Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேடினேன் வந்தது!
தேடினேன் வந்தது!
தேடினேன் வந்தது!
Ebook100 pages35 minutes

தேடினேன் வந்தது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"வேண்டாம்ப்பா..." அம்மா மெல்ல கலக்கமாக தலையசைத்தாள். "வேண்டாம்! உன் ஆசை உன் விருப்பம்னு சொல்லி ஏதாவது வெள்ளைக்காரியைப் பத்தி சொல்லிடாதே. அப்படியெல்லாம் எக்குத்தப்பா ஏதாவது ஆகிடக் கூடாதுன்னுதான் உன் கல்யாணத்தை பத்தி பேச அடிக்கடி வரச் சொன்னேன். ஒவ்வொரு தடவையும் நீ ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக் கழிக்க கழிக்க எனக்கு உண்மையிலேயே பயம் வந்துட்டு. அதான்... சீரியஸ்ன்னு சொல்லி தந்தியடிச்சேன்."
 படபடவென தமயந்தி பேச வாய்விட்டு சிரித்தான் சந்தனு.
 "ஐய்யோ... அம்மா..."
 "சந்தனு... எனக்கு கலாசாரமும் பண்பாடும் ரொம்ப முக்கியம்ப்பா..."
 அம்மாவின் இரு தோள்களிலும் கைகளை ஊன்றி சிரித்தான்.
 "எனக்கும் அதுதாம்மா முக்கியம் அதனாலதான் இந்த பொண்ணுங்களை வேண்டாம்னு சொல்றேன்."
 "இதெல்லாம் தமிழ்நாட்டு பொண்ணுங்கதாம்ப்பா. அப்படி இப்படி எல்லாமே சொந்தம்தான். இந்த பொண்ணுங்களெல்லாம் மாடர்னா டிரஸ் பண்ணியிருக்கறதால வேண்டாம்னு சொல்றியா? இந்த காலத்துல கல்யாணத்துக்கு முன்னாடி எந்தப் பொண்ணு புடவை கட்றா?"
 "அம்மா... கலாசாரமும் பண்பாடும் வெறும் உடையை வச்சுக் கண்டுபிடிக்கற சமாச்சாரம் இல்லை. அதுக்கும் மேல...
 ஏதோ ஒண்ணு. எப்படிச் சொல்றதுன்னு தெரியலைம்மா. அயல்நாட்டுப் பொண்ணுங்களை பார்த்துக்கிட்டே யிருக்கறதாலோ என்னவோ அந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவா என் மனசுல இருக்கு. உணர முடியுது. இந்த போட்டோவ்ல பார்த்த எந்த முகத்துலயும் அது தெரியலை."தமயந்தி குழம்பினாள்.
 "நீ சொல்றதை எப்படிப் புரிஞ்சுக்கறதுன்னு எனக்குத் தெரியலைப்பா."
 "அம்மா நீ ஒண்ணு பண்ணேன்."
 "என்ன?"
 "இதே மாதிரி இன்னும் பல பொண்ணுங்களோட போட்டோவையெல்லாம் கலெக்ட் பண்ணு. நான் எதிர்பார்க்கற அந்த உணர்வு எந்த முகத்தை பார்த்தா எனக்கு ஏற்படுதோ அந்த முகத்தை எனக்கு முடிச்சு போட்டுடேன்."
 "அதனால என்னடா? ஆயிரம் பொண்ணு கூட பார்ப்பேன். அதைவிட எனக்கு என்ன வேலை? சல்லடை போட்டு சலிச்சுட மாட்டேன்? ஆமா... எவ்வளவு நாள் இருப்பே? அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்."
 "ஒரே வாரம்... ஒரே வாரம்தான். அப்படி யப்படியே போட்டுட்டு அலறியடிச்சுக்கிட்டு ஓடி வந்தேன்."
