Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Selvam, En Raja!
En Selvam, En Raja!
En Selvam, En Raja!
Ebook146 pages42 minutes

En Selvam, En Raja!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜானகி அம்மாள் ஒரு பிரபல சொற்பொழிவாளர். அவரின் மகள் சௌதாமினி. தமயந்தியும் டாக்டர் மனோகரும் கணவன் மனைவி.
இவர்களுக்கு கண்ணன் என்றொரு மகன். விகாஸின் கதை மர்மம் நிரம்பியது. இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.
அந்தப் புள்ளி திருட்டு ஒரே நாளில் ஜானகி அம்மாவின் வீட்டில் களவு ,கண்ணன் கடத்த படுகிறான்.விகாஸின் மர்மம் வெளிப் படுகிறது. இந்தத் திருட்டை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் மாதவன் களத்தில் இறங்க பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப் படுகின்றன. மாதவன் திருட்டைக் கண்டு பிடித்தாரா ? கண்ணன் திரும்பக் கிடைத்தானா ? விகாஸின் மர்மம் என்ன?
நாவல் சொல்லும் கதை. இதில் காதல் உண்டு..மர்மம் உண்டு... திகில் உண்டு. க்ராக் ஜாக்கர் பிஸ்கட் மாதிரி உப்பும் உண்டு இனிப்பும் உண்டு.
சுவைத்துத் தான் பாருங்களேன்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100805659
En Selvam, En Raja!

Read more from Vimala Ramani

Related to En Selvam, En Raja!

Related ebooks

Reviews for En Selvam, En Raja!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Selvam, En Raja! - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    என் செல்வம், என் ராஜா!

    En Selvam, En Raja!

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    அந்தப் பொழுது விடிந்தது. வழக்கமான பொழுது போல் தான் அன்றைய பொழுதும் விடிந்ததாக ஜானகி நினைத்தாள்.

    முதல் நாள் தான் வெளியூர் போய் இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியிருந்தாள். ஜானகி ஒரு பிரபல சொற்பொழிவாளர். ஊர் ஊராகப் போய் பக்தி சொற்பொழிவு செய்பவள் திருமணத்திற்குப் பெண் செளதாமினி காத்திருந்தாள். செளதாமினி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு ‘எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம், நான் வேலைக்குப் போகிறேன்’ பிடிவாதம் பிடித்து வேலைக்கு மனு செய்து கொண்டிருந்தாள்! ஜானகியோ கடவுளிடம் மனு செய்து கொண்டிருந்தாள். ‘கடவுளே... தலைவன் இல்லாத இந்தக குடும்பத்தை நான் எப்படியோ முன்னுக்குக் கொண்டு வந்து விட்டேன். என் மகளின் திருமணத்தையும் நல்லபடியாக முடிக்க அருள் புரி!’

    சிறுகச் சிறுகத் தன் சொற்பொழிவுகளின் மூலம், பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஜானகி பெண் கல்யாணத்திற்குப் பணம் சேர்த்து நகைகள் சேர்த்துக் கொண்டிருந்தாள்.

    விடிகாலை. ஜானகி படுக்கையைவிட்டு எழுந்தாள்.

    பக்கத்தில் சௌதாமினி தூக்கத்தில் புன்முறுவல் பூத்தபடி படுத்திருந்தாள். அந்தப் படுக்கை அறையில் மூன்று கட்டில்கள் இருந்தன. அந்தக் கடைசி கட்டில் காலியாகவே இருந்தது ரொம்ப நாளாக!

    கழுத்தில் கிடந்த தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

    கணவன் காணாமல் போனாலும் தாலி இருக்கிறது சாட்சியாக.

    விலகி இருந்த சௌதாவின் போர்வையைச் சரியாகப் போர்தாதினால்... எழுந்தாள்...

    ஏனோ தலை சுற்றியது... ஏன் இப்படி? தலை ஏன் பாரமாகக் கனக்கிறது? யார் வீட்டிலோ கடிகாரம் ஆறு அடித்தது.

