Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulluvatho Ilamai
Thulluvatho Ilamai
Thulluvatho Ilamai
Ebook266 pages4 hours

Thulluvatho Ilamai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Thulluvatho Ilamai

Read more from Indhumathi

Related to Thulluvatho Ilamai

Related ebooks

Reviews for Thulluvatho Ilamai

Rating: 5 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulluvatho Ilamai - Indhumathi

    28

    1

    ‘ALS SIE UEBER DIE SCHOEZE ZEIT IN SCHWEIZ TRAUMTE...’

    ‘As she was dreaming about the wonderful days in Switzerland...’

    தனித் தனியாக ஒவ்வொரு வார்த்தையாக மொழி பெயர்த்துக்கொண்டே வந்தாள் நந்தினி. கிட்டத்தட்ட இரண்டு பக்கங்கள் மொழிபெயர்த்திருப்பாள். அதற்குள் திடீரென்று சலிப்பு ஏற்பட்டது. ஒருவித வெறுப்பும் வந்தது. ஜெர்மன் கடுமையான மொழி என்று பட்டது. மொழி பெயர்த்துக்கொண்டு வந்த புத்தகம், எழுதிக் கொண்டிருந்த காகிதம் இரண்டையும் கிழித்துப் போடவேண்டும் போலிருந்தது.

    இப்படிக் காலையில் எழுந்து உட்கார்ந்து ஜெர்மன் மொழியோடு போராடுவதைவிடக் கனமான திரைச் சீலைகளைத் தள்ளிக் கண்ணாடி ஜன்னல் கதவுகளைத் திறந்து, வானத்தில் பறவைகள் பறப்பதைப் பார்க்கலாம். பறவைகள் கூடப் பறக்கவேண்டாம். வெறும் வானத்தைப் பார்த்தாலே போதும். வானம் அழகானது. சுவாரஸ்யமானது. மாறுகின்ற மேகங்கள் நிறைய விஷயங்களைச் சொல்லக்கூடியது. வைரமுத்து எழுதின மாதிரி வானம் ஒரு போதி மரம்தான். நாளும் அது சேதி தந்து கொண்டுதான் இருக்கிறது. நின்று நிமிர்ந்து பார்க்கத்தான் நேரமில்லை...

    காலையில் எழுந்து அவசரமாகக் குளித்து அலமாரியின் இரு கதவுகளையும் திறந்து வைத்து, இன்று என்ன டிரஸ் போட்டுக் கொள்ளலாம்... சுடிதாரா. அல்லது ஜீன்ஸா...? சுடிதார் என்றால் எந்தச் சுடிதார்? ஜீன்தான் என்றால் மேலே என்ன டாப்ஸ்...?

    ஒவ்வொரு டிரஸ்ஸாகத் தள்ளி, ஹாங்கரில் தொங்கினதை எடுத்துப் போட்டுக் கடைசியில் ஏதோ ஒன்றை மாட்டிக்கொண்டு பார்லரில் அழகாக வெட்டிக்கொண்டு வந்த முன் முடியைத் தூக்கி வாரிப் பின் பக்கம் தோளிற்குச் சற்றுக் கீழ்வரை வரும்படி கத்தரித்திருந்த தலைமுடியின் காதோரங்களில் கிளிப் போட்டு அப்படியே விட்டோ... அல்லது ரப்பர் வளையம் போட்டுக் குதிரை வாலாகத் தொங்க விட்டுக் கொண்டோ... புத்தகங்களின் பெயர்களைக்கூடப் பார்க்காமல் வாரி எடுத்துக்கொண்டு, மாடிப் படிகளை இரண்டிரண்டாகக் கடந்து கீழே இறங்கி வருவாள்.