 "என்ன ஒரு வாரமா? டேய்... அதுக்குள்ள எப்படிடா?"
 "முடியும்மா. பொண்ணு பாரு. நிச்சயம் பண்ணு. அப்பறம் கல்யாண டேட்ல வந்து தாலி கட்டிடறேன்."
 "அடப்பாவி... கல்யாண பேச்சை எடுத்தாலே தட்டிக் கழிச்சே! இப்ப என்னடான்னா இப்படி அவசரப்படுத்தறே..." செல்லமாக அவன் காதைப் பிடித்துத் திருகினாள்.
 "ஐய்யோ... விடும்மா. நீதானே வந்ததும் என் பேச்சைக் கேட்கணும்னு சொன்னே. உன்பேச்சுப் படிதானே கேட்கறேன்." அம்மாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
 "அம்மா... திருக்குறள் பண்பாட்டு கழகம் வரைக்கும் போய்ட்டு வர்றேன்" எனக் கிளம்பினான்.
 "இரு! திருக்குறள் பண்பாட்டு கழகம்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. போன வாரம் சீதாராமன் சாரைக் கடை வீதியில பார்த்தேன். நீ ஒரு லட்ச ரூபா நிதி கொடுத்திருக்கியாமே."
 "ஆமாம்மா! புதுசா சொந்தமா கழகத்துக்குன்னு தனி கட்டிடம் கட்டப் போறாங்களாம். நிதி கேட்டு லெட்டர் அனுப்பியிருந்தார். அதான் ஒரு லட்ச ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தேன்.""என்கிட்ட கூட சொல்லலையே!"
 "சாரிம்மா. வேலை பளுதான் காரணம்."
 "இதப்பார் சந்தனு... ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடணும்."
 "இதென்னம்மா பழமொழி. எந்த காலத்துல ஆத்துல பணத்தையோ பொருளையோ மனுஷன் போடுவான்? இதெல்லாம் சரியா புரிஞ்சுக்காம உபயோகிக்கற பழமொழி."
 "என்ன புரிஞ்சுக்கலை?"
 "இந்த பழமொழியோட அர்த்தம் என்ன தெரியுமா? ஆத்துல வெள்ளம் வரும் போது அதை தடுக்க ஒரே அளவான மணல் மூட்டைகளை போடுவாங்க. ஒரே அளவான மூட்டைகளை அடுக்கினதான் இடைவெளி இல்லாம தண்ணி வர்றது நிக்கும்னு. ஆத்துல அளவான மூட்டைகளை போடுங்கறதுதான் இப்படி மாறிடுச்சு."
 "டி.வி.யில புஷ்பவனம் குப்புசாமியோட பழமொழிக் கதைகளைப் பார்ப்பியா? பேச்சை மாத்தாதே. இவ்வளவு பணம் கொடுக்கணுமா?"
 "அம்மா... அமெரிக்கால இருந்தாலும் மனசெல்லாம் இங்கதான் இருக்கு. திருக்குறள் பண்பாட்டு கழகம் மூலமா இப்ப ரொம்ப நல்லது பண்றாங்க. நிறைய சமூக சேவை பண்றாங்க. இந்தியாவோட ஒட்டுமொத்த வறுமையையும் ஒழிக்க முடியாவிட்டாலும் ஓரளவு ஒழிக்க முயற்சி பண்ற இந்த மாதிரியான சேவை அமைப்புகளுக்கு ஏதோ என்னால ஆனா உதவி."
 "ம்... நான் சொன்னா கேட்க மாட்டே. நாளைக்கு பொண்டாட்டி வந்து சொன்னா அஞ்சு பைசாவை கூட அடுத்தவனுக்கு தர மாட்டே பாரு." அம்மா சிரித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224026593
தேடினேன் வந்தது!

