Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Neela Devathai!
Oru Neela Devathai!
Oru Neela Devathai!
Ebook122 pages43 minutes

Oru Neela Devathai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில வருடங்களுக்கு முன் BLUE WHALE என்ற ஆன்லைன் விளையாட்டு உலகையே உலுக்கியது. இதில் இருந்து வெளியே வர முடியாமல் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின, இளைஞர்கள் சிறுவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள். அதை மையமாக வைத்து மிக எளிமையான நடையில் எழுதப்பட்ட நாவல். மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580169210143
Oru Neela Devathai!

Read more from K.G. Jawahar

Related to Oru Neela Devathai!

Related ebooks

Related categories

Reviews for Oru Neela Devathai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Neela Devathai! - K.G. Jawahar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு நீல தேவதை!

    Oru Neela Devathai!

    Author:

    கே.ஜி. ஜவஹர்

    K.G. Jawahar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kg-jawahar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    செண்பகாவைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்.

    மிகப் பெரிய கோடீஸ்வரன் காந்தனின் அன்பு மகள். அழகேஸ்வரி. உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டால் முதல் பரிசு செண்பகாவிற்கே!

    ஷோகேஸில் உள்ள பொம்மைகளும் மாலில் உள்ள பர்பிக்யூக்களும் திரும்பிப் பார்க்கும் இவள் அவைகளைக் கடந்து சென்றால்!

    கம்பெனியின் அனைத்து விஷயங்களையும் தன் உள்ளங்கையில் வைத்திருப்பவள். பிஸினஸ் விஷயமாக அடிக்கடி பறப்பவள். உலகெங்கும் அவள் அப்பாவைப் போல.

    சந்தோஷ்தான் அவள் அன்புக் காதலன். டெல்லியில் நடைபெற்ற ஒரு கான்ஃபரன்ஸில் செண்பகாவைச் சந்தித்ததில் இருந்து அவனுடைய இதயம் மைனஸ் ஆகி செண்பகாவின் இதயத்தில் நுழைந்து கொண்டது. பிறகு அந்த இதயத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள அதில் செண்பகாவின் இதயம் இருந்தது!

    செண்பகாவின் பிரஸண்டேஷன் அற்புதமாக இருந்தது. உலகமயமாதல், குளோபல் வாமிங், வடகொரிய மிரட்டல், டிரம்பின் பாலிஸி என்று சகலத்திலும் அவள் ஜீனியஸாக இருந்தாள்! ஒரு மணி நேரம் கூட பொலிட் ஆக விவாதிப்பாள். அரங்கமே கட்டுண்டு போகும்...!

    வந்தால் இப்படிப்பட்ட ஜீனியஸ்தான் வர வேண்டும் என்று நினைத்த சந்தோஷ் அவளை தன் மனதால் என்றோ வசீகரித்துக் கொண்டான்.

    இப்படிப்பட்ட அழகி ஒரு மிகப் பெரிய ஆபத்தில் சிக்கப் போகிறாள் என்று அவனுக்கு அப்போது தெரியாது...!

    செல் ஒலித்தது. செண்பகா எடுத்தாள்.

    அப்போது அவள் ஒரு மாலில் சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தாள்...

    அப்பா... என்றாள்.

    செண்பகா... உனக்காக ஒரு அழகான பிரஸண்ட் வாங்கியிருக்கேன்... விலை நாலு லட்சம்...

    ஓ மை காட்! அப்பா... என்ன சொல்றீங்க? வைரமா?

    இல்லை செண்பகா... அது ஒரு செல்... ஆண்ட்ராய்ட்...! பார்த்தேன்னா விடமாட்டே!

    அவள் விரைந்து சென்றாள். மிகப் பெரிய குழிக்குள் விழப்போவது தெரியாமல்...

    2

    சரளின் கண்கள் மிக அகலமாக விரிந்தன. அந்த பிரமாண்டமான பங்களாவைப் பார்த்து, இப்படி ஒரு பிரமாண்டத்தை அவள் பார்த்ததே இல்லை. ஒரு வேளை ‘தோட்டா தரணி’ போட்ட செட்டாக இருக்குமோ என்றுகூட யோசித்தாள்! தனக்குள் சிரித்துக் கொண்டாள். ‘இனிமேல் இந்த மாபெரும் மாளிகையில் உலாவரப் போகும் மகாராணி நான்தான்’ என்று மார் தட்டினாள்- அந்த அழகுச் சிலை! ‘வரட்டும் அவள்!’ என்று மனது கறுவியது. அவள் கறுவியது ‘செண்பகா’வை!