    ஹாலும், ஆள் புதையும் சோபாக்களும், ஆயில் வர்ணச் சித்திரங்களும், பளிங்குச் சிலைகளும், வெளிநாட்டுக் கம்பளங்களுமாக ஏதோ ஒரு மகாராஜாவின் அரண்மனை அந்தப்புரம் மாதிரி வரவேற்பறை அத்தனை அழகாக இருக்கிறது. எத்தனை அழகோ அத்தனை அமைதியாகவும் இருக்கும். வீட்டின் எந்த மூலையிலாவது ஊசி விழுந்தால்கூட அந்த வரவேற்பறை வரை எதிரொலிக்கும். மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா, இல்லையா என்பதாகச் சந்தேகம் எழும். அத்தனை அசாதாரண அமைதி. அந்த அமைதியிலும், நிசப்தத்திலும் இருந்த செயற்கைத்தனம் அவளுக்குள் ஓர் வெறுப்பை ஏற்படுத்தும். வீட்டின் அமைதியில் மட்டும்தானா செயற்கைத்தனம் எனவும் நினைத்துக் கொள்வாள்.

    வீடு மட்டுமில்லை, அம்மா, அப்பா, கூடப் பிறந்த ஒரே அண்ணன்... எல்லாருமே செயற்கை. எல்லாமே செயற்கை...

    கல்லூரிக்குக் கிளம்பும் முன் அம்மாவைப் பார்க்கலாம் என்றால் முடியாது. பாதிநாட்கள் அம்மா வீட்டிலேயே இருக்கமாட்டாள். இருந்தாலும் தொலைபேசியில் மும்முரமாக யாருடனாவது பேசிக் கொண்டிருப்பாள். அன்று கிளப்பில் என்ன செய்யவேண்டும், வேறு எந்த விழா நடத்தலாம், யாருக்குப் பாராட்டுக் கூட்டம் போடலாம், யார் யாரைப் பேசச் சொல்லலாம், கூட்டத்திற்கு வைர நெக்லஸா, அல்லது நவரத்தின செட்டா...? பட்டுப் புடவையா இல்லாவிட்டால் டிஷ்யூ ஆர்கன்ஸாவா? தலைமை தாங்க கவர்னரைக் கூப்பிடலாமா அல்லது டெல்லி மந்திரிகள் யாரையாவது வரவழைக்கலாமா...?

    இதற்கே அம்மாவிற்கு நேரம் போதாது. வேறு யாராவது நேரத்தை இரவல் தந்தால்கூட, வாங்கி அம்மா கிளப் விஷயங்களுக்குச் செலவழிப்பாள்.

    ‘நந்தினி... காலேஜுக்குக் கிளம்பிட்டியாம்மா? என்ன சாப்பிடற? பகல் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருவாயா? இல்லாவிட்டால் கொடுத்தனுப்பட்டுமா? சாயந்திரம் என்ன செய்யப்போற? பரிட்சை எப்போ வர்றது? எப்படிப் படிக்கற?’

    இப்படி ஏதாவது ஒரு வார்த்தை...? ஒரு கேள்வி...? பிரியமாகக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு ஒரு பார்வை...? உனக்கு என்ன பிடிக்கும்... என்ன வேணும் சொல்லேன்... என்கிற ஆதங்கமான பேச்சு...?

    நந்தினிக்கு இன்று நினைத்தால்கூடப் பசுமையாக அந்த நிகழ்ச்சி ஞாபகமிருந்தது. பசுமையாக என்று அதைச் சொல்லக்கூடாது. பசுமை என்பது கண்களுக்குக் குளிர்ச்சி தரும். மனதிற்குச் சந்தோஷம் தரும். ரம்மியமானதாக இருக்கும். அதனால் அதைப் பசுமை என்பதைவிடப் பாலைவன நிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். நெஞ்சில் நெருஞ்சி முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. இன்னமும் வலி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி...

    இப்போது என்ன வயது...? பத்தொன்பதா? ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.