    மணி ஆறாகி விட்டதா? தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்திருப்பேனே! என்ன ஆயிற்று எனக்கு?

    ஜானகி தடுமாறியபடி எழுந்து ஹாலுக்கு வந்து...

    ஐயய்யோ இதென்ன அநியாயம்! கொல்லைக் கதவு திறந்து கிடக்கிறதே!

    ஐயய்யோ! நகைகளும், பணமும் வைத்திருக்கின்ற அறையின் கதவுகள் உடைக்கப்பட்டிருக்கின்றவே!

    ஐயய்யோ... அந்த அறையில் இருந்த ‘காட்ரெஜ் பீரோ’ சின்னா பின்னமாக்கப்பட்டு... நகைப் பெட்டிகள் அத்தனையும் திறந்து கிடக்க...

    காலியான அறை... காலியான பீரோ...

    வெளியூர் போக வேண்டி இருந்ததால் முதல் நாள் தான் இவள் நகைகளை லாக்கரிலிருந்து எடுத்து வந்திருந்தாள். இன்று திரும்ப வைக்க நினைத்திருந்தாள்.

    ஆனால்... ஆனால் அத்தனையும் ஒரே இரவில்... ஒரு நொடிக்குள் மாயமாகி.

    ஐயய்யோ! இவள் பூஜித்த அம்பாள் விக்ரஹம், ஸ்வாமி அறையும் கொள்ளை அடிக்கப்பட்டு அம்பாள் விக்ரஹத்தையும் திருடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

    அம்பாளுக்கு இவள் ஆசை ஆசையாய் வாங்கிச் சாத்திய பாவாடைகள், பட்டுப் பாவாடைகள், ஜரிகை பாவாடைகள் தரையில் வீசி எறியப்பட்டிருந்தன!

    தன்னையே தரையில் எறிந்த மாதிரி... ஜானகிக்குத் தலை சுற்றியது.

    ஐயய்யோ

    அடி வயிற்றிலிருந்து ஒரு பயங்கரக் கேவல் எழுந்தது. பலி ஆட்டின் அவலக் குரல் போல் குரல் கீறிச்சிட்டது!

    ஜானகி அப்படியே மயங்கிக் கீழே சாய்ந்தாள்.

    2

    புரண்டு படுத்தாள் தமயந்தி

    பக்கத்தில் படுத்திருந்த மனோகர், உஸ்! எங்கே விலகிப்படுக்கறே? மழை பெய்யுது... குளிரடிக்குது... என்றான்.

    அவள் காதுகளில் மெல்ல, குளிரடிக்குது... கிட்ட வா... கிட்ட வா, என்றான்.

    உஸ். உங்களோட இதே தொல்லையாய்ப் போச்சு... விடிஞ்சாச்சு... தெரியுமில்லே? என்றாள் தமயந்தி.

    இஸ் இட்? நான் கண்ணை மூடிட்டா இருட்டுத்தான், என்றவன் கண்ணை மூடிக் கொண்டான்.

    ஐயய்யோ பயமா இருக்கே... என்னைக் கட்டிக்கோ... கட்டிக்கோ.

    ஆமா... அதான் கட்டிட்டுக் கஷ்டப்படுறேனே.

    ஏன்? உனக்கென்ன கொறைச்சல்? தமயந்தி மகாராணியை இந்த நள மஹாராஜா சௌகர்யமா வைச்சிக்கல்லையா?

    ஆ... வைச்சிப்பீங்க.

    சீ... காலங்கார்த்தால அசிங்கமா பேசாதே. கௌசல்யா சுப்ரஜா ராமா.

    ராமா! ஊத்த வாயோட மந்திரமா! சாமி கண்ணை குத்தும்.

    சாமி என்ன கண் டாக்டரா கண்ணைக் குத்த... சாமிக்கு என் மனசு தெரியும்!

