Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காவலை மீறிய காற்று
காவலை மீறிய காற்று
காவலை மீறிய காற்று
Ebook94 pages32 minutes

காவலை மீறிய காற்று

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனம் இறுக அமர்ந்திருந்தான் விஜயன்.
படுக்கையில் அருண் தூங்கிக் கொண்டிருக்க... தூங்காமல் படுத்திருக்கும் ஆதி அப்பாவிடம் வருகிறான்.
“டாடி... அம்மா இனிமே வரவே மாட்டாங்களா...?’’
விஜயனின் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்கிறது.
‘‘கடவுள் நம்மளை சோதிச்சுட்டாரு ஆதி. அம்மா திரும்ப முடியாத இடத்துக்கு போயிட்டா.’’
“இல்லே டாடி... எனக்கு அம்மா வேணும். நான் அம்மா பக்கத்தில் தான் படுப்பேன்.’’
ஆதி அழத் தொடங்க... அங்கு வருகிறாள் மரகதம்.
‘‘ஆதி... பாட்டி கிட்டே வா. உனக்கு பாட்டி கதை சொல்வேனாம்... நீ கேட்டுகிட்டே தூங்குவியாம்...’’
“போ... பாட்டி... எனக்கு கதையெல்லாம் வேணாம்... அம்மா தான் வேணும்...’’
‘‘நீ இப்படி அழுது அடம் பண்ணினா அம்மா வரமாட்டா... சமர்த்தா பாட்டியும், டாடியும் சொல்றதை கேட்டு நடந்தா... ஒருநாள் அம்மா வந்துடுவா...”
‘‘நிஜமாவா பாட்டி... அழுகையை நிறுத்திக் கேட்கிறான்.”
‘‘பாட்டி பொய் சொல்ல மாட்டேன்.”
“அப்ப சரி... நீ கதை சொல்லு. உன்கிட்டேயே படுத்துக்கிறேன்.”
அவள் கைபிடித்து நடக்க,
“உங்களுக்கு எதுக்கு சிரமம் அத்தை... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போய் படுங்க...”‘இல்லை மாப்பிள்ளை... வந்த உறவு ஜனம் போயாச்சு. நானும், எனக்கு சமைச்சு போடும் ருக்குவும் தான் இருக்கோம்.
இனி நான் எங்கேயும் போகப் போறதில்லை. இந்த குழந்தைகளுக்கும், உங்களுக்கும் வழி பண்ணிட்டுதான் கிளம்புவேன்.
நீங்க அருண்கிட்டே படுத்துக்குங்க...’’
பேரனுடன் அறையை விட்டு வெளியேறுகிறாள்.
‘‘என்னங்க... பால்கனியில் நின்னுகிட்டு என்ன செய்யறீங்க...? டி.வி.யில் சினிமா போடறான். என்னோடு உட்கார்ந்து பார்க்கலாம் இல்லையா...?’’
‘‘எனக்கு தான் சினிமா பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமே கீர்த்தி...’’
‘‘சரி, அப்ப நானும் பார்க்கலை. உங்களோடு இங்கேயே இருக்கேன்.”
‘‘ஆதி, அருண் தூங்கியாச்சா...?’’
“அவங்க அப்பவே தூங்கிட்டாங்க.”
“என்ன கீர்த்தி புதுசா பார்க்கிற மாதிரி என்னையே பார்த்துட்டு இருக்கே...?”
‘‘என் புருஷன் இவ்வளவு அழகான்னு பார்க்கிறேன்’’
சிரிக்கிறான் விஜயன்.
“ஆறு வருஷமா பார்க்கிற மூஞ்சி தான்.”
“இருக்கட்டுமே... என்னைக்கும் எனக்கு நீங்க புதுசாதான் தெரியறீங்க...’’
‘‘நான் அப்படி இல்லப்பா... எனக்கு உன்கிட்டே எந்த வித்தியாசமும், எப்பவும் தெரியறதில்லை. உன்னை மாதிரி ஒவ்வொன்றையும் ரசிக்கவும், வர்ணிக்கவும் தெரியாது.’’
‘‘அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.”கணவனை பார்த்து சிரிக்கிறாள் கீர்த்தனா.
கீர்த்தி... என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டியே... நீயில்லாம இந்த பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கப் போறேன்.
புரியலையே கீர்த்தி... கண்களில் கண்ணீர் பெருகுகிறது.
ஹாலில் உட்கார்ந்திருந்த ரகுபதி, வீட்டைச் சுற்றிலும் நோட்டமிடுகிறார். அழகான வீடு. நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சுவற்றில் தொங்கிய இயற்கை காட்சிகள்... கீர்த்தனா நிச்சயம் ரசனை உள்ளவளாகத்தான் இருந்திருப்பாள் என்பதை பறைசாற்றியது.
“என்ன சார் பார்க்கறீங்க...? என் மகள் கீர்த்தனா, ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வா...
அதோ அந்த பெயிண்டிங் அவ வரைஞ்சதுதான். வீட்டு நிர்வாகம் அவ கையில்.
என் மாப்பிள்ளை எதிலும் தலையிடமாட்டாரு. சம்பாதிப்பதோடு அவர் வேலை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருப்பாரு. பாவம்... இப்ப விழிபிதுங்கி தடுமாறுகிறதை பார்த்தா, பரிதாபமாக இருக்கு.”
‘‘நீங்க எங்கே இருக்கீங்க...?’’
‘‘ஈரோட்டில். என் கணவர் மில் வச்சுருந்தாரு. இறந்த பிறகு எல்லாத்தையும் வித்து, பணத்தை வங்கியில் போட்டு, என் மகளை படிக்க வச்சேன்.
சொந்தமா வீடு இருக்கு. மகளை கட்டிக்கொடுத்துட்டு நிம்மதியா இருந்தேன். கண்ணுக்கு நிறைஞ்சு மகள் வாழறதை பார்த்திட்டே காலம் தள்ளிடலாம்னு நினைச்சேன்.
என்னை புலம்ப வச்சுட்டு அவ போயிட்டாளே...’