    என்றும் போல் அன்றும் கான்வென்டிற்குப் போனாள். வெள்ளை கவுன், சிவப்பு நிற டை, வெள்ளை கான்வாஸ் ஷூ என கான்வென்ட் சீருடை, பள்ளியில் கடவுள் வணக்கம் முடிந்து அவர் ஃபாதர், விச் ஹார்ட் இன் ஹெவன் ஆரம்பித்து ஆமென் சொல்லி வகுப்பிற்குத் திரும்பின அரை மணி நேரத்திற்கெல்லாம் அடி வயிற்றில் பளீர் பளீரென வலி. முதல் வகுப்பு கணக்கு. பொறுத்துக் கொண்டாள். இரண்டாம் வகுப்பு ஆங்கிலம். வலி தொடர்ந்தது. மிஸ் மாத்யூஸ் வேர்ட்ஸ்வொர்த்’ எடுத்துக் கொண்டிருந்தாள்.

    நந்தினியை ஏதோ கேள்வி கேட்க, அவள் எழுந்து நின்றபோது, வெள்ளை கவுனின் பின் பக்கம் முழுதும் சிவப்பில் நனைந்து போயிருந்து. பின்னால் உட்கார்ந்திருந்த பெண்கள் சொல்ல, மிஸ் மாத்யூஸ் தலைமை ஆசிரியையிடம் சொல்லி அவளைத் தலைமை ஆசிரியையின் காரிலேயே வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டாள்.

    என்ன ஏது என்கிற விவரம் தெரிந்தும் நந்தினிக்கு ஏனோ துக்கம் வந்தது. அழுகை நெஞ்சை அடைத்தது. ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.

    ஆனால், வெளியில் புறப்படுவதற்குத் தயாராகிப் போர்ட்டிகோவில் நின்றிருந்த அம்மா, மிஸ் மாத்யூஸும், அவளும் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்தாள். லேசாகப் புருவங்கள் சுருங்க என்ன என்று கேட்டாள்.

    மிஸ் மாத்யூஸ் விவரத்தைச் சொன்னதும் அம்மா அவள் பக்கம் திரும்பினாள். சுருங்கிய புருவங்கள் விலகி ஒரு நிம்மதி வெளிப்படப் பேசினாள்.

    உள்ளே போ நந்து... என் பாத்ரூம் அலமாரியில் சானிடரி நாப்கின்ஸ் இருக்கு. எடுத்து உபயோகிச்சுக்கோ... நான் இப்போ அவசரமாகக் கிளப்புக்குக் கிளம்பிட்டிருக்கேன். ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கு. நான் போய்த்தான் தலைமை தாங்கணும். அதனால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... நீ கான்வென்ட்ல படிக்கிற பொண்ணு. விவரம் தெரிஞ்ச பொண்ணு. உனக்கு நான் சொல்லித் தரணும் என்கிற அவசியமில்லை. உள்ளே ராஜம்மா இருக்கா. அவகிட்ட சொல்லு... அவ ஹெல்ப் பண்ணுவா... ஓ.கே...? என்றவள்...

    மிஸ் மாத்யூஸின் பக்கம் திரும்பினாள்.

    தாங்க்யு ஸோ மச் மிஸ் மாத்யூஸ். வெரி கைண்ட் ஆஃப் யு... ஸோ, நான் வரட்டுமா? ஏற்கெனவே லேட்டாயிடுத்து...

    பதினைந்தாவது வருடக் கல்யாண தினப் பரிசாக அப்பா வாங்கித் தந்திருந்த வெள்ளை டொயட்டோவில் ஏறிப் போய்விட்டாள் அம்மா.

    நீ அம்மாதானா...!

    அவளுக்கும் அம்மாவிற்கும் இடையில் முதல் முதலாக விழுந்த விரிசல் அது.

