Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandu Manam Vendum!
Irandu Manam Vendum!
Irandu Manam Vendum!
Ebook138 pages49 minutes

Irandu Manam Vendum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த கனகா, தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்பட்டாள். அப்பாவின் கம்பெனி பணம், அம்மாவின் சேமிப்பு பணம் என்று சமாளித்து வரும்போதுதான் வினோதினியை சந்திக்க நேரிட்டது. இவள் யார்? எதற்காக கனகாவை சந்தித்தாள்? இவளால் கனகாவிற்கு நேரிட்டது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580169210613
Irandu Manam Vendum!

Read more from K.G. Jawahar

Related to Irandu Manam Vendum!

Related ebooks

Reviews for Irandu Manam Vendum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandu Manam Vendum! - K.G. Jawahar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரண்டு மனம் வேண்டும்!

    Irandu Manam Vendum!

    Author:

    கே.ஜி. ஜவஹர்

    K.G. Jawahar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kg-jawahar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ‘கடல் அலைகளை எண்ணினாலும் எண்ணிவிடலாம்.

    ஒரு கன்னிப் பெண்ணின் மனதில் எழும் காதல் அலைகளை எண்ணிவிட முடியாது!

    விவேக் சொன்னதை நினைத்துக் கொண்டாள் வினோதினி. சரியாகத்தான் சொல்லியிருக்கிறான்.

    இல்லாவிட்டால், வளைக்குள்ளிருந்து வெளியே வருவதும் பக்கவாட்டிலேயே வேகமாக ஓடி மறைவதுமான நண்டுபோலிருக்குமா நினைவுகள்!

    ‘காதல்’ என்பது வள்ளுவன் சொன்னதுபோல் மிகவும் வித்தியாசமான உணர்வுதான். அது வித்தியாசமான நெருப்பும்தான். அவன் நெருங்கி இருந்தால் உடல் குளிர்கிறது. தள்ளி இருந்தால் உடல் சுடுகிறதே!

    விவேக் சீக்கிரம் வா...!

    அக்கா... சுண்டல் வேணுமாக்கா?

    கசங்கிய டிராயரும் கிழிந்த சட்டையுமாய் இருந்த அந்தச் சிறுவன் மண்டியிட்டு அவள் அருகே அமர்ந்தான். அவள் நினைவுகள் சட்டென்று கலைந்தன.

    வினோதினி அவனையே உற்றுப் பார்த்தாள்.

    பின்னொரு நாள் அவள் வாழ்க்கையில் அவன் நுழையப்போகிறான் என்று அறியாதவளாய்.

    அடிக்கடி அவனை பீச்சில் பார்க்கிறவள்தான்.

    இன்று ஏனோ அவனிடம் கொஞ்சம் பேசவேண்டும் போலிருந்தது.

    ஒரே நிகழ்வோ செய்கையோ மனநிலைக்கு ஏற்றவாறு ரசிக்கவோ அல்லது ரசிக்காமல் கடந்து போகவோ செய்து விடுகிறது.

    சாதாரணமாக இருக்கும் பாடல்கள்கூட பயண நேரத்தில் மிக இனிமையாக இருப்பது மாதிரி!

    அந்தச் சுண்டல் சிறுவன் அழகாக சிவப்பாய் இருந்தான். நெற்றியில் விபூதி. முகத்தினில் சிரிப்பு. அழகான பற்கள். இன்னும் முழுமையாக உடையாத குரல்.

    சொல்லுங்க அக்கா. என்றவாறே அவளை அண்ணாந்து பார்த்தான். இறங்கு வெயிலுக்கு கண்களுக்கு கைகளைத் தொப்பியாக்கினான்.

    பேர் என்னடா?

    பாபு...! எவ்வளுக்கா தரட்டும்...? பத்து ரூபாய்க்கா அல்லது இருபது ரூபாய்க்கா?

    இருடா சொல்றேன். கொஞ்சம் பேசேன்டா...

    அக்கா... நிறைய விக்கணும்கா...

    விக்கலாம்டா... என்ன படிக்கிறே?

