Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maayaman
Maayaman
Maayaman
Ebook213 pages1 hour

Maayaman

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகனான மணி எந்தவித இலக்குமின்றி சுமைதாங்கியில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பான். தன் பாட்டன், முப்பாட்டன் பட்ட கடனை விவசாயம் செய்து அடைத்துக் கொண்டிருக்கின்றான். மேலும் தன் தாயின் உடல்நிலைக்காகவும், தங்கையின் படிப்பிற்காகவும் கஷ்டப்படுகின்றான். ஒரு நாள் சிந்து என்ற பெண்ணை பார்க்கின்றான். அவளால் மணிக்கு நேர்ந்தது என்ன? வாருங்கள் காண்போம்…!

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580169210612
Maayaman

Read more from K.G. Jawahar

Related to Maayaman

Related ebooks

Reviews for Maayaman

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maayaman - K.G. Jawahar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயமான்

    (20 கதைகள் சிறுகதைத் தொகுப்பு)

    Maayaman

    Author:

    கே.ஜி. ஜவஹர்

    K.G. Jawahar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kg-jawahar

    பொருளடக்கம்

    1. மாயமான்

    2. அம்மா விருந்து

    3. புலிப்பால்

    4. வேர்கள் விழுதுகளாகும்

    5. விஷமற்ற உறவுகள்

    6. கொடியில்...

    7. வேறுபாடு

    8. நினைப்பு

    9. வழுக்கு மரம்

    10. எட்டாத உயரம்

    11. ஜானகிக்கு கல்யாணம்

    12. புஷ்பா எனக்கொரு போதிமரம்

    13. ஒரு பயணத்தின் ஆரம்பம்!

    14. வானாகி, மண்ணாகி, வளியாகி, பெண்ணாகி...!

    15. மாதா கோவில் மணியோசை

    16. மன்னித்து விடு மல்லிகா

    17. மண்ணில் விளைந்த உறவுகள்...

    18. லட்டு மணம்

    19. உள்ளத்தில் ஒளிந்து கொண்டாய்...

    20 செவ்வாய் தோஷம்

    1. மாயமான்

    எந்தவித இலக்கும் இன்றி சுமைதாங்கியில் உட்கார்ந்திருந்தான் மணி. சுமைதாங்கி... சுமைகளைத் தாங்கும் கல்லாம்! அந்தக் காலத்தில் இது எத்தனை பேர் சுமைகளைத் தாங்கியதோ? புளியமரமும், காட்டு மரமும் வழி நெடுகப் பரவிக் கிடந்த இந்த நெடுஞ்சாலையில் எல்லா பயணிகளும், வழிப்போக்கர்களும் தங்களின் தோள் சுமைகளுடன், மனச் சுமைகளையும் தாங்கத் தெரிந்திருந்தால், வாழ்க்கையே இன்பமயமாகப் போயிருக்கும் என்று மணி நினைத்துக் கொண்டான்.

    இந்த நவீன யுகத்தில் இந்தச் சுமைதாங்கிக்கு வேலையில்லாமல் போய்விட்டது! மக்கள் நடப்பதை, மறந்து விட்டனர். சுமைகள், அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது! பேருந்துகளும், கார்களும், லாரிகளும், மின்னல் வேக ரயில்களும் எல்லாமுமாய்ச் சேர்ந்து இந்தச் சுமைதாங்கியைச் சரித்திரச் சின்னமாக மாற்றிவிட்டன. சாயங்கால வேளைகளில் ஆடு மேய்க்கும் கிராமத்துப் பையன்கள் உட்காருவதற்கும், வீட்டுக்குப் பயந்து திருட்டுத்தனமாக கட்டை பீடி குடிக்கும் விடலை பசங்களுக்கும், சில ஆடுகள் முதுகைச் சொறிவதற்குமே இந்தச் சுமைதாங்கி பயன்பட்டு வருகிறது. அல்லது பிரச்சனைகள் மனதிற்குள் முட்டி மோதும் போது, இந்தச் சுமைதாங்கியில் மண்டையை முட்டிச் சாகலாமே, என்று நினைக்கும் மணி போன்ற நபர்களுக்கும் இது ஒரு ஆறுதல் கல்!

    ஆம்... மணியும், அடிக்கடி இந்தச் சுமைதாங்கிக் கல்லில் வந்து உட்கார்ந்து விடுவான்! பாட்டான், முப்பாட்டன் பட்ட கடனுக்காக, இவன் இன்னும் வயலில் பாடுபட்டுக் கிடைக்கும் கூலியைக் கடனாக அடைத்து வருகிறான்! வீட்டின் தரித்திரம், நிரந்தர தரித்திரம் என்ற நிலையாகி விட்டது! இவனை ஓத்த பசங்கள் வயலை மறந்து விட்டு, பட்டணம் போய் பைசா பார்க்கத் துவங்கியாகி விட்டது. ஆனால் மணிக்கு விடிவு பிறக்கவில்லை. வயதான தாயாருக்கும், சின்னத் தங்கைக்கும, அழகுபுரி கிராமத்தை விட்டுவிட்டு வர பிடிக்கவில்லை. இவன் சம்பாதிக்கப் போய்விட்டால், இவர்களைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை! தினம் தினம் பிரச்சனை.