    சும்மா இரைஞ்சு கத்தாதீங்க... குழந்தை முழிச்சுக்கப் போறான்!

    அட நமக்குப் குழந்தை இருக்கு இல்லை... உன்னை பார்த்தா. உன் உடம்பைப் பார்த்தா புள்ளை பெத்த உடம்பு மாதிரியே தெரியல்லை.

    மனசைப் பாருங்க... உடம்பைப் பாக்காதீங்க.

    நான் ஞானி இல்லை, என்றவன் அவளை இழுத்துக் கட்டி அணைத்து கன்னத்தில் இச் ஒன்றைப் பதித்து விட்டு

    அவளுக்குப் பயந்தவன் போல் காலோடு தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தவன் பொய்க் குறட்டை ஒலி எழுப்பினான்!

    கணவனின் குறும்புகளை நினைத்துப் பெருமிதமும், மகிழ்வும் கொண்ட தமயந்தி கடவுளைத் தொழுதபடி, தாலிக் கயிற்றைக் கண்களில் ஒற்றிக் கொண்ட படி மெல்ல போர்வையை உதறினாள்.

    ஆமாம்... குழந்தை கண்ணன் எங்கே?

    பக்கத்துப் படுக்கை காலியாக இருந்தது.

    இப்படித்தான் இவன் திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டு இரவில் விழித்துக் கொண்டு விடுவான்.

    விழித்து விட்டால் நேரே ஆயாவிடம் போய்ப் படுத்துக் கொண்டு விடுவான்.

    மெல்ல உள்ளே எழுந்து போனாள்.

    உள்ளே?

    கொல்லைக் கதவு திறந்து கிடக்க...

    டைனிங் ஹாலில் எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ஆயா தாறுமாறான நிலையில் கிடக்க... மயங்கிக் கிடக்க.

    கண்ணா... ஐயய்யோ... என் கண்ணன்... என் கண்ணன் எங்கே? என்று கதறியபடி தமயந்தி மூர்ச்சையானாள்.

    3

    ஜானகியம்மாளுக்கு முதலுதவி சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    பாவம். சௌதாமினிதான் திணறிப் போய்விட்டாள்.

    ஐயய்யோ சௌதா! என் சொத்தெல்லாம் கொள்ளை போச்சே. என் உழைப்பெல்லாம் பறி போச்சே குருவி சேர்க்கிற மாதிரி உன் கல்யாணத்துக்குச் சேர்த்து வைச்சிருந்த நகையெல்லாம் பறி போச்சே...

    அம்மா... உங்களுக்குத் தெரியாத விவேகம் இல்லை. நீங்களே மத்தவங்களுக்குப் புத்தி சொல்லுவீங்க. மனசைத் தளரவிடாதீங்க. யாரோ சொல்கிறார்கள்.

    எப்படி முடியும்? எப்படி முடியும்? ஒன்றா... இரண்டா? அத்தனை சொத்தையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார்களே!

    அயோக்கியர்களுக்கு அழிவும், நல்லவர்களுக்கு நல்வாழ்வும் தாமதமாகவே வரும். ஆனால் இரண்டுமே வந்தே தீரும். என்று சொற்பொழிவுக் கூட்டங்களில் இவள் சொல்வதுண்டு.

    இவள் காத்திருந்த அந்த நல் வாழ்வு இதுதானா?

    இளமையாக இருந்திருந்தால் கூட இழப்பின் சுமை இவ்வளவு தெரிந்திருக்காது. மகளை நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்துவிட்டு வயது காலத்தில் ஏதாவது ஆசிரமத்தில் போய் நிம்மதியாக வாழ நினைத்தாளே. அந்நிம்மதியை... மானசீக திருப்தியைக் கூடக் கடவுள் பறித்து விட்டானே.

    வீடு முழுவதும் போலீஸ். ரேகை எடுப்பவர்களும், போலீஸ் நாயை

    Enjoying the preview?
    Page 1 of 1