடுங்கிவிட்ட ஓர் அவமான உணர்வில் அவள் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தாள்.

    கற்பகத்திற்கு காலில் சக்கரம். வீட்டில் கொஞ்ச நேரம் தங்கவே பிடிக்காத அலைச்சல் பேர்வழி.

    மகளிர் சங்கத்து ஆண்டு விழா... சங்கத்து உறுப்பினர் ஒருவரின் மகளின் நடன அரங்கேற்றம்... கச்சேரி... நடனம் புத்தக வெளியீட்டு விழா... பொன் விழா திருமணம் என்று நாளுக்கு ஒரு காரணம் கூறி, பகல் பொழுது சாப்பாட்டிற்குப் பின்னர் கிளம்பி விடுவாள்.

    இப்போது அவளுக்கு தனிமையாகிவிட்ட வீட்டில், இருக்கப் பிடிக்கவில்லை. கணவர் தில்லைநாதன் தன் வியாபார சம்பந்தமாக டெல்லிக்கும் பம்பாய்க்கும் போகவேண்டியிருந்தது. முதல்நாள் மாலை அவர் கிளம்பிவிட்டிருந்தார். வர இரு வாரம் பிடிக்கும் என்பதை அவள் அறிவாள்.

    மூத்தவன் நரேந்திரன் அப்பாவுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தங்களது பிளாஸ்டிக் பொருள் உற்பத்தித் தொழிற்சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். மேலே பல தொழில் நுட்பங்களைக் கற்றுவர ஓராண்டு அமெரிக்காவில் தங்கியிருந்து பயிற்சி பெற தன் மனைவி, நாலு வயது மகனுடன் போயிருக்கிறான்.

    இளைய மகன் மகேந்திரன், நகரத்திலிருந்த அவர்களது மொத்த வியாபாரக் கிடங்கின் மேற்பார்வையாளராக இருந்தான். அண்ணன் வெளியூர் போனதைக் கண்டு அவனுக்கு ஓர் ஆவல். தன் மனைவி, கைக்குழந்தையுடன் காரை எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றுலா பயணம் செய்யக் கிளம்பி விட்டான். வழியில் கோவையில் தன் மாமியார் வீட்டில் இரண்டு வாரம் முகாமிட அவன் திட்டம்.

    கணவன் - பிள்ளைகள் - மருமகள்மார்கள் - பேரக் குழந்தைகள் யாரும் இல்லாது பங்களா வெறிச்சென்று இருப்பதைப் பொறுக்கமாட்டாது, கற்பகம் கும்பகோணத்தில் இருந்த தன் தோழி வீட்டில் இரண்டு வாரம் தங்கி வரக் கிளம்பியிருந்தாள்.

    எங்கேயாவது போகாவிடில் மண்டை வெடித்து விடும் போன்ற பரபரப்புதான் காரணம். ஆனால் அருகில் உள்ள கோயில்களுக்குப் போய்வரப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.

    அவள் போனதும் வீட்டில் நீலாவும், பூங்காவனமும், வாயில் கேட்டை இரவு பகலாகக் காத்து வந்த கூர்க்காவும் தான் இருந்தனர். கார் ஓட்டுனர் காலையில் வந்து கார்களை நகர்த்தி துடைத்து ஒழுங்காக வரிசையாக நிறுத்தி வைத்து விட்டுப் போகவேண்டும் என்ற உத்தரவு. வாரத்திற்கு இருமுறை தோட்டக்காரன் வந்து தோட்டத்தைக் கவனிக்க வேண்டும் என்ற கட்டளை. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு, அதே சமயம் நீலாவைக் கண்குத்திப் பாம்பாகக் கருத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எஜமானியின் கடுமையான கட்டளை.

    நீலா தில்லைநாதனின் தம்பி சிவராமனின் மகள்தான் என்றாலும் அந்த வீட்டில் அவளுக்குக் கிடைத்த அடைக்கலத்தின் பயனாக அடிமையாக்கப்பட்டு இருந்தாள்.

    அந்தக் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரங்களில்தான் நீலா அச்சமின்றி அடுப்பங்கரையை விட்டு முன்னறைக்கு வருவாள். அங்கே அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்ப்பாள். வாரந்தோறும் அந்த வீட்டிற்கு வந்து குவியும் தமிழ், ஆங்கில இதழ்களை எடுத்துப்படித்துப் பார்ப்பாள். சமீப காலத்தில் அவளுக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகமாகக் கிட்டிக்கொண்டிருந்தன. அவளும் பூங்காவனமும் பயன்படுத்திய பின்பக்கத்து அறைக்குள் அவள் சில நேரங்களில் வாரப் பத்திரிகைகள், கதைப் புத்தகங்களைக் கடத்திச் சென்று வைத்துக் கொள்வாள். இரவு அனைவரும் மாடிக்குத் தூங்கச் சென்றதும் விளக்கைப் போட்டுக் கொண்டு படிப்பாள். படிக்க வேண்டும், உலக விஷயங்களை நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு. எங்க வீட்டிலும் எல்லா பத்திரிகைகளும் வாங்குகிறோம் என்ற பெருமைக்குத்தான் கற்பகம் வாங்கிக் குவித்தாள். மருமகள்மார்களுக்கோ, அவளுக்கோ பொறுமையாக உட்கார்ந்து அத்தனையையும் படிக்கப் பொழுது இருக்க வில்லை என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1