Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

MiniMinik Kaadu
MiniMinik Kaadu
MiniMinik Kaadu
Ebook142 pages1 hour

MiniMinik Kaadu

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
MiniMinik Kaadu

Read more from Usha

Related to MiniMinik Kaadu

Related ebooks

Reviews for MiniMinik Kaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    MiniMinik Kaadu - Usha

    30

    1

    ஆச்சரியம்தான்.

    ஐந்து மணிக்கே விழிப்பு வந்தது. உண்மையிலேயே அதிசயம்தான்.

    சாதனா படுக்கையில் எழுந்து உட்கார்ந்து ஜன்னல் கம்பிகளின் ஊடே புகுந்த மெல்லிய காலை வெளிச்சத்தைப் பார்த்தாள். ‘அட... அழகாகத்தான் இருக்கிறது, இந்தச் சந்திப்பு’ என்று நினைத்துக்கொண்டாள்.

    விடைபெறுகிற நிலவு, வந்து கொண்டிருக்கிற சூரியன்... எதிரெதிர் திசைகளில் நின்று இரண்டும் சந்தித்துக் கொள்ளும்போது பரவுகிறதே இது என்ன மெல்லிய வெளிச்சமா, இதமான வெப்பமா, இல்லை உலகத்தின் முதல் அழகு வெளிப்படுத்துகிற மென்மையான கலை உணர்வா?

    கண்களை மூடிக்கொண்டாள். முதல் நாள் இரவு கேட்ட கச்சேரி, கண்முன்னால் ஓடிவந்தது. கர்னாடக இசைக் கச்சேரிதான் வழக்கம்போல பட்டுச்சோலை, ஆடுகிற ஜிமிக்கி, எட்டுமுழம் மல்லிகை என்று பாடுகிற பாடகிதான். ஆனால், நேற்று அவளுக்கு தமிழார்வம் கிளைத்திருந்ததைப் போல, எல்லா பாடல்களையும் சுத்தமான தமிழ்ப் பாடல்களாகவே தேர்வு செய்திருந்தாள்.

    ‘சங்கே முழங்கு’ என்று பாரதிதாசனை கம்பீரத்துடன் முழங்கினாள். ‘தூரப்போகாதே கண்ணே - என்னைவிட்டுத் தூரப் போகாதே’ என்று தாயாகக் கெஞ்சினாள்.

    அதிலும் அந்த பாரதியின் பாடல் – ‘அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை அழச் செய்து பின் கண்ணை மூடிக்கொள் குழலிலே சூட்டுவான் என்பான்- என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.’

    ஏகதாளத்தில், கேதாரத்தின் துணைகொண்டு சிருங்கார ரசம் கொண்டு அவள் பாடியபோது சபை கிறங்கிற்று. சாதனாவும் மயங்கினாள். வாழ்க்கை அத்தனை பேருக்குமே பொன்கணங்களை வைத்துக்கொண்டு வழங்கியபடியே இருக்கிறதோ என்று தோன்றியது. கள்ளால் மயங்குவது போலவே-அதைக் கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்’ என்று கடைசி வரிகளை அவள் இசைத்தபோது சாதனாவும் கிட்டத்தட்ட அதே இனிய நிலைக்குப் போய்விட்டதைப் போல் உணர்ந்தாள்.

    வெளிச்சம் மெல்ல மெல்ல பரவி வந்தது. ஒரு சில குருவிகளின் சந்தோஷ இரைச்சல் தோட்டத்து அரச மரத்திடமிருந்து கேட்க ஆரம்பித்து விட்டது. உலகில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் பறவைகளின் மொழி பற்றிய ஆராய்ச்சிதான் தலையானதாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. மனிதனால் ஏன் அதை கற்கவே முடியவில்லை, பகுத்தறிவு வளர்ந்து பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும்?

    அப்போதுதான் மூக்கு அந்த நறுமணத்தை உணர்ந்தது.

    புதிய பாலில் காபி. அப்பா எழுந்துவிட்டார், வழக்கம்போல். தன் கடமையை முடித்துக் கொண்டாள்.

