Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அழகே வா... அருகே வா...
அழகே வா... அருகே வா...
அழகே வா... அருகே வா...
Ebook128 pages44 minutes

அழகே வா... அருகே வா...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுரா! ஆத்மஜாவின் கல்லூரித் தோழி...
 மதுரா அறைக்குள் நுழையும் போது ஆத்மஜா தனக்குத்தானே சிரித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தாள்.
 "தனியா ரூம்ல எதுக்காக சிரிச்சே?"
 "இன்னைக்கு எங்க அப்பாவோட கல்யாண நாள்... அப்பா ஸ்கூலுக்குப் போய்ட்டு இன்னும் வீட்டுக்கு வரலை. வழக்கம்போல அம்மா... அப்பாவை அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாங்க. நானும் சேர்ந்து அப்பாவைத் திட்டுற மாதிரி நடிச்சேன்..."
 "அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னாங்க?"
 "எங்கம்மாதானே! எங்கம்மா அப்பாவைத் திட்டுவாங்க. ஆனா நான் ஒண்ணு சொன்னாப் போதும். வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்க. இப்பக்கூட அப்படித்தான். அப்பாவை அம்மா திட்டினாங்க. நான் ஒரு வார்த்தை சொன்னதும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்திட்டாங்க! அதை நினைச்சுத்தான் சிரிச்சிட்டிருந்தேன்."
 "உங்கம்மா கண்ணகி காலத்தில் பிறக்க வேண்டியவங்க! கணவனே கண்கண்ட... டைப் போலிருக்கு!"
 "உண்மைதான். எங்கப்பா எங்கம்மாவுக்குத் தெய்வம்தான். எங்கம்மாவுக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம்!"
 "எல்லாப் புருஷன்களும் மனைவிக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம்தானே!"
 "இருந்தாலும் எங்கம்மா கதை வித்தியாசமானது. எங்கப்பா எங்கம்மாவுக்கு ஒரு வகையில் அத்தை மகன். அவருக்குன்னு அம்மா அப்பா யாரும் கிடையாது. எங்கம்மா வீட்ல தங்கித்தான் படிச்சார். அம்மாவுக்குப் பெரிய இடத்துல கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. கல்யாணத்தன்னைக்கு முதல் நாள் அம்மாவைப் பத்தி யாரோ தப்பாமொட்டைக் கடிதாசி எழுதி மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துட்டாங்க. அதைப் படிச்சிட்டு மாப்பிள்ளை கல்யாணத்தை நிறுத்திட்டார்.
 அந்த நேரத்துல அம்மா கழுத்துல தாலி கட்டினவர் அப்பா... அப்பா மட்டும் முடியாதுன்னு சொல்லியிருந்தா... அவமானத்துல அம்மாவும், தாத்தாவும் தூக்கு மாட்டிக்கிட்டுச் செத்துப் போயிருப்பாங்க. அதனால அம்மா அப்பாவைத் தெய்வமாக நினைக்கிறாங்க!"
 மதுரா ஆச்சரியமாக ஆத்மஜாவைப் பார்த்தாள்.
 "உண்மையிலேயே உங்கப்பா கிரேட்தான்!"
 "அது மட்டுமில்லை. எங்க தாத்தா பெரும் பணக்காரர். அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு எங்கம்மாதான். ஆனா... எங்கப்பா எங்கம்மா கழுத்துல தாலி கட்டினாரே தவிர... அம்மாவோட சொத்துல எள்ளளவும் ஆசை கிடையாது. பார்த்துக்கிட்டிருக்கிற வாத்தியார் உத்யோகத்தை விட்டுட்டுச் சொத்துக்களை நிர்வகிக்கும்படி தாத்தாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லிட்டாங்க. ஆனா அப்பா கேட்கலை.
 அப்பாவைப் பொருத்தவரை பள்ளிக்கூடம், லைப்ரரி, இலக்கியக் கூட்டம் இதெல்லாம்தான் உலகம். காசு... பணம்னு அலையற உலகத்துல அவருக்கு அதெல்லாம் தூசு. ஸ்கூலுக்குத் தன்னோட ஸ்கூட்டர்லதான் போவார். குடும்பத்தோட எங்காவது போகணும்னா மட்டும்தான் கார்ல வருவார். ரொம்ப சிம்பிள். என்ன சொத்து இருக்கு... அதோட கணக்கு வழக்கு என்னங்கிறது எதுவுமே எங்கப்பாவுக்குத் தெரியாது. தாத்தாவுக்குப் பிறகு எல்லாத்தையும் அம்மாதான் பார்க்கிறாங்க.
 பாவம் அம்மா... சில சமயம் அவங்களுக்கு அது ரொம்பப் பாரமா இருக்கும். அந்தச் சமயத்துல ரொம்ப டென்ஷனாயிடுவாங்க. அப்பாவோட உதவியை எதிர்பார்ப்பாங்க. ஆனா அப்பா எதுக்குமே வளைஞ்சு கொடுக்கமாட்டார். எந்த லாப நஷ்டத்துக்கும் அலட்டிக்காம அவர்பாட்டுக்கு அவர் வழியில போய்ட்டு இருப்பார். எனக்கு அவர்கிட்ட பிடிச்சதே இத்தனைச் சொத்து இருந்தும்... அது தன் உழைப்பில் வந்ததில்லைங்கற எண்ணத்துல அதை அனுபவிக்காம விலகியிருக்கிற அவரோட சுயமரியாதையும், தன்மானமும்தான்..."
 "ரியலி வெரி கிரேட்!" - தோள்களைக் குலுக்கி ஆச்சரியத்தில் விழிகள் விரித்தாள் மதுரா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223450368
அழகே வா... அருகே வா...