    இப்போதெல்லாம் அம்மாவுக்கு, நாட்டு மருந்து கேட்பதில்லை. வைத்தியர் சூரணம் பெப்பே காட்டி விடுகிறது. டவுன் டாக்டர் நச்சென்று இஞ்செக்ஷன் போட்டு, கலர் கலராய் நாலு மாத்திரைகளைக் கொடுத்தால்தான், பட்டென்று போகிறது உபாதை. என்ன செய்ய? செலவு, செலவு. நம்மால்தான் படிக்க முடியாமல் போய்விட்டது... தங்கச்சியாவது படிக்கட்டும், என்று உதிரம் சிந்தி, காசுசேர்த்து படிக்க வைத்தால், கட்டுக் காட்டாய்ப் புத்தகங்கள், நோட்டுக்கள், யூனிபார்ம் செலவு... ஸ்கூலில் நாடகம் போட்டால், டிரஸ் செலவு... கடவுளே... கடவுளே...

    காலையில் ஓடி வந்து சுமைதாங்கியில் உட்கார்ந்து கொள்வான்.

    இன்றும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தான்... அம்மாவின் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தியச் செலவுக்கு பணம் ஆயிரம் வேண்டும். வளர்ந்து விட்ட தங்கச்சிக்கு சரியான உடை இல்லை. நேற்று சாயங்காலம் ஸ்கூல் விட்டு வரும்போது ஒரு பயல் சைக்கிளில் வந்து, பாப்பா... சட்டை, முன்னாடி பிச்சுக்கப் போவுது... பார்த்து... என்று சொல்லி விட்டு சிட்டாய்ப் பறந்து விட்டானாம். சொல்லிவிட்டு அழுதாள். பெண்ணுக்கு உடை முக்கியம். மிக முக்கியம். ஆணுக்கு உடை கிழிந்தால் அது சாதாரண விஷயம். எவனும் கண்டு கொள்வதில்லை. பெண்ணின் உடை கிழிந்திருந்தால், அவள் இடையை அல்லவா கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள்... ச்சே, அம்மாவின் மருந்து செலவை விட, தங்கச்சியின் உடைச் செலவு அவனுக்கு இப்போது முக்கியமாகப்பட்டது. ஒரு செட் துணி எடுக்க எட்டு நூறு ஆகும்... என்ன செய்ய...

    கிறீச் மணியின் யோசனையை கலைத்தது மாடசாமிதான். கரகரவென்று ரயில்வே கேட்டை இழுத்து மூடினான். அப்போது ரயில் வரும் அந்த ரயில்வே கேட் காலை ஒருமுறை, இரவு ஒருமுறை நியதியாக கேட் மூடப்படும். சில சமயங்களில் கூட்ஸ் வண்டிக்காக மூடப்படுவது உண்டு. மாடசாமி கேட்டை மூடிவிட்டு, லைன் ஓரமாகவே நடந்து சென்றான். போகும் போது இவனைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனான். அவன் பேசாத நண்பன். இயந்திரமாய் இருப்பான். இறுக்கமான முகம். ஆனால் கனிவு, எப்பவாவது மணியிடம் பேசுவான். ஆனால், அவன் அரசாங்க உத்தியோகத்தில், வரும் சொற்ப வருமானத்தில் செட்டும், சிக்கனமுமாய் இருப்பதாக மணிக்குப் புரிந்தது.

    சுமைதாங்கியில் உட்கார்ந்திருந்த மணி திடுக்கிட்டு சுதாரித்தான். வெள்ளைத் திமிங்கிலம் மாதிரி ஒரு கார் வந்து நின்றது. இதுவரை அவன் பார்த்திராத கார். ரயில்வே கேட் மூடப்பட்டுவிட்டதால், அந்தத் திமிங்கிலத்தின் துடுப்புகள் அறுபட்ட மாதிரி நச் சென்று நின்றது. லேசான குலுக்கல். அதிலும் எத்தனை நளினம்! கார் நின்ற சில வினாடிகளில் அதன் கறுப்புக் கண்ணாடி சரசரவென்று கீழே இறங்க, மணி விதிர்த்தான். உள்ளே ஒரு வெள்ளை நிலா - இல்லை, முகம்.