    பன்னீரால் ஒரு தடவை முகத்தை அலம்பிக்கொண்டு தேங்காய்ப்பூ துவாலையால் அழுத்தாமல் மெல்ல ஒற்றிக் கொண்டாள். கண்ணாடி முன் நின்றாள். இயல்பான புன்னகையில் மேலும் ஒரு அங்குல அழகு உயர்ந்ததைப் போல இருந்தது. அப்பழுக்கில்லாத முகம் வடிவான மீன்களைப்போல அழகிய விழிகள். அளவான நாசி. ஏதோ ஒரு பழத்தின் கைபடாத சுளைகளைப்போல எழிலான இதழ்கள் ‘சாதனா... உன் அழகு ஆராதனைக்குரியது’ என்று வழக்கமான ஒரு பாராட்டுக் கடிதத்தை இதயம் நீட்ட, ஆசையுடன் வாங்கிப் படித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    வணக்கம்ப்பா... என்று மலர்ந்த முகத்துடன் அவள் சொன்ன போது, புத்தகங்கள் - குறிப்பேடுகள் என்று உட்கார்ந்திருந்த அப்பா நிமிர்ந்தார்.

    வணக்கம்மா... நல்லா தூங்கினியா? என்று எப்போதும் கேட்கும் முதல் கேள்வியைக் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தார்.

    ஆமாப்பா... ரொம்ப நல்ல தூக்கம்... கச்சேரி முடிஞ்சு வரும்போது ஒன்பதரை மணி தாண்டியிருந்தது... நல்ல பசிவேற... அருமையா செஞ்சு வெச்சிருந்தீங்களே ரவா பொங்கல்... ஒருபிடி பிடிச்சுட்டு படுத்துட்டேன்ப்பா... நீங்க ராமு மாமாகிட்ட போன்ல பேசிட்டிருந்தீங்களா, சரி, தொந்தரவு பண்ணவேண்டாம்னு போய் படுத்தவ, அஞ்சே நிமிடத்துல தூங்கிட்டேன்ம்ப்பா...

    காபி இருக்கும்மா, எடுத்துக்கறியா?

    பிளாஸ்க்குலதானேப்பா? நானே எடுத்துக்கிறேன்... என்று விரைந்தாள்.

    ‘மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திருக்கும் - வெண்ணிலாவே - உன்றன் மேனியழகு மிகைப்படக்காணுது வெண்ணிலாவே’ என்று உள்ளே பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க, அவள் அந்த அருமையான முதல் காலை காபியை அருந்தி ரசித்தாள்.

    பிரமாதம்ப்பா... என்று அப்பாவிடம் போனாள்.

    நானும் ரெண்டுடொரு தடவை முயற்சி பண்ணியிருக்கேன்... ஆனா, உங்களை மாதிரி காபி போட வரவே வராது, எனக்கு...

    அப்பா புன்னகைத்துவிட்டுக் கேட்டார்.

    என்னம்மா கச்சேரி? கர்னாடக இசையா?

    ஆமாப்பா... ஆனா, தெலுங்கு கீர்த்தனையோ, சம்ஸ்கிருதப் பாடல்களோ இல்லேப்பா... அழகான தமிழ்ப் பாடல்களை பாடி அசத்திட்டா அந்த புதுப்பாடகி... ரொம்ப மனநிறைவா இருந்தது.

    விமரிசனம் எழுதணுமா?

    ஆமாப்பா... இன்னிக்கு பன்னிரண்டு மணிக்குள்ள முடிச்சுடணும்... எடிட்டர் கோயம்புத்தூர் கெளம்பறார். அதுக்குள்ள அவர் மேசைக்கு அனுப்பிட்டா நல்லது.

    நல்லது... செய்மா...

    நீங்க என்ன படிக்கறீங்க, இவ்வளவு தீவிரமா? என்றாள் - முகத்தை சாய்த்துப் பார்த்து.