Read more from R.Sumathi

Related to அழகே வா... அருகே வா...

Related ebooks

Related categories

Reviews for அழகே வா... அருகே வா...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அழகே வா... அருகே வா... - R.Sumathi

    1

    நூறாவது முறையாக வாசலைப் பார்த்து விட்டாள் கல்பனா.

    ராஜசேகரைக் காணவில்லை. பழமும் பூவும் தேங்காயும் நிரம்பிய பூஜைக் கூடை மேஜை மீது இருந்தது. அவளைப் பார்த்துச் சிரித்தது.

    எரிச்சலும் கோபமுமாக சோபாவில் வந்தமர்ந்தாள். சுவரில் சுற்றிலும் கலைநயத்துடன் பதிக்கப் பெற்றிருந்த கண்ணாடிகள் அவளுடைய தோற்றத்தைப் பிரதிபலித்தன.

    ஐம்பது வயதைத் தொடப் போகிறாள். நம்பும் மனிதர் நாட்டில் இல்லை. பார்க்கும் கண்களை ஏமாற்றும் வயது. நடுத்தர வயது என்றாலும் என்றும் பதினாறைப் போல் அழகு.

    கட்டான உடல் வாகு. இன்னும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

    தலைநிறைய கனகாம்பரச் சரம். காதிலும் கழுத்திலும் டாலடிக்கும் வைரங்கள். நெற்றியில் பளிச்சிடும் திலகம். வைரங்கள் தராத அழகைத் தந்தன.

    உடலைச் சுற்றித் தழுவி தோளிலிருந்து சரிந்த தங்கச் சரிகை.

    அடர்ந்த சிவப்பு நிற பட்டுப்புடவை கோவில் அம்மனை நினைவூட்டியது.

    தன் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்த கல்பனா விற்கு நெஞ்சில் பொங்கிக் கொண்டிருந்த கோபமும் எரிச்சலும் இப்பொழுது அழுகையாக மாறியது.

    தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கப் பிடிக்காதவளைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    பின்னே என்ன?

    இன்றைக்குக் கல்யாண நாள். காலையிலேயே ராஜசேகரிடம் படித்துப் படித்துச் சொல்லியிருந்தாள்.

    இங்க பாருங்க... இன்னைக்குக் கல்யாண நாள். என்னைக்கும் மாதிரி இந்த வேலை... அந்த வேலைன்னு லேட்டா வராதீங்க. சாயந்திரம் கோவிலுக்குப் போகணும்... புரியுதா?

    ம்... என்றதோடு சரி.