    அம்மாதான் இப்படி... அப்பா என்கிற அஸ்திவாரம் எப்படி என்று பார்த்தாள் நந்தினி. அதுவும் ஆழமற்ற அஸ்திவாரம்தான். ஆனாலும் அவளுக்குச் சில சமயம் அப்பாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். தினமும் ராத்திரி பன்னிரண்டு மணிக்கோ, ஒரு மணிக்கோ வருவார் அப்பா. அப்பாவை அவரது நண்பர்களில் யாராவது டிரைவரின் உதவியுடன் காரிலிருந்து இறக்கிக் கைத்தாங்கலாக அழைத்து வருவார்கள். கூட வருகிற நண்பரும் தள்ளாடத்தான் செய்வார். ஆனால், அப்பா அளவிற்குத் தள்ளாட்டம் இருக்காது. வீட்டின் போர்ட்டிகோ படிகளில் ஏற்றிக் கீழே இருக்கும் அப்பாவின் படுக்கை அறையில் படுக்க வைப்பார்கள். அதற்குள் அப்பாவைக் கவனித்துக் கொள்கிற ராமையா ஓடி வருவார்.

    நீங்க போங்கய்யா... நான் பார்த்துக்கறேன்... என்பார்.

    அதன் பின் மறுநாள் காலை பதினொரு மணிவரை அப்பாவிற்கு நினைவு திரும்பாது. ஸ்காட்ச் விஸ்கியின் மிதப்பிலேயே இருப்பார்.

    ஏம்ப்பா இப்படிக் குடிக்கறீங்க? காலைல எழுந்து விஸ்கியாப்பா? காண்ட் யு ஸ்டாப் திஸ்... என்று ஒருநாள் கேட்டாள்.

    நந்து டார்லிங்... இப்படி உட்கார்ந்துக்கோ...

    பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். தலை வருடித் தந்தார்.

    ஏம்மா... மனுஷனா பிறந்தாலே கஷ்டம் இருக்கும். அதுவும் என்னை மாதிரி ஏழெட்டு பிஸினெஸ், பத்துப் பதினைஞ்சு கம்பெனி இருக்கிறவனுக்கு எத்தனை தொல்லை, எத்தனை சிக்கல் இருக்கும்...! ஒய் ஒர்ரி... பி ஹேப்பின்ற பாடத்தை இதன் மூலம் நான் கத்துக்கிட்டு சந்தோஷமாக இருக்கேன். சந்தோஷமாக இருக்கிறது தப்பாடா நந்து கண்ணா...?

    அது அவரது சித்தாந்தம். வியாபாரம், தொழில், விஸ்கி தவிர வீட்டில் எது நடந்தாலும், யாருக்கு என்ன நேர்ந்தாலும் பட்டுக் கொள்ளாத, பாதிக்கப்படாத, ஒட்டு உறவற்ற தாமரை இலைத் தண்ணீர் அப்பா.

    அண்ணன் - ஒரே ஒரு உடன் பிறந்தவன் - இன்ஜினியரிங் கல்லூரி மாணவன். அப்படிப்பட்ட அம்மா, அப்பாவின் அப்பட்டமான வாரிசு. இலக்கணமற்ற நுனி நாக்கில் அமெரிக்க ஆங்கிலம். வீட்டின் இன்னொரு நீரோ மன்னன். அவன் பிடில் வாசித்தான், இவன் கிடார் வாசிப்பான். வீடு அதிர அதிர ராக் மியூஸிக் வைப்பான். நல்ல காலமாக வீட்டின் எல்லா அறைகளிலும் குளிர் சாதன வசதி பொருத்தப்பட்டிருந்ததால் அந்த இசைச் சத்தத்தில் வீடு விரிசல் விடாமலும், மற்றவர்களின் செவிப்பறைகள் கிழியாமலும் தப்பித்துக் கொண்டிருந்தன.

    ஸோ வாட்...? ஐ டோன்ட் கேர்... ஐ டோண்ட் மைண்ட் - இவை பூ உதிர்கிற மாதிரி சர்வ சாதாரணமாக, ஒரு நாளைக்கு நூறு தரமாவது அவனது வாயிலிருந்து உதிரும் முத்துகள்.

