Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellaam Penne Unnaale
Ellaam Penne Unnaale
Ellaam Penne Unnaale
Ebook133 pages1 hour

Ellaam Penne Unnaale

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466251
Ellaam Penne Unnaale

Read more from Usha

Related authors

Related to Ellaam Penne Unnaale

Related ebooks

Reviews for Ellaam Penne Unnaale

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellaam Penne Unnaale - Usha

    24

    1

    புது வருடம் பிறந்து விட்டது.

    இன்னொரு புத்தம் புதிய ஆண்டு.

    கிறிஸ்துவுக்குப் பிறகு இரண்டாயிரத்து நான்காவது வருடமாக உலகம் சுழலத் தொடங்கி விட்டது.

    சாருமதி ஜன்னல் கதவை திறப்பதற்கும் தேவாலய ஓசை கேட்பதற்கும் சரியாக இருந்தது.

    புது வருடத்திற்கான சிறப்பு பிரார்த்தனை போலும். இன்னும் விடிந்தும் விடியாத வானம். கிழக்கின் முதன் முதல் சிவப்பு கிரணங்கள், மெலிசாக கேட்கத் தொடங்கிவிட்ட பட்சிகளின் ஆரவாரம். சற்றே தொலைவில் கேட்கிற மாடுகளின் மணிச் சத்தம்.

    இன்னுமொரு விடியல்.

    புத்தாண்டின் புத்தம் புதிய விடியல்.

    என்னென்ன சுவாரஸ்யங்களை தாங்கிக் கொண்டிருக்கிறதோ, என்னென்ன நற்செய்திகளை வைத்துக் கொண்டிருக்கிறதோ, என்னென்ன சம்பவங்களை பொதிந்து வைத்திருக்கிறதோ... இருக்கட்டும்.

    சாருமதி கிழக்கு திசை நோக்கி மென்மையாக புன்னகைத்தாள்.

    வருக வருக புத்தாண்டே!

    இனிமையாக வருக!

    இனிய நினைவுகளை தருக!

    வருக வருக புத்தாண்டே!

    எதிர் வீட்டு புழக்கடைக் கதவு திறக்கிற சப்தம் கேட்டது.

    காசிப்பாட்டி படிகளில் இறங்கி தோட்டத்தில் புகுந்தாள். செம்பருத்தி, நந்தியாவட்டை, செவ்வரளி, சம்பங்கி என்று பூத்துக் குலுங்கியிருந்த மரங்களை நெருங்கி வேகமாக பறிக்கத் தொடங்கினாள்.

    பின்பக்கம் இருமல் சப்தம் கேட்டது.

    திரும்பினாள் அவள்.

    அப்பாதான் எழுந்து விட்டிருந்தார். குளிருக்காக காதுகளை மூடிக் கொண்டிருந்த குல்லாயை மேலும் இன்னொரு தடவை இறுக்கினார்.

    ஹாப்பி நியூ இயர் அப்பா... என்று புன்னகைத்தாள்.

    நியு இயரா? என்றார் இன்னும் தூக்கம் கலையாமல்.

    ஆமாப்பா... புது வருஷம் பிறந்தாச்சே இன்னிக்கு... இரண்டாயிரத்து மூணு... புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா... என்று மறுபடி புன்னகைத்தாள் அவள்.

    தாங்க்ஸ்மா... உனக்கும் என் வாழ்த்தும்மா...

    என்று போர்வையை உதறி மடித்து விட்டு ஜன்னல் பக்கமாக வந்தார்.

    சிலீர்னு குளிர்காத்து அடிக்குதேம்மா சாரு... ஜன்னல் கதவை ஏன் திறந்து வெச்சிருக்கே? என்றார் தோள்களைப் பற்றிக் கொண்டு.

    இப்பதாம்பா திறந்தேன்... புது வருஷம், புது விடியல், புது சூரியன், புது காத்துன்னு என்னமோ ஃப்ரஷ்ஷா ஒரு ஃபீலிங் வந்துதுப்பா...

    இங்கிலீஷ்காரன் பழக்கம்மா இது... நமக்கெல்லாம் சித்திரை மாசப் பொறப்புதான் விசேஷம்... வருஷப் பொறுப்புன்னு நம்ப நாடு பூரா கொண்டாடறது இதைத்தான்... ஜனவரி ஒண்ணெல்லாம் பிரிட்டிஷ்காரன் கலாச்சாரத்துக்கு தான் சரி... நம்ம நாட்டு கல்ச்சருக்கு இந்த ஜனவரி கினவரி யெல்லாம் சரியே கெடையாது... மேலும் பேச முடியாமல் இருமலில் மாட்டிக் கொண்ட அப்பாவை அவள் மவுனமாகப் பார்த்தாள்.

    ஒரு வகையில் அப்பா சொல்வது நிஜம்தான். பூமி தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருக்கிறது. பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த பூமிப்பந்து யாருடைய கட்டளைக்காகவும் காத்துக் கொண்டிருக்காமல் ஏதோ ஒரு விஞ்ஞான நியதிக்கு உட்பட்டு சீரான வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக இரவும் பகலும் மாறி மாறி ஏற்படுகிறது. உன்னிப்பாக கவனித்த மனிதன், இதை காலம் கணிக்க பயன்படுத்திக் கொண்டான்.

    முதலில் கருவிகளைக் கண்டுபிடித்து தொலை நோக்கு சாதனங்களால் வான் இயல் மண்டலத்தில் மூளையை செலுத்தினான். ஆராய்ச்சி செய்தான். பூமி சுழல்கிறது என்று முதலில் கண்டுபிடித்தான். தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்பது அடுத்த கண்டு பிடிப்பு, அதற்கு ஒரு நாள் ஆகிறது என்று கணக்கிட்டவன், தன்னைத்தானே சுற்றியபடி அது சூரியனையும் சுற்றி வருகிறது என்ற பேருண்மையையும் கண்டுபிடித்து விட்டான். இப்படி ஒரு சுற்று சுற்றி முடிக்க முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள் ஆகின்றன என்கிற இறுதி முடிவுக்கும் வந்தான் அவன்.

    உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த வெவ்வேறு ஆராய்ச்சிகளின் பலனாக, அவரவர்கள் அந்த இடங்களுக்கு ஏற்றாற்போல நாள், கிழமை, வாரம், மாதம், வருடம் என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.

    அவ்வளவுதான்.

    வெள்ளைக்காரனை தாழ்மைப்படுத்தவும் இதில் எதுவும் இல்லை. நம் காலரை தூக்கி வைத்துக் கொள்ளவும் எதுவும் இல்லை.

    ஆனால் உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் அங்கீகரித்துள்ள மொழி ஆங்கிலம், உலகின் பொதுமொழி ஆங்கிலம். வடகோடி முதல் தென்கோடி வரை மக்களை இணைத்திருக்கும் மொழி ஆங்கிலம்.

    ஜனவரி ஒன்று கொண்டாட்டம் என்பது உலகின் பொது திருவிழா, உலக இதயங்களில் உற்சாகம் மிதக்கின்ற புது திருவிழா.

    அதில் நம் எளிய இருதயமும் கலப்பதில் தவறில்லை.

    சாரு... சாரு... அப்பாவின் குரல் உரக்க கேட்ட பிறகுதான் அவள் நனவுக்கு வந்தாள்.

    நிமிடத்தில் மூளை என்னவெல்லாம் சிந்தித்து விடுகிறது என்று வியப்புடன் நினைத்துக் கொண்டு, தலையை உதறி முடிந்து கொண்டாள்.

    பாயசம் பண்ணப் போறேம்பா இன்னிக்கு... தேங்காய் அரைச்சுவிட்ட வெல்லப்பாயசம் ரொம்பப் பிடிக்குமில்லையாப்பா உங்களுக்கு?

    ஜனவரி மாசத்துக்கு பாயசமா? வெள்ளைக்காரங்க மாதிரியா? அப்பா லேசாக முகம் சுளித்தார்.

    சந்தோஷமா இருக்கறதுக்கு யாரை மாதிரி வேணா இருக்கலாம்பா... என்று அவள் சிரித்தாள்.

    அந்த காசிப்பாட்டி மாதிரி கூட இருக்கலாம், அப்படித் தானே? அப்பாவின் கை எதிர் வீட்டை சுட்டியது.

    குழப்பமாக அவள் தந்தையை ஏறிட்டாள்.

    என்னப்பா சொல்றீங்க?

    காசிப்பாட்டி எவ்வளவு சந்தோஷமா இருக்கா பாத்தியா? அவ சந்தோஷம் எதுல இருக்கு தெரியுமா சாரு? நந்தவனம் மாதிரி இருக்கிற தோட்டத்துல இருந்து கூடை நிறைய பூக்களை பறிக்கிறது... மாலை தொடுக்கிறது... பூஜை பண்றது... இதுலதான் இருக்கு... நீதான் எனக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்கமாட்டேங்கிறே...

    என்னது... என்னப்பா சொல்றீங்க? என்றாள் திகைப்புடன்.

    தோட்டம் முழுக்க வெண்டை, கத்திரி, கீரை, எலுமிச்சைன்னு போட்டு பராமரிக்கறியே தவிர, இப்படி பூச்செடிகளா போட்டியிருக்கியா? எவ்வளவு ஆசை தெரியுமா எனக்கு? ஊர்க்கோடில கேட்பார் இல்லாம இருக்கே சிவன் கோவிலும் மண்டபமும், அந்த சிவனுக்கு தெனம் பூமாலை சாத்தணும்னு எவ்வளவு ஆசை தெரியுமா? அப்பா தரையில் பார்வையை பதித்தபடி கேட்டார்.

    அமைதியாக அவள் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

    உங்க வீடுப்பா இது... உங்க மண், உங்க தோட்டம்... தடுக்கறதுக்கு நான் யாருப்பா?

    தெரியும் எனக்கு, பூச்செடி பிடிக்காது உனக்குன்னு...

    இல்லப்பா... பூ பிடிக்காத பொண்ணு இருப்பாளா அப்பா? வெடுக் வெடுக்னு பூவை பறிச்சுதான் பூஜை பண்ணணும் என்கிறது தான் எனக்குப் பிடிக்கலேப்பா... உயிருள்ள பூவை பறிச்சு அதை சித்திரவதை படுத்துறதுல எனக்கு உடன்பாடில்லேப்பா... தரைல தானா உதிர்ற பாரிஜாதம், மரமல்லி மாதிரி பூக்களால் பூஜை செய்யக் கூடாதா இந்த ஜனங்கள்னு நெனச்சு வருத்தப்படுவேம்பா... என்னப்பா நீங்க, என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா?

    அம்மாடி சாரு... அப்பாவின் குரல் கம்மியது. பூவை விட இவ்வளவு மிருதுவா இருக்குற உன்னை விட்டுப் போக உன் புருஷனுக்கு எப்படிம்மா மனசு வந்தது? என்று அவர் கரகரத்தார்.

    2

    அப்பாவின் முகம் மாறி விட்டது.

    நல்ல கோதுமை நிறம் தான் அப்பா. தொண்டை நரம்பும் புறங்கை நரம்புகளும் இளம்பச்சை நிறத்தில் ஓடுவது வெளிப்படையாக தெரிகிற அளவுக்கு தங்க நிறம்.

    இப்போது இன்னும் சிவந்திருந்தார்.

    உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1