    செல் ஒலித்தது. எடுத்தாள்.

    எதிர்முனையில் வந்தது காந்தனின் kaன கம்பீரக்குரல், வந்துட்டியாம்மா...

    வந்துட்டேன் அங்கிள்.

    ஏய்... மறந்துடறியே... ‘அப்பா’...

    ஓ ஐயாம் ஸாரி அங்கிள்... ச்சே... அப்பா...

    ம்... எச்சரிக்கை... கொஞ்ச நேரத்துல அவ வந்துடுவா...

    சரிப்பா...

    சொல்ல மறந்துட்டேன்... ராமு இருக்கானா?

    ராமுவா... யாரு...?

    அடச்சே... ராமு தோட்டக்காரன்னு சொல்லியிருக்கேன்ல...

    ஓ... ஸாரிப்பா... ராமுவ காணோம்.

    "போர்டிகோ பக்கத்துல ஜிம்மி இருக்கா பாரு... ஜிம்மி யாருன்னு கேட்டுத் தொலைக்காதே! செண்பகாவின் செல்லம் அது...! என்னையே சிலசமயம் முறைக்கும்.

    சரள் ஓடிச்சென்று பார்த்தாள். ஜிம்மியை காணோம். இல்லப்பா...

    அப்ப ராமு அத வாக்கிங் கூட்டிட்டுப் போயிருப்பான்... நல்லதாப் போச்சு... நீ ஹாலுக்கு போ... இடது புறம் ஒரு அறைவாசல்ல ‘ஷாருக்கான்’ படம் இருக்கா...?

    இருக்கு!

    அதுதான் செண்பகாவின் அறை, அவள் அவனின் ஃபேன்! நீ போய் நான் சொல்றது மாதிரி செய்... சாவி இருக்குல்ல...? அதான் நான் தந்த டூப்ளிகேட்?

    இருக்கு!

    அத வைச்சு அறையைத் திற...!

    கடக் கிளிக்.

    திறந்தேன்...

    வலது மூலையில் ஒரு பெரிய டேபிள் இருக்கா...

    இருக்கு...

    டிராயரைத் திறந்து, நீ உன் ஹேண்ட் பேக்ல வைச்சிருக்கிற ரிவால்வரை எடுத்து அந்த டிராயரில் வை!

    வைச்சாச்சு...

    குட் வெளியே வந்து கதவைப் பூட்டிட்டு, முகத்த அப்பாவியா வைச்சுகிட்டு ஹால்ல உள்ள ஊஞ்சலில் உட்காரு...

    ஆஹா... அழகான ஊஞ்சல்... உட்கார்ந்து ஆடுனாலே எம்.எல்.ஏ. ஆன மாதிரி இருக்கு! அவ்வளவு ஆனந்தம்! பை த பை, ஊஞ்சல் கம்பி பித்தளையா தங்கமா... இப்படி மின்னுது?

    வெளயாட்டு இருக்கட்டும்... எச்சரிக்கையாகவும் இரு...! நாம இறங்கியிருக்கிறது மல்டிக்ரோர் புராஜெக்ட்... அண்டர் ஸ்டாண்ட்?

    அண்டர்ஸ்டுட்! கட் பண்ணினாள்.

    திடீர் என எங்கோ ஃபோன் ஒலித்தது!

    அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எந்த இடத்தில் இருந்து ஒலிக்கிறது என்று அந்த பிரமாண்டமான பங்களாவில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் காலத்திலும் எவனோ ஒரு மடையன் லேண்ட்லைன்ல கூப்பிடறானே என்று நினைத்தவள், ஊஞ்சலை விட்டுக் குதித்தாள். மெள்ள நடந்து வாசல் பக்கம் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணோம். திரும்பிப் பார்த்தபோது கிறீச் கிறீச் என்று ஊஞ்சல் இன்னும் ஆடிக்கொண்டு இருந்தது. ஏதோ ‘ஆவி’ ஆட்டிவிடுகிற மாதிரி இருந்தது!

    ஃபோன் விடாப்பிடியாக ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. அவள் அவசரமாக பதட்டமாக காந்தனை அழைத்தாள்.

    எரிச்சலுடன் லைனில் வந்தார் அவர்.

    மீட்டிங்க்ல இருக்கேன்... இப்படி திடுதிப் என்று ஃபோன் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல...

    "அப்பா ஒரு போன் ஒலிச்சுக்கிட்டே இருக்கு... வீட்ல யாரும்

    Enjoying the preview?
    Page 1 of 1