    அவனிடம், அப்பாவிடம், அம்மாவிடம், யாரிடமும் எதையும் கேட்பதை விட்டு விட்டாள் நந்தினி. ஆளுக்கு ஒரு தீவாக இருக்கிற வீட்டில் எதைக் கேட்கமுடியும்? எதை எதிர்பார்க்க முடியும்? அதுவும் இதைப் போன்ற கோடீஸ்வர வீட்டில் பழைய சோற்றுக்குச் சமமான அன்பையும், ஆதரவையும், கனிவையும், பாசத்தையும் எதிர்பார்த்தால் அவள் பைத்தியமாக இல்லாமல் வேறு என்னவாம்?

    ஆனாலும், நந்தினியின் உள்மனசு எதிர்பார்த்தது. மிக ரகசியமாக ஏங்கித் தவித்தது. சாதாரண வீடுகள் மாதிரி நம் வீடும் இருக்கக்கூடாதா என்று மறுகிற்று. தனக்கென்று ஒரு வீடு அமைந்தால் அது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள். ஒரு சராசரி மனைவியாக இருப்பாள். வீட்டையும், கணவனையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் மனைவியாக இருப்பாள். கணவனோடும், குழந்தைகளோடும் சிரித்துச் சிரித்துப் பேசுவாள். ஓடிப் பிடித்து விளையாடுவாள். இவள் வீட்டுச் சிரிப்பும், விளையாட்டும் பக்கத்து வீடுகளையெல்லாம் எட்டும். அவர்களைப் பொறாமைப்பட வைக்கும். அம்மா மாதிரி அவள் இரண்டே குழந்தைகளோடு நிற்கமாட்டாள். நிறையக் குழந்தைகள் பெற்றுக் கொள்வாள். கிட்டத்தட்ட அரை டஜன் குழந்தைகளாவது வேண்டும். ஆணில் மூன்று, பெண்ணில் மூன்று.

    அப்படியெல்லாம் வாழவேண்டுமானால் - வீடு அமையவேண்டுமானால் - கணவன் அவளுக்குப் பிடித்தவனாக இருக்கவேண்டும். மனம், எண்ணம், செயல் எல்லாவற்றிலும் ஒத்துப்போக வேண்டும். தான் பேச நினைப்பதையெல்லாம் அவன் பேச வேண்டும். வாழ்க்கை அப்படி இருக்க வேண்டுமானால் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். காதல் என்பது நிஜமான காதலாக இருக்கவேண்டும்.

    ஆமாம். காதல் என்றால் என்ன? அந்த உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?

    அதுவும் நிஜக் காதல் என்பது என்ன?

    தெரியவில்லை. ஆனாலும் அவளுக்குக் காதலிக்கவேண்டும் போலிருந்தது. அழகான, தன் மனதைக் கவரக்கூடிய, உயரமான கம்பீரமான ஆண்மகனைக் காதலிக்க வேண்டும்.

    அந்த நினைப்பு வந்ததும் மனத்தில் திடீரென்று சந்தோஷம் வந்தது. சொல்ல முடியாத உற்சாகம் வந்தது. அப்படிப்பட்ட ஓர் இளைஞனை அன்று சந்திக்கப் போவதாக அவள் உள்மனது சொல்லிற்று.

    உடனே நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் துள்ளிக்கொண்டு எழுந்தாள். எதிர்ச் சுவரில்தான் ஒட்டியிருந்த போஸ்டரில் தெரிந்த ‘ஜொனாதன் லிவிங்ஸ்ட ன் ஸீகல்’ ‘பற... உயர உயரம் பற... விட்டு விடுதலையாகு,’ என்று சொல்கிற மாதிரித் தெரிந்தது. உடனே அந்த ஸிகல் மாதிரி தானும் பறக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது.