    ஒரு கட்டுரை படிச்சேம்மா... ‘நின்று போகுமா உளியின் ஓசை’ என்கிற தலைப்புல... ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது... ‘டிஜிட்டல் பேனர்’கள் வந்தபிறகு, சுவரில் விளம்பரங்கள் வரைகிற ஓவியர்களோட வாழ்கையில மண் விழுந்தது... இப்போ மலையெல்லாம் கல்குவாரிகளா மாறி, பணம் கொடுக்கிற புதையல்களா பார்க்க ஆரம்பிச்சதும், சிலை வடிக்கிற சிற்பிகள் கைல இருந்து ரத்தம் வழியுது... இதைப் பத்தித்தான் எழுதிக்கிட்டிருக்கேன்...

    எல்லாம் நவீனம்ப்பா... நாம ஒண்ணும் செய்ய முடியாது...

    அப்பா புன்னகைத்தார்.

    சாயங்காலம் நீங்க வரலையாப்பா?

    ஏம்மா?

    பரதநாட்டிய அரங்கேற்றம் ஒண்ணு இருக்குப்பா... நட்சத்திரான்னு ஒரு பதினைஞ்சு வயசுப்பொண்ணு... கனடாவுல பொறந்து வளர்ந்ததாம்... பாத்துட்டு வந்து விமரிசனம் எழுதணும்... வர்றீங்களாப்பா?

    இல்லம்மா... நீ போயிட்டு வா...

    ஏம்ப்பா என்றாள் ஏக்கத்துடன்.

    ஒரு மாறுதலா - இருக்குமில்ல? அந்த இடமே கலகலன்னு இருக்கும்ப்பா... சிரிச்சுகிட்டு, உற்சாகமா, பளிச்சுன்னு உடை அலங்காரங்களோடு ஜனங்க வருகிற அந்த ஆர்வத்தைப் பார்க்கும் போது ‘டானிக்’ ‘குடிச்ச மாதிரி இருக்கும்... ஒரு தடவையாவது வாங்களேன்ப்பா...

    சரிம்மா! அடுத்தமுறை பாக்கலாம்... இப்ப நீ போயிட்டு வா... நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதாதா, சொல்லு... என்று அப்பாசி ரித்தார்.

    உங்க விரும்பம்ப்பா என்று நகர்ந்தாள்.

    வெயில் ஏறிக்கொண்டிருந்தது. பறவைகளின் ஆரவாரங்கள் அடங்கிவிட்டன. குளியலையும், காலை உணவையும் முடித்துக் கொண்டு அவள் வண்டியை எடுத்தாள். இரைச்சலும், போட்டியும் நிறைந்த வாகனங்களுக்கு இடையே சிரமத்துடன் ஓட்டிக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள். கட்டுரையை எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, ஆசிரியர் அழைத்தார்.

    சாதனா... பீட்டர் வரலியாம்... ஒரு முக்கியமான ‘கவரேஜ்’ நீ பண்ணிரு... தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியில் ஏதோ பிரச்சினையாம்... போயிட்டு வந்துடம்மா... என்றபோது அவள் முகம் சுருங்கினாள்.

    மூணுமணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி சார்.

    பாத்துக்கலாம்மா... இன்னிக்கில்லேன்னா நாளைக்கு வேற ஒண்ணு... மொதல்ல இதைக் கவனி... என்றார், சற்று கவலையுடன்.

    2

    அரசு மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான பிரிவு எப்போதும் போல பரபரப்பைச் சுமந்து காட்சியளித்துக் கொண்டிருந்தது.

    நந்தன் அரசமரத்தடியின் பிளவுபட்ட சிமெண்டு மேடையின் மேல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய இரண்டு கைகளும் நெற்றியைப் பற்றி இருந்தன. சொல்லமுடியாத வேதனையில் இதயம் துடிதுடித்தது.

    அவனைச் சுற்றிலும் இருபது, இருபத்தைந்து மாணவர்கள் நின்றார்கள். அத்தனை முகங்களும் கவலைதாங்கி ருந்தன. தங்களுக்குள் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை நந்தனைப் பார்ப்பதும், பிறகு தங்களுக்குள் பார்த்துக் கொள்வதுமாக இருந்தார்கள். பாலகுமார்

    Enjoying the preview?
    Page 1 of 1