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
காவலை மீறிய காற்று

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to காவலை மீறிய காற்று

Related ebooks

Reviews for காவலை மீறிய காற்று

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காவலை மீறிய காற்று - பரிமளா ராஜேந்திரன்

    1

    அந்த அகன்ற தெரு, வசதியானவர்கள் வாழும் தெரு என்பதை அங்கு இருந்த வீடுகளின் மூலம் தெரியப்படுத்தியது.

    தனித்தனி வீடுகள். சுற்றிலும் காம்பவுளண்டு சுவர்கள். தெருவில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள், தங்கள் கிளைகளை அகல விரித்து அந்த இடத்தை நிழலாக்கி, தென்றல் காற்றை அனுப்பிக் கொண்டிருந்தன.

    மூன்றாம் எண் போட்ட, அந்த வீட்டின் முன் ஒரு சிறிய கூட்டமே கூடியிருந்தது.

    காம்பவுண்ட் சுவரை பிடித்து எட்டி, எட்டி பார்த்தபடி, வெளிகேட்டில் இரண்டு போலீஸ்காரர்கள் இருக்க...

    உள்ளே சிந்தனை கோடுகள் நெற்றியில் தெரிய, நின்று கொண்டிருந்தார் க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் ரகுபதி.

    வீட்டினுள் அழுகுரல் வாசல் வரை கேட்டது.

    ‘‘எதுக்கு இங்கே இவ்வளவு கூட்டம்... என்னாச்சு...?" கூட்டத்தில் ஒருவர் கேட்க,

    "ஒரு கொலை நடந்துடுச்சாம்.’’

    ‘‘என்னது கொலையா...?’’

    "அட இல்லப்பா... அந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்.’’

    "இரண்டு வயசிலும், நாலு வயசிலும் இரண்டு பிள்ளைகள். பாவம்... புருஷன் பெரிய இஞ்சினியராம்... என்ன கஷ்டமோ... தெரியலை...’’

    ‘‘பெரிய இடத்து சமாசாரம்... நமக்கெங்கே புரிய போகுது...’’

    கீரைக்காரி, கூடையை இறக்கி மரத்தடியில் வைத்தவள்,

    அந்த அம்மாவை எனக்கு நல்லாத் தெரியும். சின்ன வயசுதான். தங்கமான குணம். சாகற வயசா அது... என்கிட்டே அப்பப்ப கீரை வாங்குவாங்க. இப்படி அற்பாயுசிலே போய் சேர்ந்துட்டாங்களே மகாராசி.

    எல்லாம் நகருங்க...

    ஆம்புலன்ஸ் நுழைய,

    அடுத்த பத்தாவது நிமடம், ஸ்டெர்ச்சரில் பாடி ஏற்றப்பட்டு, வேன் புறப்பட...

    கூட்டம் கலையத் தொடங்குகிறது.

    கீர்த்தனா... கீர்த்தி... அழகின் சுரங்கம்.

    பிரம்மா, சில பேரை தான் எந்த குறையுமில்லாமல் நேர்த்தியாக படைத்திருப்பான்.

    அதில் ஒருத்தி தான் கீர்த்தனா.

    அவளுக்கேற்ற ராஜகுமாரனாய் அவள் கணவன் விஜயன்.

    ஆறு வருட தாம்பத்யம். அழகாய் இரண்டு குழந்தைகள்.

    வெளியில் பார்க்க எந்த குறையுமில்லாமல் வாழ்ந்தவர்கள்.