    உடம்பும், மனதும் பரபரக்க, அவசர அவசரமாகக் குளித்தாள். நீலநிற டெனிம் பாண்ட்டும், சிவப்பில் ‘Be Free’ என்று வெள்ளை எழுத்துகளால் எழுதப்பட்ட டாப்ஸும் போட்டுக் கொண்டாள். தலையை வாரி ரப்பர் வளையம் மாட்டினாள். தந்தமாகப் பளபளத்த முகத்திற்குப் பவுடர் தேவை இல்லை எனப்பட்டது. புருவங்களைப் பென்சிலில் தீட்டி இன்னமும் அழகாக்கிக் கொண்டு ரோஜா நிற உதடுகளுக்கு வெறும் ஈரப்பசைக்கென இருக்கும் லிப்ஸ்டிக் தடவிப் படிகளில் குதித்துக் கீழே இறங்கி வந்தாள்.

    வீடு தன் வழக்கமான அமைதியிலும், நிசப்தத்திலும் கிடக்க, அன்று அவள் அதைச் சட்டை செய்யவில்லை. மாறாக ஒரு துள்ளலுடன் வாசலுக்குப் போனாள். வகைக்கு ஒன்றாக, வரிசையாக நின்று கொண்டிருந்த கார்களையெல்லாம் விட்டுத் தன் வழக்கமான வெள்ளை மாருதியை விட்டு அவளது பார்வை அண்ணனது மோட்டார் சைக்கிள் மீது போயிற்று.

    ‘இன்று இதில் ஏறிப் பறந்தால் என்ன?’

    உடனே டிரைவர்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கேட்டாள்.

    சேஷு, யமஹா சாவி எங்கே?

    இதோ இருக்கும்மா...

    சாவி வாங்கி, மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உதைத்துக் கிளப்பினாள். சேஷு பதறினான். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வேண்டுமென்றே இஞ்சினை உயர்த்தி, பெரிதாகச் சத்தப்படுத்திப் புல்தரையை வட்டமடித்து, கேட்டை விட்டு வெளியில் வந்ததும், விட்டு விடுதலையான உணர்வு வந்தது. உள் மனதில் ஸிகல் நின்று பற பற என்றது.

    பறக்க ஆரம்பித்தாள். உள்ளுக்குள் உற்சாகமும், சந்தோஷமும் துள்ளத் துள்ள யமஹா இன்னமும் வேகம் பிடித்தது. அண்ணா சாலையின் டிராபிக் ஸிக்னலின் சிவப்பு விளக்கு கண்களில் படவில்லை. போலீஸ்காரரின் விசில் காதில் கேட்கவில்லை. வேகம், வேகம், வேகம்... துள்ளலாய், துடிப்பாய், சந்தோஷமாய், சுதந்திரமாய், சென்னையில் போக்குவரத்து மிகுந்த அத்தனை சாலைகளிலும் விதிகளை மீறி, கார்களின் இடையில் புகுந்து, எல்லா வண்டிகளையும் இடம், வலம் என மாறி மாறி ஓவர்டேக் செய்து...

    போக்குவரத்துப் போலீஸ்காரர்கள் பதறினார்கள். ஒயர்லெஸ்ஸில் செய்தி பரப்பினார்கள். ‘நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற டாப்ளஸ், இளம் பெண், யமஹா மோட்டார் சைக்கிளில் விதிகளையெல்லாம் மீறி அசுர வேகத்தில் பறக்கிறாள். எப்படியாவது அவளை வளைத்துப் பிடிக்கவும்’

    ஆங்காங்கே போலீஸ் புல்லட் வாகனங்கள் பின் தொடர்வதை உணராத நந்தினி தன் மனத்தின் துள்ளல், துடிப்பு, ஆர்வம், வேகம் எல்லாம் அடங்கிச் சுதந்திரத் தாகம் கட்டுப்பட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றிய பின் களைத்துப் போய் வண்டியின் வேகத்தைக் குறைத்து வீட்டினுள் நுழைந்தபோது...

    Enjoying the preview?
    Page 1 of 1