    மணியின் வியப்பு இப்போது பல மடங்காயிற்று. காரணம் உள்ளே இருந்த நிலா முகத்தின் சொந்தக்காரி கடவுளே இவள்... இவள்... சிந்து அல்லவா...! ஆம். நடிகை, வெண்திரையின் விலை மதிப்பற்ற நட்சத்திரம் சிந்து அல்லவா... அவன் கண்களை நம்பவே முடியவில்லை... தொப்பென்று குதித்தான்.

    காரின் கதவு டக் கென்று திறந்தது. சிந்து தேவதையைப் போல இறங்கினாள். முதலில் கால். அது ஒரு சந்தன விலாங்கு போல் இருந்தது. வெள்ளையான, பளபளப்பான ஒரு கட் ஷூ. மெல்லிய வெள்ளிச் சங்கிலி. அவன் வியப்பாகப் பார்த்தான். இப்போது அந்த அவள் வெளியே வந்து நின்றாள். சினிமாவில் பார்க்கும் போலி அழகு இல்லாமல், இயற்கையாக ஒரு அழகின் சாயல் அவளிடம், வட்டமான முகம், நீண்ட கழுத்து, சிலுசிலுக்கும் முடி... அதைக் கோதி விடும் மெல்லிய மிக மெல்லிய விரல்கள்... உச்சி முதல் பாதம் வரை இளமை... இளமை...

    மணிக்கு ஒரு வினாடி அம்மாவின் உடல் நிலையும், தங்கையின் நிலையும் மறந்து போய்விட, மெல்ல சிந்து அருகில் சென்றான். மெல்லிய சுகந்தமான மணம் நாசியை வருட, அவன் ஒரு கணம் கிறங்கிப் போய்விட்டான்.

    நீங்க... நடிகை... சிந்துவா... தயக்கமாய் மிகத் தயக்கமாய் கேட்டான்.

    சிந்து அவனைப் பார்த்தாள். கள்ளங்கபடமற்ற கிராமத்து முகம். சுருட்டை முடி. வெறும் வேஷ்டி, பனியன் மட்டுமே அணிந்த திரட்சியான மார்பும், தோளும், கருகருவென்று பளபளத்த மேனியும்...

    ஆமாம்... சிந்து மெல்லியதாய்ச் சிரித்தாள். அவன் கண்களையே ஊடுருவினாள்... ஆட்டோகிராப் வேணுமா?

    அப்படின்னா?

    அவளுக்குச் சிரிப்பு வந்தது. கிராமத்து மணம் அவனருகே, அவன் முகத்திலேயே அழகாகத் தவழ்ந்து கொண்டிருந்தது.

    உன் பெயர் என்ன?

    மணி!

    என்ன பண்றே?

    விவசாயம்...

    என் படம் எல்லாம் பாப்பியா?

    பார்ப்பேன். எப்பவாவது...?

    ஏன் அடிக்கடி பார்க்க மாட்டியா?

    பார்க்க ஆசை. ஆனா காசு இல்ல, சினிமா பார்க்கிறத விட முக்கியமான வேலை எனக்கு இருக்கு!

    என்ன வேலை?

    அம்மாவ பார்த்துக்கிறது. தங்கச்சியை படிக்க வைக்கிறது.

    வருமானம் எவ்வளவு?

    வருமானம்னு பார்த்தா சில மரக்கா நெல்லும்... கொஞ்சம் கூலியும்தான்... கஷ்ட ஜீவனம்...

    சிந்துவுக்கு அவனிடம் பேசிக் கொண்டிருப்பதில் ஆனந்தம் இருந்தது. நடிகை, நடிகைன்னு பறக்காத, ஜொள்ளுவிடாத, கிள்ளிப் பார்க்க ஆசைப்படாத, இந்த இளம் கிராமத்துக்காரனிடம் அவள் பேச நிறையவே ஆசைப்பட்டாள்.

    நான் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன். மூணு மாசம் நாலாட்டின்புத்தூர்ல படப்பிடிப்பு... எனக்கு இந்தக் கிராமத்துச் சூழ்நிலை ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்பப்பா... எங்கும் பச்சைப் பசேல்... மணி... நீ கொடுத்து வச்சவன்...

    மணிக்கு அவன் நிலையை நம்பவே முடியவிலலை. சிந்து அவனிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பதை கனவு மாதிரி நினைத்தான். ஆனால், அத்தனையும் சத்தியம். டிரெயின் சீக்கிரம் வந்து தொலைந்து விடக்கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டான்.

    மணி... நான்தான் பேசிகிட்டு இருக்கேன். நீ ஒன்றுமே பேசல...?

    என்ன பேசறதுன்னு தெரியல...

    ஏதாவது பேசு. வீட்டு விஷயம் பேசு. உன் பிரச்சனை பற்றி பேசு... ஆடு மாடு பற்றி பேசு... கிராமத்து வழக்கங்கள் பற்றி பேசு. தெம்மாங்கு பற்றி பேசு... அவள் ஸ்டைலாக கை கட்டி, கார் மேல் சாய்ந்து இனிமையாகச் சொன்னாள்.