Read more from R.Sumathi

Related to தேடினேன் வந்தது!

Related ebooks

Reviews for தேடினேன் வந்தது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தேடினேன் வந்தது! - R.Sumathi

    1

    விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் இரண்டாவது முறையாக சந்தனுவிற்கு படபடப்பாகயிருந்தது.

    எந்தக் கவலையும் இல்லாமல் அமெரிக்காவின் தலைநகரத்தில் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்து பட்டன்களை தட்டிக் கொண்டிருந்த போது வந்த தந்தியின் வாசகங்களினால் உண்டான படபடப்பின் தொடர்ச்சி இந்தியா வந்து இறங்கியும் நிற்கவில்லை.

    மாறாக அதிகரித்தது.

    அனாலும் நிம்மதிப் பெருமூச்சு பிறந்தது.

    வந்து விட்டோம். அம்மாவுக்கு அருகே வந்துவிட்டோம். கடவுளே...உன் பிம்பமானவள் தாய். அந்தத் தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது.

    மனம் அவசர அவசரமாக பிரார்த்தித்தது. அது அவசரப் பிரார்த்தனையாகயிருந்தாலும் ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு சமமாகயிருந்தது.

    அவசரமாக டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டான். அமர்ந்தான். அட்ரஸ் சொன்னான். கார் நகர ஆரம்பித்ததும் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

    கண்ணுக்குள் அம்மாவின் முகம் உதயமானது அமைதியான அந்த முகமும் கனிவு தேக்கிய விழிகளும் இதயப் படபடப்பைக் கூட்டின.

    ‘அம்மாவுக்கு சீரியஸ், உடனே புறப்பட்டு வரவும். படபடப்பை உண்டாக்கிய இந்த வாசகம் மறுபடி மறுபடி மனதில் தோன்றி பயத்தை நெஞ்சு முழுவதும் புகை போல் பரப்பியது.

    அம்மா!

    இப்பொழுதுதான் சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள். அதற்குள் எந்தப் பிரச்சினையும் அந்த சிரிப்பிற்குத் தடையாகி விடாக்கூடாது. அப்பாவை பறி கொடுத்து விட்டு அவள் சோகத்தை மட்டுமே சுமந்து கொண்டாள்.

    இந்தக் கம்ப்யூட்டர் அறிவு, அமெரிக்க வாழ்க்கை கைநிறைய சம்பளம்...

    எல்லாவற்றிற்கும் பின்னே நிற்பது அம்மாவின் உழைப்பு சேமிப்பு, தியாகம்!

    எல்லாவற்றிற்கும் மேல் அவளுடைய கனவு!

    உயர்த்திப் பார்க்க வேண்டுமென்ற கனவு. சாதித்து விட்டாள். மகனையும் சாதிக்க வைத்தாள்.

    அவனுக்கும் கனவு இருக்கிறது.

    உயர்த்திப் பார்த்த அம்மாவை உற்சாகப்படுத்திப் பார்க்க வேண்டும். உள்ளம் உருக சந்தோஷப்படுத்திப் பார்க்க வேண்டும். மகனுக்காகவே வாழும் அந்த மாதாவை மகாராணியாக வைத்திருக்க வேண்டும்.

    கடவுளே என்னுடைய கனவுக் கோட்டைகள் சரிந்திடா வண்ணம் நீயே காக்கவேண்டும். சினிமாக்களில் வருவதைப் போல் ‘உன்னை பார்க்கணும் போலிருந்தது அதனால்தான் சும்மா அப்படி ஒரு தந்தியடிச்சேன்’ என அழகாக சிரிக்க வேண்டும்.

    சிரிப்பாளா?

    வீட்டு வாசலில் காரை நிறுத்தி இந்த வீடு தானே? என டிரைவர் கேட்டதும்தான் சுயஉணர்வு வந்தது. அவசரமாக இறங்கி பணத்தைக் கொடுத்து மீதியை வாங்கிக் கொள்ள மறந்து உள்ளே ஓடினான். கதவு திறந்தது.

    ‘என்ன ஆச்சரியம்?’

    கற்பனை நிஜமானதைப் போல் அம்மா தமயந்தி சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    கண்களை பலமுறை சிமிட்டினான். நம்ப முடியாமல்தான் இருந்தது. ஆனால் நம்ப வேண்டியிருந்தது.