    எட்டாம் வகுப்புக்கா... அக்கா... அக்கா... எவ்வளவு தரட்டும்கா... அத்தானுக்கும் சேர்த்து தந்திரவாக்கா?

    திடுக்கிட்டாள்.

    என்னடா சொல்றே? அத்தானா?

    சிரித்தான். போங்கக்கா... அடிக்கடி உங்கள பார்க்க வர்றவரு அத்தான் இல்லாம பின்ன யாராம்?

    அடப்பாவி...அவர் என் ஃப்ரெண்ட்ரா!

    எல்லாரும் முதல்ல அப்படித்தாங்கா சொல்வாங்க... எத்தனை பேர பார்க்கிறேன்...!

    நல்லா பேசறேடா...!

    சிரித்தான். கன்னத்தில் அழகான குழி.

    ‘பயலுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வேஷம் போட்டால் அழகா இருப்பான்... இவனுக்குத்தான் பரிசு.!’

    டேய்... சொல்லுறா... கூடப் பிறந்தவங்க எத்தனை பேருடா.?

    ஒரே அக்காதான்.! அக்கா... போகணும் கா...

    மென்மையாய்க் கெஞ்சினான்.

    டேய் போலாம்டா... எவ்வளுடா விற்கும்?

    ஐநூறு ரூபாய்கா.

    நான் தரேன்.

    வேணாம்கா... எனக்கு ஃப்ரெண்சும் வேணும்கா...

    என்னடா சொல்றே?

    உங்களுக்கே எல்லாம் கொடுத்துட்டா மத்தவங்க காத்து இருப்பாங்களே அக்கா.

    அவன் பதிலால் வியந்தாள். ஒரு பைசாவிற்காக அடித்துப் பிடித்து கோர்ட் வரை போய் முட்டாள்தனமாக ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் மனிதர்கள் இருக்கும்போது இவன் நிச்சயம் தங்கம்தான்!

    கடற்காற்றில் சிலுசிலுத்த அவனுடைய தலைமுடியை வருடினாள். பட்டுப் போலிருந்தது.

    அப்ப ஐநூறு வெச்சிக்க... சுண்டல் வேண்டாம்...!

    ஐயோ அக்கா... அது எப்படிக்கா சரியாகும்.? விக்காத சுண்டலுக்கு காசு வாங்கினா பிச்சை எடுக்கிற மாதிரி ஆகிருமேக்கா...!

    அவன் வெள்ளந்திப் பேச்சு அவளை ஓங்கி அறைந்தது.

    டேய் உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியலடா... இந்தா முப்பது ரூபா... அதுக்குக்கொடு...

    அப்படி வாங்க வழிக்கு...

    அவன் வேகமாக பொட்டலங்களை மடித்துக் கட்டிக் கொடுக்கும் நேரம் விவேக் வந்து விட்டான்.

    உண்மையில் அவள் யாரென்று தெரிந்தால் அவன் இப்படி உட்காரக்கூடமாட்டான்!

    ஹாய் விவேக்... வாங்க... ஏன் லேட்...?

    லேட்டாயிருச்சு... என்றான், பாபுவைப் பார்த்தவாறே.

    பேரு பாபு... ரொம்ப நல்லா பேசறான் விவேக்...

    ஆமா... பெரிய ஸ்டாரு இவரு...! அறிமுகப்படுத்தறா... நான் பார்த்துகிட்டேதான் வந்தேன்... என்ன பேச்சு ரொம்ப நேரமா இந்த அன்னக் காவடி பயல்கிட்ட?

    விவேக்கை பார்த்து லேசாக அதிர்ந்தான் பாபு. ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாலும் வினோதினிக்குச் சுருக்கென்று கோவம் வந்துவிட்டது.

    ஏங்க... பாவம்... அவன ஏன் அப்படிச் சொன்னீங்க...?

    என்ன பாவம்...? இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும்... நீயும் ஆட்களோட தராதரம் பார்த்து பழகணும்... அந்தப் பய உனக்கு ஏதாவது ஓசி சுண்டல் கொடுத்தானா?