    அந்த இனிமையும், புன்னகையும், கனிவும்... அவனை அப்படியே சுண்டியிழுத்தன. அவள், ஒரு பொழுதுபோக்கிற்காக அவனிடம் அவன் கதையைக் கேட்டாலும், அவன் மனப்பூர்வமாக அவளிடம் தன் சிரமங்கள், கஷ்ட ஜீவனம், கடன், அது இது என்று சொல்ல... அவனின் திறந்த மனம் அவளுக்கு நிரம்பவே பிடித்துப் போயிற்று...

    மணி... நீ எங்கூட ஷூட்டிங்க பார்க்க வர்றியா...

    வேல இருக்கு. அம்மாவ டவுன் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகணும்... தங்கச்சிக்கு டிரஸ் எடுக்கணும். அதுக்கெல்லாம் ரூபா இல்லன்னுதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... நான் பெறகு வரேன்...

    இல்ல நீ வரணும்... டிரைவர்...!

    வெள்ளை உடையில் வந்த டிரைவர் காரை விட்டிறங்கினான்.

    என்னம்மா...

    பர்ஸ் எடு...

    அவன் காரைத் திறந்து குனிந்து ஒரு பர்ஸை எடுத்தான். கறுப்பு முயல் குட்டி மாதிரி இருந்தது. அவள் அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் கட்டை எடுத்தாள்! அவனிடம் நீட்டினாள். மணி ஒரு கணம் ஆடிப் போய்விட்டான். தலை சுற்றியது.

    ஐயையோ... இதென்னங்க வேணாம்...

    ச்சு... மணி. என்னத் தப்பா எடுத்துக்காதே. இது அன்பளிப்பு இல்லை. சம்பள அட்வான்ஸ்...

    அம்மா... இதென்ன...

    ச்சே, அம்மான்னு கூப்பிடாதே. எனக்கு வயசாகல... மிஸ்னு கூப்பிடு...

    மிஸ்சு... பணம் வேண்டாம்...

    மிஸ்சு இல்ல... மிஸ்...! நான் சொன்னேனில்ல, இது சம்பள அட்வான்ஸ் மணி!

    சம்பளமா...

    ஆமா, உனக்கு மூணு மாசம் வேறெங்கயும் வேலை கிடையாது. நீ எங்ககூட இருக்கறே... எனக்கு உதவியா... என் கூட பேசிக்கிட்டு... சிரிச்சுக்கிட்டு... எனது மேக்கப் செட் பெட்டிய பத்திரமா வைச்சுக்கறே... எனக்கு டச்சப் பண்றே...

    அதெல்லாம் எனக்கு தெரியாது மிஸ்.

    அது ஒன்றும் பெரிய விஷயமில்ல. எனக்கு வழக்கமா ஒரு பொண்ணு உதவிக்கு இருக்கும் அதுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. நீ இருக்கிறது நல்லதாப் போச்சு... என்னோட வந்திடு... சரியா...

    மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே நிமிடத்தில் தன் நிலைமை மாறி, நிலையும் மாறி, வானத்தில் ஜிவ் வென்று எவ்வி விட்டதாக நினைத்தான்.

    அந்தச் சமயத்தில் ரயில் அசுர வேகத்தில் கடந்து போயிற்று. சிந்தூ, சிந்தூ என்று சில ஆச்சரியக் கூவல்களும் கேட்டு தேய்ந்து மறைந்து போயின...

    டிரைவர் என்ன லொகேஷன்ல விட்டுட்டு, காரை எடுத்துட்டு மணிய கூட்டிட்டுப் போ, அவனுக்கு வேண்டியத பண்ணிக்கொடு...

    சரிம்மா...

    மணி... நீ வெய்ட் பண்ணு... சரியா...? உன்னோட வேலைகளை முடிச்சிட்டு, கார்லயே லொகேஷனுக்கு வந்துடறே... பணம் பத்திரம்...

    மணி பணத்தை நம்ப முடியாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட போது, கார் விருட்டென்று கிளம்பி, புழுதி கிளப்பி, மின்னலாய் மறைந்து போயிற்று.

    ***

    இரண்டே நாளில் மணி ஆளே மாறிப் போனான். தலைமுடி நன்றாக வாரப்பட்டு, வெள்ளை ஸ்லாக், வெள்ளை பேண்ட், தோளில் ஒரு டர்க்கி டவல்... என்று அவனையே அவனால் நம்ப முடியவில்லை. வேலை மிக எளிதான வேலைதான். நாற்றுகளிலும், சகதி சேறுகளிலும் லாவகமாக நடனமாடிய முரட்டு விரல்கள் அவனுக்கு... இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1