    வழக்கம் போல் முகத்தில் கரி பூசிவிட்டான்.

    ஐந்து மணியிலிருந்து அவள் அலங்கரித்துக் கொண்டதுதான் மிச்சம். அவனுக்காக எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு என்னென்ன சிற்றுண்டிகள் செய்திருக்கிறாள். எல்லாம் சாப்பாட்டு மேஜையில் பாத்திரத்திற்குள் மூடிக் கிடந்தன.

    அவளும் அவற்றைச் சற்றே சுவைத்து ருசி பார்த்ததோடு சரி. பசியாறவில்லை.

    பசியிருந்தும் ஏமாற்றமும் கோபமும் பசியை விரட்டி வெறுப்பை உண்டாக்கியது.

    ச்சே! என்ன மனிதன் இவன்? பொண்டாட்டியைப் பற்றிய எண்ணம் கொஞ்சம்கூட இருக்காதா? என்ன பெரிய உத்யோகம்? பாழாய்ப்போன உத்யோகம்.

    வாத்தியார் உத்யோகம்! மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதாயிரம் ரூபாய் இருக்குமா சம்பளம்?

    யாருக்கு வேணும் இந்தப் பணம்? இதைவிட அதிகமாகக் கார் டிரைவருக்குக் கொடுக்கிறோம்.

    விட்டுத் தொலைங்க என்றால் கேட்கிறாரா? அதுவும் சரியான பொட்டல் கிராமத்தில் வேலை.

    வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத மனுஷன்! கோபம் கோபமாக வந்தது.

    அவளுடைய சிந்தனையைக் கலைப்பதைப் போல் தொலைபேசி ஒலித்தது. அந்த ஒலி அவளை இன்னும் எரிச்சல்படுத்தியது.

    ‘அவர்தான்... சாரிம்மா... என்னால வரமுடியவில்லை. ஸ்கூல்ல முக்கியமான இலக்கியக் கூட்டம். நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். கோவிலுக்குப் போயிட்டு வா!’ என்று பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் தொலைபேசியை வைத்து விடுவார்.

    அதைக் கேட்டால் இன்னும்தான் எரிச்சல் வரும். எடுக்காமல்தான் பத்து நிமிடங்களைச் செலவிட்டாள். அவளைப் போலவே தொலைபேசிக்கும் பிடிவாதம் இருந்திருக்க வேண்டும்.

    தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    பேசட்டும். கத்தித் தீர்த்து விடுகிறேன்.

    வெறிபிடித்தவளைப் போல எழுந்து தொலைபேசி அருகே சென்றாள்.

    ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தாள். ஹலோ! என்றாள் கடுமையாக.

    அம்மா...!

    அந்தக் குரல் அவளை ஒரு கணத்தில் உருக்கி விட்டது. உணர்வுகளை மாற்றி விட்டது. வேதனைகளை விரட்டி விட்டது. விரக்தியைத் துரத்தி விட்டது. மலர்ச்சியை கொண்டு வந்தது. தளர்ச்சியைச் சரி செய்தது. ‘அம்மா’ என்ற வார்த்தை அதிசயமான ஒரு வார்த்தை. அற்புதமான ஒரு வார்த்தை. ஆக்கசக்தியான ஒரு வார்த்தை. அனைவருக்கும் பொதுவான வார்த்தை.

    ஆனால், அவரவர் பிள்ளைகள் அழைக்கும் போது அது எவ்வளவு பெரிய ஆழமான வார்த்தை என்பதை அந்த வார்த்தைக்குச் சொந்தமானவளால் மட்டும்தான் உணர முடியும். உணர்ந்த கல்பனா உருகினாள்.

    ஆத்மஜா!

    மெனி மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே’ மம்மி...

    தொடங்கி விட்டது கண்ணீர். தேங்க்யூடா செல்லம்!

    அம்மா... காலையிலேயே உனக்கு வாழ்த்துச் சொல்லலாம்னு பார்த்தேன். சுத்தமா நேரம் கிடைக்கலை. அம்மா... என்னென்ன ஐட்டம் பண்ணினே... இந்நேரம் அங்க இல்லையேன்னு கவலையா இருக்கு?