    அம்மா ஐந்து வயது குறைந்ததைப் போலிருந்தாள். அழகாக கொண்டை போட்டுப் பளிச்சென புத்தம் புது புடவையில் நின்றிருந்தாள்.

    அம்மா... ஆச்சரியத்தால் வாய் பிளந்து மகனைப் பார்த்து சிரித்தாள்.

    வாப்பா...

    அம்மா... என்னம்மா இது? சீரியஸ்னு தந்தியடிச்சுட்டு இப்படி நிக்கறே... ஏம்மா... ஏம்மா இப்படிப் பண்ணினே?

    உன்னை வரவழைக்கத்தான்.

    கையிலிருந்த சூட்கேஸை சோபாவின் மீது விட்டெறிந்தான்.

    அம்மா... அதுக்காக இப்படியா? நான் எப்படி பயந்து போய்ட்டேன் தெரியுமா? பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்திருக்கேன்.

    எனக்கு வேற வழி தெரியலைப்பா. நீ போய் ரெண்டு வருஷம் ஆகுது. பார்க்கணும்னு ஆசையாயிருக்கு வான்னா, லீவு இல்லை நேரம் இல்லை அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்றே. அதான் உன்னை வரவழைச்சேன்.

    நல்லாயிருக்கும்மா! ரொம்ப நல்லாயிருக்கு.

    இந்த தடவை பொய்யா தந்தியடிச்சேன். என் பேச்சை நீ கேட்காட்டா அடுத்த முறை உண்மையாவே தந்தியடிக்க வேண்டி வரும்.

    என்ன... என்ன உன் பேச்சை நான் கேட்கலை?...

    இதுவரை நான் கிழிச்ச கோட்டை நீ தாண்டாமத்தான் இருந்திருக்கே. ஒத்துக்கறேன். இனிமேலும் அப்படியே இருக்கணும். என் பேச்சைக் கேட்கணும். நான் சொல்றபடி கேட்கணும்.

    என்ன கேட்கணும் சொல்லு?

    சொல்றேன், முதல்ல போய் குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் பேசுவோம்.

    குளித்து விட்டு சாப்பிட வந்த போது தமயந்தி வகைவகையாக சமைத்து மேஜை முழுவதும் பரப்பி வைத்திருந்தாள்.

    பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.

    சந்தனுவிற்கு கண்கள் கலங்கி விட்டன. பாசத்துடன் அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

    அம்மா நினைச்சுக் கூட பார்க்கலைம்மா, இப்படி உன் கையால வகை வகையா சாப்பிடுவேன்னு. நீ எந்த ஹாஸ்பிடல்ல எந்த நிலைமையில கிடக்கறியோன்னு ஓடி வந்தேன்.

    அவனுடைய தலையை அன்புடன் கோதினாள் தமயந்தி.

    சந்தனு... உன் அம்மா அதுக்குள்ளே செத்துட மாட்டா. என் பேரன்பேத்திகளுக்கு கல்யாணம் செய்து வச்சு அதுங்களோட குழந்தையை எடுத்து கொஞ்சிட்டுத்தான் சாவேன்...

    அம்மா...சுத்தி வளைச்சு கல்யாண பேச்சை எடுக்கறியா? புடலங்காய் கூட்டை ருசித்தவாறே சிரித்தான் சந்தனு.

    புரிஞ்சுக்கிட்டா சரிதான். கல்யாணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் என்ன அவசரம் என்ன அவசரம்னு அலட்சியப் படுத்தினியே! அதனாலதான் நேர்ல வரவழைச்சேன். உனக்காக நிறையப் பொண்ணுங்களைப் பார்த்து வச்சிருக்கேன்.

    நிறையவா? ஐய்யோ... நான் என்ன கோகுல கண்ணனா? கோபிகை கூட்டத்தோடு சுத்த...?

    அடிவாங்கப் போறே! அதுல ஒரு பொண்ணை நீ செலக்ட் பண்ணணும்.

    அதையும் நீயே செலக்ட் பண்ணியிருக்கலாமே!

    Enjoying the preview?
    Page 1 of 1