    வினோதினிக்கு கோபம் இன்னும் ஏறியது.

    என்னங்க சொல்றீங்க நீங்க...?அந்தப் பையன் ஜெம்ங்க... எல்லா சுண்டலையும் நான் வாங்க தயாரா இருந்தபோதும், ரெகுலர் கஸ்டமருக்கும் வேணும்னான். ‘சரி, ரூபாய வாங்கிக்க... சுண்டல் வேண்டாம். கொஞ்ச நேரம் பேசு’ன்னு சொன்னேன். ‘அய்யோ அக்கா... அப்ப அது பிச்சை எடுக்கிற மாதிரி ஆகிரும்’னு சொன்னான்... கிரேட்ங்க அவன்!

    யேய்... யேய்... இரு... இரு... என்ன கொஞ்சம் விட்டா அந்தப் பரதேசிப்பயலை நோபல் பரிசு ரேஞ்சுக்கு கொண்டு விட்றுவ போலியே... எல்லாம் இதால... என்றவன், வினோதினி பதறித் துடிக்கிற மாதிரி ஒரு காரியம் செய்தான்.

    அவள் கையில் இருந்த அந்த சுண்டல் பொட்டலங்களை வெடுக்கென்று பிடுங்கி, ஓடிப்போய் கடலில் எறிந்தான். விவேக்கின் இந்த கேவலமான செயலால் அதிர்ச்சி அடைந்து நின்றாள் வினோதினி.

    ‘அந்தச் சிறுவன் பாபுவைக் கூட்டிவா. அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று ஒரு நாள் விவேக் அழப்போகிறான் என்று அவளுக்கும் தெரியாது. விவேக்கிற்கும் தெரியாது!

    2

    இந்த மனது பண்ணுகிற அழிச்சாட்டியம் இருக்கிறதே... சொல்லிமாளாது.

    பரீட்சை சமயத்தில் தூங்கக்கூடாது. ஆனால், மனதோ, ‘நீ தூங்கு... நல்லா தூங்கு! என்று கட்டளையிடும். அதனால் தூக்கம் தூக்கமாய் வரும். அதே சமயம் எக்ஸாம் முடிந்து, ரிசல்ட் வரும் நேரம் நிம்மதியாய் தூங்கலாம்... ஆனால், மனதோ, ‘தூங்காதே தூங்காதே... கவலைப்படு...!’ என்று அழிச்சாட்டியம் பண்ணும்.

    கனகா கவலைப்பட்டுக்கொண்டே இருந்தாள். காலையில் ரிசல்ட்.

    வணிகவியல் நன்றாகத்தான் எழுதியிருந்தாள். நல்ல மார்க் வரும். ஆனால், தூக்கம்தான் வரவில்லை.

    அதிகாலையில் எழுந்து, கிழக்குப் பார்த்து, ‘சூரிய ராஜனே... இன்னிக்கு நான் ஃப்ர்ஸ்ட்... முழிக்கிறதுல...! என்று சொல்லி, பூஜை அறைக்குள் நுழைந்து, சாமியிடம் நன்றாக வேண்டிக் கொண்டாள்.

    ‘என்னுடைய எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது... அம்பிகே... மகாலட்சுமி... தாயே... அனனலட்சுமி... மனமுருக வேண்டினாள்.

    திருப்தியுடன் வெளியே வந்தவள், அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

    கண்ட காட்சி திடுக்கிடவைத்தது.

    பாபு தூக்கத்தில் விம்மிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால்கூட துடித்துப் போவாள். ஏன் அழுதுகொண்டிருக்கிறான்? ஏதாவது கெட்ட சொப்னம் காண்கிறானா?

    டேய்... பாபு... பாபு...

    அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் முழித்த பிறகும் சிணுங்கினான்.

    பாபு... பாபு... ஏண்டா அழறே...?

    சார்... சார்... ஏன் சார் என்ன அன்னக் காவடின்னு சொன்னீங்க... ஏன் சார்...? விசும்பினான்.

    பழுக்க காய்ச்சிய

    Enjoying the preview?
    Page 1 of 1