    பீட்ரூட் அல்வா... உளுந்து வடை, பூரி, சன்னா மசாலா, பயத்தம் பருப்பு பாயாசம்...

    வாவ்! அப்பாவுக்குப் பிடிச்ச ஐட்டம். அம்மா... தூள் கிளப்பிட்டே! நாக்குல எச்சில் ஊறுது. அப்பா ஒரு வெட்டு வெட்டியிருப்பாரே?

    ம்க்கும்! என் மனசையும் உணர்வுகளையும்தான் வெட்டிப் போட்டிருக்கார்! பற்களைக் கடித்துக் கொண்டாள்.

    அம்மா... என்ன புடவை கட்டியிருக்கே? சொல்லேன்...

    சிவப்புக் கலர் பட்டுப்புடவை.

    உன்னோட கல்யாணப் புடவைதானே?

    ஆமா!

    ஹய்யோ... அப்பா மயங்கி விழுந்திருப்பாரே?

    ஆமா! மயங்கி என் மடியிலதான் விழுந்து கிடக்கார்.

    பேசற நிலைமையில இருக்காரா இல்லையா? கொடு அப்பாகிட்ட... நான் விஷ் பண்ணனும்...

    இருந்தாத்தானேடி கொடுக்க! சுள்ளென விழுந்தாள்.

    ஏம்மா... அப்பா எங்கே?

    யாருக்குத் தெரியும்? இலக்கியக் கூட்டம், பட்டி மன்றம்னு எங்காவது வெட்டியா பொழுதைக் கழிச்சுக்கிட்டிருப்பார். கட்டினவளோட கல்யாண நாளைக் கொண்டாடணும்னு இருந்தாத்தானே!

    நீ போன் பண்ண வேண்டியதுதானே?

    காலையிலேருந்து எனக்கு வேற வேலை? எத்தனை வாட்டி போன் பண்றேன் தெரியுமா? அணைச்சு வச்சிருக்கார். காலையிலேயே சொன்னேன். சீக்கிரம் வாங்க... கோவிலுக்குப் போகணும்னு. நான் கிளம்பிக் காத்துக் கிடக்கேன். ஆளைக் காணோம். ஆத்மஜா... சத்தியமா சொல்றேன். செத்துப் போய்டலாம் போல் இருக்குடி!

    ச்சீ... என்னம்மா நீ? நல்ல நாளும் அதுவுமா என்ன பேசற நீ? என்னமோ குடிகாரனோட குடும்பம் நடத்தற மாதிரியில்ல பேசறே? அப்பா மாதிரி ஒரு நல்ல மனுஷன் ஊர்ல உண்டா?

    எனக்கு இங்க யார் இருக்கா? நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற... அப்பாவும் இப்படிப் பள்ளிக்கூடமே கதியாக் கிடந்தா... என் நிலைமையை நினைச்சுப் பாரு... இந்தப் பாழாப் போன வாத்தியார் வேலையைத் தூக்கிப் போட்டுட்டுச் சொத்துக்களை நிர்வாகம் பண்ணினா என்ன? தாத்தா இருக்கும் போதிலிருந்தே இதையேதான் சொல்றோம். இவரை மாதிரி பத்து வாத்தியாருக்குச் சம்பளம் கொடுக்க நம்மகிட்ட பணம் இருக்கு.

    இந்தச் சொத்துக்களை நிர்வகிச்சுட்டு ஒரு ஜமீன்தார் மாதிரி வாழ வேண்டியவர்... இப்படி ஒரு கிராமத்துல கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல வாத்தியார் வேலை பார்த்து வயித்தைக் கழுவணும்னு என்ன தலையெழுத்து! நம்ம வீட்டுல எத்தனை வேலைக்காரங்க... எவ்வளவு சம்பளம் கொடுக்கறோம்... நமக்குன்னு எத்தனை பிசினஸ் இருக்கு. அதையெல்லாம் கவனிக்காம இப்படி இருக்காரே! சில சமயம் மானம் போற மாதிரி இருக்கு...

    "அம்மா... நீ

    Enjoying the preview?
    Page 1 of 1