    இன்று கீர்த்தனா இந்த உலகில் இல்லை. அந்த அழகிய மலர் உதிர்ந்துவிட்டது.

    நொடிகளில் மாறக்கூடியது வாழ்க்கை என்பது எவ்வளவு உண்மை. கணவன், குடும்பம், குழந்தை என சிறு கூட்டுக்குள் வாழ்ந்த பறவை பறந்துவிட்டது.

    நிலைகுலைந்து போயிருந்தாள் மரகதம்.

    ஒரே மகள்... நான் இருக்க... போய்விட்டாளே... அழுதழுது முகம் சிவந்திருந்தது. விஜயனின் காலை கட்டியபடி உட்கார்ந்திருந்த பேரன்களை பார்க்க,

    அடிவயிற்றில் துக்கம் பந்தாய் சுருண்டது.

    விஜயனின் அண்ணன் கதிர்வேலன், உள்ளே வந்தார்.

    ‘‘அத்தை, கீர்த்தனாவின் இழப்பு யாராலும் ஜீரணிக்க முடியாததுதான். அதுக்காக பெரியவங்க நீங்களே இப்படி ஒடிஞ்சுபோய் உட்கார்ந்தா... இந்த குழந்தைகளை யார் பார்க்கிறது..."

    "முடியலை தம்பி... சாகற வயசா என் மகளுக்கு... மாப்பிள்ளையை பாருங்க... உயிரே போனதுபோல சிலையாக இருக்காரு... இனி இந்த குடும்பம் எப்படி நிமிர போகுது...?

    இந்த குழந்தைகள் தாயில்லாமல் வாழணுமா...? கடவுளே இது உனக்கே அடுக்குமா...’’ வாய்விட்டு கதறுகிறாள்.

    "என்ன செய்யறது... விதி. அந்த பித்தளை பூ ஜாடி உருவில் வந்திருக்கு.

    பரணிலிருந்த அந்த ஜாடி தவறி அங்கு உட்கார்ந்திருந்த கீர்த்தனாவின் மண்டையில் விழணும்னு விதி இருந்திருக்கு.

    உச்சி மண்டையில் அடிபட்டு, நிமிஷமாய் போயிட்டா... இது கொலையும் இல்லை... தற்கொலையும் இல்லை. தற்செயலான விபத்துன்னு சொல்லிட்டாங்களே... இதுக்கு மேலே நாம் என்ன செய்ய முடியும்...?

    அடுத்து ஆகவேண்டிய காரியங்களை பார்க்கணும்...’’ சொன்னவர்,

    "விஜய் எழுந்திரு... குழந்தைகளை பாரு... கண்ணுங்களா, பெரியப்பா கிட்டே வாங்க...’’

    ‘‘நாங்க வரமாட்டோம். எனக்கு அம்மா வேணும்...’’ நான்கு வயது ஆதி, அழ ஆரம்பிக்க...

    இரண்டே வயது நிரம்பிய அருணும் புரியாமல் அழுகிறான்.

    விஜயனின் கண்களில் மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருகுகிறது.

    ஆவேசம் வந்தவள் போல், இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள் மரகதம்.

    "இல்லை... என் மகள் தற்செயலாக சாகலை. இது கொலைதான். யாரோ அவளை கொலை பண்ணியிருக்காங்க. இதை நான் சும்மா விடமாட்டேன்.

    என் மகளுக்கு கொடுக்கணும்னு காப்பாத்தி வச்ச சொத்து முழுக்க கரைஞ்சாலும் பரவாயில்லை...

    எனக்கு நியாயம் கிடைக்கணும். என் மகள் சாவுக்கு காரணம் யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும்...’’ வேகமாக வெளியேறுகிறாள்.

    ‘‘என்னம்மா சொல்றீங்க...?"

    ‘‘எனக்கு நியாயம் வேணும் சார். மனுஷ உயிர் என்ன அவ்வளவு மலிவானதா...?

    அப்பனில்லாம வளர்ந்தவ சார் என் மகள். ஒரு குறை வைக்கலை.

    அவளுக்கு அமைஞ்ச கணவனும் அப்பழுக்கில்லாத வைரம். இந்த ஆறு வருஷம், அவர் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து பூரிச்சு போனேன். நிமிஷமாய் கடவுள் எல்லாத்தையும் பறிச்சுட்டானே..."

    ‘‘என்னம்மா இது... உங்க வருத்தம் எனக்கு புரியாமலில்லை. தற்செயலாக நடந்த விபத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்...?’’

    "இல்லை, இது. விபத்து இல்லை. கொலை சார். என் மகள் கொல்லப்பட்டிருக்கா.’’

    Enjoying the preview?
    Page 1 of 1